"அந்தரங்க காட்சிகள், ஆபாச பேச்சுக்கள்... -ரவுடி பேபிகள் மீது சைபர் க்ரைம் பாயுமா?' என தலைப்பிட்டு கடந்த வாரத்தில் செய்தியை வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து ரவுடி பேபி சூர்யாவின் அசிங்கங்கள், அந்தரங்கங்கள் குறித்தும் காவல் நிலையத்தில் அவருக்குள்ள செல்வாக்கு குறித்தும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என பல தரப்பிலிருந்தும் நக்கீரனுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோக்களையும், ஆடியோக்களையும் அனுப்பி தங்களது மனக்குமுறல்களை தெரியப்படுத்தியிருந்தனர்.

திருப்பூர் நாச்சிப்பாளையத்தை சேர்ந்த தேவியோ, "எனக்கு பசங்க இருக்கிறாங்க. ஆன்லைனில் படிக்கிறாங்க. அதனால மொபைலை அவங்க கையில் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு. அரைகுறை உடையுடன், ஒரு சில தருணங்களில் திறந்த மேனியை காண்பித்தும் பேசி பிரபலமான சுப்புலெட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா ஃபேஸ்புக்கிலும், யூடூப்பிலும் அடிக்கின்ற ஆபாச லூட்டி சொல்லி மாளாது. இது பள்ளி மாணாக்கர்களின் கவனத்தை திசை திருப்புகின்றது. இது குறித்து பல முறை புகார் கொடுத்துள்ளோம் பலனில்லை.

rowdybaby

15-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து கடந்த வியாழனன்று ரவுடி பேபி சூர்யா வசிக்கின்ற செட்டிப்பாளையம் புதுரோட்டிற்கு சென்றோம். வீட்டினில் யாரும் இல்லை. காத்திருந்தோம். சுமார் அரைமணி நேரம் கழித்து நல்லூர் காவல் நிலைய போலீசார் டீமுடன் அங்கு வந்தாள். போலீசாரோ, "இங்கே இருந்து பிரச்சனை செய்யுறது சட்டப்படி தவறு. ஸ்டேஷனுக்கு வாங்க! கம்ப்ளைண்ட் கொடுங்க. நடவடிக்கை எடுக்கின்றோம்'' எனக் கூறி நல்லூர் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் தொடங்கி அத்தனைப் போலீசாரும் அவளுக்கு சல்யூட் அடித்து உட்கார வைத்தனர். என்னைய நிக்க வைத்து, நாக்கூசும் வார்த்தைகளால் வறுத்தனர். காது கொடுத்து கேட்கவே முடியலை. எஸ்.பி. ஆபீஸ் முன்னால் தர்ணா பண்ணுவேன் எனக்கூற, அதன் பிறகே என்னிடம் புகார் வாங்கிக் கொண்டது அந்த ஸ்டேஷன் போலீஸ். அந்த ஸ்டேஷனுக்கு அவ தான் படியளக் கிறா போல. ஆனால் அங்குள்ள போலீசா ருக்கும் குழந்தைகள் இருப்பதை மறந்து விட்டார்கள்''" என்கிறார் அவர்.

Advertisment

ra

இதேவேளையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் என்பவர், "ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாணக்கர்களை சீரழிக்கும் நோக்கில், ஆபாச வலைத் தளங்களில் அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் முத்து, பேபி சூர்யா, சாதனா, சிக்கா என்ற சிக்கந்தர் உள்ளிட்ட மேலும் சிலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வீடியோக் களையும் பதிவு செய்கின்றனர். இவர்களது உடல்பாவனைகளும், பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும். இவற்றை கண்டறிந்து சீர்படுத்த வேண்டுமென'' முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பிய கையோடு இது குறித்து வீடியோவினையும் பதிவிட்டார். அது சமூக வலைத்தளங்களில் பரவலாகி ரவுடிபேபிகள் மீது கண்டனங்கள் நாடெங்கிலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்மிடம் பேசிய மதுரையை சேர்ந்த பெண் ஒருவரோ, "என் வீட்டுக்காரர் இறந்துட் டார். குடும்பம் வறுமையில் சிக்கிக் கொள்ள வெளிநாட்டிற்கு சென்று வீட்டு வேலை பார்த்தால் பிழைச்சுக்கலாம் என அக்கம் பக்கத்தார் கூற, அது சம்பந்தமாக தேட ஆரம்பித்தேன். இந்த நிலையில், "சிங்கப்பூரில் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும், ஸ்பாவிலும் வேலை இருப்பதாக சிவகங் கையை சேர்ந்த சங்கர் என்கின்ற ஏஜென்ட் கூற, அதனை நம்பாமல் சிங்கப்பூரிலுள்ளவர் களிடம் பேச கோரிக்கை வைத் தேன். அவரோ தன்னுடைய போனிலிருந்து வாட்ஸ்ஆப் வீடியோ காலில் சிங்கப்பூருக்கு பேசினார். அப்பத்தான் தெரிந்தது. என்னைய வேலைக்கு எடுப்பது ரவுடி பேபி சூர்யா என்று.

ra

Advertisment

என்னுடைய வறுமைக்கு எப்படியும் விடிவு கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் அந்த பொம்பளைய நம்பி பாஸ்போர்ட்டை ஏஜென்டிடம் கொடுத்தேன். என்னைப் போல் நாமக்கல் தனம், திருச்சி செல்வம் என்கின்ற ஏஜென்டின் மூலம் இரு பெண்களும் பாஸ்போர்ட்டை கொடுத்திருந்தனர். சிங்கப்பூர் வேலைக்காக காத்திருந்த எங்கள் மூன்று பேரையும், கடந்த வருட தொடக்கத்தில் சொன்ன பேச்சை மீறி மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர். நாங்கள் அங்கு முரண்டு பிடிக்க, செட்டிங் மூலம் உங்களை சிங்கப்பூருக்கு அனுப்பி விடுவோம். அதுவரை பொறுமையாக இருங்கள் என்றனர் அங்குள்ளவர்கள். பின்னர் தான் தெரிந்தது நாங்கள் விபச்சாரத்திற்காக அங்கு விற்கப்பட்டது.

நான் அங்குள்ள தமிழர்கள் உதவியுடன் தப்பி இங்கு வந்துவிட்டேன். ஆனால் என் கூட மலேசியாவில் விற்கப்பட்ட பெண்களின் நிலை என்னவென்று தெரியாது. அனைத்திற்கும் கார ணம் சூர்யாதான்" என்று அதிரவைத்தார்.

இந்நிலையில்... தேவி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி, காவல்துறைக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், "சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூர்யாவின் ஆபாச வீடியோக்களை யூ-டியூப்பிலிருந்து முடக்க வேண்டும்' என்றும் தெரிவித் துள்ளார்.

படங்கள்: விவேக்