பள்ளி மாணவிகள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா... நக்கீரனின் ஆக்ஷன் ரிப்போர்ட்டால் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லி அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை அப்போதைய டி.ஜி.பி.யால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சுஷ்மிதா மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில்... பாபாவின் வலதுகரமான ஜானகி, கருணா போன்றவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே முன்ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கில் இருபதுக்கும் மேற் பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ-மாணவிகள் புகார் கொடுத்த நிலையில், ஐந்து மாணவிகளின் புகார் மீது மட்டுமே
பள்ளி மாணவிகள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா... நக்கீரனின் ஆக்ஷன் ரிப்போர்ட்டால் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லி அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை அப்போதைய டி.ஜி.பி.யால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சுஷ்மிதா மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில்... பாபாவின் வலதுகரமான ஜானகி, கருணா போன்றவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே முன்ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கில் இருபதுக்கும் மேற் பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ-மாணவிகள் புகார் கொடுத்த நிலையில், ஐந்து மாணவிகளின் புகார் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய் தது காவல்துறை. சிவசங்கர் பாபாவின் டெல்லி மேலிட செல்வாக்கால் பல முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையில்... நக்கீரனின் துரித முயற்சியால் வழக்கு விசாரணை நல்ல முறையில் சென்றுகொண்டிருந்தது. சிவசங்கர் பாபா மீது மூன்று போக்சோ மற்றும் ஒரு மானபங்க வழக்கு மற்றும் ஒரு கடத்தல் வழக்கு என ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. துணைஆணையர் விஜய குமார் விருப்பத்தின் பெயரில், திருவாரூர் எஸ்.பி.யாக பணியிடம் மாற்றம் செய்யப் பட்டார். அந்த இடத்திற்கு அடையாறு துணை ஆணையரான விக்ரம் நியமிக்கப்பட்டார். இவர் விசாரணை அதிகாரிகளிடம் வழக்கு விசாரணை பற்றி கேட்டறிந்தார். அந்த நேரத்தில், இந்த வழக்கு விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. குணவர்மன் மீதான சில புகார்களும் கசிந்தன.
சிவசங்கர் பாபா கைதுக்குப்பின் அவருக்கு கொடுக்கப்பட்ட ராஜமரியாதையைப் பற்றியும் போலீஸ் காவலின்போது அவருக்கு வழங்கிய ஏகபோக வரவேற்பு பற்றியும் தெரியவந்தது. அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் குணவர்மன் வீட்டு மனை வாங்கியது கசியவே... மறுநாளே பணியிட மாறுதல் செய்யப்பட்டார். பாபா பற்றிய செய்திகள் மீடியாவில் வராமல் பார்த்துக்கொள்ளும் வகையிலும் ஒரு டீம் செயல்படுகிறது.
சிவசங்கர் பாபாவை ஜாமீனில் வெளியே கொண்டுவருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய்வரை செலவு செய்வதாகவும், பாபாவுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயற் சிப்பதாக பி.ஜே.பி.யின் கே.டி.ராகவன் மற்றும் அவரின் மனைவி மீது சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் நடிகர் சண்முகராஜன் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இது ஒருபுற மிருக்க... சிவசங்கர் பாபா வழிபாடு நடத்திவந்த சுமார் இரண்டு கிலோகிராம் வரை எடையுள்ள விலை மதிப்புமிக்க சிவலிங்கத்தையும் காணவில்லையாம். இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. டீமின் பெண் ஆய்வாளர் கோமதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் சரண்யாவை பலமுறை தொடர்பு கொண்டு, விசாரணை ஆணையத்தில் புகார் தெரிவித்த மாணவிகள் என்ன கூறியுள்ளார்கள் என்று கேட்டு வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு சரண்யா தரப்பில், இந்த ஆணையத்தின் சட்டவல்லுநர் குழுவினரின் தொடர்பு எண்ணைக் கொடுத்து, "அவரிடம் பேசுங்கள்... இது சட்டப்படி குற்றம் அந்த ஆவணங்கள் எல்லாம் சீல் வைக்கப்பட்டது. நீதித்துறைக்குத்தான் அனுப்பமுடியும்' என்று கூறியுள்ளார். சிவசங்கர பாபாவை காப்பாற்ற புது முயற்சியா என்று யோசிப்பதற்குள், சிவசங்கர் பாபா மீதான இரண்டு போக்சோ வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு வழக்குகளின் மீதும் விரைவில் ஜாமீன் மீதான விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
"பணம் பாதாளம் வரை பாயுமா... அல்லது நீதி வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என்று காத்திருக்கிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்.