பொதுமக்கள் பிரச்சினைக்காக புகார் கொடுத்த சமூக செயற்பாட்டாளரை நிர்வாணப்படுத்தி காவல்துறை ஏ.சி. கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டது சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து, போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலரும் சமூக செயற்பாட் டாளருமான விஜயகுமார் நம்மிடம், “""வருத்தப்படாத வாக்காளர் சங்கத்தை நடத்தி பொது மக்களுக்கான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இராயப்பேட்டை உட்ஸ் சாலையை ஹோட்டல்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்து வதாக எங்களது வாட்ஸ்-ஆப் குரூப்பில் வந்த தகவலை, சென்னை மாநகராட்சி 111-ஆவது வார்டு ஏ.இ.க் கும், நம்ம "சென்னை- ஆப்'பிற்கும் புகாராக அனுப்பினேன். நட வடிக்கை எடுக்காததால் 2019, டிசம்பர் 3-ந் தேதி பகல் 1:30 மணிக்கு நேரில் சென்று ஆக்கிரமிப்பை போட்டோ எடுத்தேன். உடனே, ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்றுகூடி என்னை அசிங்க அசிங்கமாக பேசி, மிரட்டி பைக் சாவியை பிடுங்கிக்கொண்டார்கள். அ.தி.மு.க. 63-வது வட்டச்செயலாளரும் தி.நகர் சத்யா எம்.எல்.ஏ.வின் ஆள் என்று சொல்லிக்கொள்பவருமான மனோஜிட மிருந்து மிரட்டல் வந்தது.
என்னை மிரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது டி-2 அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றபோது, திடீரென்று உள்ளே நுழைந்த ஏ.சி. சரவணன், சட்டை- பேண்ட் எல்லாத்தையும் கழட்டச்சொல்லி ஈவு இரக்கமில்லாம வயித்துலேயேயும் நெஞ்சிலே யும் பூட்ஸ் காலால் எட்டி உதைச்சதோடு, "பாம் ஜுமைலா' கடை உரிமையாளர் முஸ்தபாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய்ப் புகாரை வாங்கி அரெஸ்ட்பண்ணச் சொல்லிட்டார். திருவல்லிக்கேணியிலுள்ள அரசு கோஷா மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க. பரிசோதித்த டாக்டர்கள், "மூக்கி லிருந்து இரத்தம் வந்துக்கிட்டே இருக்கு. பி.பி., ஷுகர் அதிகமா இருக்கு. பல்ஸ்ரேட்டும் அதிகமாகி டுச்சு. இவருக்கு, இப்பவே ட்ரீட்மெண்ட் கொடுக்கலைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம். அதனால, சிறையில அடைக்கிறதுக்கு ஃபிட்னெஸ் சர்டிஃபிகேட் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க.
இந்தநிலையில், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சாரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார் எனது அண்ணன். உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் எடுத்து விசாரிக்கிறார் கமிஷனர். அவரது விசாரணைக்குப் பிறகுதான் "நிரபராதியான ‘உன்னை தண்டிக்க விருப்பமில்லை’ என்றும், என் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு என்னை மிகக்கொடூரமாக தாக்கிய ஏ.சி. சரவணனுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது' என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டு, இரவு 10 மணிக்கு வீட்டிற்கு அனுப்பினார் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன்.
ஏ.சி. சரவணன் இப்படி நடந்துக்கிறது முதல் முறை அல்ல. தேனாம்பேட்டையில் இன்ஸ்பெக்டரா இருக்கும்போது புகார் கொடுக்கவந்த பெண்ணையே கடுமையா அடிச்சு தாக்குதல் நடத்தியதால், மனித உரிமை ஆணையம் இவருக்கும் இவருடன் சேர்ந்து தாக்கிய போலீஸ் செந்திலுக்கும் சேர்த்து 50,000 ரூபாய் அபராதம் விதித்தது. இப்படி, பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு டிரான்ஸ்பர் ஆனவர்தான் இந்த ஏ.சி. சரவணன். இவரோட பேரே "பைப்படி' சரவணன் என்றுதான் சொல்லுவாங்க. காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சார் மட்டும் இல்லைன்னா என்னை சிறையில அடைச்சு சமூக விரோதியாகவே சித்தரிச்சிருப் பாரு உதவி ஆணையர் சரவணன்'' என்று குமுறி வெடிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார்.
இதுகுறித்து, திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் சரவணனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “""ஆக்கிரமிப்புகள் குறித்து போட்டோ எடுத்து மிரட்டுவதாக புகார் வந்தது. அதனால்தான் கன்னத்தில் அடித்தேன்'' என்றவரிடம்... "விஜயகுமார் மிரட்டி பணவசூல் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா?' என்று கேட்டபோது, “""நிரூபிக்க முடியவில்லை. அதனால்தான் விட்டுவிட்டோம். மற்றபடி எந்த அரசியல் தூண்டுதலா லும் நான் தாக்கவில்லை'' என்றார் கேஷுவலாக.
சரவணன் இன்ஸ்பெக்டராக இருக்கும் போது, புகாருக்குள்ளான ஒரு சிறுவனின் வீட்டிற்குச் சென்று அந்த வீட்டிலுள்ள டி.வி., பாத்திரம் அனைத்தையும் அடித்து உடைத்து வீசியதாக அச்சிறுவனின் தாய் குற்றஞ் சாட்டியுள்ளார். அடாவடிகள் தொடர் கின்றன.
-மனோசௌந்தர்