தன்னார்வலர்கள் கிள்ளிவள வன், சுகுமாரன், பாலச்சந்திரன், லாவண்யா, பூங்குழலி உள்ளிட்ட பலரும் இணைந்து நடத்தி வருகிற "எழுதுக' எனும் அமைப்பை வழி நடத்தி வருகிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான முனைவர் இறையன்பு.
இந்த "எழுதுக' அமைப்பு அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை எழுத வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் புத்தகம் எழுத வைத்திருக்கிறது. இப்படி புத்தகம் எழுத வைப்பது புதிய முயற்சி.
சமூகத்தில் குற்றங்கள் நடக் காமல் இருக்க வேண்டும் என்பதை மனதிலே கொண்டு இயங்கி வரும் "எழுதுக' அமைப்பு, அதிகக் குற்றங்கள் நடப்பதாக அறியப்பட்ட தென்சென் னையிலுள்ள கண்ணகி நகரில் இருக் கிற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் விருப்பத்தை அறிந்து, கடந்த 7 மாதங்களில் 50 மாணவர் களை நூல்கள் எழுத வைத்திருக் கிறது. இதன் வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது.
கண்ணகி நகரில் நடந்த இந்த மாற்றத்தின் விரிவாக்கமாக, தமிழகச் சிறைக்கைதிகளை எழுத வைக்கலாம் என்கிற முயற்சியை எடுத்த முனைவர் இறையன்பு, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதன் முதல் முயற்சியாக கடலூர் சிறைச் சாலை தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபிஆதித்யா செந் தில்குமார், சிறைக் கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் முழு ஒத் துழைப்பையும் தந்தனர். இதனை யடுத்து, அனைத்து முன்னேற்பாடு களையும் முன்னெடுத்தது கிள்ளி வளவன் தலைமையிலான குழு. இந்த நிலையில், இதன் தொடக்க விழா கடந்த 11-ந்தேதி கடலூர் மத்திய சிறைச்சாலை யில் நடைபெற்றது. விழாவிற்கு சிறைக் கண்காணிப்பாளர் பரசு ராமன் முன்னிலை வகிக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். கிள்ளிவளவன் கருத்துரையையும், ஜோசப் ராஜா நோக்குரையையும் ஆற்றினர். ஆர்வமுள்ள 101 சிறைக்கைதிகள் இதில் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முனைவர் இறையன்பு, "சிறைக்கைதிகளை நூல்கள் எழுத வைக்கும் இந்த முயற்சி இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே முதல் முயற்சி''’என்று தனது உரையைத் தொடங்கிய அவர், சிறைவாசிகளை ஊக்குவிக்கும் வகையில் எழுத்து மற்றும் எழுதுவதின் பல்வேறு பரிமாணங்களையும்... நூல்கள், ஒருவரின் மனத்தில் எத்தகைய மாற்றங்களை உருவாக் கும் என்பதையும் விளக்கிப் பேசினார்.
இறையன்புவின் உரையில் ஊக்கம் பெற்ற சிறைவாசிகளின் முகத்தில் காணப் பட்ட ஏக உற்சாகம், இன்னும் ஓரிரு மாதங் களில் கடலூர் சிறைச்சாலையிலிருந்து 101 புத்தகங்கள் வெளிவரும் என்ற உறுதியினைக் காட்டியது.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/16/iraianbu-2026-02-16-17-38-27.jpg)