திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல காவல்துறையின் புதிய தலைவராகத் தற்போது பதவியேற்றுள்ளார் சந்தோஷ்குமார் ஐ.பி.எஸ்.
யார் இந்த சந்தோஷ் குமார்? இங்கு அவருக்கு காத்திருக்கும் சவால்கள்தான் என்னென்ன?
கதற வைக்கும் கந்துவட்டி, பதற வைக்கும் கொலை, சத்தமில்லாமல் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றின் தலைநகரமாகத் திகழ்ந்த நெல்லை மாநகரின் காவல்துறை ஆணையராகப் பதவியேற்ற மூன்றே மாதங்களில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததோடு கஞ்சா, கேரள லாட்டரி, ஆன்லைன் சீட்டிங் போன்றவற்றையும் ஒழித்துக்கட்டிவிட்டு திருச்சியை மையமாகக்கொண்ட மத்திய மண் டல காவல்துறை ஐ.ஜி.யாகப் பொறுப்பேற்றுள்ளார் சந்தோஷ் குமார்.
சொந்த மாநிலம் உத்தரபிரதேசமாக இருந்தாலும், 2002-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வுபெற்றது முதல் இப்போது வரை தமிழகத்தில் மட்டுமே பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலில் காவல் துணைக்கண்காணிப்பாளராக தென்காசியில் இவர் பதவியில் இருந்தபோதுதான் காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்த விழாவை, எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடத்திக்காட்டினார். ஆலடி அருணா கொலை வழக்கில் குஜராத் வரை சென்று குற்றவாளிகளைக் கைது செய்தது இவர்தான். விழுப்புரம் டி.ஐ.ஜி., சென்னை குற்றப்பிரிவு இணை ஆணையர், தலைமையிடத்து இணை ஆணையர் எனச் சென் னையில் பல பொறுப்புகளை வகித்த இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாது காப்பு அதிகாரியாகவும் பணியாற்றியதோடு, அவரது இறுதிச்சடங்கின்போது போக்கு வரத்து இடையூறில்லாதபடி நன்முறையில் கையாண்டார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாகப் பணியாற்றியபோது, வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மிரள வைத்த ரவுடி பினுவையும், அவனது கூட்டாளிகள் 75 பேரையும் சினிமா பாணியில் அதிரடியாகக் கைது செய்தார் சந்தோஷ் குமார்.
கரூர் மற்றும் நாகை மாவட்ட எஸ்.பி.யாகப் பணி யாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் மத்திய மண்டலத்தின் அத்தனை பிரச்சனை களையும் தெரிந்துவைத்திருக்கும் இவர், திருச்சி, கரூர் மாவட்டங் களில் கடந்த பல ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் கள்ள லாட் டரி கும்பல்களையும், தஞ்சை உள் ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவியுள்ள கஞ்சா விற்பனையை யும் ஒழித்துக்கட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்களின் பெயரிலேயே போலி ஐ. டி. உருவாக்கி பொது மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஆன்லைன் மாஃபியா கும்பல்களின் ஆணி வேரைக் கண்டறிந்து, ஏமாற்றுக்காரர்களை வேரோடு களைய வேண்டும் என்பதும் மத்திய மண்டலத் திற்கு உட்பட்ட 9 மாவட்ட கலெக்டர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. அவற்றை நிறை வேற்றுவாரா புதிய ஐ.ஜி. சந்தோஷ் குமார்?