"நான் ஓய்வு பெற்றதற்குப் பின்தான் சில வழக்குகளை விசாரணைக்குக் கொண்டு வரவேண்டும் என அரசு நினைக்கிறதா?  எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்''’எனச் சீறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். 

Advertisment

2021-ஆம் ஆண்டின் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடி யாகாது என்று கூறப்படும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த சட்டம் அரசியலமைப்பின்கீழ் நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. தீர்ப்பாயங்களில் நியமனங்கள், பணிநீக்கம், நிர்வாக அமைப்புகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களை இந்த வழக்குகள் எழுப்புவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த வழக்கில் அரசு சார்பாக வாதாடவேண்டிய அட்டர்னி ஜெனரல் வேறு வழக்குகளில் இருப்பதாகக் கூறி மூன்று முறை ஒத்திவைத்தபிறகும் வழக்கில் ஆஜராகவில்லை. இதைக் கவனித்த அமர்வு, அவர் பிஸியாக இருந்தால், இந்த வழக்கில் வேறு யாராவது வாதாடட்டும் என்றது. இந்நிலையில் இந்த வழக்கை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றக் கோரி நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், "மத்திய அரசு இதுபோன்ற தந்திரோபாயங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்று இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அமர்வு கூறியது. இந்த வழக்கு 2021 முதல் விசாரணை நிலுவையிலிருந்த நிலையில், மத்திய அரசு நவம்பர் 1-ஆம் தேதி மட்டுமே மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது

Advertisment

"இந்த வழக்கை திங்கட்கிழமை முடிப்போம் என்று அட்டர்னி ஜெனரலிடம் தெரிவிக்கவும். இந்திய ஒன்றியம் இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து நீதிமன்றத்துடன் விளையாடும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. மனுதாரர் களின் தரப்பை முழுமையாகக் கேட்ட பிறகு, அரசு ஒரு பெரிய அமர் வுக்கு பரிந்துரை செய்வதற்கான மனுவை அனுமதிக்க முடியாது'' என்றும் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

இரண்டு வாரங் கள் மட்டுமே கவாய்க்கு பதவிக் காலம் இருக்கும் நிலையில், அவர் இவ்வழக்கில் தீர்ப் புச் சொல்வதை ஏதோ ஒருவிதத்தில் தாமதம் செய்து வேறு நீதிபதிகளிடம் வழக்கைக் கொண்டுசெல்ல முயற்சிப்பதையே ஒன்றிய அரசின் அணுகுமுறை காட்டுகிறது என விமர் சனம் எழுந்துள்ளது.

அதேசமயம், பண மதிப்பிழப்பு தொடர்பான வழக்கிலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு 370-வது பிரிவை நீக்கும் வழக்கிலும் அது அரசியலமைப்புக்கு உட்பட் டதுதான் என மோடி அரசுக்கு ஆதரவாகவே பி.ஆர்.கவாயின் தீர்ப்பிருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.