க்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங் கியது. போர் தொடங்கியபோதிருந்த அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு தனது ஆதரவை வழங்கி வந்தார். உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள், ரேடார்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளை யும், நிதி உதவியையும், அமெரிக்காவும், நேட்டோ அமைப்பைச் சேர்ந்த ஐரோப்பிய நாடுகளும் வழங்கிவந்தன. ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளித்துள்ளது.

ss

போர் மூன்றாண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றார். அப்போது ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, "இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து எங்களுடைய நிலைப்பாட்டை ட்ரம்ப் கேட்டறிந்தார். ட்ரம்பின் தலைமை யின்கீழ், போர் விரைவில் முடிவுக்கு வரும். அமைதி வேண்டும் என்பதே எங்களுக்கு மிக முக்கியம். எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதி யால், போரால், எங்களுடைய குடிமக்களை இழந்துவரும் நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வருமென்று கருதுகிறேன். அதற்கான தேதியை இப்போதே கூறமுடியாது. வெள்ளை மாளிகை நிர்வாகம், நிச்சயமாக இந்த போரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கும்'' என்று குறிப்பிட்டி ருந்தார்.

இதையடுத்து ட்ரம்ப் -ரஷ்ய அதிபர் புடினுடன் இந்த போர் குறித்து பேசியதோடு, ரஷ்யாவோடும் இணக்கமான போக்கை வெளிப் படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்கா இந்த போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக அமெரிக்க தரப்பில் தரப்பட்ட ராணுவ உதவி களுக்கு கைமாறாக, உக்ரைனிலுள்ள கனிம வளங் களைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டுமென்று ட்ரம்ப் கூறியதை உக்ரைன் அதிபரும் ஏற்றுக்கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், தங்களுக்கான ராணுவ உதவியையும் உறுதிப்படுத்திக்கொள்ள உள்ளதாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். பின்னர் ட்ரம்பின் அழைப்பையேற்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, ட்ரம்ப் முன்னிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில், உக்ரைனுக்கு அளித்து வந்த ராணுவ உதவியின் முக்கியத் துவம் குறித்து பேசிய வான்ஸ், அதற்கு பதிலீடாக உக்ரைனின் கனிம வளங்களில் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டார். உக்ரைன் அதிபரோ, கனிம வளங்களை வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளுமுன், தொடர்ச்சியாக எங்க ளுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்குவது குறித்தும் உறுதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் தான் உரசல் ஏற்பட்டிருக்கிறது.

வான்ஸ் கூறுகையில், "இந்த போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் பேசி, ராஜதந்திர நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுவருகிறது. ஆனால் உங்களுடைய பிடிவாதப் போக்கு உங்கள் நாட்டுக்கே அழிவைத் தேடித்தரும்'' என்றிருக் கிறார். உடனே கடுப்பான ஜெலென்ஸ்கி, "2019ஆம் ஆண்டிலிருந்தே ரஷ்யா எங்கள்மீது போரைத் தொடுத்துவருகிறது. நீங்கள் போரைத் தடுக்கவே யில்லை. ரஷ்யாவுக்கும் உங்களுக்குமிடையே கடல் இருப்பதால் உங்களுக்கு பாதிப்பு வராதென்று நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இப்போது நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். வான்ஸ் என்மீது கடுமை யாகக் குற்றம்சாட்டுகிறார்'' என்று கூறியிருக்கிறார்.

Advertisment

இதையடுத்து கடுப்பான ட்ரம்ப், "நீங்கள் தனித்தெல்லாம் விடப்படவில்லை. வான்ஸ் சத்த மாகவும் பேசவில்லை. இதற்கு முன் அமெரிக்காவை ஆட்சிசெய்த முட்டாள் அதிபர், உங்களுக்காக 350 பில்லியன் டாலர்களை செலவழித்திருக்கிறார். அமெரிக்க போர்க்கருவிகளை வைத்துத்தான் உங்கள் வீரர்கள் போரில் ஈடு பட்டுள்ளனர். நாங்கள் மட் டும் இல்லை யென்றால், ஒரே வாரத்தில் உங்கள் கதையை ரஷ்யா முடித்திருக்கும். இந்த போரில் உங்களுக்கு சாதகமாக எந்த அம்சமும் இல்லை. இவ்வளவு மோசமான சூழலுக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் பல கோடி மக்களின் உயிர்களோடு விளையாடிக்கொண் டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை. நீங்கள் மூன்றாம் உலகப்போரை தூண்டும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறீர் கள். எங்களோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவ தாக இருந்தால் மீண்டும் இங்கே வாருங்கள். உங்களுக்கான வாய்ப்பு எப்போதும் உண்டு'' எனக் கண்டித்திருக்கிறார்.

உடனே உக்ரைன் அதிபரோ, "நீங்கள் இரு நாட்டுப் போரைப் பற்றி இப்படி மீடியாக்களின் முன்பாகப் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள் ளுங்கள்'' என கொந்தளித்ததோடு, மதிய உணவை யும், இருநாட்டு அதிபர்களும் கூட்டாக செய்தி யாளர்களைச் சந்திப்பதாக இருந்த நிகழ்விலும் கலந்துகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பியிருக் கிறார். இந்த விவகாரத்தில், ட்ரம்பை அவமதித்த உக்ரைன் அதிபர், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியா கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெலன்ஸ்கி, "பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது வருத்தம்தான், அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதென்று' திட்டவட்டமாகத் தெரிவித்தார். இனி, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டால், ரஷ்யா இன்னும் மூர்க்கமாகத் தாக்குதலில் இறங்குமோ என அஞ்சப்படுகிறது.