Advertisment

விஜய்யின் அரசியல் வியூகங்கள் வெற்றிபெறுமா? -ஸ்கேன் ரிப்போர்ட்!

vijay

ருகிற ஆகஸ்ட் 21 அன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை  மிக பிரமாண்டமாக, மதுரையில்  600 ஏக்கர் இடத்தில்  நடத்துவதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெறுகின்றன. எப்படியும் 15 லட்சம் தொண்டர்களைக் கூட்டி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறது த.வெ.க.வின் மாநாட்டுக்குழு. இதற்கான  வேலைகளை எல்லாம் குஜராத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுக் கையில் எடுத்துச் செய்கிறது. இதற்காகவே வடநாட்டி லிருந்து வேலை ஆட்கள் கொண்டுவரப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றன. 

Advertisment

மாநாடு 21-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. அன்று பள்ளி, கல்லூரி அலுவலக நாள். 15 லட்சம் பேர் திரண்டால் மதுரை சிட்டி என்ன ஆவது? மாணவர்கள், பொதுமக்கள் அலுவலகம் செல்வோர் மிகவும் சிரமப்படுவார்கள். இந்த சின்ன விஷயம் கூட தெரியாதவர்கள் மாநாட்டை நடத்துகிறார்கள் என மதுரை மக்கள் புலம்புகிறார்கள்.

மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி முடிவு மற்றும் தேர்தல் அறிக்கையை முதல் கட்டமாக வெளியிடுகிறார்கள். அடுத்து மதுரையிலிருந்துதான் விஜய்யின் "மக்கள் என் பக்கம்' சுற்றுப்பயணம் தொடங்குகிறது என்ற அறிவிப்பும் வெளிவர இருக்கிறது என்கிறார்கள். மாநாட்டுத் திடலைப் பார்வையிட த.வெ.க. தொண்டர்கள் யாரும் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வரவேண்டாம் என்று உத்தரவு போட்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

vijay1

Advertisment

இந்நிலையில் என்னதான் நடக்கிறது? என்று நாம் மாநாட்டுத் திடலுக்குச் சென்றோம். அங்கு மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவருக்கு புஸ்ஸியிடமிருந்து கோபமாகத் திட்டு விழுந்து கொண்டிருக்க, நாம் அவர் அருகில் சென்றோம். அவர் நமக்குத் தெரிந்தவராக இருந்தார். 

"என்னண்ணே?''’என்றதும், “"என் பெயர் போட வேண்டாம்'' என்றவர், தன் மனக் குமுறல்

"என்னண்ணே?''’என்றதும், “"என் பெயர் போட வேண்டாம்'' என்றவர், தன் மனக் குமுறல்களை நம்மிடம் கொட்ட ஆரம்பித்தார்... 

"இது கட்சியே இல்லைண்ணே; கார்ப்பரேட் கம்பெனி. எல்லாம் தலைவர் விஜய்க்காகதான் பொறுத்துக்கொள்கிறோம்  ஜெயாவுக்கு எப்படி சசிகலாவோ, அதுபோல் இங்க விஜய்க்கு ஒரு புஸ்ஸி. அவ்வளவுதான். சென்னை நீலாங்கரை விஜய் வீட்டு இரும்பு கேட்டுக்குள் போக, பல கதவுகள் இருக்கின்றன. ஆனால் எல்லாக் கதவுகளுக்கும் சீக்ரெட் சாவி இருக்கின்றன. இந்த சாவிகள் எல்லாம் ஒரே ஒருவரிடம்தான் இருக்கின்றன. அந்த ஒருவர் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே. அவரைத் தவிர அடுத்த இடத்தில் மாநில பொறுப்புகளில் உள்ள ஆதவ் அர்ஜூன், நிர்மல் குமார், அருண்குமார், ஜெகதீஷ், ராஜ்மோகன், லயோலா மணி மற்றும் விக்னேஷ்வரன் இவர்கள் யாருமே நேரடியாக கேட்டைத் தாண்டிச் சென்று, விஜய்யைப் பார்க்கமுடியாது. இந்த இரண்டாம் கட்டத் தலைவர்களும், புஸ்ஸி ஆனந்த் மூலமாகதான் விஜயைப் பார்க்கமுடியும். அடுத்து கட்சியில் உள்ள  110 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரும், நினைத்த நேரம் புஸ்ஸியிடம் கூடப் பேசமுடியாது. அவராகக் கூப்பிட்டால் மட்டுமே பேசமுடியும். இதுதான் விஜய் கட்சியின் நிலைமை.

அதே போன்று அனைத்து மாவட்டப் பொறுப்புகளும் புஸ்ஸி ஆனந்தால்  நிரப்பப்பட்டவைதான். இப்பவும் தன் கட்சியில் உள்ள மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் யாரையும் விஜய்க்குத் தெரியாது என்பதுதான் நிஜம்.. அப்போ நீங்கள் கேட்கலாம், விஜய்யை உருவாக்கிய அவர் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் எங்கே? என்று. அது பெரிய கதை.

 தன் மகன் விஜயை ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் அவர். கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனின் பார்வை அரசியல் பக்கம் திரும்புவதைக் கவனித்தார். ராகுல் மீது பற்றுடன் காணப்பட்ட விஜய், 2004-ல் யூத் காங்கிரஸ் விங்கில் சேர விருப்பமாக இருந்தார். அவரிடம், நாமே விஜய் மக்கள் இயக்கம் என்று ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி, அதைத் தொடங்கியவர்  சந்திரசேகர். அதற்கு மாவட்டந் தோறும் பொறுப்பாளர்களையும் அவரே நியமித்தார். அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சில வெற்றிகளை பெற்றது விஜய் மக்கள் இயக்கம்.  இதைக் கவனித்த ஜெயலலிதா 2011 தேர்தலில், அ.தி.மு.க.விற்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கத்தினரை இறக்கிவிட்டு, விஜய்யும் பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு, ஓ.பி.எஸ்., செங்கோட்டையனை விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு அனுப்பினார். 

அவர்களிடம் எஸ்.ஏ சந்திரசேகர் சீட் பேரம் பேச, உங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று அவர்கள் தரப்பு உறுதி கொடுத்தது. இதனால் விஜய், அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்த. தனக்கு உதவியாக இருக்க புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்த புஸ்ஸி ஆனந்தை கூட்டிவருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது "தலைவா' படம் வெளிவருகிறது. ஜெயலலிதா அதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார். எனவே தன் மகனைக் கூட்டிக் கொண்டு கொடநாடு சென்றார் எஸ்.ஏ.சி. அங்கு விஜய்யை சந்திக் காமல் அவமானப்படுத்தினார் ஜெய லலிதா. அங்கிருந்து திரும்பியதும் அப்பா மகனுக்குள் உரசல் தலை தூக்குகிறது. 

தன் மனைவி தன்னைவிட்டு வெகுதூரம் செல்ல, அப்பாவும் அம்மா வும் வீட்டை விட்டு வெளியேறு கிறார்கள். இதனால் முதலில் அப்செட் ஆகிறார் விஜய். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் வளரத் தொடங்க, இயக்கத்தைக் கவனிக்கும் பொறுப்பு  புஸ்ஸி ஆனந்திடம் கைமாறுகிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து ஜெயலலிதா, கலைஞர்  ஆகியோரின் இறப்பு நிகழ, அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் கட்சியை தொடங்கலாமா என்ற யோசனையில் இறங்கினார் விஜய். அவரது உறவுக் காரர் மூலம் ஆதவ் அர்ஜூன் விஜய்யிடம் பேசவேண்டும் என்று வர, விஜய் முதலில் புஸ்ஸியோடு வரவும் என்று சொல்ல, அவர்களு டன் சில தெலுங்கு படத்  தயாரிப் பாளர்கள் மற்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் விஜய்யை சென்று பார்த்தனர்.

vijay2

அடுத்து பிரசாந்த் கிஷோர் போட்ட ஸ்கெட்ச் என்னவென்றால் முதலில் தி.மு.க. கூட்டணியை உடைக்கவேண்டும். அதிலும் குறிப்பாக திருமா வெளியில் வரவேண் டும். திருமா + காங்கிரஸ் + விஜய்யின் கட்சி ஆகியவை அடங்கிய கூட்டணி உருவாக வேண் டும். அல்லது திருமாவாவது தங்கள் பக்கம் வரவேண்டும் என்பதுதான் முதல் ப்ளான். அதற்கான முதற்கட்ட முயற்சியில் இறங்கி, திருமா குறித்து விஜய் தரப்பு பல்ஸ் பார்க்க, அது முடியாது என்று தெரிந்தவுடன், தேர்தலுக்கு ஒரு வருடம் இருப்பதால் முதலில் ஆதவ் அர்ஜூனை வி.சி.க.வில் சேரவைத்து, அங்கிருந்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக திருமாவை கரைத்து, அவரை விஜய் பக்கம் கொண்டுவருவது என்று ஸ்கெட்ச் போட்டுதான் ஆதவ் அங்கு சென்றார். அது திருமாவிடம் பலிக்காமல் போக, அடுத்த சில நாட்களிலேயே முதல் மாநாட்டை அறிவித்து அதற்கான செலவுகளை குஜராத் கார்ப்பரேட்டு களோடு சேர்ந்து ஆதவ் அர்ஜூன் களத்தில் இறங்கினார். விஜய் என்றால் வெற்றி என்று பொருள் வருவதால், விஜய் தன் சொந்தப் பெயரில் தமிழக வெற்றிக் கழகம்  கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடத்திக்காட்ட,  தற்போது இரண்டாவது மாநாடு மதுரையில் மிக பிரம்மாண்டமாக 15 லட்சம் தொண்டர்களை வரவழைத்து, தமிழகத்தையே அதிர விடவேண்டும் என்று  களமிறங்கியிருக்கிறார்கள்.

இதற்காக மதுரை பகுதி நட்சத்திர ஓட்டல்களில் 325 நாட்கள் 10 ரூம்கள் புக் செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க புஸ்ஸி ஆனந்த் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதன் முழுச்செலவையும் ரிலையன்ஸ் அம்பானி குரூப்பின் கீழ் இயங்கும் குஜராத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் கம்பெனி ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

ரூம் குஜராத் கம்பெனி பெயரில் தான் புக்  செய்யப்பட்டிருக்கிறதாம். அதேபோன்று 110 மாவட்டச் செய லாளர்களில், ஒரு மாவட்ட செயலாளர் தலா 10 பேருந்துகளில் தொண்டர்களை ஏற்றிக்கொண்டு வரவேண்டும். பேருந்தில் ஏறும் போது அதை போட்டோ பிடித்து பஸ்ஸில் வரும் ஒவ்வொருவரின் பெயரையும் ”ஆன் லைன் விஜய் ஆப்”பில் ஏற்றவேண்டும். இதற்கான செலவுத் தொகையை  கட்சியே  கொடுத்துவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

மாநாட்டில் விஜய் தொண்டர்களுக்கிடையே  மேடையில் ரேம்ப் வாக் நடந்து வரும் போது, வர்ராரு வர்ராரு அழகர் வர்ராரு பாடல் ஒலிக்க, 1000 தொண்டர்கள் அழகர் வேடமிட்டு, தண்ணீர் பீய்ச்சியபடி, ஆரவாரம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது''’என்று விரிவாகப் பேசியவர், அங்கு மாநாட்டுப் பணிகளைச் செய்துவரும் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் நம்மிடம், "தமிழகத் தின் அனைத்து வி.ஐ.பி.களும் புஸ்ஸியை பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். எல்லோரும் இரவுதான் வருகிறார்கள். ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் இரண்டு முறை வந்துவிட்டார். அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் வந்தார்கள். மற்றும் சில தேவர் அமைப்புகள் வந்தன''’என்றார்.

மேலும் நாம் விசாரித்ததில், விஜய்க்கு வட மாவட்டங்களில் செல்வாக்கு இருப்பதால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற, ஓ.பி.எஸ்.ஸை பயன்படுத்தலாம் என்ற கணக்கு இருக்கிறது. அதுவும் அவரை த.வெ.க.வில் சேர்க்காமல், ஓ.பி.எஸ். புதிய கட்சி ஆரம்பிக் கிறாரோ இல்லையோ, ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாக நின்றது போன்று, த.வெ.க.வுடன் கூட்டணி வைத்து, ஓ.பி.எஸ். தரப்பு நிற்க, அவர் தரப்புக்கு 25 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருக்கிறது த.வெ.க. என்கிறது உள்வட்டாரம்.

இந்த அரசியலை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, "மக்களோடும் நெருங்கவில்லை... கட்சி நிர்வாகி களோடும் அணுக்கமில்லை. இவர் எப்படி கட்சியை கரைசேர்க்கப் போகிறார்''  என்கிறார் விஜய் ரசிகரும், த.வெ.க. நிர்வாகியுமான ஒருவர்.

nkn200825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe