ராகுல்காந்தியின் வியூக வகுப் பாளர்களில் ஒருவரான ப்ரவீன் சக்ரவர்த்தியும் த.வெ.க. தலைவர் விஜய்யும் சந்தித்திருப் பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வின் எதிரிகள் பட்டியலில் இருக்கும் விஜய்யும், காங்கிரசின் ப்ரவீன் சக்ரவர்த்தியும் சந்தித்து சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கூட்டணிகள் குறித்தும் விவாதித்ததாக வரும் தகவல்கள்தான் தமிழக காங்கிரசையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
தி.மு.க. கூட்டணி பற்றி காங்கிரசின் அகில இந்திய தலைமையில் என்ன நடக்கிறது? என்பது குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, "காங்கிரசுக்கும் ராகுல்காந்திக்கும் அரசியல், பார்லி மெண்ட், பொருளாதாரம், சமூகம், பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் வியூக வகுப்பாளர்களாக 10 பேர் கொண்ட ஒரு டீம் இருக்கிறது. இதனை ராகுல் காந்தியின் இன்னர் சர்க்கிள் என அழைக்கின்றனர். அந்த இன்னர் சர்க்கிளில் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணு கோபால், அலங்கர் சாவை, சாம் பிட்ரோடா, கௌஷல் வித்யார்த்தி, கௌரவ் கோகாய், கே.பி. பைஜூ, ஸ்ரீவத்சா உள்பட 10 பேர் இருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லமை பெற்றவர்கள். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலைசஸ் துறையின் தலைவ ராக ப்ரவீன் சக்ரவர்த்தி இருக்கிறார். இவர், தமி ழகத்தை சேர்ந்தவர். ராகுல்காந்திக்கும் அவருடைய இன்னர் சர்க்கிளுக்கும் மிக நெருக்கமானவர்.
அந்த வகையில்தான், விஜய்யை ப்ரவீன் சக்ரவர்த்தி சந்தித்திருப்பது முக்கியமாகப் பார்க் கப்படுகிறது. இன்னர் சர்க்கிளின் அனுமதியுடன் தான், குறிப்பாக கே.சி.வேணுகோபாலின் அனுமதி யுடன்தான் விஜய்யை சந்தித்துள்ளார் ப்ரவீன் சக்ரவர்த்தி. வேணுகோபாலை போலவே தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி பிரியவேண்டும் என ஆசைப் படுபவர் ப்ரவீன். இவருக்கும் தி.மு.க.வுக்கும் ஏழாம் பொருத்தம்தான். மேலும், ராகுலின் இன்னர் சர்க்கிளில் இருப்பவர்களில் மூன்று பேர் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக இருக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/vijay2-2025-12-08-16-10-49.jpg)
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடு துறை தொகுதியை தி.மு.க.விடமிருந்து காங்கிரஸ் வாங்கியது. இந்த தொகுதியில் ப்ரவீன் சக்ரவர்த்தி யை நிறுத்த முடிவுசெய்தார் ராகுல்காந்தி. இதனையறிந்த தி.மு.க. தலைமை, "மயிலாடுதுறை யில் ப்ரவீன் சக்ரவர்த்தியை தவிர, யாரை வேண்டுமானாலும் நிற்க வையுங்கள்; நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம். ஆனால், ப்ரவீனுக்கு கொடுக்கப்பட்டால் காங்கிரசுக்கு தி.மு.க. வேலை செய்யாது' என கறாராக ராகுல்காந்திக்கு தகவல் பாஸ் செய்தது. ப்ரவீனுக்காக எவ்வளவோ போராடியும், தி.மு.க. ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ப்ரவீனுக்கு பதிலாக வழக்கறிஞர் சுதாவை நிறுத்தியது காங்கிரஸ்.
ப்ரவீனுக்கு எதிராக தி.மு.க. இவ்வளவு ஆத்தி ரம் கொள்வதற்கு காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் பேசிய விவகாரம் சோசியல் மீடியாக்களில் ரிலீசாகி சர்ச்சையையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்திய சம்பவத்தின் சூத்திரதாரி ப்ரவீன்தான். அப்படிப்பட்ட ப்ரவீனுக்கு காங்கிரஸ் சீட் கொடுக்கும்; அந்த நபரை தி.மு.க. ஜெயிக்க வைக்க வேண்டுமா? என்கிற கோபம்தான், "ப்ரவீனுக்கு சீட் கொடுக்கக் கூடாது' என ராகுலிடம் அழுத்தம் தந்தது தி.மு.க. இதனால், தி.மு.க.வை ப்ரவீன் சக்ரவர்த்திக்கும் பிடிக்காமல் போனது.
இந்தச்சூழலில், சட்டமன்றத் தேர் தலில் எம்.எல்.ஏ. வாக வேண்டும் என கங்கணம் கட்டியுள்ளார் ப்ரவீன் சக்ர வர்த்தி. தி.மு.க. கூட் டணியில் காங்கிரஸ் இருந்தால் நிச்சயம் நமக்கு சீட் தர தி.மு.க. ஒத்துழைக்காது. அப்ப டியே சீட் தந்தாலும் நம்மை தோற்கடிப் பார்கள் என அறிந்து வைத்துள்ள ப்ரவீன், கூட்ட ணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே விஜய்யை சந்தித்துள்ளார்''” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதற்கிடையே ப்ரவீனுக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், அவரை தொடர்புகொண்டு வருகின்றனர். அவர்களிடம், "மாற்றங்கள் ஏற்படும், அது நல்லதாகவே நடக்கும்... பொறுத்திருந்து பாருங்கள்' என்று பகிர்ந்து கொண்டு வருகிறார் ப்ரவீன். மேலும், தமிழகத்தில் த.வெ.க.வுக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்த ஒரு சர்வேயையும் கே.சி.வேணு கோபாலுக்கு அனுப்பி வைத்துள்ளாராம் ப்ரவீன்.
விஜய் -ப்ரவீன் சந்திப்பு குறித்து த.வெ.க. தரப்பில் விசாரித்தபோது, "தி.மு.க.விடமிருந்து காங்கிரசை பிரிக்க வேண்டும்ங்கிறதுதான் விஜய் யின் நோக்கம். அதற்காக என்ன வேண்டுமானா லும் அவர் செய்வார். ப்ரவீனுக்கும் விஜய்யுக்கும் ஏற்கனவே நட்பு உண்டு. ராகுல்காந்தியை ஒருமுறை விஜய் சந்தித்தார் அல்லவா! அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் ப்ரவீன். கரூர் சம்பவத்தின் போது விஜய்யுடன் ராகுலை பேச வைத்ததும் ப்ரவீன்தான். அந்த வகையில், விஜய் அழைத்ததன் பேரிலேயே சந்திக்க வந்தார் ப்ரவீன்.
அந்த சந்திப்பில், நிறைய அரசியல் பேசப்பட்டன. குறிப்பாக, விஜய்யின் பேச்சு, காங் கிரசை த.வெ.க. பக்கம் இழுப்பதாகவே இருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சியை காங்கிரஸ் இழந்து 58 ஆண்டுகள் ஆகிறது. 2014-க்கு பிறகு பல மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்துள் ளது காங்கிரஸ். அகண்ட பாரதத்தில் வலிமையாக இருந்த நீங்கள் (காங்கிரஸ்), இன்றைக்கு 3 ஸ்டேட்ஸில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட சூழலில், எங்களுடன் நீங்கள் கூட்டணி வைப்பதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள ஒரு வாய்ப்பு வருகிறது. அதனை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா? அதிகாரம் உங்களுக்கு வரும்பட்சத்தில்தான் காங்கிரசை தமிழகத்தில் வளர்க்க முடியும். தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள். தி.மு.க.வை விட்டு விலகுவதில் ராகுல்ஜி என்ன கருத்து வைத்திருக்கிறார்? என்றெல்லாம் விஜய் பேசியிருக்கிறார்.
அதற்கு ப்ரவீன், "தமிழக காங்கிரஸில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள், உங்களுடன் கூட்டணி வைப்பதுதான் சரியானது என்கிற விருப்பத்தை ராகுல்ஜிக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். இதன் சாதக-பாதகங்களை ஆராய்ந்து கொண்டுதான் ராகுல்ஜியும் இருக்கிறார். 2006-2011 ஆட்சிக் காலத்தில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க.வுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் ஆதரவு தந்தது. அன்றைக்கு காங்கிரசில் 34 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அந்த 34 எம்.எல்.ஏ.க்களில் சீனியர்களாக இருந்த பலரும், ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.விடம் வலியுறுத்துங்கள் என சோனியாவை வலியுறுத்தினர். ஆனால், அன்றைக்கு கலைஞர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஆட்சியில் பங்கு கேட்டு சோனியா வற்புறுத்தவில்லை. அன்- கண்டிசனல் சப்போர்ட்டை தி.மு.க.வுக்கு கொடுத்தது காங்கிரஸ்.
ஆனால், இந்தமுறை அப்படி நழுவ விட்டுவிடக் கூடாது என்கிற சிந்தனையில்தான் வியூக வகுப்பாளர்கள் இருந்துவருகிறார்கள். இதற்காக, ஆட்சியில் பங்கு வேண்டுமென தி.மு.க.விடம் வலியுறுத்தும்படி ராகுல்ஜியிடம் அவர்கள் சொல்லிவருகின்றனர். சோனியாவிடம் இது குறித்து மீண்டும் கலந்துபேசி ஒரு முடிவை எடுப்பதாக ராகுல்ஜி சொல்லியுள்ளார். அதனால், கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க. ஒப்புக்கொள்ள வில்லையெனில், த.வெ.க. -காங்கிரஸ் கூட்டணி அமையும் என விஜய்யிடம் விவரித்திருக்கிறார் ப்ரவீன்''’என்று சந்திப்பில் நடந்தவைகளை விவரிக்கிறார்கள் த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலை யில் மிக வலிமையாக இருந்துவருகிறது தி.மு.க. கூட்டணி. இந்த வலிமையான கூட்டணியை உடைக்க அ.தி.மு.க. -பா.ஜ.க. கட்சிகள் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், "தி.மு.க. கூட்டணியை உடைக்க நான் முயற்சித்துப் பார்க்கிறேன்' என்கிற கோதாவில் குதித்திருக்கிறார் விஜய்.
"த.வெ.க. தனியாக போட்டியிட்டால் விஜய்கூட ஜெயிக்கமாட்டார் என்கிற எதார்த்தம் தான் தமிழக தேர்தல் களம் சொல்லும் உண்மை. இந்த எதார்த்தத்தை கஷ்டப்பட்டு விஜய்க்கு சிலர் உணர்த்தியுள்ளனர். அதனால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற மனநிலையிலிருக்கும் விஜய், தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமானால், அதன் கூட்டணி பலத்தை உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, காங்கிரசை இழுக்கும் முயற்சியில் குதித்துள்ளார். அதற்காகத் தான் என்னென்னமோ மாய வித்தைகளை காட்டத் தொடங்குகிறார் விஜய். அவரின் பிரித்தாளும் சூழ்ச்சியில் தி.மு.க.வின் முதுகில் குத்த காங்கிரஸ் நினைக்குமானால், அதற்கெல்லாம் பதட்டப்படுகிற இயக்கம் இல்லை தி.மு.க.'' என்கிறார்கள் தி.மு.க. சீனியர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/vijay1-2025-12-08-16-11-03.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/vijai-2025-12-08-16-10-28.jpg)