க்கீரன் இதழில், அன்றைய இராமநாதபுரம் கோவில் இணை ஆணையராக இருந்த கல்யாணி பற்றியும், அவர்மீது எழுந்த குற்றச் சாட்டுகள் குறித்தும் எழுதியிருந்தோம். ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், பணியிட மாறுதல் பெற்ற நிலையில், அந்த இடத்திற்கு வருவதற்கான முயற்சிகளில் உயரதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுகிறார் என்பதையும் நாம் வெளியிட்டிருந்தோம்.

jj

ஸ்ரீரங்கத்திற்கு வரவேண்டிய கல்யாணி, தற்போது அருகிலுள்ள சமயபுரம் கோவில் இணை ஆணையராக வந்துள் ளார். இவர் தன்னுடைய அதிகார துஷ்பிரயோகத்தை குறைக்காமல், இராமநாதபுரம் கோவிலில் நித்தியப்படி எனப்படும், கடவுளுக்கு படைக்கும் பொங்கல், பிரசாதங்களுக்கான பில் தொகையை நிறுத்தி வைத்துவிட்டு, தனியார் கட்டுமானப்பணி ஒப்பந்ததாரருக்கு அனைத்து பில்லையும் பாஸ் செய்தது, தங்கத் தேரில் செய்த மோசடி என்று தொடர்ந்து பல புகார்கள் இவர்மீது சுமத்தப் பட்டும், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், பிரபாகரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தயவில் தப்பித்துக் கொண்டிருந்தார்.

தற்போது, திருச்சி சமயபுரம் கோவிலிலும், கட்டுமானப் பணிகளுக்கு வைத்திருக்கும் கருங்கல், சிமென்ட் மூட்டைகளைத் தனக்குச் சொந்தமான ஸ்கார்ப்பியோவில் கடத்திச்சென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அதேபோல் கொரோனா ஊரடங்கில் கோவில் ஊழியர்களை தனது வீட்டில் வேலை வாங்கியிருக்கிறார்.

Advertisment

கருங்கற்கள் கடத்தல் சம்பவம் குறித்து விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டபோது, அவை அனைத்தும் குப்பையில் கிடந்ததாக சமாளிப்புடன் கூறி, இணைப்பைத் துண்டித்தார். நாம் விளக்கம் கேட்ட மறுநாளே, 4 கற்களை மட்டும் எடுத்த இடத்திலேயே திரும்பப் போட்டுவிட்டனர். கோவில் காவலாளியிடம், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது, சொன்னால் தொலைத்துவிடு வோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கும் சேகர் பாபு, அதிரடியாகச் செயல் பட்டுவருகிறார். வடபழனி கோவிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப் புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது. சாலிகிராமம் காந்தி நகரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் கோவில் நிலத்தையும் மீட்டுள்ளார். யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அதிரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறார். இந்த நிலையில், திருச்சி சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, அரசின் எந்த உத்தரவையும் மதிக்காமல், கோப்புகளைக் கிடப்பில் போட்டுவிட்டு தன்னுடைய கடமையை சரிவரச் செய்யாமலும், எவற்றிலெல்லாம் ஊழல் செய்ய முடியும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவரும் நிலையில், அவர் மீதும் அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்பதே, அத்துறையிலுள்ள ஊழியர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று பொருத்திருந்து பார்ப்போம்... சட்டம் தன் கடமையைச் செய்கிறதா என்பதை!

Advertisment