திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தது. அ.தி.மு.க.வின் வருகைக்குப் பின்னர் பெரும்பாலும் அ.தி.மு.க.வே இத்தொகுதியை தன் கைவசம் வைத்திருந்தது. 2009-ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் அழகிரி களத்தில் முழுவீச்சில் இறங்கி, "திருமங்கலம் ஃபார்முலா' என்று பேசுமளவுக்குச் சென்று தி.மு.க. வெற்றிபெற்றது. இந்த வெற்றியைக் கடந்து பெரும்பாலும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும்தான் சாதகமாக இருந்துள்ளது திருமங்கலம். 

Advertisment

2011 முதல் தொடர்ச்சியாக அ.தி.மு.க.வே இத்தொகுதியில் வெற்றிபெற்று வருகிறது. 2016-ல் அ.தி.மு.க. புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தி.மு.க.வின் மணிமாறனை எதிர்த்து வெற்றிபெற்று அமைச்சரானார். 2021 தேர்தலில் மீண்டும் மணிமாறனுக்கே சீட் ஒதுக்கப்பட்டு 13,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந் தாலும் திருமங்கலம் தொகுதியிலுள்ள 13 ஒன்றியச் செயலாளர் களில் 10 பேர் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள். அவர்கள் இவ ருக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்ற பேச்செழுந்தது. 

Advertisment

இம்முறை கட்டாயம் வெற்றிபெற வேண்டுமென்று கடந்த 4 வருடங்களாக கிராமம் கிராமமாகச் சென்றுவருகிறார். கட்சி நிர்வாகிகளுக்கு தனி கவனிப்பு செய்துவரு கிறார். திருமண வீடுகளுக்குச் சென்று பரிசு, சாவு வீடுகளுக்குச் சென்று இரங்கல், ஆதரவற்றோருக்கு உதவி என்று தொகுதியில் பம்பரமாக சுற்றிவருகிறார் மணிமாறன். திருமங்கலத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமாரின் தொடர் வெற்றிக்கு செக் வைக்க நேருவின் கண் காணிப்பில் ஒரு டீம் களத்திலிறங்க உள்ளதாகத் தகவல்வருகிறது. ஐ.டி.விங் மற்றும் சபரீசனின் சிறப்பு தேர்தல் வகுப்பாளர்கள் திருமங்கலத்தை உற்றுக்கவனித்து வருகிறார்கள். 

ஹாட்ரிக் வெற்றிக்காக பணத்தை வாரியிறைக்கிறார் உதயகுமார். திருமங்கலத்தில் உதயகுமாரின் பரிசுப்பொருளில்லாத வீடே இருக்காது எனுமளவுக்கு எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு குடம், சேலை கொடுப்பது, அ.தி.மு.க. மீட்டிங் போட்டால் மக்கள் எந்த சேரில் உட்காரு கிறார்களோ அந்த சேரை வீட்டிற்கே எடுத்துக்கொண்டு போகலாம் என்று தாராளம் காட்டுகிறார். அ.தி.மு.க., தி.மு.க. யார் வெற்றி பெற்றாலும் வித்தியாசம் மிகச்சிறிய அளவுக்கே இருக்குமளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

Advertisment

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம்.  அடுத்தடுத்த இடத்தில்  நாயுடு, முத்தரையர்கள், ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்களும் உள்ளனர். “திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி யில் திருமங்கலம் நகராட்சி, கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் யூனியன்கள், பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன. திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் தாலுகாக்கள் உள்ளன. இங்கு பிரதான தொழில் விவசாயம். கடந்த 20 வருட காலமாக நெல் விளைச்சல் குறைவு. நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாராமல் அடைபட்டுள்ளன. பலமுறை முறையிட்டும் இதுவரை சரியாக தூர்வாரப்படவில்லை. மழைநீர், கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட நவதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுவ தால் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கப்பலூர் தொழிற்பேட்டை திருமங்கலம் தொகுதியில்தான் உள்ளது. இதில் ஏராள மானோர் பணிபுரிந்துவருகின்றனர். கடந்த 45 வருடங்களாக இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கை, ரெயில்வே மேம்பாலம் வேண்டுமென்பது. இதுவரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் திருமங்கலம் வடபகுதி வளர்ச்சியடைய வில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கப்பலூரில் சுங்கச் சாவடி அமைக்கப் பட்டுள்ளதால் அடிக் கடி உள்ளூர் வாக னங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் தக ராறு ஏற்படு கிறது. இத னால் சிறு, குறு தொழில் கள் பாதிக் கப்படுகின்றன. சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று பலமுறை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

திருமங்கலம் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கப்படவில்லை. மணம்மிக்க மதுரை மல்லியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விமான சேவை, சென்ட் பேக்டரி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது நீண்ட நாள் கோரிக்கையாகவே இருக்கிறது. இந்த மனக்குறைகளை பிரச்சாரத்தில் தி.மு.க. அழுத்திச்சொன்னால் அ.தி.மு.க. வேட்பாள ருக்குச் சிக்கல். 

அதேபோல ஓ.பி.எஸ்., தினகரன் இருவருக்கும் முக்கிய குறியே ஆர்.பி. உதய குமார்தான். அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பி.எஸ்., சசிகலாவைச் சேர்க்காததற்கு காரணமே உதயகுமார்தான், முக்குலத்தோர் சமூகத்திற்கு துரோகம் செய்கிறார் என்று சொல்வதுடன், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரையை களத்தில் இறக்கிவிடத் தயாராகிவருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் அ.ம.மு.க. மூன்றாவது இடத்திற்கு வந்தது. இந்த முறை ஓ.பி.எஸ்.ஸுடன் சேர்ந்து காளிமுத்துவின் மகனான டேவிட் அண்ணாதுரையை நிறுத்தினால் போட்டி கடுமையாகும் என்று கணக்கு போடுகிறது அ.ம.மு.க.  

கடந்த தேர்தலில் இங்கு தனித்துப் போட்டியிட்ட ஆதிநாராயணன் இந்தமுறை தி.மு.க.வின் மணிமாறனோடு கைகோர்த்துள் ளார். விஜய் கட்சியில் மாவட்ட துணைச்செய லாளர் சதீஸ்குமார் களமிறங்குவார் என எதிர்பார்க்கின்றனர் த.வெ.க. கட்சியினர். தி.மு.கவைப் பொறுத்தவரை மணிமாறன் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தி லிருக்கிறார். இந்தமுறையும் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவிக்கே வேட்டு வரலாம். ஆர்.பி.உதயகுமாரோ... ஓ.பி.எஸ்., தினகரனின் எதிர்ப்பையும் மீறி தனது சமுதாய ஓட்டுக்களை வாங்கி கட்சியில் தன் செல்வாக்கை தக்கவைக்கும் முடிவிலிருக்கிறார். இதனால் திருமங்கலத்தில் இம்முறை தேர்தல் வெக்கை அதிகமாகவே இருக்கிறது.