அவர்களும் தருவார்களா? இவர்களுக்கு கிடைக்குமா? -ஃபெஃப்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பு!

pp

கொரோனா பீதியால் மார்ச் 13-ஆம் தேதியிலிருந்து அனைத்து தமிழ் சினிமா ஷூட் டிங்குகளும் ரத்துசெய்யப் பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன. இப்போது ஏப்.14 வரை இந்தியா முழு வதும் ஊரடங்கு இருப்பதால் சினிமா தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை படுதிண் டாட்டமாகிவிட்டது.

இதனால் அவர்களின் வாழ்க்கையில் தற்காலிக நம்பிக்கை ஒளியேற்ற முடிவு செய்தார் சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர

கொரோனா பீதியால் மார்ச் 13-ஆம் தேதியிலிருந்து அனைத்து தமிழ் சினிமா ஷூட் டிங்குகளும் ரத்துசெய்யப் பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன. இப்போது ஏப்.14 வரை இந்தியா முழு வதும் ஊரடங்கு இருப்பதால் சினிமா தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை படுதிண் டாட்டமாகிவிட்டது.

இதனால் அவர்களின் வாழ்க்கையில் தற்காலிக நம்பிக்கை ஒளியேற்ற முடிவு செய்தார் சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். அதன்பேரில் ரஜினி 50 லட்சம், கமல் 10 லட்சம், தனுசு 15 லட்சம், கார்த்தி, சூர்யா, சிவகுமார் 10 லட்சம், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி தலா 10 லட்சம் மற்றும் சில நடிகர்கள் வழங்கிய வகையில் நிதி வந்து சேர்ந்தது.

pepsi

தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி.சௌத்ரி, கே.ஜே.ஆர். ராஜேசு, ஆர்.பார்த்திபன் உட்பட சிலர் வழங்கிய அரிசி மூட்டைகள் (25 கிலோ பேக்) 1980.

இவையெல்லாம் வந்து சேர்ந்த பின் ஃபெஃப்சி அமைப்பில் உள்ள 24 யூனியன்களின் தலைவர், செயலாளர், பொருளாளர்களை அழைத்து ஃபெஃப்சியின் நிவாரண அடையாள அட்டை, அரிசி மூட்டைகள், உறுப்பினர் ஒருவருக்கு ரூ.500 என கனகச்சிதமாக வழங்கினார்.

ஃபெஃப்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 ஆயிரம் என் கிறார் செல்வ மணி. ஆனால் உண்மையான எண்ணிக்கையோ 18 ஆயிரம்தான். அதேபோல் செல்வமணியின் மனைவியும் நடிகையும் ஆந்திர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல். ஏ.வுமான ரோஜா, தனது சொந்த பங்களிப்பாக ஃபெஃப்சிக்கு 100 மூட்டை அரிசி வழங்குவதாக ஆந்திர மீடியாக்களிடம் சொன்னார். ஆனால் இன்றுவரை அந்த அரிசி மூட்டைகள் வந்துசேரவில்லை என்கிறார்கள் சினிமா யூனியனைச் சேர்ந்த பலர்.

நிதி உதவி அளித்த முன்னணி நடிகர்கள், அரிசி மூட்டைகளை வழங்கிய தயாரிப்பாளர்கள் ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ஆர்.கே.செல்வமணி. இதன் பிறகும்கூட மாஸ் ஹீரோக்களான விஜய், அஜீத், டாப் ஹீரோயின் களான நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, ஹன்ஸிகா ஆகியோரிடமிருந்து ஃபெஃப்சிக்கு நிதி உதவியோ, பொருளாதார உதவியோ இன்றுவரை வந்து சேரவில்லையாம்.

இதனிடையே, ஆந்திர போலீசாரால் தவறுதலாகப் பிடிபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களை மீட்பதில் சத்யராஜ் உள்ளிட்டோர் எடுத்த முயற்சிகளின்போது, ஆந்திராவின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான ரோஜா ஆக்கப் பூர்வமாகவும் விரைவாகவும் உதவியதால், தமிழக ஓட்டுநர்கள் மீட்கப்பட்டனர். இதற்காக சமூக வலைத்தளங்களில் ரோஜாவுக்கு பெரும் பாராட்டுகள் குவிகின்றன.

-ஈ.பா. பரமேஸ்வரன்

nkn040420
இதையும் படியுங்கள்
Subscribe