கல்வித்துறை கழுகுகளுக்கு மாணவிகளை இரையாக்குவது பற்றிய அதிரவைக்கும் ஆடியோ ஆதாரத்துடன் முதன்முதலில் நக்கீரன்தான், அருப்புக்கோட்டை கலைக்கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தை அம்பலப்படுத்தியது.
2018 ஏப்ரல் 16-ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளி வந்தார். கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் வழிநடத்த முயற்சித்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்தபடியே உள்ளது.
‘நிர்மலாதேவி வழக்கில் முதன்மை ஆதாரம் இல்லை; இரண்டாம் நிலை ஆதாரமே உள்ளது’ என நீதிமன்றத்தால் கருதப்படும் இந்த வழக்கின் நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசிய அந்த 20 நிமிட சர்ச்சை ஆடியோ திட்டமிட்டு அங் கங்கே எடிட் செய் யப்பட்டதாகவும், மாணவிகளின் நண்பர் கள் மற்றும் உறவினர் களிடம் பரவி, அருப்புக்கோட்டையில் ஒரு ப்ரவுசிங் சென்டர் மூலம் ‘லீக்’ ஆனதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பறிப்பதற்கான முயற்சிகள்கூட முதலில் நடந்ததாகவும், சாட்சிகள் தரப்பிடம் நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாணவிகளும் "அவங்க (நிர்மலாதேவி) பேசியது தவறா தெரிஞ்சுச்சு.. பேராசிரியர் முருகனையும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி யையும் யாரென்றே தெரியாது என்றும் ‘போலீஸ்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணணும்னு நாங்க சொல்லல, காலேஜ் செகரட்டரிதான் (ராமசாமி) கம்ப்ளைன்ட் கொடுத் தாரு'’ எனவும் சாட்சியம் அளித்துள்ளனர். ‘"அவங்க பேசியது தவறா தெரிஞ்சுச்சு'’என்று சொல்லி வைத்தாற் போல் மாணவிகள் ஒவ்வொருவரும் சொல்ல... ‘"சொன்ன தையேதான் சொல் லப் போறீங்களா?' என்று கேட்கும் அளவுக்கு நீதிமன் றத்தை எரிச்ச லடைய வைத் துள்ளனர்.
‘"இத்தனை சாட்சிங்க போட்டு, இத்தனை பக்கம் எழுதி, சொன்னதயே திரும்பத் திரும்ப அரைச்சி, கோர்ட் நேரத்த வீணடிக்கிறீங்க. இந்த ஒரு வழக்கை மட்டும் பார்த்தால் போதுமா? மற்ற வழக்குகளைப் பார்க்க வேண்டாமா? மாணவிகளை ட்ரெயின் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்க. சாட்சி... க்ராஸிங்.. இதுக்கெல்லாம் இனி அஞ்சஞ்சு நிமிஷம்தான்''’ என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு குட்டு விழுந்துள்ளது.
"வாய் வார்த்தையால் பேசியதற்கெல்லாம் வழக்கு போட்டால் எப்படி? நிர்மலாதேவி பேசியது தவறாகத் தெரிந்தது என்று மாணவிகள் அந்தக் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டதை பெரிதாக எடுத்துக்கொண்டு, வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது' என்கிற ரீதியிலேயே, இந்த வழக்கின் போக்கை அந்நீதிமன்றம் பார்க்கிறது.
யார் மீதுதான் குற்றம்?
தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் செயலாளர்கள் சவுண்டையா, ராஜ்குமார் மற்றும் தற்போதைய செயலாளர் ராமசாமி ஆகியோரது சில நடவடிக்கைகள் விரும்பத் தகாதவையாகவே இருந்துள்ளன. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதில் விதிமீறல் நடந்து, ரூ.30 லட்சம், ரூ.35 லட்சம் என வாங்கிக்கொண்டு தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், வரலாறு, இயற்பியல் போன்ற துறைகளுக்கு ரூ. 3 கோடியே 45 லட்சம் வரை வசூலித்து, 11 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த நியமன விவகாரம் வெடித்து விடாமல் திசை திருப்பிவிட, நிர்மலாதேவியின் வில்லங்க ஆடியோ, கல்லூரி நிர்வாகத்தினருக்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறது.
கல்வித்துறையினரின் விருப்பத்தை நிறை வேற்றியதாலேயே, அந்தக் கல்லூரிக்கு ஏ கிரேடு மற்றும் தன்னாட்சி அந்தஸ்து கிடைத்ததென்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த நிர்மலாதேவியும் தனக்குள்ள நெட் வொர்க்கை, அந்த செல்போன் உரையாடலில் மாணவிகளிடம் பெருமையாக விவரித்திருந்தார். நிர்மலாதேவியின் ஆடியோவை வைத்து மிரட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை கல்லூரிக்கு சாதகமாக நடந்துகொள்ள வைக்கும் திட்டம்கூட இருந்திருக்கிறது.
"இன்னும் நிறைய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில், ‘இந்த வழக்கில் யாருக்காவது தண்டனை கிடைக்குமா?'’என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நிர்மலாதேவி விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசா ரணைக் குழுவெல்லாம் அமைத்தனர். சந்தா னம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும், அதனை வெளியிட பல்கலைக் கழக வேந்தர், துணைவேந்தருக்கு அப்போது தடை விதித்தது உயர் நீதிமன்றம். அதனால் விசாரணை அறிக்கை விபரம் இதுநாள்வரை வெளியாக வில்லை.
முந்தைய அ.தி.மு.க. அரசு, விசா ரணை அதிகாரி சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் குழுக்கள் அமைத்து, நிர்மலாதேவி விவகா ரத்தை ஒரு தினுசாகவே கையாண் டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற் பட்டும்கூட, இந்த வழக்கில் அரசு வழக்குரை ஞர் மாற்றப்படவில்லை. வழக்கின் போக்கும் தீர்ப்பும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.