சேலம் வடக்கில் அடுத்தடுத்து இரண்டுமுறை வெற்றிபெற்று வலுவாகக் காலூன்றியிருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வரும் தேர்தலில் மீண்டும் அங்கே கரையேறுவாரா? என்ற விவாதம் தொகுதிக்குள் பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாள ரான வழக்கறிஞர் ராஜேந்திரன், கடந்த 2016, 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றார். கடந்த 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடுமென எதிர்பார்க்கப் பட்ட நிலையில், கட்சி மேலிடம் அவரை கண்டுகொள்ளவில்லை. சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் அவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும், தேர்தலில் அவர் பரிந்துரைத்த நபர்களைக்கூட அவரால் வெற்றிபெறவைக்க முடியவில்லை என்பதாலும் தான் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற பேச்சும் கிளம்பியது.
இந்நிலையில்தான், சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி, ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். வரும் சட்டமன்றத் தேர்த-ல் சிட்டிங் அமைச்சராக ராஜேந்திரன் களம் கண்டாலும், வெற்றி பெறுவது அத்தனை சுலபமல்ல என்கிறார்கள்.
இது தொடர்பாக தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம். "சுற்று லாத்துறை அமைச்சராக ராஜேந்திரன் பொறுப்பேற்று ஓராண்டிற்கு மேலா கிறது. இதுவரை சேலம் மாவட்டத் திற்கோ, தமிழகத்திற்கோ குறிப்பிடத் தக்க அளவுக்கு எந்தவொரு பெரிய திட்
சேலம் வடக்கில் அடுத்தடுத்து இரண்டுமுறை வெற்றிபெற்று வலுவாகக் காலூன்றியிருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வரும் தேர்தலில் மீண்டும் அங்கே கரையேறுவாரா? என்ற விவாதம் தொகுதிக்குள் பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாள ரான வழக்கறிஞர் ராஜேந்திரன், கடந்த 2016, 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றார். கடந்த 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடுமென எதிர்பார்க்கப் பட்ட நிலையில், கட்சி மேலிடம் அவரை கண்டுகொள்ளவில்லை. சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் அவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும், தேர்தலில் அவர் பரிந்துரைத்த நபர்களைக்கூட அவரால் வெற்றிபெறவைக்க முடியவில்லை என்பதாலும் தான் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற பேச்சும் கிளம்பியது.
இந்நிலையில்தான், சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி, ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். வரும் சட்டமன்றத் தேர்த-ல் சிட்டிங் அமைச்சராக ராஜேந்திரன் களம் கண்டாலும், வெற்றி பெறுவது அத்தனை சுலபமல்ல என்கிறார்கள்.
இது தொடர்பாக தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம். "சுற்று லாத்துறை அமைச்சராக ராஜேந்திரன் பொறுப்பேற்று ஓராண்டிற்கு மேலா கிறது. இதுவரை சேலம் மாவட்டத் திற்கோ, தமிழகத்திற்கோ குறிப்பிடத் தக்க அளவுக்கு எந்தவொரு பெரிய திட்டத்தையும் கொண்டு வர வில்லை. சேலம் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள மூன்று தொகுதிகளில் சாலைப் பணிகள், பாதாளச் சாக்கடை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி கள் பெருமளவு முடங்கிக்கிடக்கின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/salem1-2026-01-19-17-08-51.jpg)
அமைச்சரால் சொந்த மாவட்டத்திற்கே கூட பெரிய நன்மை கள் இல்லை. அதே நேரம், அவருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் காமராஜ், கவுன்சிலர்கள் தமிழரசன், சாந்தமூர்த்தி, ஏ.டி.சி. மணி, ப.செ. பிரகாஷ், பழக்கடை கணேசன், ஓமலூர் கிழக்கு ஒ.செ. ஓ.எம்.ரமேஷ், மாநகர செயலாளர் ரகுபதி ஆகிய எட்டுபேர் வலுவாக செட்டிலாகி விட்டார்கள். சேலம் மாநகராட்சி தொடர்பான பல ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தப்பணிகள், காண்ட் ராக்டர் காமராஜின் கம்பெனிக்கு நேரடியாகவும், சில ஒப்பந்தப்பணிகள் அவர் சொல்லும் கம்பெனிக்கும் கைமாறுகிறது. மாநகராட்சியைப் பொறுத்தவரை காமராஜ்தான் "நிழல்' அமைச்சர்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மொத்த அரசு கேபிள் டிவி ஒப்பந்தப் பணிகளும் ஓ.எம்.ரமேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் முதல் வி.ஏ.ஓ. வரை அனைத்துத் துறை அதிகாரிகளையும் அமைச்சர் சார்பில் காண்ட் ராக்டர் காமராஜும், ஓ.எம்.ரமேஷும்தான் டீல் செய்கின்றனர். கவுன்சிலர்கள் தமிழரசன், சாந்தமூர்த்தி, ப.செ. பிரகாஷ் ஆகியோர் மாநகராட்சி சைக்கிள் ஸ்டேண்டு, சாலையோரக் கடைகள், தொங்கும் பூங்கா, ஆனந்தா மார்க்கெட் டெண்டர், டாஸ்மாக் பார் வசூல் ஆகியவற்றை கவனித்துக் கொள்கின்றனர். தமிழரசன் மட்டும் கூடுதலாக குவாரி உரிமையாளர்களையும் டீல் செய்து கொள்கிறார்.
மாநகராட்சி தொங்கும் பூங்கா, பன்னடுக்கு கார் நிறுத்துமிடம் ஆகியவற்றை அஸ்தம்பட்டி ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்துதான் சாந்தமூர்த்தி டெண்டர் எடுத்துள்ளார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு அஸ்தம்பட்டி ராஜேந்திரன் இறந்துவிட் டார். அவருடைய குடும்பத்திற்கு அமைச்சர் மூலம் கட்டப்பஞ்சாயத்து பேசிய சாந்த மூர்த்தி, பெயரளவுக்கு ஒரு தொகையைக் கொடுத்து கணக்கை முடித்துவிட்டார். இதனால் அஸ்தம்பட்டி ராஜேந்திரன் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் இப்பிரச்னை எதிரொலிக்கும்.
சேலம் மாநகராட்சியில் பணியாளர்கள் நியமனம், வ.உ.சி. மார்க்கெட் டெண்டர் விவகாரம், அதிகாரிகளிடம் வசூல் ஆகிய பணிகளை பழக்கடை கணேசன் கவனித்துக் கொள்கிறார். சேலம் மாநகராட்சியில், கிரேடு-2 செயல்திறன் உதவியாளர்கள் 6 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் பழக்கடை கணேசன், அமைச்சர் பெயரை டேமேஜ் செய்துவிட்டார். இந்தப் பணி நியமன முறைகேட்டை நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து அம்பலப்படுத்தியதையடுத்து 6 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
அரசுப் போக்குவரத்துத் துறையில் டிரைவர், கண்டக்டர் பணி நியமனம், இடமாறுதல் முதல் சென்னை யில் அமைச்ச ருக்குத் தேவை யான தனிப் பட்ட சேவை கள் வரை ஏ.டி.சி. மணி தான் செய்து வருகிறார். இதற்கு பிரதிபலனாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் சில கடைகளை அவருக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளார் அமைச்சர். சேலம் மாநகர செயலாளர் ரகுபதி, ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப்பஞ்சாயத்து, சந்துக் கடைகள், மசாஜ் கிளப்களை நடத்தி வருகிறார்.'' என அமைச்சர் ராஜேந்திரனின் 8 தளபதிகள் குறித்தும் விவரமாகச் சொல்கிறார்கள் தி.மு.க. சீனியர்கள்.
இன்னும் சில மூத்த உடன்பிறப்புகள் கூறுகையில், "அமைச்சர் ராஜேந்திரன் தனக்குப் பிடிக்காத நபர்களிடம், தனது ஆதரவாளர்களும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது எனத் தடை விதிக்கிறார். அமைச்சரின் தீவிர விசுவாசியாக இருந்த மேயர் ராமச்சந்திரன், ஒருமுறை சூரமங்கலம் மண்டலக்குழுத் தலைவர் கலையமுதனிடம் பேசினார் என்பதற்காக அவரை ஒதுக்கினார். வீரபாண்டியார் காலத்திலிருந்தே தி.மு.க.வுக்கு தீயாக வேலை செய்து வருபவரும், அமைச்சரின் 'குட்புக்'கில் இருந்தவருமான கவுன்சிலர் குமரவேல், மகளின் திருமணத்திற்கு கவுன்சிலர் குணசேகரனை அழைத்தார் என்பதற்காக அவரை அடியோடு ஓரங்கட்டிவிட்டார்.
மாநகர செயலாளராக இருந்த கவுன்சிலர் ஜெயக்குமார், சூரமங்கலம் மண்டலத்தில் சாதி மற்றும் கட்சி ரீதியாக வலுவாக இருக்கும் கவுன்சிலர் சர்க்கரை சரவணன், கன்னங்குறிச்சி பேரூராட்சியில் அமைச்சரின் படைத் தளபதியாக இருந்த குபேந்திரன், மாணவர் அணி தமிழரசன், மாஜி அவைத் தலைவர் கலையமுதன், ஓமலூரில் தனிப்பெரும் செல்வாக்குடன் இருக்கும் மாஜி எம்.எல்.ஏ. தமிழரசு, இளந்தலைவரின் நேரடிப் பார்வையில் இருக்கும் இளைஞரணி அருண் பிரசன்னா, போட்டியாக உருவெடுப்பார் என்பதால் மாஜி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்தி பன், தனி ஆவர்த்தனம் செய்வார்கள் என்பதால் கவுன்சிலர்கள் குணசேகரன், உமாராணி, தெய்வலிங்கம், அசோகன், திருஞானம் வரை அமைச்சரால் 'ரெட் கார்டு' போடப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது'' என்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/salem2-2026-01-19-17-09-28.jpg)
அமைச்சருக்கு நெருக்கமான நிர்வாகிகள் இருவரிடம் பேசினோம்... "சேலம் மேற்கு மா.செ. செல்வகணபதி எம்.பி., கிழக்கு மா.செ. சிவலிங்கம் எம்.பி., ஆகியோரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில்லை. கிழக்கு, மேற்கு மாவட் டங்களில் அரசுத் திட்டப்பணிகளை தொடங்கிவைக்கச் செல்லும்போது, அங்குள்ள நிர்வாகிகளுக்கு அமைச்சர் தரப்பிலிருந்து முறையாக தகவல் கொடுப்பதில்லை. அமைச்சரின் செயல் பாடுகள் குறித்து மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் புகார் கூறியும் எந்த ரியாக்சனும் இல்லை. அமைச்சரால் பாதிக்கப்பட்ட நபர்களை, அவரே திரும்பவும் அழைத்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் அவர் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது சுலபமல்ல. 2021 தேர்தலில் ராஜேந்திரன் மைனாரிட்டி சமூகத்தினரின் ஆதரவால்தான் 7588 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. த.வெ.க. வருகையால் மைனாரிட்டி வாக்குகள் சிதறும் பட்சத்தில் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்'' என்கிறார்கள்.
அமைச்சரின் ஆதரவாளரான அவைத்தலைவர் ஜி.கே.சுபாஷிடம் பேசியபோது, "அமைச்சராக ராஜேந்திரன் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் பெரிதாக சாதித்துவிடவும் முடியாது. அதேநேரம், தனக்கு எதிரான மனநிலையில் இருக்கும் சிலரை அவர் கட்டம் கட்டுவதில் உடன்பாடு இல்லை'' என்று பட்டும்படாமலும் சொன்னார்.
இந்நிலையில், பொங்கல் விழாவை யொட்டி ஜன. 6ம் தேதி, சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு எவர்சில்வர் பாத்திரம், பேன்ட் & சட்டை துணி, ஒரு சேலை ஆகியவற்றை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். தன் மீது உருவாகியுள்ள அதிருப்தியைச் சரிக்கட்டவே பரிசுப் பொருள்களை வழங்கியதாகச் சொல்கிறார்கள்.
சேலம் வடக்கு தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றிபெற்ற அமைச்சர் ராஜேந்திரனுக்கு, அதிருப்தி கோஷ்டிகளால் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிதான் என் கிறார்கள் கள நிலவரம் அறிந்தவர்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us