Advertisment

தி.மு.க. தனித்து களமிறங்குமா? -உசிலம்பட்டி தி.கு.தி.கு...

usilampatti

1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்துவரும் உசிலம்பட்டி தொகுதியில், அதிக முறை வெற்றிவாகை சூடியது பார்வர்டு பிளாக் தான். அக்கட்சி சார்பில் மூக்கையா தேவர் 4 முறையும், சுயேட்சையாக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். அதன்பிறகு ஆண்டித்தேவர், பி.கே.எம்.முத்துராமலிங் கம், பி.என்.வல்லரசு, எல்.சந்தானம், பி.வி.கதிரவன் என பார்வர்டு பிளாக் அதிகம் ஆதிக்கம் செலுத்திய தொகுதி உசிலம்பட்டி.  இவர்களுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது. இந்த தொகுதியில் செல்லம் பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி நகராட்சிகளும், எழுமலை உள்ளிட்ட பல பேரூராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisment

இந்த தொகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மகளிர் கல்லூரி என ஒன்றுகூட இதுவரை இல்லை. பிரதான தொழில் விவசாயம்தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த தொகுதியில் பிஸ்கட், மிட்டாய் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகளவில் இ

1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்துவரும் உசிலம்பட்டி தொகுதியில், அதிக முறை வெற்றிவாகை சூடியது பார்வர்டு பிளாக் தான். அக்கட்சி சார்பில் மூக்கையா தேவர் 4 முறையும், சுயேட்சையாக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். அதன்பிறகு ஆண்டித்தேவர், பி.கே.எம்.முத்துராமலிங் கம், பி.என்.வல்லரசு, எல்.சந்தானம், பி.வி.கதிரவன் என பார்வர்டு பிளாக் அதிகம் ஆதிக்கம் செலுத்திய தொகுதி உசிலம்பட்டி.  இவர்களுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது. இந்த தொகுதியில் செல்லம் பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி நகராட்சிகளும், எழுமலை உள்ளிட்ட பல பேரூராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisment

இந்த தொகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மகளிர் கல்லூரி என ஒன்றுகூட இதுவரை இல்லை. பிரதான தொழில் விவசாயம்தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த தொகுதியில் பிஸ்கட், மிட்டாய் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகளவில் இருந்தன. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் வரவால் அவை நலிவடைந்தன. இதனால் வேலைவாய்ப்புக்காக பெரும்பாலும் மதுரையை மட்டுமே நம்பியுள்ளது. மேலும், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் இணைப்புப்பகுதியாக உசிலம்பட்டி தொகுதி உள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் செல்ல உசிலம்பட்டி பஸ் நிலையத்தைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Advertisment

உசிலம்பட்டி விவசாயிகளின் கனவுத் திட்டமான 58 கிராமக் கால்வாய் திட்டம் நிறைவுக்கு வந்துவிட் டாலும், வினாடிக்கு 316 கன அடி நீர் திறந்து விடலாம் என்ற நிலையில், கால்வாயின் பாதுகாப்பு கருதி 150 கனஅடி நீர் மட்டுமே திறக்கின்றனர். இதனை மாற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. மதுரை மல்லிகை, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி பகுதிகளில்தான் அதிகம் விளைவிக்கப்படுகின்றது. தொழிற்சாலைகள் பெயரளவுக்கு கூட இல்லாத ஊர் என்பதால், வேலைவாய்ப்பு கிடைப்பது இளைஞர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த 50 வருடமாக எந்தவித வளர்ச்சியும் இல்லாத தொகுதியென்றால் உசிலம்பட்டி தான் என்கிறார்கள் தொகுதிவாசிகள். 

உசிலம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் மகேந்திரன் பெயர் அடிபடுகிறது. இவர் சென்றமுறை அ.ம.மு.க. சார்பில் நின்று 7 ஆயிரம் வாக்குகள் தான் குறைவாகப் பெற்றிருந்தார். ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருந்தார். தற்போது அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் இவருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இருந்தாலும், அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் பி.கதிரவனுக்கு கொடுக்கப்படலாமென்றும் சொல்லப் படுகிறது. 

தி.மு.க.வில், கனிமொழி ஆதரவாளரான இளமகிழன், மூர்த்தி ஆதரவாளரான எஸ்.ஓ.ஆர்.தங்கபாண்டி, மணிமாறனின் ஆதரவாளரான ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் முத்துராமன் ஆகியோர் போட்டி யிலுள்ளனர். அதேபோன்று, மூர்த்தியின் ஆதரவாளரான உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி பெயரும் அடிபடுகிறது. கூட்டணியிலுள்ள முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நடிகர் கருணாஸும் சீட் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. தி.மு.க.வே இங்கு நிற்கவேண்டுமென்று நிர்வாகிகள் எதிர்பார்த்தாலும், அ.தி.மு.க.வில் யாரை நிறுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்து தி.மு.க. முடிவெடுக்கும். அ.தி.மு.க.வில் மகேந்திரனை நிறுத்தினால், தி.மு.க.வில், மண்ணின் மைந்தர்களில் ஒருவரான, எஸ்.ஓ.ஆர்.தங்கபாண்டியன் பெயர் பலமாக அடிபடுகிறது. அ.தி.மு.க.வில் கதிரவன் நிறுத்தப்பட்டால், தி.மு.க.வில் கருணாஸுக்கு வழங்கப்படலாம். தி.மு.க.வில், கூட்டணி சார்பில், பார்வர்டு பிளாக் வல்லரசு இருமுறை வெற்றி பெற்றுள்ளார். நேரடியாக தி.மு.க. ஒருமுறைகூட வென்றதில்லை என்பதால், கட்சியை வளர்த்தெடுக்க, தி.மு.க.வே நேரடியாகக் களமிறங்குமென்றும் எதிர்பார்க்கப் படுகிறது. 

அ.தி.மு.க. மேல் இங்குள்ள கள்ளர் சமுதாயத்தினர் இடஒதுக்கீடு பிரச்சனையிலும், தேவர் சமுதாயத் தலைவர்களை புறக்கணிக்கும் அரசியல் காரணமாகவும் அதிருப்தியில் இருப்பதால், தி.மு.க. சார்பில் இத்தொகுதியில் பெரிய தலைக் கட்டை சேர்ந்த எஸ்.ஓ.ஆர். தங்கபாண்டியனை நிறுத்தினால் தி.மு.க. இத்தொகுதியை தக்க வைக்கும் என்கிறார்கள். 

மேலும், போனமுறை அ.தி.மு.க.வில் நின்று வெற்றிபெற்ற சிட்டிங் எம்.எல்.ஏ. ஐயப்பன் மிகவும் எளிமை யானவர். அனைவரிடத்திலும் இறங்கி பழகக்கூடியவர். அவர் ஓ.பி.எஸ் பக்கம் வந்ததால் தொகுதிக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவிலை. சமுதாய ரீதியில் ஆதரவு இருக்கிறது என்கிறார் கள். 

தற்போது ஓ.பி.எஸ். அணியில் தேர்தலை எதிர்கொள் வதால் அ.தி.மு.க.வின் ஓட்டுக்கள் பிரியும். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் தி.மு.க.வுக்கு எப்பவுமே எட்டாத வெற்றி இம்முறை கைவரக்கூடும் என்கிறார்கள். த.வெ.க. சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் மாகாலிங்கம், தேர்தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது 

nkn271225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe