Advertisment

சாதிப்பாரா... திருச்சி முதல் பெண் ஆணையர்?

ww

திருச்சி மாநகரில் இதுவரை மொத்தம் 31 காவல்துறை ஆணை யர்கள் பணியாற்றியுள்ளனர். தற்போது 32வது ஆணையராக பொறுப்பேற்கும் சத்திய பிரியா ஐ.பி.எஸ்., திருச்சி மாநகரின் முதல் பெண் காவல்துறை ஆணையர் என்ற பெருமையை பெற் றுள்ளார். இவர் கடந்த 1973ஆம் ஆண்டு சென்னை யில் பிறந்துள்ளார். பள்ளிப் படிப்பை அடையாறில் முடித்தவர், இளங்கலைப் படிப்பை சென்னை எஸ்.ஐ.டி.யிலும், முதுகலைப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.

Advertisment

இளங்கலையில் பொலிட்டிக்கல் சயின்ஸ், முதுகலைய

திருச்சி மாநகரில் இதுவரை மொத்தம் 31 காவல்துறை ஆணை யர்கள் பணியாற்றியுள்ளனர். தற்போது 32வது ஆணையராக பொறுப்பேற்கும் சத்திய பிரியா ஐ.பி.எஸ்., திருச்சி மாநகரின் முதல் பெண் காவல்துறை ஆணையர் என்ற பெருமையை பெற் றுள்ளார். இவர் கடந்த 1973ஆம் ஆண்டு சென்னை யில் பிறந்துள்ளார். பள்ளிப் படிப்பை அடையாறில் முடித்தவர், இளங்கலைப் படிப்பை சென்னை எஸ்.ஐ.டி.யிலும், முதுகலைப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.

Advertisment

இளங்கலையில் பொலிட்டிக்கல் சயின்ஸ், முதுகலையில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் உள் ளிட்ட படிப்புகளை பயின்றுள்ள இவர், பல் கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். 1996-ல் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய நிலையில் 1997ஆம் ஆண்டு முது கலை படிப்பிற் கான இறுதி முடிவும், அரசு தேர்வுக்கான இறுதி முடி வும் வெளி யானது. இதில் தேர்ச்சி பெற்று தன் னுடைய காவல் துறை பணியைத் தொடங்கியுள்ளார். அவர் இறுதியாக பணியாற்றிய காஞ்சிபுரம் மாவட் டத்தில் மிகப்பெரிய ரவுடியான படப்பை குணா உள்ளிட்ட பல ரவுடிகளை ஒடுக்கி, காஞ்சி புரத்தை அமைதியான மாவட்டமாக மாற்றியுள்ளார்.

ww

திருச்சி மாநகரின் புதிய காவல்துறை ஆணையர் சத்தியபிரியாவிடம் பேசுகையில், "நான் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தை கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்தேன். இங்கு ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்தியதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தையும் கட்டுப்படுத்தியுள்ளேன். அதோடு செஸ் ஒலிம்பியாட்டிலும் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. எனவே திருச்சிக்கு பொறுப்பேற்கும் நான், அரசின் கொள்கைகளில் மிக முக்கியமான கொள்கையான கஞ்சா, குட்கா உள்ளிட்டவைகளின் ஊடுருவல்களைத் தடுப்பது, ரவுடியிசத்தைக் குறைப்பது, ரவுடியிசம் மற்றும் போதைப்பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதால் அவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி, ஆலோசனை வழங்கு வதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறேன்.

அதேபோல் திருச்சி மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசல்களை சரிசெய்யவும், அதற்காக எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்தும் நான் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கிறேன். எனக்கு திருச்சி மக்களை மிகவும் பிடிக்கும். பொதுவாகவே திருச்சி மக்கள் அமைதியானவர்கள். எனவே, அவர்களுக்கு தேவையானதை நாங்கள் செய்து கொடுத்தால் அவர்கள் அமைதியாகத் தங்க ளுடைய வாழ்க்கையை வாழ்வார்கள். நான் திருச்சி யில் ஏற்கனவே கடந்த 2012ல் துணை ஆணையராக பணியாற்றி இருக்கிறேன். அப்போது எனக்கு திருச்சி மக்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. எனவே அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு கடந்த காலங்களில் கிடைத்த அனுபவங் களே இந்த திருச்சி மாநகரை வழிநடத்துவதற்கு போதுமானதாக இருக்குமென நம்பு கிறேன்'' என்று கூறினார்.

nkn110123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe