தே.மு.தி.க. கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தா சலம் தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்து விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்று அவரது கட்சி சார்பில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். 2011 தேர்தலில் அ.தி.மு.க., ஜெயலலிதாவுடன கூட்டணியமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த், தன் தே.மு.தி.க. சார்பில் 29 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியைச் சந்தித்தார்.  

Advertisment

விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் நின்று இரண்டாவது முறை சட்டமன்ற உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதான எதிர்க் கட்சி தலைவராகவும் ஆனார். 2016 தேர்தலில் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சியினர் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், மக்கள்நலக் கூட்டணியமைத்து மூன்றாவது அணியின் முதலமைச்சர் வேட்பாள ராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் அந்தத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தார்.

அவரது கட்சி வேட்பாளர்கள் அனை வரும் தோல்வியடைந்தனர். அந்த விரக்தியிலும், வேதனையிலும், உடலில் ஏற்பட்ட நோய் காரணமாகவும் அவரால் அரசியலில் தீவிர கவனம் செலுத்தமுடியாமல் போனது. இதனால் கட்சியின் செல்வாக்கு சரிந்தது. அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பிரேமலதா இழந்த கட்சிசெல்வாக்கை நிலைநாட்டுவதற் காகப் பாடுபடுகிறார். 

premalatha1

Advertisment

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர் தலில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டில் ஏதாவ தொரு கூட்டணியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்பதில் தீவிர கவனம் செலுத்திவருகிறார் பிரேமலதா. அதன் எதி ரொலியாக தற்போது, "உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். அதன்படி கடந்த 13-ஆம் தேதி  ரிஷிவந்தியம் தொகுதியில்  சுற்றுப்பயணம் செய்த பிரேமலதா அங்கு பேசும்போது, "விஜயகாந்த் தொகுதியான ரிஷிவந்தியம் தொகுதியின் மக்களான உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விஜயகாந்த் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தார். கடந்த காலங்களில் தே.மு.தி.க. வெற்றிபெற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தே.மு.தி.க. மீண் டும் வெற்றிபெறும். நமது கூட்டணி, மக்கள் விரும்பும் மகத்தான கூட்டணியாக அமையும். ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் செய்த சாதனைகள் ஏராளம். தொகுதி வளர்ச்சித் திட்ட பணிகளில் கமிஷன் வாங்காத தலைவர் அவர். இந்த மாதம் விஜயகாந்த் பிறந்த மாதம். இதை நாம் வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறோம். மற்ற கட்சிகள்போல பணம், மது, வாகன வசதி என எதுவும் செய்துகொடுக் காமலேயே ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே என்னைக் காண கூடியிருக்கிறீர்கள். வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெற விருக்கும் நமது கட்சியின் மாநாட்டில் நீங்கள் திரளாக வந்து கலந்துகொள்ளவேண்டும். அந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாக அமையும். அப்போது வெற்றிக் கூட்டணி அமைப்போம்''’என்று பேசினார்.

மணலூர்பேட்டை அருகே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே மத்திய அரசு மூலம் பெற்ற நிதியில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனத்தில் வந்த பிரேமலதா வாகனத்திலிருந்து இறங்கி பாலத்தின் முன்பு மண்டியிட்டு வணங்கி சென்டிமெண்டை வெளிப்படுத்தினார். 2016-ல் அ.தி.மு.க. கூட்டணியில் ரிஷிவந்தியம் தொகுதி யில் போட்டியிட்ட விஜயகாந்த் தொகுதி மக்களிடம் ஏராளமான புதிய திட்டங்களைக் கொண்டுவருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் வெற்றிபெற்ற சில மாதங்களிலேயே ஜெயலலிதாவை எதிர்த்து நாக்கைத் துருத்தி கோபத்துடன் பேசியதால் கோபமடைந்த ஜெயலலிதா, விஜயகாந்த் வெற்றிபெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் புதிய திட்டங்கள் எதுவும் துவங்க முன் வரவில்லை. சட்டமன்ற உறுப்பினருக் காக ஒதுக்கப்படும் நிதியில் மட்டுமே திட்டப் பணிகள் நடைபெற்றன. இதற்காக அவரது தொகுதியில் தே.மு.தி.க. பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பல போராட்டங்களை நடத்தினர். அதில் அப்போதைய ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளர் கோவிந்தன் தலைமையில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டமும் நடைபெற்றது. அதன்பிறகே சட்டமன்ற உறுப் பினரின் திட்ட நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களில்கூட தே.மு.தி.க. நிர்வாகிகளுக
கான பங்களிப்பு கிடைத்தது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் விருத்தா சலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரேமலதா, தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணி எதுவாக இருந்தாலும் அந்த கூட்டணி சார்பில் போட்டி யிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற முடிவு செய்துள்ளதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் வரும், 21, 22-ஆம் தேதிகளில் பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பிரேமலதா, 25,908 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 

Advertisment

அதனால் வரும் தேர்தலில் பெரிய கட்சி யான தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து விருத்தாசலம் தொகுதியில் போட்டி யிட்டால் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என கணக்கு போட்டுள்ளார். பிரேமலதா அவரது கணக்கு தப்புக் கணக்கா? சரியான கணக்கா? என்பது கூட்டணி அமைத்து தேர் தலைச் சந்தித்த பிறகே தெரியவரும் என்கிறார் கள் அரசியல் நோக்கர்கள். 

-எஸ்.பி.எஸ்.