சென்னையில் நடத்திய பேரணி அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றாத நிலையில், கலைஞரின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் கலைஞருக்கு புகழஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் அழகிரி.

alagiri

திருவாரூரில் கூட்டம் என்றபோதும் உள்ளூர் மக்களின் பங்கேற்பு பெரிதாக இல்லை. மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து அழகிரி யுடன் வந்தவர்கள் அரங்கத்தை நிரப்பினர். திருவாரூர், நன்னிலம் பகுதிகளிலிருந்து வேன்களில் பெண்களை அழைத்து வந்திருந்தனர்.

Advertisment

கலைஞர் மறைவுக்குப் பிறகு அவருடைய திருவாரூர் தொகுதியில் மு.க.அழகிரி போட்டியிடப் போகிறார். அவருடைய முடிவு அரசியல் வட் டாரத்தை அதிரவைக்கப் போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலை யில்... அழகிரியின் இந்த விசிட் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

புகழஞ்சலிக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை அழகிரி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அழகிரியோ, ""என்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டால், ஸ்டாலின் தலைமையை ஏற்று, கட்சியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபடுவேன்'' என்றார்.

alagiri

Advertisment

"திருவாரூரில் நான் போட்டியிட் டால் எல்லா கட்சியினரும் என்னை ஆதரிப்பார்கள். தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையைவிட குறைவாக செலவு செய்தே ஜெயித்து விடலாம். தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆதரவாளர்கள் விரும்பினால் பார்க்கலாம்' என்ற அழகிரி, 2011 தேர்தலில் கலைஞருடன் திருவாரூரில் பயணித்ததை நினைவுகூர்ந்தார். ரஜினி+ பா.ஜ.க.வுடனான தனது லிங்க்கை மறுத்தார்..

இந்நிலையில், மதுரையில் அழகிரி யை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி அவரு டைய ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை மேற்கொண்டனர்.

மதுரையில் உள்ள ஆதரவாளர் களிடம் கையெழுத்து இயக்கம் விறுவிறுப்பாக இருந்ததாம்.

"கையெழுத்துப் போடுகிறவர், தனது தி.மு.க. உறுப்பினர் அட்டையின் ஜெராக்ஸையும் கொடுக்க வேண்டும்' என்று மன்னன் சொன்னதும் பலரும் பின்வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் சிலரிடம் நக்கீரன் சார்பில் பேசியபோது, பலரும் பலவிதமான மனநிலையில் இருப்பதை உணர முடிந்தது.

alagiriராமன் என்பவர், ""அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவர் வேறு கட்சிக்குப் போகமாட்டார் என்று நம்புகிறோம். எங்களால் கருப்பு சிவப்பு கரை வேட்டி யை மாற்ற முடியாது. அண்ணனை கட்சியில் சேர்ப்பார்களா?''’என்று நம்மிடமே அப்பாவி யாகக் கேட்கிறார்.

அழகிரியின் தீவிர ஆதரவாளரான இசக் கிமுத்துவோ

""எப்படியும் அழகிரியை சேர்ப் பார்கள் என்ற நம்பிக் கையில் இருக்கிறோம். அண்ணனை யார், யாரோ குழப்பப் பார்க்கிறார்கள். "கட்சியில் சேர்க்கவில்லை என்றால், கலைஞர் பெயரில் இயக்கம் தொடங்கி செயல்படுவோம்' என்றுதான் கூறினேன். புதுக்கட்சியெல்லாம் தொடங்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் திரித்துவிட்டன.

என் உயிர் இருக்கும்வரை இந்த கருப்பு சிவப்புதான். தலைமை அழைத்தால் கட்சிப் பணியாற்றத் தயாராகிவிடுவேன்''’என்று உணர்ச்சிமய மானார்.

இன்னொரு ஆதரவாளரான முபாரக் மந்திரியோ,

""என்னவென்றே புரியவில்லை. அழகிரி அண்ணனை நம்பி இருக்கிறோம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரிதான். இனி எங்களால் வேறு கட்சியில் சேரமுடியாது. நல்ல முடிவு வரும் என்று காத்திருக் கிறோம்''’என்றார்.

"பெயரைப் போடவேண்டாம்' என்ற அழகிரி ஆதரவாளர் ஒருவர், ""தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எல்லாம் அண்ணனுக்கு இல்லை. அண்ணனின் ஆதர வாளர்கள் தற்போது குரூப், குரூப்பாக ஆலோ சனை செய்கி றார்கள். ஸ்டாலின் அழைத்தால் மீண்டும் கட்சியில் சேருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டால்தான் கவுன்சிலராகவாவது வரமுடியும் என்று நினைக்கிறார்கள்.

ஸ்டாலினிடமிருந்து ஒரு அறிக்கையை எதிர்பார்க்கிறார்கள் அண்ணனின் ஆதரவாளர்கள்'' என்றார்.

அழகிரி எதிர்பார்ப்பதும் அப்படிப்பட்ட அழைப்பைத்தான்.

-க.செல்வகுமார், அண்ணல்