கலைஞரின் நூற்றாண்டில் அவர் உத்தரவை அரசு நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை யோடும், ஏக்கத்தோடும் காத்துக்கொண்டுள்ளனர் அரசு மருத்துவர்கள்.
கலைஞர் முதலமைச்சராக இருந்த 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வுக்காக 356 அரசாணை வெளியிட்டார். அரசாணை வெளியிடப்பட்டதே தவிர அரசின் உயரதிகாரிகள் அந்த அரசாணையை செயல்படுத்தாமல் முடக்கிவைத்தனர். அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011-ல் முதலமைச்சரான ஜெயலலிதா அந்த அரசாணையைக் கண்டுகொள்ளவில்லை. ஜெ., மறைவுக்குப் பின்னர் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியும் கண்டுகொள்ளவில்லை. 2010 முதல் அந்த அரசாணையைச் செயல்படுத்த வேண்டுமென அரசு மருத்துவர்கள் சங்கங்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை மனுக்கள் வழங்கியும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/govt.doctors_1.jpg)
தனித்தனியாக போராடிக்கொண்டிருந்த அரசு மருத்துவர்கள் சங்கங்களை 2019-ல் ஒருங்கிணைத்து ஃபோக்டா எனப்படும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்யவேண்டும், அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப்படிப்பில் சேர 50% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டக் குழுவின் தலைவர் சேலம் மேட்டூரைச் சேர்ந்த, லட்சுமி நரசிம்மன். 1986-ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு வருடத்திலேயே மருத்துவ மாணவர் சங்கத்தின் செயலாளராகத் தேர்வானார். 1989-ல் உடையாரின் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரசுடைமை யாக்கப்பட்டதை அ.தி.மு.க. அரசு, மீண்டும் உடையார் குடும்பத்திடமே திருப்பி ஒப்படைத்த போது அதை எதிர்த்து, 1991-ல் 57 நாட்கள் மிகக் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தார். அதன்பின்னர் பயிற்சி மருத்துவர் உதவித்தொகை உயர்வு, மாணவர் கல்விக் கட்டணக் குறைப்பு, மருத்துவக்கல்வியில் தனியார்மயம் எதிர்ப்பு உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/govt.doctors1_1.jpg)
அரசாணை 356-ஐ செயல்படுத்தவேண்டும் என 2019-ல் நடைபெற்ற அரசு மருத்துவர்களின் காலவரையறையற்ற போராட்டத்தைக் கைவிடுங் கள், கைவிட்டால் மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமென முதல்வராக இருந்த இ.பி.எஸ் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட் டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியதும் பழிவாங்க ஆரம்பித்தது அ.தி.மு.க. அரசு. போராட்டத்தில் கலந்துகொண்ட 150 டாக்டர்களுக்கு 17-பி குற்றக் குறிப்பாணையும், 118 பேரை இடமாற்றமும் செய்து பந்தாடி னார்கள். சென்னையில் பணியாற்றி யவர்களை மதுரைக்கும், மதுரையில் பணியாற்றியவர்களை தருமபுரிக்கும் என தொலைதூரத்துக்கு இட மாற்றம் செய்தது அ.தி.மு.க. அரசு. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இடமாற்றங்களில் அதிகம் பாதிக் கப்பட்டது பெண் மருத்துவர்கள் தான்.
மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் துயரத்தால் மனம் நொந்துபோய் சென்னை, புதுக்கோட்டை என மூன்று மாதம் அப் போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து, பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை வைத்துவந்தார், அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த மனஉளைச்சலால் 2020 பிப்ரவரி 6-ஆம் தேதி நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர், 7-ஆம் தேதி இறந்துவிட்டார். அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே அவரது உயிரைப் பறித்துவிட்டது என்பது மருத்துவர்கள் அனைவருக்கும் தெரியும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/govt.doctors2_0.jpg)
மறைந்த மருத்துவர் லக்ஷ்மிநரசிம்மன் மனைவி அனுராதா நம்மிடம், “"கடந்த ஆட்சியில் மருத்துவர் களை அவமானப்படுத்தினார்கள், கேவலப்படுத்தினார் கள். ஆட்சி மாற்றத்துக்குபின் நேர்மையான அரசு, மருத்துவர்களின் அரசாக இல்லாமல், புரோக்கர்களாக செயல்படும் சில மருத்துவர்களுக்கு நமது அரசு ஆதரவு தருவது வேதனையாக இருக்கிறது. ஊதிய உயர்வு தரமுடியாது. தனியாக கிளினிக் வைத்துள்ளார்கள் என்கிறார் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அரசு மருத்துவர் களுக்கு போதிய ஊதியம் தந்தால் அவர்கள் ஏன் கிளினிக் வைக்கப்போகிறார்கள்? மருத்துவர்கள் போராடியது கலைஞர் கொண்டுவந்த அரசாணையை நிறைவேற்றச்சொல்லி, அரசு தருவது பணப்படிகள் உயர்த்திய அரசாணையை. இதனால் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் அவரால் கொண்டுவரப்பட்ட அரசாணையை செயல்படுத்தினால் இதற்காகப் போராடி உயிரைவிட்ட என் கணவரின் ஆத்மா சாந்தியடையும்''’என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள்பிள்ளை, “"லட்சுமிநரசிம்மன் இறப்பின்போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், இப்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவர்களின் கோரிக்கை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகளாகியும், கோரிக்கை நிறைவேறவில்லை. மருத்துவர்களின் நலனுக்காகப் போராடி உயிரைவிட்ட லட்சுமிநரசிம்மனின் நான்காம் ஆண்டு நினைவு நாளிலாவது மருத்துவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்''’என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/govt.doctors-t.jpg)