நாகலாந்தில், தனி மாநில கோரிக்கை வைக்கும் பழங்குடிகள் இம்முறை தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அழுத்திக்கூறுகிறார்கள். எப்படி இதை சமாளிக்கப் போகிறது மத்திய பா.ஜ.க அரசு என்பதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக்.

60 தொகுதிகள் கொண்ட நாகலாந்தில், 2018 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி 26 இடங்களை யும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 18 இடங்களையும், பா.ஜ.க. 12 இடங்களையும் வென்றன.

26 இடங்களை வென்ற நாகா மக்கள் முன் னணிக்கே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகளிருந் தும், பா.ஜ.க., தேசியவாத ஜனநாயக மக்கள் முற்போக்கு கட்சி, இதர கட்சிகளை இணைத்து நெய்பிரியோ ரியோ மூன்றாவது முறையாக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

இம்முறையும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (NDPP) பா.ஜ.க.வும் இணைந்தே தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த முறை 20 தொகுதிகளைக் கேட்டுப்பெற்றுள்ளது பா.ஜ.க. 2023 தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு சில சவால்கள் காத்திருக்கின்றன.

Advertisment

dd

அதில் பிரதானமானது, நாகலாந்தின் ஏழு பழங்குடிப் பிரிவினர் இணைந்து 16 மாவட்டங் களைப் பிரித்து தனி மாநிலம் கோரிக்கை.

இரண்டாவதாக, ஆட்சியிலிருந்த கட்சிக்கு எதிரான மனநிலை. தவிரவும் நாகலாந்து ஆளுந ராக ஆர்.என். ரவி இருந்தபோது, போராளிக் குழுக்களை இடது கையால் கையாண்ட அலட் சியத்தை போராளிக் குழுக்கள் மறக்கவில்லை.

அடுத்து, பா.ஜ.க.வின் மூன்று மாவட்டத் தலைவர்கள் பா.ஜ.க.விலிருந்து பிரிந்து ஒருங் கிணைந்த ஜனதாதளத்தில் இணைந்திருக்கிறார்கள்.

நாகலாந்தைப் பிரித்துதான் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அஸ்ஸாமில் சேர்க்கப்பட்ட பல பகுதிகளைத் திரும்பவும் நாகலாந்தில் சேர்க்கவேண்டுமென உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர். இது பேசுபொருளானால் ஆளும்கட்சி கூட்டணிக்கே இடைஞ்சல்.

மாறாக, நாகா மக்கள் முன்னணி, சென்ற தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சியாகவும், அதிக வாக்கு சதவிகிதத்தைப் (38.8) பெற்ற கட்சியாகவும் திகழ்ந்தது. இந்த முறையும் கூட்டணியின்றியே களமிறங்குகிறது. தேவையானால், தேர்தல் முடிவுக்குப்பின் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் கட்சித் தலைவரான டி.ஆர். ஸைலாங்கின் நிலைப்பாடு.

2013 தேர்தலில் 8 இடங்களை வென்றிருந்த காங்கிரஸ், 2018-ல் ஒரேயொரு இடத்தைக்கூட வெல்லவில்லை. அதன் வாக்கு சதவிகிதமும் 24.9-லிருந்து 2.1 சதவிகிதமாகச் சரிந்தது. கிட்டத் தட்ட மரண அடி வாங்கியிருக்கும் காங்கிரஸ் உள்ளூர் கட்சிகளைத் தாண்டி, போட்டியில் எப்படித் தாக்குப்பிடிக்கப் போகிறது?

பல தொகுதிகளில் வேட்பாளர்களைப் பிடித்து நிறுத்துவதற்கே தடுமாற்றம். இருந்தாலும் மாநில தலைவர் கே.தெரி சமாளித்துவருகிறார்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் மத்திய அரசுத் தரப்பில் தேர்தலுக்குப் பின் தனி மாநிலம் என்ற உறுதிப்பாடு தரப்படுவதும், பின் அதை மறந்துவிடுவதுமாகத் தொடர்கிறது. தேர்தல் புறக்கணிப்பு என்ற போராட்டக் குழுக்களின் நிலைப்பாட்டை எப்படி சமாளிக்கப்போகின்றன அரசியல் கட்சிகள்!

Advertisment