திர்பார்த்திருந்த இடமாற்றம் நடந்திருந்தாலும் எதிர் பார்த்தபடி நடந்திருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் காவல்துறையினரும், கோட்டையில் உள்ள அதிகாரிகளும். சமீபத்தில் நடந்துள்ள ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி. அந்தஸ்திலான 49 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்திலான அணுகுமுறைதான் இந்த கேள்விக்கு காரணம். ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் உள்ள குமுறல்களையும், முந்தைய ஆட்சியில் வெயிட்டான போஸ்டிங்கில் இருந்த ஊழல் அதிகாரிகள் இப்போதும் நல்ல பதவிகளைப் பெற்றிருப்பதையும் நக்கீரன் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

police

தமிழக காவல்துறையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளைத் தவிர்த்து, ஐ.ஜி.யின் அதிகார கட்டமைப்பை வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு என 4 மண்டலங்களாக பிரித்து வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு மண்டலமும் ஒரே ஒரு ஐ.ஜி.யின் கட்டுப்பாட்டில் இருக்கும். தெற்கு மண்டல ஐ.ஜி.யின் கட்டுப்பாட்டில் 4 டி.ஐ.ஜி.க்கள் இருக்கிறார் கள். அதேபோல , வடக்கு மண்டலத்தில் 3 டி.ஐ.ஜி.க்களும், மேற்கு மற்றும் மத்திய மண்டலத்தில் தலா 2 டி.ஐ.ஜி.க்களும் இருக்கின்றனர்.

முதல்வரின் நேரடி உத்தரவுகள் -உளவுத்துறை தரும் தகவலின் அடிப்படையிலான உத்தரவுகள் அனைத்தும் காவல்துறையை பொறுத்தவரை உள்துறை வழியாக டி.ஜி.பி. மூலம் மண்டல ஐ.ஜி.களுக்குப் போய்ச் சேரும். தனக்கு கீழுள்ள டி.ஐ.ஜி.க்கள் மூலம் தனது மண்டலத்தில் சாதிக் கலவரம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் கவனமாக இருப்பார்கள் ஐ.ஜி.க்கள்.

Advertisment

தமிழகத்தில் சாதிக்கலவரப் பதற்றம் அதிகம் நிறைந்தவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள். அதனால் மண்டல ஐ.ஜி.க்கள் நியமனத்தின் போது, பதற்றம் சம்பந்தப்பட்ட இரு சமூகத்தையும் சேர்ந்த அதிகாரிகளாக இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். இரண்டையும் தவிர்த்த, மற்ற சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியையோ அல்லது வட மாநிலங்களை சேர்ந்த அதிகாரியையோ இந்த மண்டலங்களில் ஐ.ஜி.யாக நியமிப்பது உண்டு.

தற்போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பட்டியலினத் தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல இந்த மண்டலத்தில் நியமிக்கப்பட்ட 3 டி.ஐ.ஜி.க்களில் 2 பேர் பட்டியலினத்தவர். ஒருவர் முதலியார். வன்னியர் களும் பட்டியலினத்தவர்களும் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மண்டலத்தில் குறிப் பிட்ட சமூகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளை நியமித்திருப்பது தேவையற்ற பதற்றத்தை உரு வாக்கலாம் என்றும், அதுவும், விரைவில் நடக்கவிருக்கும் உள் ளாட்சித் தேர்தலில் பிரச்சினை களை ஏற்படுத்தலாம் என்றும், அது ஸ்டாலின் தலைமைக்குத் தான் தலைவலியை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.

police

Advertisment

ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டி ருக்கும் சந்தோஷ்குமார், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சென்னையில் போலீஸ் வாகனம் எரிக்கப் பட்டு கலவரம் வெடித்த போது அதனை கட்டுப் படுத்தாமல் ஸ்பாட்டி லிருந்து விலகி ஓடியவர் என்கிற பின்னணியும் உள்ளது. உள்துறையை நேரடியாக கவனிக் கும் முதல்வர், இப்படிப்பட்ட நியமனங்களை எப்படி கவனிக் காமல் விட்டார்? என்று கேட்கிறார்கள்.

மேலும் விசாரித்தபோது, ’கலைஞர் தலைமையிலான 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது, 1997-ல் வீரன் சுந்தரலிங் கம் போக்குவரத்து கழகம் உருவாக்கப்பட்டது. இதற்கு தென் மாவட்டங்களில் தேவர் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் சுந்தரலிங்கம் பெயர் தாங்கி வந்த பேருந்தை தீயிட்டு கொளுத்தினர். சாதி கலவரமாக உருவானது. தென்மாவட்டங் களில் ஏகத்துக்கும் பதட்டம்.

அன்றைக்கு தமிழகம் அளவில் சட்டம் ஒழுங்கை கவனிக்க ஒரே ஒரு ஐ.ஜி. போஸ்டிங் தான் இருந்தது. ஐ.ஜி.யாக இருந்த காளிமுத்துவை விருதுநகருக்கு அனுப்பி வைத்தார் கலைஞர். விருதுநகர் சென்ற காளிமுத்துவிடம், நீங்கள் தலித் அதிகாரி; உங்களிடம் நியா யம் கிடைக்காது; உங்களிடம் பேச தயாராக இல்லை என சொல்லி அவரை திருப்பி அனுப்பினார்கள். அதன்பிறகு, சிறப்பு ஐ.ஜி.யாக விஜயக்குமார் ஐ.பி.எஸ். அனுப்பி வைக்கப்பட் டார். பேச்சு வார்த்தை நடத்தி னார். சாதி மோதல்கள் கட்டுப் படுத்தப்பட்டது. இதனையடுத்து, தென்மாவட்ட ஐ.ஜி. என ஒரு போஸ்டிங் உருவாக்கப்பட்டு அதில் விஜயகுமாரை நியமித்தார் கலைஞர்.

அது மட்டுமல்லாமல், போக்குவரத்து கழகங்களுக்கும், மாவட்டங்ளுக்கும் வைக்கப் பட்டிருந்த சாதி தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேசமயம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழகத்தை 4 மண்டலங்களாக உருவாக்கி, ஐ.ஜி. கட்டுப்பாட்டில் அவைகள் கொண்டு வரப்பட்டன. இப்படித்தான் மண்டல ஐ.ஜி. பதவிகள் உருவானது. சாதிக் கலவரமும் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டன. அதற்கேற்ப, அப்போதிலிருந்து சமீபகாலம் வரை , சாதிய பிரச்சனைகள் உருவாகும் மண்டலங்களில் நடுநிலையான மற்ற சமூக உயரதிகாரிகளே நியமிக்கப் பட்டனர். அத்தகைய அணுகு முறை தற்போதைய இடமாற் றங்களில் இல்லாமலிருப்பது, கடந்த கால கசப்பான வரலாறு திரும்பி விடுமோ என்கிற அச்சம் வருகிறது. அதனால், அதிகாரிகள் மாற்றத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‘’ என்று கவலை தெரி விக்கின்றனர் அதிகாரிகள்.