டந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதற்குப் பின்னர் மக்கள் நீதி மய்யத் தில் பிளவுகள் ஏற்பட்டு, சிங்காநல்லூர் தொகுதியில் நின்ற செல்வந்தரான பொள்ளாச்சி மகேந்திரன், மக்கள் நீதி மய்யத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவரையொட்டி சில முக்கிய நிர்வாகிகளும் மய்யத்தில் இருந்து "சைடில்' வெளியேறினர்.

kamal

வெளியேறிய எல்லோருமே... "கமல்ஹாசனை எளிதாக அணுக முடியவில்லை. அவர் நிர்வாகிகளிடமிருந்து விலகியே நிற்கிறார். அதனால்தான் மக்கள் நீதி மய்யத்திற்கு தோல்வி ஏற்பட்டது' என்று குறை சொல்லினர்.

Advertisment

பொள்ளாச்சி மகேந்திரன், தி.மு.க.வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துவிட்டார். இந்தநிலையில்... தனக்கு வாக்களித்த வாக்காளர்களை நேரில் சென்று நன்றி தெரிவிப்பதாகச் சொல்லி கோவை வந்தார் கமல்ஹாசன். ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ரத்தானது. உடனே கமல்ஹாசன் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார் .

அதில், "தமிழகம் முழுக்க கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு கிராமசபை கூட்டம் நடக்கவில்லை. இதனால் கிராம மக்களின் குறைகள் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. அதனால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளது. இதனை தீர்க்க கிராம கூட்டங் களை நடத்த வேண்டும். வருகிற சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டத்தை நடத்தவேண்டும். அதோடு வருகிற பட்ஜெட்டில், கிராம ஊராட்சிகளுக்கு எவ்வளவு நிதி? எந்த நேரத்தில் கொடுக்கப்படும்? என்பதையும் தனியாக அறிவிக்க வேண்டும்'' என்று கூறினார்.

kamal

Advertisment

பின்னர் அடுத்தநாளும் கோவையில் மய்யமிட்டார் கமல்ஹாசன். "சில திட்டங் களோடுதான் கமல்ஹாசன் இங்கே வந்திருக்கிறார்' என் கிறார்கள் மய்யத்தில் நின்றிருப்ப வர்கள். அவர்கள் நம்மிடம்... "தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் கமல் நிற்பார் என கட்சிக்காரர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்... கோவை தெற்கு தொகுதியை கமல் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் பொள்ளாச்சி மகேந்திரன்தான்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நேரடியாக களத்தில் இல்லாத தொகுதியாக தெற்கு தொகுதி இருக்கிறது. அதனால் வெற்றி வாய்ப்பை எளிதில் பெற்றுவிட லாம் என மகேந்திரன் சொல்லியதோடு மட்டுமில்லா மல், கம-ன் எல்லாச் செலவு களையும் அவரே செய்தார். பிரச்சாரத்தின் போது 6 பிரபல ஹோட்டல்களில் கமல் தங்கிய அத்தனை செலவுகளையும், மகேந்திரனே ஏற்றுக் கொண்டார். அவருக்கு மட்டுமல்ல... பிரச்சார வேன்களை ஓட்டி வந்த டிரைவர்களைக் கூட ஆடம்பர ஹோட்டல்களில்தான் மகேந்திரன் தங்கவைத்தார். கமலின் தெற்குத் தொகுதி, மகேந்திரன் நின்ற சிங்காநல்லூர் தொகுதி என இரண்டு தொகுதிகளை கோவையில் கைப்பற்றி விட வேண்டும் என்று திட்டம் தீட்டியே வேலை நடந்தது ஆனாலும் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர் மகேந்திரன், கட்சியை விட்டு வெளியேறியது கமலுக்கு பெரிய இழப்பு தான்.

மகேந்திரன் போல செலவு செய்ய இப்போது கட்சிக்குள் ஆள் இல்லை. தன்னுடைய நீதி மய்யத்தில் இருந்து இன்னும் பல நிர்வாகிகளை மகேந்திரன் வெளியே கொண்டுபோகும் திட்டத்தை நடத்திக்கொண்டி ருக்கிறார் என்பதை அறிந்த கமல் அதிர்ந்துவிட்டார்.

தமிழ்நாட்டிலேயே கோவை தெற்கு தொகுதியிலும், சிங்காநல்லூர் தொகுதியிலுமே தன் கட்சிக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்திருப்பதை கவனத்தில் கொண்ட கமல், நிர்வாகிகளுக்கும் தனக்கும் இடையில் இருந்த இரும்புச்சுவரை உடைத்துவிட்டு நெருங்கிப் பழகுகிறார்.

kamal

வரும் உள்ளாட்சித் தேர்தலில், கோவையின் 100 வார்டுகளிலும் களம் காணும் கட்சி, கோவை மாமன்றத்தில் முக்கிய அங்கமாக ம.நீ.மய்யம் இருக்க வேண்டும் என்று கமல் விரும்புகிறார். உழைப்பவர் களையும், பெரும் செலவு செய்யும் செல்வந்தர்களையும் கட்சிக்குள் இணைக்கும் திட்டமே அவரின் பிரதான திட்டமாய் இருக்கிறது'' என் கிறார்கள் மக்கள் நீதி மய்யத் தினர்.

கமலோ, "தன்னை பி.ஜே.பி.யின் "பி டீம்' என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பி.ஜே.பி., மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்பதை உறுதியாய் சொல்வேன். ஏனென்றால்... இந்தியாவி லேயே 26 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவன் நான் தான். எனவே இரட்டை வேடம் போடுபவர்களை நான் சட்டென்று கண்டு பிடித்து விடுவேன். கட்சியி-ருந்து வெளியேறியவர்களால் எந்தவித பாதிப்பும் இல்லை. கோவை தெற்கு தொகுதியில் ஜெயித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொகுதிக்குள் தென்படவில்லை. எங்கள் கட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி உண்டா? இல்லையா? என்பதை பிறகு கூறுகிறேன்'' எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.