கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் முதற்கட்டமாக 72 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. அந்த 72ல் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள். அப்படி அபாய சங்கு ஊதப்பட்ட ஈரோட்டில் தொடர்ந்து வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி ஒரு கட்டத்தில் மொத்தம் 70 பேர் என்று உச்ச கணக்கில் இருந்தது.
இதனால், ஈரோடு மாவட்ட மக்கள் மத்தியில் அளவுக்கு மீறிய அச்சமும் உயிர் பயமும் இருந்தது. இது ஒருபுறம் இருக்க, இந்த வைரஸ் தொற்று ஈரோட்டில் ஊடுருவிய வழியை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, சுகாதார துறை என மூன்று துறைகளும் துல்லிய ஆய்வு நடத்தி வைரஸ் தொற்று வந்த அந்த வழியை கண்டுபிடித்து தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
ஈரோட்டுக்கு வைரஸ் தொற்று வந்த வழி என்பது ஏற்கனவே நமது நக்கீரன் இதழிலும், இணையத்திலும் வெளிப்படுத்திய தகவல்தான்.
ஆம், டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள ஈரோட்டி லிருந்து சுமார் 40 பேர் சென்றதும் அந்த டெல்லி நிகழ்விலிருந்து தாய்லாந்து நபர்கள் 7 பேர் ஈரோடு வந்து இரு மசூதிகளில் தங்கியதும்தான் அந்த தகவல்.
ஆக, இவர்கள் மூலமாகத்தான் 69 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து வந்தவர். அவர், திருச்சியை சேர்ந்தவர். இந்த 70 பேரில் வயதான பெருந்துறையை சேர்ந்த முதியவர் மட்டும் இறந்து விட்டார். மீதி 69 பேரில் தொடக்கத் திலேயே கோவை மருத்துவர் குடும்பத் தைச் சேர்ந்த நான்கு பேர், திருச்சியை சேர்ந்த ஒருவர் என ஐவர் சிகிச்சை முடித்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பப் பட்டனர்.
பிறகு 13 பேர் அடுத்து 9 பேர் தொடர்ந்து 10 பேர் என மொத்தம் 32 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மீதி 32 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 22 ந் தேதி புதன் மாலை மேலும் 28 பேர் சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
அப்போது பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், ""ஈரோடு மாவட்டம் கொரோனா வைரஸ் முற்றிலுமாக துடைக்கப்பட்ட, துரத்தப்பட்ட மாவட்டமாக மாற உள்ளது. இதற்கு காரணம் மாவட்டத்தில் உள்ள அலுவலர் கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், காவல் துறை அதிகாரி மற்றும் காவலர்கள், தூய்மை பணி யாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என எல்லோருடைய ஒத்துழைப்பும் உழைப்பும்தான் காரணம்'' என்றார்.
எல்லோரது உழைப்பாலும் ஈரோடு கொரானாவை எதிர்த்து போராடி வெற்றியின் விளிம்பில் உள்ளது ஈரோடு. மதம்-சாதி-ஏழை-பணக்காரன் வேறுபாடு இல்லாத கொரோனா மீண்டும் பரவும் அபாயம் கொண்டது என்பதால் அலர்ட்டாகவே இருக்கிறது ஈரோடு மாவட்டம்.
-ஜீவாதங்கவேல்