Advertisment

அமலாக்கத்துறை வருமா? அலறும் அ.தி.மு.க!

ss

அ.தி.மு.க.வில் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பாக நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. வின் சீனியர்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார் கள். தி.மு.க. மீது பாயும் அமலாக்கத் துறை அ.தி.மு.க. மீது பாய்ந்தால் என்னா வது நம் நிலைமை? என்பதுதான் அந்த முக்கியமான கேள்வி. அதற்கு எடப்பாடி யால் பதில் சொல்ல முடியவில்லை. எடப்பாடிக்குப் பதில் கே.பி.முனுசாமியும் சி.வி.சண்முகமும்தான் முந்திக்கொண்டு அதற்குப் பதில் தந்தார்கள். "அமலாக்கத் துறை ரெய்டு வந்தால் நாம் சந்திக்க வேண்டியதுதான்' என்று அவர்கள் இருவரும் சொல்ல விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோர் சி.வி.சண்முகம் கே.பி. முனுசாமி இருவரிடமும் குரலை உயர்த்திக்கொண்டு சண்டைக்குப் போனார்கள்.

Advertisment

eps

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் எப்படி சந்திப்பது? ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு அ.தி.மு.க. மீது பா.ஜ.க. பாயுமா? பாயும் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்பட ஆரம்பித்துவிட்டன. குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிய அனுமதியை கவர்னர் தந்து விட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழ

அ.தி.மு.க.வில் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பாக நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. வின் சீனியர்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார் கள். தி.மு.க. மீது பாயும் அமலாக்கத் துறை அ.தி.மு.க. மீது பாய்ந்தால் என்னா வது நம் நிலைமை? என்பதுதான் அந்த முக்கியமான கேள்வி. அதற்கு எடப்பாடி யால் பதில் சொல்ல முடியவில்லை. எடப்பாடிக்குப் பதில் கே.பி.முனுசாமியும் சி.வி.சண்முகமும்தான் முந்திக்கொண்டு அதற்குப் பதில் தந்தார்கள். "அமலாக்கத் துறை ரெய்டு வந்தால் நாம் சந்திக்க வேண்டியதுதான்' என்று அவர்கள் இருவரும் சொல்ல விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோர் சி.வி.சண்முகம் கே.பி. முனுசாமி இருவரிடமும் குரலை உயர்த்திக்கொண்டு சண்டைக்குப் போனார்கள்.

Advertisment

eps

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் எப்படி சந்திப்பது? ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு அ.தி.மு.க. மீது பா.ஜ.க. பாயுமா? பாயும் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்பட ஆரம்பித்துவிட்டன. குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிய அனுமதியை கவர்னர் தந்து விட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடரவும் கவர்னர் அனுமதித்துவிட்டார். அடுத்தகட்டமாக வரப்போவது வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும்தான். மத்திய அரசு ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அ.தி. மு.க.வை ஒரு வழி செய்துவிடும். அவர்களின் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது? என்பதுதான் அ.தி.மு.க.வில் இன்று நீடிக்கும் பெரிய குழப்பம்.

பா.ஜ.க.வுடன் நல்லுறவு பேணுவதில் முன்னிலையில் நின்றவர் விஜயபாஸ்கர். அண் ணாமலையின் யாத்திரைக்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் ஆட்களைத் திரட்டிக் கொடுத்தவர் விஜயபாஸ்கர். பா.ஜ.க.வுடன் நல்லுறவு வைத்திருக்கும் ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா ஆகியோருடன் நல்லதொடர்பில் இருப்பவர் இவர். அவர் மீதே குட்கா வழக்கு பாய்ந்தது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சிக்குள் ளாக்கியது. உடல்நிலை மோசமான அவர் உடைந்துபோன மனநிலையுடன் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜக்கி வாசுதேவ் மூலம் பா.ஜ.க.வுடன் நல்ல தொடர்பு வைத்திருக்கும் வேலுமணி, விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட நிலைகண்டு அதிர்ந்துபோயிருக்கிறார். வீரமணியும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தப்படும் செம்மரம் தொடர்பான வழக்கில் தன்னைச் சிக்க வைத்துவிடுவார்கள் என அரண்டுபோய் உள்ளார்.

எடப்பாடியின் நெடுஞ்சாலைத்துறை ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், விஜயபாஸ் கர் மீது மட்டும் சி.பி.ஐ. ஆக்டிவாக செயல்படு வதும், அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் சந் திக்கவேண்டும் என கே.பி.முனுசாமியும் சி.வி. சண்முகமும் பேசுவதும் அ.தி.மு.க.வினரை கலக்கமடையச் செய்துள்ளது. "பூத் கமிட்டி களில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர் களையும் கொண்டுவாருங்கள். நம்மீது பா.ஜ.க. தாக்குதல் தொடுத்தால் அதை நாம் சந்திக்கவேண்டும் நமக்கு அதனால் மதிப்பு கூடும்' என எடப்பாடி நிலை எடுத்து இருக்கிறார். இந்த நிலைக்குக் காரணம் கே.பி.முனுசாமியும் சி.வி. சண்முகமும்தான். அ.தி.மு.க. மீது அமலாக்கத் துறை பாய்ந்தால் அது செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை ரெய்டு பாய்ந்ததுபோல பெரிய அளவில் இருக் காது. பேருக்கு ஏதாவது செய்வார்கள் என்பது தான் எடப்பாடி ஆதரவாளர்களின் கணிப்பு.

ஆனால், அமலாக்கத்துறை ரெய்டு வந்து நம்மைக் கைது செய்துவிட்டால் என்னாவது? ஜாமீன் கிடைக்காமல் செந்தில்பாலாஜி போல யார் கஷ்டப்படுவது? என எதிர்க்கேள்வி கேட் கிறார்கள் எடப்பாடியை நம்பாத அ.தி.மு.க. வினர். அதனால், இப்பொழுது பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஓபிஎஸ்., தினகரன், சசிகலா அணி யினருடன் மறைமுகமாக தொடர்பு வைத்துக் கொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தயாராகிவருகிறார்கள். இது எந்த அளவிற்கு இருக் கிறது என்றால், சமீபத்தில் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களில் யார் ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா ஆதரவாளர்கள் என எடப்பாடியால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அ.தி.மு.க. மிகவும் குழம்பிய நிலையில் இருக்கிறது.

Advertisment

dd

பூத் கமிட்டிகளில் வடமாநிலத் தொழி லாளர்களை இணைத்து கணக்குக் காட்டும் வேலைகளை சென்னையின் மாவட்டச் செய லாளர்கள் செய்ய அவர்களை மாற்றவேண்டும் என்கிற கோரிக்கையின் மீது, கே.பி.முனுசாமி தலையிட்டு அவர்கள் எல்லாம் பழைய ஆட்கள், அவர்களை மாற்றக்கூடாது என தடுத்திருக் கிறார். இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற அடிப்படையில் தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது. ஆனால், சி.வி.சண்முகத் தின் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் அந்தக் கொள்கையை எடப்பாடியால் நிறைவேற்ற முடியவில்லை என சி.வி.சண்முகத்தின் செல்வாக்கைப் பற்றிச் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதற்கிடையே "ஓபி.எஸ்.ஸை பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ளுங் கள். டி.டி.வி.தினகரன் தனியாகக் கட்சி நடத்தட்டும். என்னை அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுங்கள்' என ஒரு புது காம்ப்ர மைஸ் பார்முலாவுடன் சசிகலா, பா.ஜ.க. வட்டாரத்தை அணுகி வரு கிறார். அதற்கு ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்ததும் முடி வெடுக்கப்படும் என்ற உறுதியை சசிகலாவிற்கு பா.ஜ.க. அளித்துள் ளது. அதனால் நம் பிக்கையுடன் காத் திருக்கிறார் சசிகலா என்கிறார்கள்.

பாராளுமன் றத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. வுடன் கூட்டணி சேருவோம் என எடப்பாடி அமித் ஷாவிடம் உறுதி யளித்திருக்கிறார். அதனால் பா.ஜ.க. தங்கள் மீது பெரிய தாக்குதல் எதையும் தொடுக்காது, அப்படியே தாக்குதல் நடத்தினாலும் அது பெயரளவில்தான் இருக்கும் என்பது அ.தி.மு.க.வினரின் நம்பிக்கை. அதையும் மீறி ஒரு பெரிய தாக்குதலை பா.ஜ.க. தொடுக்குமானால் அ.தி.மு.க.வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பயந்து நடுங்கி பா.ஜ.க. பக்கம் சாய்வார்கள் என்பதே அ.தி. மு.க.வின் இன்றைய நிலையாக இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள்.

nkn291123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe