த்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததி லிருந்தே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர் Vs முதல்வர் மோதல் போக்கு அடிக்கடி எழுகிறது. குறிப்பாக, டெல்லி, மேற்கு வங்கம், மகா ராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு வரை இந்த நிலைதான். காங் கிரஸ் ஆட்சி செய்தவரை புதுச்சேரியிலும் இதே நிலைதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரையும் கைகுலுக்க வைத்து ஆட்சியை நீடிக்க வைத்ததிலிருந்து, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது வரை ஆளுநரின் தலையீடு மிகுதியாக இருந்தது.

gg

Advertisment

தற்போது இந்தியா முழுமைக்கும் கல்வித்துறையில் இந்துத்வா சிந்தனையை, பாடத்திட்டங்கள் வாயிலாகவும், பயிற்சிகள் வழியாகவும் தொடங்கி உள்ளது மத்திய பா.ஜ.க அரசு. பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பதால் அவர்கள் மூலம் இதனை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. ஆளுநர்களின் அதிகாரத்தில் பல்கலைக்கழகங்கள் இருப்பதற்கு ஒரு சில மாநில முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ் டிராவை ஆளும் சிவசேனா அரசாங் கம், பல்கலைக்கழக துணைவேந்தர் நிய மனத்தில், ஆளுந ருக்கு இருக்கும் அதிகாரத்தைக் குறைக்கும் விதமாகச் சட்ட மசோதாவை இயற்றியிருக்கிறது.

ஏற்கனவே உள்ள சட்ட நடை முறைப்படி, ஆளுநர் நியமிக்கும் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஐந்து பெயர் களிலிருந்து ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுத்து துணைவேந்தராக நியமிப்பார். ஆனால், நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில், தேடல் குழுவை மாநில அரசே நியமிக்குமென்றும், அக்குழு பரிந்துரைக்கும் 5 நபர்களிலிருந்து இருவரை rrமாநில அரசு, ஆளுநரின் பார்வைக்கு அனுப்பும் என்றும், அதில் ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் ஆளுநர் தனக்கு விருப்பப்பட்டவரைத் துணைவேந்தராக நியமனம் செய்வது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேந்தருக்கும் துணை வேந்தருக்குமிடையே, இணை வேந்தர் என்ற பதவி உருவாக்கப்படுகிறது. ஆளுநர் இல்லாதபோது, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் இணை வேந்தர் கலந்துகொள்வார். அதேபோல பல்கலைக் கழகங்களிலிருந்து கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த தகவல்களை இணை வேந்தர் கேட்டுப்பெறும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் ஆளுநரின் அதிகாரத்துக்கு மாற்று ஏற்பாடாகக் கருதப்படுகிறது. இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மகாராஷ்டிர ஆளுநரின் ஒப்புதல் இதற்கு வழங்கப்பட வேண்டும். தனது அதிகாரத்தைக் குறைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் எப்படி ஒப்புதல் தருவார் என்பது கேள்விக்குறியே.

இதேபோல, மேற்கு வங்கத்திலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசின் கல்வி அமைச்சரும், ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அப்பொறுப்புக்கு முதல்வரைக் கொண்டுவருவோம் என்று தெரிவித்திருக்கிறார். எனவே துணைவேந்தர் நியமனம் தற்போது கல்வியாளர்கள் மத்தியில் பெருத்த விவாதமாகியுள்ளது. மகாராஷ்டிர அரசின் முடிவைப் போல் தமிழ்நாடு அரசும் முடிவெடுக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுந்துள்ளன.

Advertisment

இது பற்றி வழக்கறிஞரும், தி.மு.க. செய்தித் தொடர்பாளரு மான சரவணனிடம் கேட்டபோது, "துணைவேந்தர் நியமனத்தில் சட்டதிட்டங்களை மாற்றும் உரிமை மகாராஷ்டிர அரசின் கையில் தான் உள்ளது. எனவே அவர்களின் சட்ட மசோதா உருவாக்கத்தில் எந்த சட்டமீறலும் இல்லை. பல்கலைக்கழகங்களை உருவாக்கக்கூடிய சட்டதிட்டங்களில், பல்கலைக்கழக வேந்தர் என்ற பொறுப்பில் ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பது அப்பதவிக்கு மரியாதையளிக்கும் ஓர் மரபு மட்டுமே. ஆனால் இதற்கான சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரம் மாநிலங்களுக்குத்தான் இருக்கிறது. மாநிலங்கள்தான் ஆளுநருக்கு பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தை வழங்குகின்றன.

ஆளுநரின் அதிகாரமென்பது மாநில அரசின் முடிவுகளுக்கு உட் பட்டதேயாகும். ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்போது மட்டுமே கவர்னருக்கு தன் னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. அதைத் தாண்டி அவரால் தன்னிச்சை யாகச் செயல்பட முடியாது. பொதுவாக, ஆளுநருக்கு வேந்தர் பதவி அளிக்கப்பட்டாலும், துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கருத்துக்களைக் கேட்டுச் செயல்படுவார் என்பதே எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக அப்படித்தான் நடந்துவந்தது.

rang

இப்படியான சூழலில், "நான் தன்னிச்சையாக நடந்துகொள்வேன்' என்று ஆளுநர் செயல்படுவதை கடந்த கால ஆட்சியில் நாம் பார்த் தோம். சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணை வேந்தர் நியமனம், அப்போதைய அ.தி. மு.க. அரசின் கட்டுப்பாட்டி லேயே இல்லை. ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்துக்குப்பின் அப்படியான சூழல் தொடர் கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மகாராஷ்டிராவிலும், மேற்கு வங்கத்திலும் எழுந்துள்ள சர்ச்சையும், நடவடிக்கையும் நம் மாநிலத்துக்குத் தேவையா என்பதை ஆராய்ந்து, தேவையின் பொருட்டே தமிழக அரசு இதில் முடிவெடுக்கும்'' என்கிறார்.

பல்கலைக் கழகம் என்பது கல்வித்துறை சார்ந்த நிறுவனம். மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, கல்வித் துறையில், பாடத்திட்டங்கள் தொடங்கி, துணை வேந்தர்கள் நியமனம்வரை, அறிவியலுக்குப் புறம்பாகப் பேசக்கூடிய ஆர்.எஸ். எஸ். அமைப்புவாதிகளின் தலை யீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், பல்கலைக்கழக வேந்தராகச் செயல்படுவதும் விவாதிக்க வேண்டியதாக உள்ளது.

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரமளிப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கல்வியாளர் வசந்தி தேவியிடம் கேட்டபோது, "பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில், சட்டப்படியான தேர்வு நடைமுறை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்னொருபுறம், நடைமுறை எதார்த்தத்தில், மாநில அரசின் அனைத்து உரிமைகளிலும் மத்திய அரசு தலையிட்டு, அந்த உரிமைகளைப் பறித்து வருகிறது. கல்வி உரிமையைப் பொறுத்தவரை, அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டபோது, முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார மட்டத்தில்தான் இருந்தது.

எமர்ஜென்ஸி காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு மாற்றங்களில் ஒன்றாக, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, கன்கரன்ட் லிஸ்ட் (concurrent list) எனப்படும் பொதுப்பட்டியலுக்கு மாற்றிவிட்டார்கள். அப்போதிருந்து இப்போது வரை அதே பொதுப்பட்டியலில்தான் உள்ளது. கன்கரன்ட் லிஸ்ட் என்று குறிப்பிட்டால், மத்திய அரசு, அந்தந்த மாநில அரசோடு கலந்தாலோசனை செய்து கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டுமென்று அர்த்தம். ஆனால், மத்திய அரசோ, தற்போது கூட்டாட்சி என்ற தத்துவத்தையே ஒழித்துக்கட்டி வருகிறது. தற்போதுள்ள சூழலில், இந்திய நாடு, கூட்டாட்சி நாடு என்று சொல்லமுடியாத நிலையில் உள்ளது.

rr

பொதுவாகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுபோல் கூட்டாட்சி முறை கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கு சற்று கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டிருக்கிறது. தற்போது பா.ஜ.க. தலைமையிலான அரசு வந்த பிறகு, மத்தியிலிருந்து மொத்த இந்தியாவையும் தனித்து ஆளக்கூடிய சர்வாதிகாரம்போல் மாறிவிட்டது. இதில் முக்கியமாக, கல்வித் துறை பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது.

அனைத்து வளர்ந்த நாடுகளிலும், கல்வித்துறையின் அதிகாரம் மத்திய அரசின் கைகளில் கிடையாது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பிய நாடுகளிலும் சரி, கல்விக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கத்திலிருந்து, பள்ளி, கல்லூரிகளை நிர்வகிக்கும் முறை வரை அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மாநிலங்களின் கைகளில்தான் இருக்கிறது. குறிப்பாக, கல்வித்துறையில் தான் மற்ற அனைத்து துறைகளையும்விட அதிக அளவில் அதிகாரப் பரவல் செய்யப்பட்டிருக்கிறது.

ஏனென்றால், கல்வி என்பது அந்தந்த பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளைச் சார்ந்த சமுதாயங்களின் கலாச்சாரம் சார்ந்ததாக இருக்க வேண்டும். நம் நாட்டிலோ, மொழியில் தொடங்கி, பன்முகக் கலாச்சாரம், பன்முக வரலாற்றுப் பின்னணி கொண்ட நிலையில், கல்வியை முழுக்க முழுக்க அதிகாரப்பரவல் செய்ய வேண்டும்.

தற்போதுள்ள சூழலில், நம் நாட்டில் ஆளுநர் என்ற பொறுப்பில் இருப்பவர்கள், பல நேரங்களில் மத்திய அரசின் பிரதிபலிப்பாக மட்டுமே நடந்துகொள்ளும் சூழலில், துணை வேந்தர் நியமனத்தை ஆளுநரின் பொறுப்பிலேயே விடுவது சரியல்ல என்பதே எனது கருத்து'' என்கிறார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டும் பா.ஜ.க அரசின் போக்கிற்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் வழி செய்கிறார்கள். இந்நிலையில், மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம் இவற்றுடன் கேரளாவும் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் அளவிலான கூட்டங்களை ஆளுநர் ஆர்.என் .ரவி மேற்கொண்டு வரு கிறார். இந்நிலையில், தி.மு.க அரசும் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சிகளை மேற் கொள்ளுமா என்பது சட்ட மன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்திய பிறகு தெரியவரலாம்.