"ஹலோ தலைவரே, தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா -கலைஞர் படத் திறப்பு விழான்னு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் வருகை, இந்தமுறை சிறப்பாக அமைந்தது.''”

Advertisment

"தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் இந்தியாவின் முதல் குடிமகன்.''”

’"ஆமாங்க தலைவரே, குடியரசுத் தலைவர் வருகைக் காக சென்னையில் ஏறத்தாழ 7 ஆயிரம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாங்க. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவை, உலகத் தமிழினமே உற்றுக் கவனிச்ச நிலையில், இந்த விழாவில் கலந்துக்க வேண் டாம்னு அ.தி.மு.க. புறக்கணிச்சிடுச்சு. வெள்ளைக்காரர்கள் ஆட்சியிலேயே மக்கள் பிரதிநிதிகளால் அமைந்த சட்டமன்றம்ங்கிற பெருமை நம்ம மாநிலத்துக்கு உண்டு. ஆனா, ஜெயலலிதா ஆட்சியிலோ சுதந்திரத்திற்குப் பிறகான கணக்கை மட்டும் வைத்து 2012-ல் 60-ஆம் ஆண்டு விழா கொண்டாடிட்டாங்க. அதனால, நூற்றாண்டு விழாவை ஏத்துக்க மனசில்லை. அதோடு, சட்டமன்றத்தில் ஜெ. படத் திறப்புக்கு டெல்லியிலிருந்து ஜனாதிபதியோ, பிரதமரோ வரலை. கலைஞருக்காக ஜனாதிபதியின் வருகைங்கிறது அ.தி.மு.க.வுக்கு கொஞ்சம் நெருடல்தான்.'' ”

rang

"விறுவிறுப்பா கோட்டையில் தயாராகும் பட்ஜெட் எப்படி இருக்கும்?''

Advertisment

"தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுகிற அறிவிப்புகள், பட்ஜெட்டில் இல்லைன்னா, எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தை சந்திக்கவேண்டி இருக்குமேன்னு முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாராம். அதனால், கவலைப் படாமல் திட்டங்களை அறிவித்து, நடைமுறைப்படுத்துவோம்னு அதற்கான குறிப்புகளைக் கொடுத்து ஆலோசனைகளையும் நடத்திக்கிட்டிருக்கார். ஆனால் அதிகாரிகளோ, எந்த கோணத்தில் ஆராய்ந்தாலும் நிதிப் பற்றாக்குறை இடிக்குதேன்னு புலம்பறாங் களாம். ஆனாலும் நாம் போடும் முதல் பட்ஜெட்டே ஏமாற்றம் இல்லாத பட்ஜெட்டா இருக்கணும்னு கறாராகச் சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். அதற்கேற்ப நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜனும் அதிகாரிகளும் கடுமையா வேலை செய்றாங்க. இந்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு மானிய கோரிக்கைகளை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றலாமாங் கிற எண்ணமும் முதல்வருக்கு இருக்கு தாம்.''”

"பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்துக்கு ஆயத்தம் ஆகிறாராமே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத் தின் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், அவரது வெளிநாட்டுப் பயணம் திட்ட மிடப்பட்டிருக்கு. அப்படியே, தன் உடல் நிலையை அங்கே பரிசோதிக்கும் திட்டமும் ஸ்டாலினிடம் இருக்குதாம். அவரை விட அவரது சித்தரஞ்சன் சாலை இல்லம்தான், ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவரது உடல் நிலையைப் பரிசோதிக்கணும்னு வலியுறுத்துதாம். மேலும் உள்ளாட்சித் தேர்தல் வரும் போது, அவர் பிரச்சாரம் செய்தாகனும் என்பதால், அவரது உடல் நிலையைக் கவனமாகப் பராமரிக்கணும்னு நினைக்குதாம். பட்ஜெட் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை முடிச்சிட்டு வெளிநாடு போக லாம்ங்கிறது முதல்வர் ஸ்டாலினின் இப்போதைய எண்ணமாம்.''”

"செய்தி மக்கள்தொடர்புத் துறையில் சலசலப்பு கேட்குதேப்பா?''”

Advertisment

rang

"ஆமாங்க தலைவரே... கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்தத் துறையின் இணை இயக்குனரா இருந்த எழில், அங்கிருந்த பி.ஆர்.ஓ.க்களை எல்லாம் ஆட்டிப்படைக்கிறதா சொல்லப்பட்டது. இப்ப அவர் இடத்தில் இருக்கும் அம்பலவாணனை மையமா வச்சி, புகார்கள் சுத்துது. தனக்குப் பிடிச்சவங்களை மட்டும் அவங்களுக்குப் பிடிச்ச இடத்தில் உட்காரவைக்கிறாருன்னும், கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கன்னும் துறை அமைச்சர் வரைக்கும் புகார் போயிருக்குதாம்.''”

"உளவுத்துறையிலும் ஆதங்கம் நிலவுதே?''”

"உண்மைதாங்க தலைவரே... தமிழ்நாடு உளவுத்துறையைப் பொறுத்தவரை, சென்னை, கோவை, மற்றும் தென்மாவட்டங்கள் தவிர, எல்லா இடத்திலும் டிரான்ஸ்பர் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்குது. அதேபோல் போன ஆட்சிக் காலத்தில் இன்றைய முதல்வரான ஸ்டாலினின் போன் எண்கள், லோக்கல் ரவுடி ஒருவரின் எண்ணாகக் காட்டப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி வாங்கிப் பதிவு செய்யப்பட்டிருக்கு. பொதுவா குற்றவாளிகளின் எண்கள் மட்டும்தான் பதிவு செய்யப்படணும்னு சட்டம் இருப்ப தால்தான் இப்படியாம். அந்தத் துறையில், அப்ப ஸ்டாலினின் பேச்சை ரெக்கார்டு செய்த பிரிவினர், இன்னும் இடமாற்றம் செய்யப்படலையாம். பழைய பழக்க தோஷத்தில் முதல்வரின் பர்சனல் எண்ணை பதிவு செய்றாங்களான்னு கவனிக்கணும்னு காக்கி அதிகாரிகள் வட்டாரத்திலேயே எச்சரிக்கையோடு சொல்றாங்க.''”

"சென்னை உயர்நீதிமன்றத் தரப்பிலும் விறுவிறுப்பு அதிகமா இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, ஹைகோர்ட்டில் அடிஷனல் பப்ளிக் பிராசிகியூட்டர்களாக தி.மு.க. சீனியர் வழக்கறிஞர்களை நியமிக்கும் வேலைகள் பரபரப்பா நடக்குது. சட்டத்துறை அமைச்சரான ரகுபதி பரிந்துரைக்கும் புது ஆட்களுக்கே உடனடியாக போஸ்ட்டிங் கிடைக்கலையாம். கட்சிக்காக உழைச்சவங்களுக்கே முன்னுரிமை தரணும்னு, மேலிடம் சொல்லிவிட்டதாம். எதிர்க்கட்சியா இருந் தப்ப போடப்பட்ட பழிவாங்கும் வழக்குகளை எதிர்கொண்டு, கட்சிக்காக வாதாடியவங்க நம்பிக்கையோடு இருக்கிற நேரத்தில், நாங்க பதவி வாங்கித் தர்றோம்னு சொல்லி வழக்கறிஞர்களிடம், தலைக்கு "20 எல்', "30 எல்'னு ஒரு கும்பல் வசூலித்து, நாமத்தைப் போடுவதா அறிவாலயம்வரை புகார் போயிருக்கு.''”

"அ.தி.மு.க. மாஜிக்கள் மீதான அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகுதே?''”

ranbgg

"உண்மைதாங்க தலைவரே... லஞ்சஒழிப்புத் துறையின் அடுத்த குறி, மாஜி மந்திரி வேலுமணிதானாம். மாஜி எம்.ஆர். விஜயபாஸ்கரை ரெய்டு நடத்தியதோடு விட்டமாதிரி, இவரை விடமாட்டாங்களாம். ஏன்னா, அவர் மீதான, உள்ளாட்சித்துறை சம்பந்தமான குற்றச்சாட்டுக்களுக்கு ஏராளமான ஆதாரங்கள் சிக்கியிருக்குதாம். அதேபோல், கோவையைச் சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், வேலுமணி 1,500 கோடி ரூபாய்க்கு மேல் கமிஷனில் கொள்ளையடித்தார்னு அண்மையில் புகார் கொடுத்திருந்தார். அதுவும் வேலுமணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கப்போகுதாம். அதிரடிக் கைதுவரை நிலைமை போகலாம்னு சொல்லப்படுது. இதனால் மாஜிக்கள் வியர்த்துப்போய் நிக்கிறாங்க. ஆனால் மாஜி ’சுகாதாரம்’ விஜயபாஸ்கர் மட்டும், எனக்கு எந்தச் சிக்கலும் வராது. கணக்கெல்லாம் நேராயிடிச்சின்னும் சொல்லிக்கிட்டிருக்காராம்.''”

"காங்கிரஸ் தரப்பிலும் சலசலப்பு தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே... கட்சியின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவாதிக்க, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி, தனது ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் நடத்துச்சு. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கலந்துக்கிட்டாங்க. அப்ப பேசிய தங்கபாலு, கடந்த 50 ஆண்டு காலத்தில் கூட்டணியிலும் கூட்டணி இல்லாமலும் தேர்தலை காங்கிரஸ் சந்தித்திருக்குன்னு சொல்லும் போதே, இனி கூட்டணி யெல்லாம் வராதுங்கன்னு எல்லோருக்கும் கேட்கும்படி, கமெண்ட் பண்ணியிருக்கிறார் அழகிரி. அதேபோல் பேசிய செல்வப் பெருந்தகை, "இங்கு நாம் பேசுகிற பேச்செல்லாம் உடனே நக்கீரனுக்குப் போயிடுது. மற்ற பத்திரிகைகளுக்கும் போகுது'ன்னு சொன்ன தோட, சீமானை சீண்டும்விதமாவும் பேசினாராம். எதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதோ, அது குறித்து யாரும் அழுத்தமான கருத்தை வைக்கலைன்னு, அவங்க தரப்பே அங்கலாய்க்குது.''”

"தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிதானே இதை கவனிக்கணும்?''”

rr

"காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறதா இருந்தால், எனக்குச் சொல்லிவிட்டு, என்னுடைய அனுமதி பெற்ற பிறகே சந்திக்கணும். அதேபோல் முதல்வரிடமோ, அரசிடமோ எந்த கோரிக்கையை வைப்பதாக இருந்தாலும் என் கவனத்துக்கு கொண்டுவந்த பிறகுகுதான், நான் சொல்வதன் அடிப்படையிலே வைக்க வேண்டும்ன்னு கட்சி நிர்வாகிகள் அனை வருக்கும் ஓரல் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கிறா ராம் கே.எஸ்.அழகிரி. இந்த புதுநடைமுறையை எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்பலையாம். இதுவரை இப்படி எவரும் எங்களுக்கு ஆர்டர் போட்டதில்லை. கட்சித் தலைவருக்கு அதிகாரம் இருக்குது. ஆனா, நாங்க அடிமையா எப்படி இருக்க முடியும்னு கேட்குறாங்க.''”

"தங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது, அதிகாரத்தில் இருந்தாலே, சிலருக்குக் கொடுக்கு முளைச்சிடுதேப்பா?.''

"புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வர் பற்றியும் அப்படித்தான் சொல்றாங்க தலைவரே... தனக்குக்கீழ் பணிபுரியும் பேராசிரியர்கள் தொடங்கி, அலுவலக பணியாளர்கள் வரை, எல்லோரையும் கடுமையா அர்ச்சனை செய்கிறாராம். ஏதேனும் கோபம் வந்துட்டால் டேபிளில் உள்ள பேப்பர் வெயிட், தண்ணீர் பாட்டில், புத்தகம்ன்னு கைக்கு கிடைக்கிற பொருளை எடுத்து அவங்க மேல வீசுறாராம். தி.மு.க.வின் சில அமைச்சர்கள் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு நான் நெருக்கமானவன். அதனால் என்னை ஒன்றும் செய்ய முடியாதுன்னும் யாரைப் பார்த்தாலும் சவாலும் விடறாராம். இவரோட ஆட்டத்தைப் பார்த்த கல்லூரி நிர்வாகமே மன உளைச்சல்ல இருக்குதாம்.''”

rr

"நாம ஏற்கனவே ஓ.பி.எஸ், டெல்லிக்கு எடப்பாடியோடு போன சமயம், அவரது இளைய மகன் ஜெயபிரதீப், வெளிநாடு ஒன்றுக்கு வெயிட்டாப் போய், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிக்கிட்டாருன்னும், அவரை மீட்பதற்காக ஓ.பி.எஸ். போராடுறாருன்னு, ஒரு அதிரடித் தகவல் சிறகடிப்பது பற்றி பேசிக்கிட்டோம். அந்த செய்தி உண் மைதான்னு காவல்துறையும் உறுதி செய்யுது. கைவசமுள்ளதை எல்லாம் வெளிநாடுகளில் சேஃப்டி செய்யும் பணியில் ஓ.பி.எஸ். தரப்பு மும்முரம் காட்டுதாம். அந்த வகையில் மாலத்தீவுக்குப் போகும் போதுதான் ஜெயபிரதீப்பை மடக்கியிருக்காங்க. பிரதமர் மோடியிடம் உதவிகேட்டுப் போன ஓ.பி.எஸ்.சுக்கு, இதுக்கு உதவி கேட்டுக் கூட, என்னிடம் வருவீங்களான்னு கடுமையாக டோஸ் விட்டு, அவர் மகனை மீட்டுக்கொடுத்தாராம் மோடி. ஏற்கனவே கத்தாரிலும் இதேபோல் சிக்கி மீட்கப்பட்டிருக்காராம்.''”

rr

"நான் ஒரு தகவலை சொல்றேன்... தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் பொறுப்பில் இருப்பவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித். அவர்தான் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரா கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவைத் தன்னிச்சையா நியமிச்சாரு. சூரப்பா மேலே ஊழல் புகார்வந்து விசாரணையும் நடக்குது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புது துணைவேந்தரை நியமிக்கும் பணியில் மும்முரமா இருக்கிறார் கவர்னர். யார், யார் விண்ணப்பித்தாங்க. அவர்களில் யார், யார் பெயர் பரிசீலிக்கப் பட்டதுன்னு ஸ்க்ரூட்டினி விவரத்தை வெளிப்படைத்தன்மை யோடு இணையத்தில் வெளி யிடுவதைத் தவிர்த்து, ஃபைனல் லிஸ்ட் மட்டும் வெளியே வந்தி ருக்குதாம். சூரப்பா காலத்தில் பல்கலைக்கழகப் பதிவாளரா நியமிக்கப்பட்ட கருணாமூர்த்தியை துணைவேந்தரா கவர்னர் நியமிக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது. சூரப்பா மீதான விசாரணையைக் கிடப்பில் போடத்தான் இந்த நியமனம்னு அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில் பேச்சு அடிபடுது. துணைவேந் தர் நியமனத்தில் மாநில அரசை கவர்னரும் கண்டுக்கலை. மாநில அரசும் பெருசா கவனம் செலுத்தலைன்னு சொல்லும் பல்கலைக்கழக வட்டாரம், ஏற்கனவே பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரையும் கவர்னரே நியமிச்சதை சுட்டிக்காட்டுறாங்க.''’