ட மாவட்டங்களில் திரா விட முன்னேற்றக் கழகத் திற்கு மிக முக்கிய தொகுதி திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி. 1952 முதல் 2011 வரையிலான 16 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. 9 முறை வெற்றிபெற்றுள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. தலா இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளன. அ.தி. மு.க. பெரும் பலத்தோடு ஆட்சியிலிருந்த காலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலை வர் பதவியை தி.மு.க. கைப்பற்றி கோலோச்சியது. அந்தளவுக்கு தி.மு.க.வுக்கு வலிமையான தொகுதியிது. 

Advertisment

தற்போது இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருப்பவர் தி.மு.க.வின் நல்லதம்பி. இரண்டா வது முறையாக இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தேர்தலின்போது, திருப்பத்தூருக்கு தொழிற்பேட்டை, அரசு செவிலியர் கல்லூரி கொண்டுவருவேன், திருப்பத்தூர் தாலுகாவை பிரித்து விஷமங்களம் தாலுகா உருவாக்குவேன், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க முயற்சிப்பேன் என பல்வேறு வாக்குறுதிகள் தந்தார். சாலைகள் போடப்படும், குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனச் சொல்லியிருந்தார். சாலைகள் போடப் பட்டது, குடிநீர் பிரச்சனையில்லை. மற்றபடி சொன்னதெல்லாம் நிறைவேற்றப்படவில்லை என்கிறார்கள் சமூகநல அமைப்பினர். 

Advertisment

தி.மு.க.வில் ஒவ்வொருமுறையும் 20 பேருக்கு மேல் சீட் கேட்கிறார்கள். இதில் தகுதியோடு மோதுபவர்கள் எனப் பார்த்தால் வெகுசிலரே. சிட்டிங் எம்.எல்.ஏ.வான நல்லதம்பி மூன்றாவது முறையாக சீட் வாங்கிவிடவேண்டும் என மாவட் டப் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவை சுற்றிவருகிறார். அடுத்த போட்டியாளராக இருப்பவர் 1998-லிருந்து நகரச் செயலாளராக இருக்கும் ராஜேந்திரன். 2011-ல் ந.செ. ராஜேந்திர னுக்கு சீட் தந்தார்கள். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் இளம்வயது என 2016-ஆம் ஆண்டு ஒ.செ. நல்லதம்பிக்கு சீட் தரப்பட்டது, அவர் வெற்றிபெற்றார். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வாங்கித் தாங்க என அமைச்சர் வேலு தரப்பிடம் கோரிக்கை வைத்து வருகிறார் ராஜேந்திரன். 

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்து தற்போது வேலுவின் ஆதர வாளராக காட்டிக்கொள்ளும் மாவட்ட துணைச்செயலாளர் மோகனும் முயற்சிசெய்கிறார். அதேநேரத்தில் ஏலகிரியில் நடைபெற்ற தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் வேலுவால் உட்கட்சி பிரச்சனைக்காக எச்சரிக்கப்பட்டுள்ளார். இருந்தும் கேட்டுவைப்போம் என முயற்சி செய்துவருகிறார் என்கிறார்கள். ஜோலார்பேட்டை தொகுதிக்குள் வரும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், அங்கே மா.செ. சிட்டிங் எம்.எல்.ஏ. தேவராஜுக்கு சீட் உறுதியாகி விட்டதால் திருப்பத்தூரை கேட்கலாம் என்கிற எண்ணத்திலுள்ளார். 

Advertisment

tirupathur1

அ.தி.மு.க.வில் சீட் வாங்கிவிடவேண்டும் என மூன்று பேர் கடுமையாக மோதுகிறார்கள். மா.செ. வீரமணி தனது பினாமியான திருப்பத்தூர் நகரத்தை சேர்ந்த கவுன்சிலர் டி.டி.சங்கரை தனது பவரைப் பயன்படுத்தி சம்பந்தமேயில்லாத கந்திலி ஒ.செ.வாக்கினார். இதனால் கந்திலி ஒன்றியத்திலுள்ள நிர்வாகிகள் பிரச்சனைகள் செய்தபோதும் அதனை கண்டு கொள்ளவில்லை. அந்த சங்கரை திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக்க முயற்சிக்கிறார் வீரமணி. அதேபோல் 2016-ல் போட்டியிட்டு தோல்வியடைந்த திருப்பத்தூர் ந.செ.வான டி.டி.குமார் மீண்டும் சீட் கேட்பாளர் பட்டியலில் உள்ளார். தானும் மா.செ.வும் ஒரே சாதி, அவரின் ஆதரவாளர் என்பதால் தனக்கு வாங்கித்தருவார் என காய்நகர்த்துகிறார்.

திருப்பத்தூர் ஒ.செ. வாகவும், திருப்பத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனாகவும் இருந்த கால்நடை மருத்துவர் திருப்பதி இதில் முன்னணியில் உள்ளார். இவருக்கு எம்.பி. தம்பிதுரை சப்போர்ட் செய்கிறார். அவரை வேட்பாளராக நிறுத்தினால் கண்டிப்பாக           சிட்டிங் எம்.எல்.ஏ. நல்லதம்பி தோற்றுவிடுவார், அதனால் அவருக்கு சீட் வழங்கலாம் என இ.பி.எஸ்.ஸிடம் ரிப்போர்ட் தந்துள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளராக திருப்பதியை  நிறுத்தலாம், அப்படியாயின் டஃப்பாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உளவுத் துறை ரிப்போர்ட் தந்துள்ளதால் தொகுதியில் தீவிரம் காட்டச்சொல்லி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தி.மு.க.வினரோ, "திருப்பதியைப் பார்த்து நாங்கள் பயப்படுமளவுக்கு அவர் வலிமையான ஆள் இல்லை. திருப்பத்தூர் தொகுதிக்குள் வரும் திருப்பத்தூர் நகரம், ஒன்றியம் தி.மு.க.வுக்கு வலிமையான பகுதிகள். கந்திலி ஒன்றியம் மட்டும்தான் நீண்டகாலமாக அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருந்துவருகிறது. அந்த ஒன்றியத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக 1991-களில் இருந்த சுந்தரவேலிடம் மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டி ருந்தார்கள். அதன்பின் 2011-ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.ஜி.ரமேஷிடம் அடிமையாக இருந்தார் கள். இதனால் அந்த ஒன்றியத்தில் நிர்வாகிகள் கட்சியை வளர்க்கவில்லை. இப்போது ஒ.செ.வாக நியமிக்கப்பட்டுள்ள கந்திலி கிழக்கு மோகன்ராஜ், மேற்கு முருகேசன், மத்தியம் குணசேகரன் போன்றவர்களைக்கூட எம்.எல்.ஏ. நல்லதம்பி அடிமையாகவே நடத்துகிறார். ஒ.செ. மற்றும் நிர்வாகிகள் யாராவது தன்னை எதிர்த்துப்பேசி னால், என்னை மதிக்கறதில்லை என கி.செ.க்கள் மூலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் புகார் சொல்லி அவர்களுக்கு நெருக்கடி தருகிறார். இப்படியிருந்தால் எப்படி கட்சி வளரும்? இதுபோன்ற காரணங்களால் கந்திலியில் அ.தி.மு.க. பலமாக இருப்பதால் அங்கே ஓட்டு அதிகமாகக் கிடைக்கிறது. அந்த ஒன்றிய வாக்குகளால் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடமுடியாது'' என்கிறார்கள்.