55 ஆண்டு அவமானத்தைத் துடைக்குமா தி.மு.க.? -சோளிங்கர் தொகுதி நிலவரம்.

ss

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் ராணிப்பேட்டை, ஆற்காடு தி.மு.க. வசமும், சோளிங்கர் காங்கிரஸ் வசமும், அரக்கோணம் அ.தி.மு.க. வசமும் உள்ளது. சோளிங்கர் -வன்னியர்கள், முதலியார்கள், பட்டியலினத்தவர் அதிகளவு வசிக்கும் தொகுதி. இத்தொகுதி நிலவரம் குறித்து காண்போம்.

ss

சிட்டிங் எம்.எல்.ஏ.வாக நான்காவது முறையாக இருப்பவர் காங்கிரஸ் முனிரத்தினம். தொகுதிக்கு அவர் பெயர்சொல்லும்படி ஏதாவது செய்துள்ளாரா என்றால் ஒன்றுமில்லை. இத்தொகுதியில் நான்குமுறை அவர் வெற்றி பெற்றதற்கான காரணம், பெரும்செல்வந்தர், சாதிச் செல்வாக்கு, கூட்டணி பலம் மட்டுமே. சோளிங்கர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலி, அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் பதவி காலி, அரசு மருத்துவ மனையில் தலைமை மருத்துவர் பணியிடம் காலியாக இருக் கிறது. அரசு மருத்துவக் கல்லூரியை சோளிங்கர் தொகுதியில் அமைக்க வேண்டும் என்கிற மக்கள் கருத்தைக்கூட அவர் சட்ட மன்றத்தில் பேசவில்லை.

நகராட்சி இடத்தை ஆக்ரமித்து கடை கட்டி யுள்ளதை இ

நகராட்சி இடத்தை ஆக்ரமித்து கடை கட்டி யுள்ளதை இடிக்க விடாமல் தடுக்கும் அக்கறையில் கொஞ்சமாவது இதில் காட்டி யிருக்கலாம். தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரியல் எஸ்டேட் மனைப்பிரிவுக்கு சாலை அமைத் துள்ளார் எனக் குற்றச்சாட்டுகளும் உள்ளன. கடந்தமுறை காங்கிரஸ் மாநில தலைமையை மிரட்டியே சீட் வாங்கினார். அப்போது அவரது மகன் சரவணன் என்கிற திலீப் தேர்தல் வேலையை ஸ்கெட்ச் போட்டு பக்காவாக செய்து அப்பாவை வெற்றிபெறவைத்தார். மீண்டும் சீட் வாங்கி நின்றால் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பதால் உங்கள் மகனை அரசியலுக்கு கொண்டுவாங்கள், சோளிங்கரில் தி.மு.க.வுக்கு பலமான ஆள் இல்லை, அதனால் அவரை தி.மு.க.வில் சேரச்சொல்லுங்கள் என முனிரத்தினத்துக்கு நெருக்கமானவர்களே ஆலோசனை கூறுகின்றனர்.

1967 தேர்தலில், தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோவின் அப்பா ரங்கநாதன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வானார். அதன்பிறகு கடந்த 55 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 1971-ல் நடராஜன், 1977, 1980, 1984 தேர்தல்களில் மூர்த்தி, 1989, 91-ல் காவேரிப்பாக்கம் ஒ.செ. மாணிக்கம் நிறுத்தப்பட்டும் வெற்றிபெறவில்லை.

ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்டு 1996-ல் த.மா.க., 2006, 2021-ல் காங்கிரஸ் இங்கே நின்று வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க.வுக்கு இங்கு வலுவான நிர்வாகிகள் இல்லை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது சோளிங்கர் தொகுதியை மா.செ.க்கள் கண்டுகொள்ளவில்லை. கிராமப்புறங்களில் கட்சி நிர்வாகக் கட்டமைப்பை சரியாக அமைக்கவில்லை. ராணிப்பேட்டை மாவட்டமான பின்பும் அதே நிலையே தொடர்கிறது.

ss

சோளிங்கர் நகரமன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி யின் கணவர் அசோகனுக்கு சொந்தமாக நகரத்தின் மையத்திலுள்ள கட்டடத்தில்தான் டாஸ்மாக் மது பானக்கடை வாடகைக்குள்ளது. அந்தக் கடைகளுக்கு அருகிலுள்ள தெருக்களிலுள்ள நூறு குடும்பங்கள் குடிகாரர்களால் பாதிக்கப்படுகின்றனர். அதை அவர் காலிசெய்தால் மக்கள் நிம்மதியடைவார்கள். அதே நபர் கோவில் இடத்தை ஆக்ரமித்து லாட்ஜ் கட்டியுள்ளார். அதனை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டபோது, இவுங்களும் வீடு, கடை கட்டியிருக்காங்க எனப் பக்கத்திலிருந்த பொதுமக்களை காட்டித்தந்தார். இப்படி மக்களுக்கு எதிரான அசோகனை 2019-ல் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ. வேட்பாளராக நிறுத்தி தோல்வியைச் சந்தித்தார்கள்.

பிரபலமான நரசிம்மர் கோவிலுக்கு அறங்காவலராக நியமிக்கப்பட்டவர்கள் பெங்களூரு, அரக்கோணம், ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள். உள்ளுரில் எத்தனையே முக்கியஸ்தர்கள் இருக்க, வெளியூர்க் காரர்களை நியமித்தனர். இதுபோன்ற விஷயங்களில்கூட தொகுதி மக்களை மதிப்பதில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்க அசோகன், ஒ.செ. பதவிவாங்கிய மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த பூர்ணசந்திரன் முயற்சிக்கின்றனர். இவர்களெல்லாம் கட்சிக்காக, கட்சித் தொண்டனுக்காக நூறு ரூபாய் கூட செலவு செய்யாதவர் கள். இந்தத் தொகுதியை வெல்ல வேண்டுமானால் மாநில சுற்றுச்சூழல் அணி துணையமைப்பாளராக வுள்ள அமைச்சர் காந்தியின் மகன் வினோத்தை களமிறக்கவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மாவட்டப் பொருளாளர் ஆற்காடு ஏ.வி.சாரதி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆதரவில் சீட் வாங்கிவிடலாம் எனக் காய் நகர்த்துகிறார். மாவட்ட கவுன்சிலர் ஒ.செ. பெருமாள், மாவட்ட துணைச்செயலாளர் சிவானந்தம் ஆகியோர் ரேஸில் உள்ளனர்.

அ.தி.மு.க.விற்கு தொடக்கம்முதலே பலமான தொகுதியிது. கடந்த எம்.பி. தேர்தலில் நின்று தோல்வியைச் சந்தித்த ஏ.எல்.விஜயனுக்கு எடப்பாடி சீட் தருவதாக உறுதிகூறியுள்ளார். அவர் மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வேண்டாம் என மா.செ. ரவி மூலமாக இ.பி.எஸ்.ஸிடம் கூறிவருகின்றனர். 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத் மீண்டும் சீட் வாங்க முயற்சிக் கிறார்.

பா.ம.க.வில் கடந்த எம்.பி. தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த வழக்கறிஞர் பாலு, மாவட்டத்தலைவர் அ.ம.கிருஷ்ணன், இளைஞர் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி சீட் வாங்க முயற்சிக்கின்றனர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ளோம் எனச்சொல்லும் அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன், மா.செ. வழக்கறிஞர் பார்த்திபனை வேட்பாளராக அறிவித்துள்ளார். தே.மு.தி.க. மா.செ. மனோகரனும் சமீபமாக தொகுதிக்குள் வலம்வருகிறார்.

தி.மு.க.வு.க்குத்தான் இந்தத் தொகுதி சவால். இம்முறை வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற்று தனது 55 ஆண்டு அவமானத்தை துடைக்குமா? அல்லது கூட்டணிக்குத் தள்ளிவிடுமா என்பது தேர்தல் நெருக் கத்தில் தெரிந்துவிடும்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn310525
இதையும் படியுங்கள்
Subscribe