ராணிப்பேட்டை மாவட்டத்தி லுள்ள அரக்கோணம் தனித்தொகுதி. ஒரு காலத்தில் தி.மு.க.வின் எஃகு கோட்டையாக இருந்தது. 1977 தேர்தலிலிருந்து தனித் தொகுதி யாகப்பட்ட இங்கு 8 முறை தி.மு.க.வும், 5 முறை அ.தி.மு.க.வும், இரண்டு முறை காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த மூன்று தேர்தல்களாக இத்தொகுதியில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. மூன்றாவது முறையாக இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள சு.ரவி, அ.தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் உள்ளார்.
அரக்கோணம் தொகுதி மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் என அனைத்துக்கும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தையே நம்பியுள்ளனர். அரக்கோணத்தில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதி கிடையாது. போக்குவரத்து, சாலை வசதியும் சரியாக இல்லை. மாவட்டத் தலைநகரான ராணிப் பேட்டைக்குக்கூட அரக்கோணத்திலிருந்து சரியான பேருந்து வசதி இல்லை. ரயில்களையே பெரும்பாலும் மக்கள் நம்பியுள்ளனர்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில், அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து நகரத்துக்குள் பயணிகள் வரும் வகையில் ரயில்வே மேம்பாலம், இரட்டைக்கண் மேம்பாலம் கட்டப் படும் எனச்சொல்லப்பட்டது. முதலமைச்சராக இருந்த ஜெ. நிதி ஒதுக்கீடும் செய்தார். அந்தத் திட்டம் இ.பி.எஸ். ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட் டது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இப்பாலம் கட்டப்படுமென இ.பி.எஸ். தற்போது கூறியுள்ளார். அரக்கோணம் அம்மனூரிலுள்ள சிப்காட் மேம்படுத்தப்படவில்லை. அரக்கோணம் நகரத்திலிருந்து காஞ்சிபுரம் - திருத்தணி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை அமைக்கப்படுமென்ற வாக்குறுதியையும் எம்.எல்.ஏ. ரவி நிறைவேற்றவில்லை. 14 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார், குருவராஜாபேட்டையில் கைத்தறி பூங்கா அமைக்கப்படும், அரக்கோணத்தில் மூடப்பட்ட எஃகு தொழிற்சாலை திறக்கப்படும் எனச்சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச் சாரத்தின்போது எம்.எல்.ஏ. ரவியை அரக்கோணம் பொதுமக்கள் சுற்றி வளைத்துக் கேள்விகேட்டு பிரச்சனை செய்தனர். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தும் தொகுதிக்கென்று அவர் எதுவும் செய்யவில்லை. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பின் புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. அதேபோல் பனப்பாக்கம் சிப்காட் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் மேம்படுத்தப்படவில்லை, தி.மு.க. ஆட்சியில் தான் டெவலப் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ., சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், ராணிப் பேட்டை கிழக்கு மா.செ.வாகவும் ரவி இருப்ப தால், அவருக்கே ஐந்தாவது முறையாக சீட் தரப்படும் என்கிறார்கள். வேறு பணக்கார வேட் பாளர் இல்லாததால் மீண்டும் ரவிக்கே சீட் தரலாம் என இ.பி.எஸ். முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க.வில் வேறு யாரும் சீட் கேட்க பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை. அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணி யிலுள்ள புரட்சிபாரதம் ஜெகன்மூர்த்தி, தற்போதுள்ள கே.வி.குப்பம் தொகுதியிலிருந்து அரக்கோணம் தொகுதிக்கு மாறவேண்டுமென்று அ.தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தி வருவ தாகக் கூறுகிறார்கள். இத்தொகுதியில் 2006ஆம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளராக முதல்முறை ரவி நிறுத்தப்பட்டபோது, தி.மு.க. கூட்டணியில் நின்ற புரட்சிபாரதம் ஜெகன்மூர்த்தியிடம் தோற்றார். இப்போது அதே தொகுதியில் சீட்டுக்காக எம்.எல்.ஏ. ரவியும், எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தியும் முட்டிமோதுகின்றனர்.
இத்தொகுதியில் இந்தமுறை தி.மு.க.வே நேரடியாகக் களமிறங்கினால் வெற்றி பெற முடியுமென்று தி.மு.க.வினர், அமைச்சர் காந்தி மற்றும் மண்டல தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலுவிடம் முறை யிட்டுள்ளனர். அவரும் தலைவரிடம் கூறுவோமென்று சொல்லியுள்ளார். இதனால் தி.மு.க.வில் பலரும் சீட் எதிர்பார்ப்பில் உள்ளனர். வன்னிய ரான நெமிலி ஒ.செ. சேர்மன் வடிவேல், பட்டியலின சமூ கத்தை சேர்ந்த பவானியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். எனது மனைவிக்கு அரக்கோணத்தில் சீட் தாங்க, எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர் காந்தி மூலமாக முயற்சி செய்தார். அதேபோல் இந்த முறையும் முயற்சிசெய்கிறார் என்கிறார்கள். 2016 தேர்தலில் களமிறங்கி 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்குமார், சீட் பெறுவதற்காக மீண்டும் முயற்சி செய்கிறார். அரக்கோணம் கிழக்கு ஒன்றிய கழக செய லாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் ரேஸில் கலந்துகொள்ள முயல்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப் பெருந்தகை தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தற்போது அரக்கோணம் தொகுதியின் மீது கண் வைத்துள்ளார் என்கிறார்கள் காங்கிரஸார். தி.மு.க. கூட்டணியில் ஏற்கெனவே இந்த தொகுதியில் 2011, 2021 தேர்தலில் சீட் வாங்கி போட்டியிட்டு தோல்வியுற்ற வி.சி.க., இந்தமுறை கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவோம், சீட் தாருங்கள் எனக் கேட்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அரக்கோணம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சிக்கு இருக்கும் அளவுக்குகூட வி.சி.க.வுக்கு செல்வாக்கு இல்லை. அதனால் அக்கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என சீட் எதிர்பார்கும் தி.மு.க. பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவிக் கின்றனர்.