"ஹலோ தலைவரே, ஜெ.வின் போயஸ் கார்டன் பங்களா, அவரது வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்குதே...''”’
"ஆமாம்பா, அ.தி.மு.க. ஆட்சியில் ஜெ.வின் ரத்த உறவு வாரிசுகளுக்கு கிடைக்காத நீதி, ஆட்சி மாறியதும் கிடைச்சிருக்கு. அதேநேரம், "ஜெ.வின் மரணத்துக்குக் காரணம் சசிகலாதான்'னு, ஜெ’வின் வாரிசான தீபா அதிரடிக் குற்றசாட்டை வைக்கிறாரே?''”’
"உண்மைதாங்க தலைவரே, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, அவருடைய அண்ணன் ஜெயராமனின் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைச் சிருக்கு தி.மு.க. அரசு. போயஸ் கார்டன் பங்களா வை சுற்றிப் பார்த்த தீபா, "எங்க அத்தை பயன் படுத்திய பல பொருட்களைக் காணவில்லை. அதை, யார் திருடினார்கள் என்பதை நான் கண்டு பிடித்தே தீருவேன். இதற்கு கடந்த அ.தி.மு.க ஆட்சிதான் பொறுப்பேற்கணும்' என்று சொன்ன தோடு, "என் அத்தை ஜெயலலிதாவின் மரணத் திற்கு சசிகலாதான் காரணம். அவரை முழுமையாக விசாரிக்க வேண்டும்'னு சொல்லியிருக்கிறார். கடந்த காலத்தில் சசிகலா தரப்பால்தான் தன்னால் கார்ட னுக்குள் நுழைய முடியலைன்னும், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, ஆஸ்பிட்டலிலும் அனுமதிக்கலைன்னும் குற்றம்சாட்டி வந்த தீபா, இப்போது அவரிடமிருந்து விடுபட்ட பிறகு, ஜெ.வின் மரணத்துக்குக் காரணம் சசிகலாதான்னு சொல்லியிருப்பது பரபரப்பாகியிருக்குது.''”’
"ஜெ.வின் பங்களாவை யார் பயன் படுத்தறதுன்னு வாரிசுகளுக்கிடையே பஞ்சாயத்து நடக்குதாமே?''”’
"ஆமாங்க தலைவரே, தீபாவும் அவர் கணவர் மாதவனும் பங்களாவை சுற்றிப் பார்த்து, ஜெ. பாணியில் பால்கனியிலிருந்து கை அசைச்சாங்க. தீபா சகோதரர் தீபக்குக்கும் பங்களாவில் உரிமை இருக்குது. இதற்கிடையில், வருமானவரித் துறையில் சுமார் 36 கோடி ரூபாய் ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருப்பதால், அது தொடர்பாக அந்தத் துறை தொடர்ந்த வழக்கில், ஜெ.வின் இந்த போயஸ் கார்டன் பங்களாவும் இணைக்கப்பட்டிருந்தது. நினைவில்லமாக அந்த பங்களாவை எடப்பாடி அரசு மாற்றியபோது, அந்த பங்களா பேரில் இருந்த வருமான வரி பாக்கி மற்றும் அந்த சொத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக 66 கோடி ரூபாயை கோர்ட்டில் கட்டியிருந்தது அப்போதைய அரசு. இந்தத் தொகையை ஜெ.வின் வாரிசுகளிடம் வசூலிக்கத் திட்டமிட்டிருக்குதாம் வருமான வரித்துறை. இதனால் ஜெ.வின் பங்களாவை அனுபவிக்க முடியுமான்னு ஷாக் ஆன ஜெ.வின் வாரிசுகள், சட்ட ஆலோசனையில் இருக்காங்களாம். சசிகலாவும் இவங்களை எப்படி வெளியேற்றுவதுன்னு ஆலோசிக்கிறாராம்.''”’
"அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது வரம்பு பற்றி, தி.மு.க. அரசு தீவிரமாக ஆலோசிக்குதே?''”’
"அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தியது முந்தைய அ.தி.மு.க அரசு. அதற்கு அப்போதே அரசு ஊழி யர்களிடமும் வேலையில்லா பட்டதாரிகளிடமும் எதிர்ப்புகள் கிளம்புச்சு. இப்ப ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம்னு தி.மு.க. அரசு, அரசு ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கு. அதேபோல் அவர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு குறித்தும் ஆலோசித்துவருவதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித் திருக்கிறார். அது குறித்து நாம் விசாரித்தபோது, 33 ஆண்டுகள் சர்வீஸ் முடித்திருந்தால், அவர் களை 60 வயதிலும், மற்றவர்களை 58 வயதிலும் ஓய்வுபெற அனுமதிக்கலாம் என விவாதிக்கப் பட்டிருக்குதாம்.''’
"செய்தித்துறையில் அ.தி.மு.க. ஆதிக்கம் தொடருதுன்னு சொல்றாங்களே?''”’
"தி.மு.க. அரசின் நலத் திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் உள்ளிட்டவைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல, தமிழக அரசின் செய்தித்துறை அதிரடி முயற்சியில் இறங்கியது. சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை என 6 மண்ட லங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னைக்கு சரவணன், திருச்சிக்கு மருதப்பிள்ளை, தஞ்சைக்கு கிரிராஜன், மதுரைக்கு பழனியப்பன், கோவைக்கு சுப்பிரமணியம், நெல் லைக்கு அண்ணா ஆகியோர் இணை இயக்குநர் களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அண்ணா மற்றும் மருதப்பிள்ளை ஆகியோரைத் தவிர மற்றவர்கள் அ.தி.மு.க.வினர்னு துறையில் உள்ளவங்க சொல்றாங்க. அதனால், அரசின் நோக் கம் நிறைவேறுமாங்கிற கேள்வி எழுந்திருக்கு.''”’
"ஆவின்லயும் சூடான சர்ச்சைகள் இருக்குதே?''”’
"உண்மைதாங்க தலைவரே, பால்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவினின் கீழ், சென்னை அம்பத்தூரில் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கை ஆவின் நிர்வாகமே நடத்துது. இப்படி நடத்துவது ஆவின் சட்ட விதி களுக்கு எதிரானதுன்னு "ஆவின் மில்க் ஆடிட்' அமைப்பு எதிர்ப்புத் தெரிவிச்சிருக்கு. இருந்தும் இதை ஆவின் கண்டுகொள்ளவே இல்லை. சேலம் ஒன்றியத்தில் இப்படி நடத்தப்பட்ட பெட்ரோல் பங்க்கில், நிறைய சிக்கல்களை எதிர்கொண்டது ஆவின். ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறை ஆவினில் இருக்கும் நிலையில், பெட்ரோல் பங்க்கை எந்த ஊழியர்களை வைத்து நடத்துவார்கள்? எதற்காக இந்த ரிஸ்க்னு கேட்குறாங்க.''”’
"பா.ஜ.க.வின் குறி, தமிழக ஆளுங்கட்சிப் பக்கம் திரும்பி இருக்குன்னு ஒரு தகவல் டெல்லிப் பக்கம் இருந்து வருதே?''”’
"உத்தரபிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மார்ச் வாக்கில் முடிந்ததும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கள வேலைகளைப் பார்க்க நினைக்கிது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை. அதனால், அந்த தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அதிரடி நடவடிக்கைகளை அது மேற்கொள்ளத் திட்டமிடுது. அதற்காக அது முதற்கட்டமாக தமிழக அமைச்சர்கள் நான்கு பேரை டார்கெட் வைத்திருக்குதாம்.. குறிப் பாக புகார்கள் அதிகம் வரும் டாஸ்மாக், மின்சாரம், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உணவுத் துறை, மார்ஜின் பார்க்கும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் எழுந் துள்ள ஊழல் புகார்கள் குறித்த ரிப்போர்ட்டுகளை, வரு மானவரித் துறை தீவிரமாக சேகரித்துக் கொண்டிருக்கிறதாம்.''”’
"இதுபோன்ற செய்தி கள் மாநில அரசின் கவனத்துக்கும் வந்துக் கிட்டுத் தான் இருக்காம். பணப் புழக்கம் உள்ள துறைகளை குறி வைப்பது வழக்கம்தான். நாங்க வெளிப்படையா செயல் படுவதால், பூச்சாண்டி வேலை நடக்காதுங்கு றாங்க.”
"யுடியூப்பில் சகட்டுமேனிக்கு அடிச்சிவிடும் மாரிதாஸ் கைது விவகாரத்தில் பா.ஜ.க.வுக்குள் குழப்பம் நிலவுதே?''”’
"பா.ஜ.க.வின் அதி தீவிர ஆதரவாளரும், தி.மு.க மீது கண்டதையும் கிளப்பிவிடுபவருமான யுடியூப் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, கவர்னர் ரவியை சந்தித்து, பா.ஜ.க. ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்வதாகக் கூறி டி.ஜி.பி. மீது புகார் கொடுத் திருக்கிறார். இந்த நிலையில் பா.ஜ.க.வின் மாநில அமைப்புச் செயலாளரான கேசவவிநாயகம், "மாரி தாஸ் சரியான நபரல்ல. அவரை நாம் ஆதரிக்கக்கூடாது' என்று கூறி அவரைப் பற்றிய புகார்களை கட்சி யின் டெல்லித் தலைமைக்கு அனுப்பியிருக்கிறாராம்.''
"ம்...''”’
"தலைவரே, சென்னை சூளையில் பாரம்பரியம் மிக்க செங்கல்வராயன் கல்வி அறக்கட்டளை செயல்படுது. இதன்கீழ் பல்வேறு கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இதன் சார்பில் உருவாக்கப் பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்ச ரான சிவசங்கர் திறந்து வைக்கிறார். இது சம்பந்தமா உயர் கல்வித்துறை அமைச்சருக் கும், மாவட்ட அமைச்சரான சேகர்பாபுவுக்கும்கூட இதற்கான அழைப்பு விடுக்கப்படலை யாம். பிற்பட்டோர் நலத்துறை அமைச்சரை மட்டும் ஏன் அழைக்கவேண்டும் என்ற கேள்விகளும் விவாதங்களும் அங்கே சுழன்றடிக்கிது.''”’
"எனக்கும் இந்தத் தகவல் வந்ததுப்பா.. மிக பிற்படுத்தப் பட்டவர்களுக்கான வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காக உள்ள இந்த தனியார் அறக் கட்டளையை அரசின் வன்னி யர் பொதுச் சொத்து நல வாரி யம் கவனிக்குது. அதனால், அந்தத் துறையின் அமைச்சரை அழைத்திருக்கிறார்கள். அதோடு, மாவட்ட அமைச்சரான சேகர்பாபுவுக்கு வசதியான தேதியை யும் கேட்டு, சிவசங்கர் தலைமையில் சேகர்பாபு வரும் 20-ந் தேதி கல்லூரியைத் திறந்து வைக்கிறார்.''’
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சசிகலாவின் மீது டெல்லி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை நிர்மூலமாக்கத் துடிப்பதாகவும், அதனால் டெல்லியிடம் பேசித் தன்னைக் காப்பாற்றும்படி கேட்டுத்தான் சசிகலா, ரஜினியை சந்திச்சாருன் னும் ஒரு சிலர் செய்தி பரப்பறாங்க. ஆனால் சசிகலா தரப்போ, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. டெல்லி மேலிடம் எங்களை எந்த வகையிலும் குறிவைக்கலை. அதன் ஆதரவு எங்களுக்கு நிறையவே இருக்கு. உண்மையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்தெடுக்கப்பட்டி ருக்கும் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கத்தான் சசிகலா, ரஜினியை சந்திச்சார்னு சொல்லுது. இதைத்தான் நாம் போன முறையும் பேசிக்கிட்டோம்''”