"எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?'’என்ற ஏக்கத்துடன் 1973 - 1974ல் அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துவிட்டு, கல்லூரிகளுக்கோ, மேற்படிப்பைத் தொடரமுடியா மல் வேலைகளுக்கோ சென்ற 65 முன்னாள் மாண வர்கள், பொன்விழா ஆண்டில் மீண்டும் சந்தித்து, பசுமை நிறைந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்தது.

வெவ்வேறு துறைகளில் உயர்ந்தும், எளிய வாழ்க்கையினையே தொடர்ந்தும், பள்ளிக்கால நட்பினை மனதின் ஆழத்தில் பதிந்தும் வைத்திருந்த அந்த மாணவர்களில் ஒருவர், நமது ஆசிரியர் நக்கீரன் கோபால்.

ex

ஆசமப மஹாலில் சுவாரஸ்யமான பேச்சு களுக்கிடையே, கமகமக்கும் சைவ, அசைவ உணவுகளை ஒரு பிடிபிடித்த நண்பர்கள், ஆர்வத்துடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தங்களில் ஒருவரான நக்கீரன் கோபால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து கலைஞர் எழுதுகோல் விருதினைப் பெற்ற சமீபத்திய நிகழ்வினைப் பாராட்டி, வீரவாள் பரிசளித்தனர்.

அங்கு தன்னைச் சூழ்ந்துகொண்டு கேள்வி யெழுப்பிய மீடியா உறவுகளுக்குப் பேட்டி அளித்தபோது, "நக்கீரன் கோபால் ஆவதற்குமுன் என் பெயர் ராஜகோபால். "எப்படி இப்படி ஆன?' என்று என் பிரண்ட்ஸ் எல்லாம் கேட்டாய்ங்க....' எனக் கூறிவிட்டு, வீரப்பன் பற்றிய கேள்விக்கு, "சந்தனக் கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியபோது, மீட்கும் முயற்சியில் அரசுத் தூதுவராகச் சென்ற தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்திய ஆர்வத்தையும் அந்தச் சம்பவத்தையும்' விளக்கினார். "ரஜினி காட்டுக்கு என்னுடன் வரத் தயாராகிவிட்டார். "நானும் வருகிறேன்' என்றார். அப்போது கலைஞர் எனக்கு போன் செய்தார். "என்ன ரஜினி வருகிறா ராமே' என்று கேட்டார். "ஏற்கனவே ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக்கிட்டார். இவரும் மாட்டிக் கிட்டா என்னுடைய கதை கந்தல்தான். கலைஞ ரும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். யாரைக் கேட்டு அழைத்துச் சென்றீர்கள் என்று கேட்டால், நானும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அப்போது அது நடந்திருந்தால் நான் இங்கு இப்போது பேட்டியே கொடுத்திருக்க முடியாது. "இதை நீங்களே சமாளிங்க கோபால்' என்று கலைஞர் என்னிடம் கூறினார். ரஜினி பேக்குடன் தயாராக இருந்தார். இமயமலைக்குச் செல்வது போல ரெடியாகிவிட்டார். நான் ரஜினியைப் பார்த்து சிரித்தேன். "என்ன கோபால் நல்லா இல்லையா?' என்று கேட்டார். "ஏங்க.. நான் அங்க போயி ரெடி பண்ணிட்டு உங்கள கூப்பிடு றேன்' என அவருக்கு டேக்கா கொடுத்துட்டு கிளம்பிட்டேன். காடு என்பது நாம் நினைத்தது போல் இருக்காது. வீரப்பனிடமிருந்து அழைப்பு இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் சிறிய சந்தேகம் இருந்தாலும் சுட்டுக் கொன்றுவிடுவான். நான் அழைத்துச் செல்லாததால் ரஜினி ஏமாற்றம் அடையவில்லை. ராஜ்குமாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. நிலைமையை எடுத்துச் சொல்லி அவருக்குப் புரியவைத்துவிட்டேன்''’என்றார்.

Advertisment

ex

"வாடா.. போடா.. டேய்.. என்னடா..'’ என அறுபதைக் கடந்த இந்த வயதில் உரிமையுடன் அழைப்பதைக் கேட்டு எத்தனை காலம் ஆயிற்று? இந்தப் பரவசம் நண்பர்கள் சந்திப்பில் பெருக் கெடுத்து ஓடியது. பள்ளிக்கால அனுபவங்களை மட்டுமல்ல.. கடந்து வந்த வாழ்க்கைப் பாதை யையும் அவரவர் பாணியில் ஒவ்வொருவரும் கூற, காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நாடறிந்த பிரபல மாகிவிட்ட நக்கீரன் கோபாலும், "அப்படியிருந்த நான் இப்படி ஆனது எப்படி?'’என்று தனக்கே உரிய பாணியில் நண்பர்கள் மத்தியில் பேசினார்.

"சின்னப்பிள்ளைல தீபாவளின்னா நாலுநாள் தூங்கமாட்டோம்ல. இந்த நாளுக்காக, அந்தமாதிரி நான் தூங்காம இருந்தேன். நண்பர்களுக்கு ஏதாச்சும் பரிசு கொடுக்கணும்னு திருக்குறள், நான் எழுதுன "சேலஞ்ச்', பிளாங்க் காலண்டர், பிஸ்கட் டின், சின்னதா ஒரு குடைன்னு பார்த்துப் பார்த்து வாங்கினேன். நம்ம நண்பன் என்னடா இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்கான்னு உங்களுக்குள்ள கேள்வி இருக்கும். நக்கீரன் கோபால்ங்கிற இந்தப் பேருக்காக.. இந்த மீசைக்காக.. நான் எவ்வளவு வேலை பார்த்தேன்ங்கிறத சொல்லுறேன். நான் ஏன் மீசை வச்சேன்னா, 83-84ல தராசுல வேலை பார்க்கிறப்ப.. 10 பேரை வேலைக்கு கூட்டிட்டுப் போனேன். அவிய்ங்க எல்லாம் மீசை வச்சிருந் தாங்க. இவிய்ங்கள மேய்க்கிறதுக்கு பக்கத்துலயே இருக்கிற நீயும் மீசை வச்சுக்கோன்னு சொன் னாங்க. அப்படி வச்சதுதான் இந்த மீசை.

Advertisment

இங்க எல்லாரும் நக்கீரன் நக்கீரன்ங்கிறீங்க. நக்கீரன் ஆரம்பிக்கிறதுக்காக மெட்ராஸுக்குப் போகல... அரிசிக்கடைல இருந்துட்டு, பேங்க்ல ஒருத்தரு வேலை வாங்கித் தர்றேன்னு சொன்னதுனால மெட்ராஸுக்குப் போனேன். வேற வழியில்லாம "நக்கீரன்' ஆரம்பிக்க வேண்டியதாப் போச்சு, ஆரம்பிச்சேன். நக்கீரன் ஆரம்பிச்சு, நக்கீரனா வாழ கஷ்டப்பட்டுக் கிட்டிருக்கேன்... அம்புட்டுத்தான்.

இந்த நிமிஷம் வரைக்கும் நாம கத்துக்கிட்டே இருக்கோம். எங்க இருந்து பாடம் கத்துக்கிறோம்? பெரிய படிப்பு மட்டும் அறிவைக் கொடுக்காது. படிச்ச படிப்பு மூலமா கிடைச்ச அறிவு கொஞ்சம்தான். நம்மளோட வாழ்க்கைல நெறய அனுபவங்கள வச்சிருப்போம். அதுல இருந்து நெறய பாடம் கற்றிருப்போம். எங்க அரிசிக்கடை முதலாளி ஜெயபிரகாஷ் அண் ணன்ட்ட அரிசிக்கடைல வேலை பார்த்தேன். அப்ப 100 கிலோ அரிசிய தூக்குவோம். படுத்துத் தூங்குறது மில்லு குடோன்ல. எப்படி தூங்குவோம்னா.. குடோன்ல இருக்கிற சொருகு கதவுல ஆளுக்கொரு கதவுப் பலகைய எடுத்துக்கிட்டு அதுல படுத்துருவோம். அந்த கதவுப் பலகையோட அகலம் ரெண்டு அடிதான் இருக்கும். அதுமேல கைய கட்டிட்டு படுத்துரு வோம். 11-30... 12-00 மணிக்கு படுப்பேன். பனி கொட்டும். காலைல 4 மணிக்கு எந்திரிச்சு ஓடிருவேன். மொதல்ல காலைல 10 மணிக்கு அரிசிக் கடைய திறந்து சாயங்காலம் 6 மணிக்கெல்லாம் பூட்டிக்கிட்டிருந்தோம்.

ee

அது நெசவாளர் தெரு. அவங்க காலைல 6 மணிக்கு கடைல அரிசி வாங்கி 8 மணிக்குள்ள உலை வைக்கிறவங்க. அவங்க அரிசி வாங்க வந்தா நம்ம கடை பூட்டிருக்கும். சாயங்காலம் வேலை முடிஞ்சு 6 மணிக்கு மேல அவங்க வர்றப்பவும் அரிசிக்கடை பூட்டிருக்கும். எங்க ஓனர்கிட்ட சொன்னேன். என்னண்ணே.. மக்கள் கடைக்கு வர்றப்ப எல்லாம் பூட்டிருந்தா எப்படி வியாபாரம் நடக்கும்னு சொன்னேன். அப்படின்னா.. நீயே கடைய திறடான்னாரு. எனக்கும் எங்கப்பாகிட்ட இருந்து அடிக்கு தப்பிச்ச மாதிரியாச்சு. அரிசிக் கடைல இருந்து என்ன கத்துக்கிட்டேன்னா.. பொருளை முன்னாடியே கொடுக்கணும். கடைசி நேரம் வரைக்கும் கடைய திறந்துவச்சு வியாபாரம் பார்க்கணும். நக்கீரன் ஆரம்பிச்சதுல இருந்து இப்பவரைக்கும் எந்த ஒரு செய்தியையும் நாங்கதான் முன்னாடி கொடுப் போம். அதேமாதிரி.. கடைசி நேர செய்தி வரைக்கும் கவர் பண்ணுவோம். இத கத்துக்கிட்டது அரிசிக்கடைலதான். இப்படி ஒவ்வொரு அனுபவம். எல்லாமே வாழ்க்கைக்கு படிப்பினையாச்சு. நெறைய விலை குடுத்துட்டோம்''னு தனது அனுபவங்களைத் திரை மொழியுடன் விவரித்தவர்...

"என் பழைய பள்ளித் தோழர்களை 50 வருடம் கழித்து சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. இவர்களைத் தேடித் தேடி ஒன்றுகூட்டிய நண்பர்களுக்கு நன்றி. பழைய வாழ்க்கை இப்போது கிடைக்காதான்னு ஏங்குறோம். எத்தனையோ விருதுகள் வரும்... ஆனால், இந்த விருது, இந்த நாள் இனி என்றும் மறவாது. இந்த தொடர்பு ஜென்மத்துக்கும் நீடிக்க வேண்டும் என்பது என் ஆசை'' என்று முத்தாய்ப்பாய் முடித்தார்.

ex

இடையில் சின்ன பிரேக். "நண்பன் கப்பல்காரன் சௌந்தர், உங்களுக்காக பாடுவான்'னு மைக்கை தன் பள்ளித்தோழன் சௌந்தரிடம் நக்கீரன்கோபால் கொடுக்க...

சௌந்தர், "உன்னை அறிந்தால்... நீ உன்னை யறிந்தால்....' என்ற திரைப் பாடலை பின்னணி இசையோடு பாடினார்.

அடுத்தடுத்து, அத்தனை நண்பர்களும் மனம்திறந்து பேசப் பேச... இந்த நாள் திரும் பவும் வராதா?’ என்ற ஏக்கத் துடன் அச்சந்திப்பு நிறைவுற்றது.