"மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு எங்களை குற்றவாளிகள் போல் விசாரணை நடத்தினால் நாங்கள் என்ன செய்வது?' என கலங்குகிறார்கள் அரசு மகப்பேறு மருத்துவர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய, சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மகப்பேறு மருத்துவர், "பேறுகால மரணம் நடக்கக்கூடாது என்றுதான் ஒவ்வொரு மருத்துவரும் வேலை செய்கிறோம். அதே நேரத்தில் தவிர்க்க முடியாத, சிக்கல்களால் ஒரு சில கர்ப்பிணிகள் இறந்துவிடுகின்றனர்.
சமீபத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் பிரசவம் முடிந்த பின் உயிரிழந்தார். இதற்கு மகப்பேறு மருத்துவர்களை குற்றம்சாட்டி விசாரணை நடக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/doctors_10.jpg)
பிரசவத்துக்காக மருத்துவமனையில் இருக்கும் போது, பொதுவாக கர்ப்பிணி உயிரிழக்கும்போது, மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக் கல்லூரி டீன், சென்னை மாநகராட்சி அளவில், மாவட்ட ஆட்சியர் அளவில் மற்றும் தேசிய மருத்துவ இயக்கம் என ஐந்து மட்டங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. மாநகர கமிஷனர், கலெக்டர் தலைமையிலான ஆய்வுகளின்போது, மாவட்டத் திலுள்ள அனைத்து மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மரணமடைந்த பெண்ணின் கணவர் அல்லது நெருங்கிய உறவினரை வைத்துக்கொண்டு மருத்துவரிடம், குற்றவாளி யைப்போல் கேள்வி கேட்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் கடைசி நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் கர்ப்பிணிக்கும் அட்மிஷன் போட்டு காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தால், அரசு மருத்துவமனையை, மருத்துவரை குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஒருவருடத்திற்கு கிட்டத்தட்ட 9.2 லட்சம் பிரசவங்கள் நடக்கிறது. இதில் 70 சதவித பிரசவங்கள் அரசு மருத்துவ மனைகளில் நடக்கின்றன. அவற்றில் சுமார் 50 சதவீதம் சிசேரியன். இதைத்தவிர புறநோயாளிகள், உள்நோயாளிகள், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை, பெண்களுக்கான மற்ற அறுவைச் சிகிச்சை பணிகள் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 2,000க்கும் மேல் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1000 மகப்பேறு மருத்து வர்கள் மட்டுமே உள்ள னர். குறிப்பாக "சீமாங்' என்கிற ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் மையங் களில் மகப்பேறு மருத்துவர்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை 24 மணிநேரப் பணி செய்துவருகின்றனர்.
இந்தியாவில் பிர சவத்தின்போது ஒரு லட்சத்துக்கு 97 கர்ப்பிணிகள் இறக்கின்றனர். இதனை 2030க்குள் 70ஆகக் குறைக்க வேண்டும் எனக் குறிக்கோள் வைத்துள்ளது இந்திய அரசு. தமிழ்நாட்டில் 54 மரணங்கள்தான் நடைபெறுகிறது.
பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பு என்பது தேசிய அளவில் 1000 குழந்தை களுக்கு 26 குழந்தைகள் என உள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் அதை 21ஆகக் குறைக்கவேண்டும் என்கிறது. தமிழ்நாட்டில் பிரசவத் தின்போது ஆயிரம் குழந்தை களுக்கு 18 குழந்தைகள் இறக்கின் றன. அதாவது 2030ஆம் ஆண்டுக் கான இலக்கை இப்போதே எட்டி சாதனை படைத்துள் ளோம். சுகாதாரக் குறியீடுகள் MMR (கர்ப்பிணி தாய்மார்கள் இறப்பு விகிதம்) மற்றும் IMR-ஐ (ஒரு வயதுக்குட்பட்ட குழந் தைகளின் இறப்பு விகிதம்) வெகுவாகக் குறைத்து தமிழகம் முன்னணி மாநிலமாக, இந்திய அளவில் பாராட்டு களை பெற்றுத் தருகிறோம். இதற்கு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரையிலான அரசு மருத்துவர்களே காரணம்.
ஆனால் மாதந்தோறும் MMR மற்றும் IMR குறித்து மாவட்ட ஆட்சியர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில்கூட எங்களை பாராட்டியதில்லை. எங்களை ஊக்குவிப்பதற்கு பதில் வேதனைப்பட வைக்கின்றனர். எங்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, மகப்பேறு மருத்துவர்கள் அரசுப் பணியிலிருந்து ராஜினாமா செய்கிறார்கள். இந்நிலையை மாற்றவேண்டும் என்றால் 5 கட்ட ஆய்வு முறையை தவிர்க்கவேண்டும். இந்த விசாரணைகளை முடிக்கவே முழுதாக இரண்டு மாதம் ஓடிவிடுகிறது, நிர்வாகம் மட்டும் தெரிந்தவர்களின் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தும்போது நாங்கள் மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டாலும், புரிந்துகொள் ளாமல் எங்கள்மேல் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் எம்.எம்.ஆர் குறியீட்டில் இந்தியாவில் முதல் மாநிலமாகவுள்ள கேரளாவில், ஒரு கர்ப்பிணி இறந்தால் தேசிய மருத்துவ குழுமம் மட்டத்தில் ஓர் ஆய்வு மற்றும் மருத்துவமனை அளவில் குழு அமைத்து ஆய்வு செய்கிறார்கள். அதேபோல் நம் மாநிலத்தில் மாற்றவேண்டும்.
ஒரு காலத்தில் பெண் மருத்துவர்கள் எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு மேற்படிப்புக்கு மகப்பேறு துறையை எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. ஆனால் இப்போது எம்.டி, ஆர்.டி, குழந்தைகள் நலத்துறை, பொது மருத்துவம், பொது அறுவை, கண் மருத்துவ துறைகளை தேர்வு செய்வதே அதிகமாக உள்ளது. மகப்பேறு துறையில் பரவலாக காலியிடங்கள் இருந்து கொண்டே இருப்பதால் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. இது தொடர்ந்தால்... வருங்காலத்துக்கு ஆபத்து.
"கல்வியும், மருத்துவமும் இந்த அரசின் இரு கண்கள்' எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கு எங்கள் நிலையை கொண்டு செல்ல விரும்புகிறோம். மகப்பேறு மருத்துவர்கள் மீது அரசு கருணை காட்டவேண்டும்'' என்கிறார்.
நியாயமான கருத்துகளுக்கு அரசு செவி கொடுக்குமா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/doctors-t.jpg)