அ.தி.மு.க.வில் அமுங் கிக்கிடந்த இரட்டை இலை பஞ்சாயத்து மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. இடைத்தேர்தலை மையப் படுத்தி மீண்டும் சின்னம் முடக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறை யிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அ.தி.மு.க.விலிருந்து எடப் பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., கட்சி தலைமையை கைப் பற்றுவதில் போராடிப் போராடி ஓய்ந்து போனார். சட்டரீதியாக எந்த பலனும் அவருக்கு கிடைக்காத நிலையில் அவரை சோர்வுகள்தான் ஆக்ரமித் திருந்தன. இதனால் அவரை நம்பியிருக்கும் ஆதரவாளர்களும் அவரை விட்டு விலகும் முடிவில் இருக்கின்றனர். இதனையறிந்து அவர்களை சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தேர்தல் காலங்களில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினை கள் வெடிப்பது வழக்கமாக இருந்துவருகிறது. அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலை மையப்படுத்தி மீண்டும் அ.தி.மு.க.வில் சின்னம் விவகாரம் வெடிக்கத் தொடங்கி யிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி எடப்பாடிக்கு எதிராக
அ.தி.மு.க.வில் அமுங் கிக்கிடந்த இரட்டை இலை பஞ்சாயத்து மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. இடைத்தேர்தலை மையப் படுத்தி மீண்டும் சின்னம் முடக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறை யிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அ.தி.மு.க.விலிருந்து எடப் பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., கட்சி தலைமையை கைப் பற்றுவதில் போராடிப் போராடி ஓய்ந்து போனார். சட்டரீதியாக எந்த பலனும் அவருக்கு கிடைக்காத நிலையில் அவரை சோர்வுகள்தான் ஆக்ரமித் திருந்தன. இதனால் அவரை நம்பியிருக்கும் ஆதரவாளர்களும் அவரை விட்டு விலகும் முடிவில் இருக்கின்றனர். இதனையறிந்து அவர்களை சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தேர்தல் காலங்களில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினை கள் வெடிப்பது வழக்கமாக இருந்துவருகிறது. அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலை மையப்படுத்தி மீண்டும் அ.தி.மு.க.வில் சின்னம் விவகாரம் வெடிக்கத் தொடங்கி யிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி எடப்பாடிக்கு எதிராக தனது அரசியல் சாட்டையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
அதாவது, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப் பாடிக்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கில், ”இரட்டை இலை சின்னம் தொடர்பாக பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு 4 வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கவேண்டும்” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத் திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
இதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், சூரியமூர்த்தி, புகழேந்தி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஒரு மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "அ.தி. மு.க. பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே போட்டி யிடும் வகையில் சட்டத்திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. ஜூலை 11, 2022 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும் சிவில் வழக்குகள் தொடரலாம் எனவும் அனுமதித்துள்ளது. சிவில் வழக்குகள் நிலுவை யில் இருக்கின்றன. இந்த வழக்குகளில் முடிவு தெரியும் வரையில் பொதுக்குழுவின் திருத்த விதிகளை அங்கீகரிக்கக் கூடாது' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக் கான இடைத்தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசிப்பதாக அரசியல் கட்சிகளிடம் தகவல்கள் பரவியுள்ளன. இந்த சூழலில், இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற அச்சத்தில் தேர்தல் ஆணையத்தை அவசர அவசரமாக அணுகியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்த மனுவில், "அ.தி.மு.க.வுக்கும், ராம்குமார் ஆதித்த னுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அ.தி.மு.க. கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் பொதுக்குழுவில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. அதனால் இவர்கள் தாக்கல் செய்த மனுக்களை நிராகரிக்க வேண்டும்'’என்று கோரியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போதுள்ள சூழலில் தேர்தல் ஆணையத்தை நாம் அணுகுவதற்கு முகாந்திரம் இருக்கிறதா? என்று விவாதித்தி ருக்கிறார் ஓ.பி.எஸ். இதற்கு அவரது வழக்கறி ஞர்கள், தேர்தல் ஆணை யத்திடம் முறையிட இப்போதும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று விவரித்ததன் அடிப்படை யில் எடப்பாடியை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் புத்தாண்டு தினத்தில் (1-ந் தேதி) அவசரமாக ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
அந்த மனுவில், "அ.தி.மு.க.வின் ஒருங் கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தேர்ந்தெடுத்தது கட்சியின் அடிப்படை விதிகளின்படி சட் டப்பூர்வமானது. முதன்மை உறுப்பினர்களால் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைமை, அடுத்த 5 ஆண்டுகள்வரை செயல் பாட்டில் இருக்கும். அதனை, பொதுக்குழுவின் சிறப்பு தீர்மானம் மூலமாக கலைத்துவிடவோ, முடக்கிவிடவோ முடியாது. முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை முன்கூட்டி நீக்கம் செய்ய கட்சியின் அடிப்படை சட்டவிதிகளில் எந்த வழிவகையும் இல்லை. தேர்தல் ஆணையத்தி லுள்ள ஆவணங்களின்படி, கட்சியின் ஒருங் கிணைப்பாளர் என்ற வகையில் இரட்டை இலை சின்னத்தின் உரிமை எனக்கானது. தற் போதுள்ள கட்சி நிர்வாகம் சட்டவிரோத மானது. சட்டவிரோதமாக செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த அதிகாரம் கிடையாது. அதனால் அ.தி.மு.க. கட்சி மற்றும் சின்னத்தை பயன் படுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்கவேண்டும். சின்னத்தை எங்களிடம் ஒப்படைப்பதுடன் எங்கள் தரப்பையே அ.தி.மு.க. என அங்கீகரிக்க வேண்டும். சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி வசமுள்ள கட்சி தொடர்பான அதிகாரங்களை தேர்தல் ஆணையம் திரும்பப் பெறவேண்டும்' என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். கூறியுள்ள தகவல்கள் எடப்பாடி தரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அமைதியாக இருந்த ஓ.பி.எஸ்.ஸை, பா.ஜ.க. தலைமைதான் தூண்டிவிடுகிறது என்று கட்சி நிர்வாகிகளிடம் கமெண்ட் பாஸ் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இரட்டை இலையை வைத்து ஓ.பி.எஸ். மூலம் பொம்மலாட்டத்தை பா.ஜ.க. தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.