Advertisment

அம்புட்டும் நடிப்பா ஆஷா? -விருதுநகர் பெண் கவுன்சிலரின் தற்கொலை முயற்சி!

cc

விருதுநகர் 5-வது வார்டு (தி.மு.க.) நகர்மன்ற உறுப்பினர் ஆஷா, தற்கொலைக்கு ஏன் முயன்றார்?

Advertisment

வீட்டுக்கே வந்து தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டினார்கள் என ஆஷா பதிவு செய்துள்ள அந்த ஆடியோவில், "வணக்கம். 5-வது வார்டு பொதுமக்களுக்கு.. நான் ஆஷா பேசுறேன். அக்கா.. அண்ணே.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தாலோ, யாருக் காவது ஏதாவது செய்யாமல் இருந்தாலோ, டைரக்டா நீங்க என்கிட்ட கேளுங்க. ரொம்பப் பேரு நான் கஷ்டப்படற அளவுக்கு நடந்துக்கிறாங்க. என்னை அசிங்கப்படுத்துறாங்க. ரொம்ப மனஉளைச்சல்

விருதுநகர் 5-வது வார்டு (தி.மு.க.) நகர்மன்ற உறுப்பினர் ஆஷா, தற்கொலைக்கு ஏன் முயன்றார்?

Advertisment

வீட்டுக்கே வந்து தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டினார்கள் என ஆஷா பதிவு செய்துள்ள அந்த ஆடியோவில், "வணக்கம். 5-வது வார்டு பொதுமக்களுக்கு.. நான் ஆஷா பேசுறேன். அக்கா.. அண்ணே.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தாலோ, யாருக் காவது ஏதாவது செய்யாமல் இருந்தாலோ, டைரக்டா நீங்க என்கிட்ட கேளுங்க. ரொம்பப் பேரு நான் கஷ்டப்படற அளவுக்கு நடந்துக்கிறாங்க. என்னை அசிங்கப்படுத்துறாங்க. ரொம்ப மனஉளைச்சல்ல இருக்கேன். என்னால முடியல. என்கிட்ட வேணும்னே சண்டை இழுக்கிறாங்க. என்னைக் கோபப்படுத்தி சண்டை போடற அளவுக்கு நடந்துக்கிறாங்க. நான் யார் கிட்டயும் தேவையில்லாம எந்தப் பிரச்சனைக்கும் போகல; வரல. என்னை எந்தப் பிரச் சனைக்கும் யாரும் இழுக்காம இருந்தா சரி. எல்லா வீட்லயும் ஏறி, இறங்கித்தான் ஓட்டு கேட்டேன். என்னை ஜெயிக்க வச்சீங்க. இப்ப, நான் என்ன செய்யிறதுன்னு தெரியாத நிலைல இருக்கேன். தாங்க முடியாத அளவுக்கு வேதனையா இருக்கு. நான் தப்பா பேசிருந்தா, என்னை மன்னிச்சிருங்க...''’என உடைந்த குரலில் பேசியிருக்கிறார்.

Advertisment

cc

பொது இடத்தில் வைத்து ஆபாச மாகப் பேசியதாக மேனகா, மாரீஸ்வரி, கலைச்செல்வி ஆகியோர் மீது ஆஷா அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு காவல்நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆளும்கட்சி கவுன்சிலரைப் புலம்பவைத்த பின்னணி இது -

கவுன்சிலர் ஆஷாவின் அம்மா, பொதுமக்களிடம் சீட்டு பிடித்து வந்திருக்கிறார். அவரிடம் சீட்டுக்குப் பணம் செலுத்திய சிலருக்கு பணம் திரும்பக்கிடைக்காத நிலையில், அவர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு திட்டியிருக்கின்றனர். ஏ-1 மேனகாவின் கணவர் கருணாநிதி, தி.மு.க.வைச் சேர்ந்தவர். பணத்துக்கு முன்னால் கட்சியெல்லாம் எந்த மூலைக்கு? அதனால்தான், காவல்நிலையம் வரை விவகாரம் போய்விட்டது. புகாருக்கு ஆளானவர்களின் குடும்ப வட்டாரத்தில், "ஆஷா விஷமருந்தவில்லை. அவர் குடித்தது போல் ‘பாவ்லா’ பண்ணியது, தரையைக் க்ளீன் செய்யும் லைசால். அதனால், உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை. தற்கொலை முயற்சி என்பதே நடிப்புதான். எனவே, விருதுநகர் மேற்கு காவல் நிலையம், ஆஷாவின் தற்கொலை முயற்சியை வழக்கில் காட்டவில்லை. மூன்றுபேர் ஆபாசமாகத் திட்டினார்கள் என்று மட்டும் வழக்கைப் பதிவு செய்துள்ளது''’என்கின்றனர்.

தற்கொலை முயற்சியும் நடிப்பு’என்ற குற்றச்சாட்டுக்கான விளக்கத்தைப் பெற, கவுன்சிலர் ஆஷாவையும் (96XXXXXX85) அவருடைய கணவர் மூர்த்தியையும் (75XXXXXX70) கைபேசியில் தொடர்புகொண்டபோது, இருவரது கைபேசிகளும் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் நிலையிலேயே இருந்தன. குறுந்தகவல் அனுப்பினோம், பதிலில்லை. கவுன்சிலர் ஆஷா, தனது விளக்கத்தைப் பகிர முன்வந் தால், வெளியிடத் தயாராகவுள்ளோம். கொடுக்கல், வாங்கலிலும் ‘பாலிடிக்ஸ்’ புகுந்து விளையாடுகிறதே!

nkn110522
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe