வழக்கமான திங்கட் கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்ட தினத்தின் போது தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மக்கள் தங்களின் மனுக்களை கொடுத்துக்கொண்டி ருந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தின் முன்னே வழக்கத்திற்கு மாறாக ஒரே கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந் தனர். இவர்களில் குறிப்பிட்ட சிலர் ஆட்சியரைச் சந்தித்து தங்களது பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் மின்னுற்பத்தி நிலையம் அமைப் பதற்காக விளைநிலங்களிலுள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை அழித்து விவசாயத்தை நாசப்படுத்தி வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென மனுவும் கொடுத் துக்கொண்டிருந்தனர்
அலுவலகம் முன்னே திரண்டிருந்த விவசாயிகள் தரையிலமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், திடீரென்று சிலர் தங்கள் கையிலிருந்த பாட்டில்களில் இருந்த மண்ணெண்ணெயை தங்கள் தலையில் ஊற்றிக்கொண்டு அருகிலிருந்த சிலர்மீதும் ஊற்றினர். இதில் 7-க்கும் மேற்பட்டோர்களின் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. இதைக்கண்டு பரபரப்பான போலீசார் சுதாரித்து அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றினர். ஒருசிலர் தீவைக்க முயன்றபோது கடும் முயற்சிக்குப் பின் அவர்களை போலீசார் தடுத்தனர்.
"நாங்கள் சாவதற்கு தயாராகத்தான் வந்திருக்கிறோம். எங்களின் பூர்வீக கல்லத்திகுளம் கிராம விவசாய பூமி நாசமாக்கப்பட்டு சுடுகாடாக்கப்பட்டுவிட்டது. வாழ்வதற்குத் தகுதியற்ற எங்கள் கிராமத்தில் நாங்கள் இருந்தென்ன, போயென்ன?…அதற்காகத்தான் இந்த முடிவுக்கு வந்தோம்' என்று ஓங்கி குரலெழுப்பியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத் தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்ளிட்ட 108 விவசாயிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/solar1-2025-10-23-17-14-52.jpg)
ஆட்சியர் அலுவலகத்தின் முன்னே 7-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யமுயன்றது மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கல்லத்திகுளம் கிராமம். சுமார் 300 வீடுகளைக் கொண்ட அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். பரம்பரையாக குடியிருந்துவருகின்றனர். அவர்களின் அடிப்படை தொழிலே விவசாயம் சார்ந்ததுதான்.
அங்குள்ள வேளாண் மக்களுடன் நாம் பேசியதில், காலங்காலமாக பட்டம் தவறாத மழைச்சூழலையும் பசுமையான ஏரியாவையும் கொண்டது கல்லத்திகுளம் கிராமம். அங்குள்ள தங்கள் நிலங் களில் பருத்தி, நெல் பயிரிட்டு வந்திருக்கிறார்கள். அதையடுத்துள்ள வனத்துறையின் காப்புக் காட்டையொட்டி 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட பணப்பயிர்களை பயிரிட்டு வந்திருக் கின்றனர்.
40 வருடங்களுக்கு முன்பு இந்த விவசாயிகள் ஆடுமாடுகள் கால்நடைகளை வளர்ப்பதற்காக அருகிலுள்ள சிவலார்குளம் கூட்டுறவு வங்கியில் தங்களின் நிலங்களை அடமானம் வைத்து கடன் வாங்கியிருக்கிறார்கள். காலப்போக்கில் நோயா லும், தொடர்மழை காரண மாகவும் ஆடு, மாடு, கால்நடைகள் மடிந்திருக் கின்றன. இதனால் அவர்களால் வங்கி யில் வாங்கிய தங்களின் கடன்களை அடைக்கமுடியாமல் போயிருக்கிறது. இதுகுறித்த விவரங்களோ நோட்டீஸோ விவசாயிகளுக்கு அனுப்பாமலிருந்திருக்கிறது வங்கி. கடன் சுமையோடு வட்டியும் சேர ஒரு காலகட்டத்திற்குப் பின்பு ஜப்தி நோட்டீஸ் கொடுத்த வங்கி தங்களிடம் அடமானமாக வைக்கப்பட்ட அத்தனை ஏக்கர் நிலத்தையும் ஜப்திசெய்து ஏலம்விட்டபோது, அந்த 200 ஏக்கர் நிலங்களை சென்னையை சேர்ந்த ரமணி வாங்கியிருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/solar2-2025-10-23-17-15-03.jpg)
இந்தச் சூழலில் நில புரோக்கர்களின் மூலம் அருகிலிருக்கிற திருச்சி பார்ட்டி ஒருவருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தையும் சென்னை பார்ட்டி வாங்கியதோடு மொத்தமாக விவசாயம் செய்திருக் கிறார். இப்படி வாங்கப்பட்ட 350 ஏக்கர் வனத்துறையின் ரிசர்வ் ஃபாரஸ்ட்டை யொட்டி அமைந்திருக்கிறது. இதனிடையே கல்லத்திகுளத்தை தாண்டிய சில தரிசு காட்டுப் பகுதிகளில் சோலார் மின்பேனல் அமைக்கும் திட்டம் ஏற்பாடாகியிருக்கிறது. இந்தச் சூழலில் சென்னை பார்ட்டி தன்னிடமுள்ள 350 ஏக்கர் நிலம் நிலத்தையும் நில புரோக்கர்கள் மூலம் வாங்கிய விலையிலிருந்து 5 மடங்கு கூடுதல் விலைக்கு கோவையைச் சேர்ந்த வி.சி. கிரீன் எனர்ஜி பி.லிமிடட் கம்பெனிக்கு கடந்த ஜூன் மாதம் விற்றிருக்கிறார்.
வாங்கிய அந்த கம்பெனி மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி சமன்செய்து சோலார் மின்பேனல்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இதையறிந்த கல்லத்திகுளம் விவசாயிகள், அவர்கள் மரத்தை வெட்டும்போதே ஆலங்குளம் காவல்நிலையத் திற்கும், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு கொடுத்ததோடு. அங்கே சோலார் மின்பேனல் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் இந்த மனுவின்மீது காவல்துறை, ஆட்சியர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சோலார் மின்பேனல் அமைப்பதற்கு கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர்கள் அடியாட்கள் மூலம் மிரட்டப்பட்டார்களாம். விளை நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதில் தங்களின் விவசாய வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது. அதனால் தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டை அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டு மென்று பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்ததில் இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
சோலார் மின் பேனலுக்காக அழிக்கப்பட்ட அந்த விவசாய நிலங்கள் வனத்துறையின் ரிசர்வ் ஃபாரஸ்டை யொட்டி வருவதால், அந்த ஏரியா சிறப்பு பகுதியான ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிக்கு இணையான ஹில் ஏரியா கன்சர்வேட்டிவ் சட்டத்தில் வருவதால் அதன்படி மரங்கள் வெட்டத் தடையிருக்கிறது. மேலும் சிறப்பு ஏரியாவிற்குரிய ப்ரிசர்வேஷன் ஆக்ட் பிரிவு 3-ன் படி மரங்களை வெட்டக் கூடாது. ஆனால் அரசு அதிகாரிகள், வனத்துறையினர் இந்த விதியைப் பின்பற்றவில்லை. மின்திட்டத்திற்காக 350 ஏக்கர் விவசாய பூமியே அழிக்கப்பட்டுவிட்டதால், முன்பு காப்புக்காடுகளில் தங்கியிருந்த வனமிருகங்கள் ஊருக்குள் புகுந்துவிடுவது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
கல்லத்திகுளத்திற்குச் சற்று தொலைவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் இருப்பதால் அங்கே சோலார் மின்திட்டம் அமைக்கலாமே, நாங்கள் சோலார் மின்பேனல் அமைக்கவேண்டாமென்று எதிர்க்கவில்லை. ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து மின்திட்டம் அமைக்கவேண்டுமா என்பதுதான் எங்களின் கேள்வி. வேறு வழியில்லாமல் நாங்கள் இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம்வரை கொண்டுபோனதில், அதனை விசாரித்த உயர்நீதிமன்றமும் கல்லத்திகுளம் திட்டத்திற்கு அக்டோபர் 24 வரை தடையுத்தரவு வழங்கியிருக்கிறது என்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/solar3-2025-10-23-17-15-14.jpg)
இதுகுறித்து விவசாயியான பெருமாள், “"மரங்கள் வளர்த்து மழை பெற பசுமைச் சூழலை உருவாக்குங்கள் என்று அரசு சொல்லுகிறது. ஆனால் இங்கோ பசுமையை அழித்து கந்தக பூமியாக்குகிறார்கள். சோலார் மின்பேனல்களில் படியும் அசுத்தங்கள், மணல் திட்டுக்களை 10 மாதங்களுக்கு ஒருமுறை சுத்த நீர் கொண்டு முழுமையாக சுத்தப்படுத்தினால்தான் அவைகளின் மூலம் மீண்டும் மின்சாரம் தயார்செய்ய முடியும். அதற்காக அத்தனை சோலார் மின்பேனல்களுக்கும் 15 லட்சம் லிட்டர் சுத்தமான தண்ணீர் தேவை. அந்த ஏரியாவின் நிலத்தடி நீரை உறிஞ்சித்தான் ஆகவேண்டும். இதனால் மிச்சமிருக்கிற விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீரும் வற்றிப் போய்விடும். நாங்கள் எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டோம். பறிபோன எங்களின் விவசாய வாழ்வாதாரத்தை மீட்கமுடியவில்லை. எங்களின் ஆதார், ரேசன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்துவிடுகிறோம். எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள் அல்லது நாடு கடத்திவிடுங்கள்''’ என்றார் வேதனையோடு.
300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்புக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள் என்று நம்மிடம் தெரிவித்த கிராமத்தின் கண்ணன், "சோலார் மின் தயாரிப்பு அமைக்கப்பட்ட இடத்தையொட்டித்தான் எங்கள் கிராம மக்களின் குடியிருப்பு இருக்கிறது. அப்படி ஒட்டுமொத்தமாக சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது சோலார் பேனல்கள் வெளியேற்றுகிற மொத்த வெப்ப அலையும் எங்களின் குடியிருப்பைத்தான் தாக்கும். அந்த அனலின் வெப்பத்தில் நாங்கள் எப்படி குடியிருக்க முடியும். கல்லத்திகுளம், மக்கள் வாழத்தகுதியற்ற வெப்ப பூமியாகிவிடும். அதனால்தான் நாங்கள் இத்திட்டத்தை தரிசுக் காடுகளில் அமையுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம்''’என்றார் அழுத்தமான குரலில்.
கல்லத்திகுளம் மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் அரசு மேற்கொள்ளும் முடிவில்தான் இருக்கிறது..
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/23/solar-2025-10-23-17-14-41.jpg)