dd

மிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளம்பிவிட்டார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்.

22-ந் தேதி திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் தேர்தல் சுற்றுப்பயணத்தின் முதல் நாளைத் துவக்கும் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். அதற்கேற்ப ஒரு நாளைக்கு 2 தொகுதிகள் என 20 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவரது சூறாவளி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

stalin-EPS

Advertisment

31-ந்தேதி மட்டும் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 தொகுதிகளை கவர் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாண்டிச்சேரிக்கு மட்டும் 1 நாள் (ஏப்ரல் 4-ந் தேதி) முழுவதும் ஒதுக்கியிருக்கிறார்.

தேர்தல் களத்தில் முதல் கட்சியாக டாப் கியரில் தி.மு.க. வேகமெடுத்துள்ள நிலையில், அக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் எப்படி இருக் கிறது என அரசியல் விமர்சகர்களால் அலசப்பட்டு வருகிறது. அதேபோல, அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தி.மு.க. பட்டியலை அலசிக்கொண்டிருக்கின்றன.

தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் சிட்டிங் எம்.பி.க்களான பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி, தஞ்சை பழனிமாணிக்கம், தர்மபுரி செந்தில்குமார், சேலம் பார்த்திபன், தென்காசி தனுஷ்குமார், பொள்ளாட்சி சண்முக சுந்தரம் ஆகிய 6 பேருக்கு மீண்டும் வாய்ப்புத் தராமல் கல்தா கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

Advertisment

அந்த 6 தொகுதிகளில் முறையே கள்ளக் குறிச்சிக்கு மலையரசன், தஞ்சைக்கு முரசொலி, தர்மபுரிக்கு வழக்கறிஞர் மணி, சேலத்துக்கு டி.எம். செல்வகணபதி, தென்காசிக்கு ராணிஸ்ரீகுமார், பொள்ளாச்சிக்கு ஈஸ்வரசாமி உட்பட 11 புது முகங்களுக்கு இந்த முறை வாய்ப்பளித்திருக்கிறது தி.மு.க. இந்த பட்டியலில் முதுநிலை பட்டதாரிகள், இளநிலை பட்டதாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் ஆகியோர் அடங்குவர்.

சிட்டிங் எம்.பி.க்களில் வி.வி.ஐ.பி. வேட் பாளராக கருதப்படும் அரக்கோணம் ஜெகத்ரட்ச கன், ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு, தூத்துக்குடி கனிமொழி, நீலகிரி ஆ.ராசா, மத்தியசென்னை தயாநிதிமாறன், தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன், வேலூர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

dd

இதுதவிர, மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட் டுள்ளது. தந்தையோடு இணைந்து கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் அருண். நேரு அமைச்ச ரான பிறகு அவர் கவனித்துவந்த அனைத்து தொழில்களையும் அருண்தான் கவனித்துவருகிறார். அரசு சார்ந்த ஒப்பந்த பணிகளையும் இவரது மேற்பார்வையின்படியே நடந்துவருகிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கட்டிட மேலாண்மை படிப்பை முடித்துள்ள அருண்நேருவுக்கு, உ.பி.க்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது.

நேருவின் மகன் அருண், துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், ஆற்காடு வீராச்சாமி மகன் கலாநிதி வீராச்சாமி, மாறனின் மகன் தயாநிதி ஆகிய வாரிசுகளுக்கு சீட் வழங்கப்படும் நிலையில், தனது மகன் கௌதம சிகாமணிக்கும் மீண்டும் வாய்ப்புத் தரவேண்டும் என ஸ்டாலினிடம் கேட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஆனால், இவரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் ஸ்டாலின்.

இதுகுறித்து அறிவாலயத் தரப்பில் நாம் விசாரித்தபோது, "கௌதம சிகாமணிக்கு எதிராக நடந்துவரும் ஊழல் வழக்கைச் சுட்டிக்காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர் வெற்றிபெறும் சூழ லில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும் பட்சத்தில் ஊழல் வழக்கு வேகமெடுத்து தண்டிக்கப்பட்டால், அப்போது அவர் எம்.பி. பதவி பறி போகும். அது தி.மு. க.வின் இமேஜுக்கு சரிவை ஏற்படுத்தும். அதனாலேயே சிகாமணிக்கு சீட் ஒதுக்க மறுத்துவிட்டார் தலைவர் ஸ்டாலின்.

சிகாமணிக்கு கிடைக்காது என தெரிந்ததால், கள்ளக்குறிச்சியை கைப்பற்ற சேலம் கிழக்கு மா.செ. சிவலிங்கம் காய்களை நகர்த்தியிருந்தார். நேர் காணல் முடிந்த நிலையில் சிவலிங்கத்துக்குத் தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சிவலிங்கத்தின் பெயர் கடைசி நேரத்தில் கழட்டி விடப்பட்டு சிகாமணிக்கு பதிலாக மலையரசனுக்கு வாய்ப்புத் தந்துள்ளார் ஸ்டாலின்.

மலையரசன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு நெருங்கிய உறவினர். உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் செலவுகளை முழுமையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என, தனது பணத்தை மலையரசனிடம் கொடுத்து வைத்தார் வசந்தம் கார்த்திகேயன். இவரின் நம்பிக்கைக் கேற்ப தேர்தல் செலவுகளை கவனித்துக் கொண்ட தால், மலையரசனுக்காக அமைச்சர் எ.வ.வேலு விடம் சிபாரிசு செய்தார் கார்த்திகேயன். முதல்வர் ஸ்டாலினிடம் எ.வ.வேலு அழுத்தமாக வலியுறுத்த, மலையரசனுக்கு சீட் கிடைத்துள்ளது.

அதேபோல, தர்மபுரி செந்தில்குமாரின் நடவடிக்கைகள் தேவையற்ற காண்ட்ரவர்சிகளை உருவாக்கியதால் அவர் மீது கோபமாக இருந் தார் ஸ்டாலின். பல முறை எச்சரிக்கப்பட்டும் அவர் திருந்தாததை ஸ்டாலின் ரசிக்கவில்லை. அவரது வாய்த்துடுக்கினால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. பொள்ளாச்சி சண்முகசுந்தரத் தின் மீதும் தலைவர் அதிருப்தியில்தான் இருந்தார். அவரது செயல்பாடுகள் எதுவும் தலைமைக்கு திருப்தி தராததால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு, அமைச்சர் சக்கரபாணியின் சிபாரிசில் ஈஸ்வரசாமிக்கு வாய்ப்புக் கிடைத் துள்ளது. கோவையில் களமிறக்கப்பட்டிருக்கும் கணபதி ராஜ்குமார், சிறையிலிருக்கும் செந்தில் பாலாஜியின் சிபாரிசை ஏற்று ஓ.கே. செய்திருக் கிறார் ஸ்டாலின். இதே கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வில் இருந்தபோது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

dd

இப்படி சிட்டிங் எம்.பி.க்கள் 11 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதுமுகங்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டதில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பின்னணி உண்டு ‘’ என்று சுட்டிக்காட்டினார்கள்.

தி.மு.க. போட்டியிடும் 21 சீட்டில் 10 சீட்டுகள் இளைஞரணிக்காக உதயநிதி வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரே ஒரு தொகுதி (ஈரோடு) மட்டுமே உதயநிதியின் சிபாரிசில் இளைஞரணிக்குத் தரப்பட்டுள்ளது. அந்த வகையில், ஈரோட்டில் இளைஞரணியின் மாநில துணைச் செயலாளரும் தனது நம்பிக்கைக்குரியவருமான பிரகாசுக்கு வாய்ப்புத் தந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் அன்பில் மகேஷின் சிபாரிசும் பிரகாஷுக்கு இருந்தது. ஈரோட்டை தனது ஆதரவாளருக்கு வாங்கித்தர அமைச்சர் முத்துசாமி எடுத்த பகீரத முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இளைஞரணிக்கு 1 சீட்தான் என்றாலும், 21 வேட்பாளர்களும் உதயநிதியின் சாய்ஸ்தான்; அவருக்கு தோதானவர்களையே செலக்ட் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.

இந்த நிலையில், சமூகநீதி கண்ணோட்டத்தில் தனது வேட்பாளர்களை ஸ்டாலின் தேர்வு செய்திருக்கிறார் என்று தி.மு.க. மேலிடத்தில் பரவலாகச் சொல்லப்படுகிறது. அதாவது, தி.மு.க.வின் 21 வேட்பாளர்களில், ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், மணி, செல்வகணபதி, தரணிவேந்தன் ஆகிய 5 வன்னியர் சமூகத்தின ருக்கும்; டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், முரசொலி, தங்க.தமிழ்ச்செல்வன் ஆகிய 4 முக்குலத்தோருக்கும்; பிரகாஷ், கணபதி பி ராஜ் குமார், ஈஸ்வரசாமி ஆகிய 3 கொங்கு வேளாளர் களுக்கும்; ஆ.ராசா, செல்வம், ராணி ஆகிய 3 பட்டியிலினத்தவருக்கும் என பெரும்பான்மை சமூகத்தினருக்கு சீட் ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல நாடார், இசைவேளாளர், நாயுடு, முதலியார், உடையார், ரெட்டியார் சமூகங்களுக்கு தலா 1 சீட் கிடைத்திருக்கிறது என விவரிக்கிறார்கள் அறிவாலயத்தார்.

dd

இதுதவிர, கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்ட ஆரணி மற்றும் தேனி, ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு, மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக் கப்பட்ட கோவை, ஐ.ஜே.கே.வுக்கு ஒதுக்கப்பட்ட பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் இந்தமுறை தி.மு.க. களம் காண்கிறது. இத்தொகுதிகளில் முறையே தரணிவேந்தன், தங்க.தமிழ்ச்செல்வன், பிரகாஷ், கணபதி ராஜ்குமார், அருண்நேரு ஆகியோரை களமிறக்கியிருக்கிறது தி.மு.க.

தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளி யான அதேநாளில் அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட மாக அறிவிக்கப்பட்ட 16 வேட்பாளர்களில், 4 தொகுதிகள் பட்டியிலினத்தவருக்கும், வன்னியர் கள், கொங்கு வேளாள கவுண்டர், முக்குலத்தோர் ஆகிய சமூகங்களுக்கு தலா 3 தொகுதிகளும் தந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், மீனவர், விஸ்வகர்மா, நாயுடு ஆகிய சமூகங்களுக்கு தலா 1 சீட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின்படி, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, சேலம், ஈரோடு, நாமக்கல், தேனி ஆகிய 9 இடங்களில் தி.மு.க.வுடன் நேரடியாக மோதுகின்றனர் அ.தி.மு.க. வேட்பாளர்கள். வடசென்னையில் களம்காணும் ராயபுரம் மனோ, காங்கிரசில் இருந்து அ.தி.மு.க.வுக்கு தாவியவர். சில ஆண்டுகளாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த இவருக்கு, வடசென்னையில் நீங்கள்தான் வேட்பாளர் என 3 மாதங்களுக்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருந்ததால் அப்போதிலிருந்தே தொகுதியை தயார்படுத்தி வந்திருக்கிறார். தி.மு.க. வேட்பாளருக்கு சரிசமமாக செலவு செய்யக்கூடியவர் மனோ.

தென்சென்னையில் போட்டியிடும் டாக்டர் ஜெயவர்த்தன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். 2014-2019 தேர்தலின் போது ஜெயவர்த்தனுக்கு சீட் தந்தார் ஜெயலலிதா. பைசா செலவில்லாமல் ஜெயித்தார். இந்தமுறை அப்படியிருக்காது. தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கையும் சிட்டிங் எம்.பி.யுமான தமிழச்சியை எதிர்த்து தனது மகன் களமிறங்குவதால் தீவிரமாக மோதுவது என கங்கணம் கட்டியிருக்கிறார் ஜெயக்குமார்.

ஜெ.பேரவை துணைச்செயலாளரான பெரும்பாக்கம் ராஜசேகருக்கு காஞ்சிபுரம் (தனி) ஒதுக்கப்பட்டுள்ளது. சீட் கேட்டு விண்ணப்பிக்கும்போது எடப்பாடியை இவர் சந்தித்து, இவ்வளவு செலவு செய்கிறேன்னு சொல்லி யார் சீட் கேட்டாலும் அவர்களைவிட 1 கோடி அதிகமாக நான் செலவு செய்வேன் என பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார் ராஜசேகர். அந்த குவாலிட்டிதான் இவருக்கு சீட் கிடைக்க காரணம் என்கிறார்கள் ர.ர.க்கள்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.எஸ்.சவுந்திரத்தின் (தற்போது பா.ஜ.க.வில்) மகனும், பா.ஜ.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகனுமான அசோக்குமாரை ஈரோட்டில் நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி. வெளிநாட்டில் மின்னணுப் பொறியாளராக பணி புரிந்தவர். உதயநிதி மற்றும் அன்பில்மகேஷின் தீவிர விசுவாசியான பிரகாஷை எதிர்த்து மோதுகிறார் அசோக்குமார்.

இப்படி அ.தி.மு.க. வேட் பாளர்களின் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி இருந்தாலும் பெரும்பாலானோர் தி.மு.க. வேட்பாளரைவிட பலவீனமாகவே தெரிகிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட் டணியை முறித்துக்கொண்டதால், வலிமையான கூட்டணியை உருவாக்க முடியாமல் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்கிறது அ.தி.மு.க. தி.மு.க.வின் கூட்டணி பலம், அதிகார பலம், பண பலம் ஆகிய 3 வலிமையை எதிர்த்து மோது கிறார் எடப்பாடி. பணபலம் மிக்கவர்களையே வேட்பாளர் களாக நிறுத்தியிருந்தாலும் வலிமையான கூட்டணி அமையாமல் அ.தி.மு.க. தனித்துவிடப் பட்டதாகவே விமர்சிக்கப்படு கிறது.

எனவே தி.மு.க. 40க்கு 40 தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில் தீவிரம் காட்டுகிறது.

ss