Advertisment

ராங்கால் வேட்பாளர்களை தேர்வு செய்த வெயிட்டான சூட்கேஸ்கள்! -உள்ளாட்சி ரணகளம்! அண்ணாமலை மீது டெல்லிக்குப் புகார்!

rang

"ஹலோ தலைவரே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கிடிச்சி.''”

Advertisment

"ஆமாம்பா, எல்லாக் கட்சிகளிடமும் அசுரப் பாய்ச்சலைப் பார்க்க முடியுதே.''”

"உண்மைதாங்க தலைவரே, ஒரு சில கட்சிகளைத் தவிர, எல்லா அரசியல் கட்சிகளும் வரிஞ்சிகட்டி நிக்கிது. 21 மாநகராட்சிகளில் சென்னை மட்டும்தான் 200 வார்டுகளைக் கொண்ட பெருநகர மாநகராட்சியா இருக்கு. 2011-க்கு பிறகு தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடக்கலை. அதனால் கடந்த 10 ஆண்டு காலமாக சிறப்பு அதிகாரிகளின் தலைமையிலேயே மாநகராட்சிகள் இயங்கி வந்ததால், அவற்றில் இருக்கும் மாமன்றக் கூட்ட அறைகள் பழுதான நிலையில் இருக்கு. அதேபோலதான் நகராட்சி, பேரூராட்சி, கூட்ட அரங்குகளும் பரவலா பொலிவிழந்து காணப்படுது. இப்ப இதுக்கெல்லாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் விடிவுகாலம் பொறக்குது.''”

"உண்மைதான்பா. இதையெல்லாம் சீரமைக்கும் வேலையைச் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கே?''”

Advertisment

rang

"ஆமாங்க தலைவரே, இந்த நிலையில், பிப்ரவரி 19-ல் தேர்தலை எதிர்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை, 22-ல் நடக்குது. மார்ச் 4- ந் தேதி மேயர் மற்றும் சேர்மன்களுக்கான மறைமுகத் தேர்தல் நடக்கப்போகுது. இதற்கு குறுகிய காலமே இருப்பதால், முதற்கட்டமா மாநகராட்சிகளின் மாமன்றக் கூட்ட அரங்குகளைத் தயார்படுத்துமாறு மாநகராட்சிகளின் ஆணையர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கு. அதன்படி சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்ட அரங் கத்தினை சீரமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் ம

"ஹலோ தலைவரே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கிடிச்சி.''”

Advertisment

"ஆமாம்பா, எல்லாக் கட்சிகளிடமும் அசுரப் பாய்ச்சலைப் பார்க்க முடியுதே.''”

"உண்மைதாங்க தலைவரே, ஒரு சில கட்சிகளைத் தவிர, எல்லா அரசியல் கட்சிகளும் வரிஞ்சிகட்டி நிக்கிது. 21 மாநகராட்சிகளில் சென்னை மட்டும்தான் 200 வார்டுகளைக் கொண்ட பெருநகர மாநகராட்சியா இருக்கு. 2011-க்கு பிறகு தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடக்கலை. அதனால் கடந்த 10 ஆண்டு காலமாக சிறப்பு அதிகாரிகளின் தலைமையிலேயே மாநகராட்சிகள் இயங்கி வந்ததால், அவற்றில் இருக்கும் மாமன்றக் கூட்ட அறைகள் பழுதான நிலையில் இருக்கு. அதேபோலதான் நகராட்சி, பேரூராட்சி, கூட்ட அரங்குகளும் பரவலா பொலிவிழந்து காணப்படுது. இப்ப இதுக்கெல்லாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் விடிவுகாலம் பொறக்குது.''”

"உண்மைதான்பா. இதையெல்லாம் சீரமைக்கும் வேலையைச் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கே?''”

Advertisment

rang

"ஆமாங்க தலைவரே, இந்த நிலையில், பிப்ரவரி 19-ல் தேர்தலை எதிர்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை, 22-ல் நடக்குது. மார்ச் 4- ந் தேதி மேயர் மற்றும் சேர்மன்களுக்கான மறைமுகத் தேர்தல் நடக்கப்போகுது. இதற்கு குறுகிய காலமே இருப்பதால், முதற்கட்டமா மாநகராட்சிகளின் மாமன்றக் கூட்ட அரங்குகளைத் தயார்படுத்துமாறு மாநகராட்சிகளின் ஆணையர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கு. அதன்படி சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்ட அரங் கத்தினை சீரமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் மாநகராட்சி ஆணையரான ககன்தீப்சிங் பேடி. இதற்கிடையே, வாஸ்து ஜோதிட முறைப்படி கவுன்சிலர்களின் இருக்கைகளில் சில பல மாறுதல்களைச் செய்யப் போறாங்களாம்.''”

"எல்லாக் கட்சிகளும் ரெடியான நிலையில், தே.மு.தி.க..வில் இன்னும் தேர்தல் குழப்படி நீடிக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முதல் நாம் தமிழர் கட்சி வரை பல சைடிலும் கூட்டணிக்கு முயற்சித்துப் பார்த்த தே.மு.தி.க. இப்ப தனித்துப் போட்டியிடுது. சென்னை மாநகராட்சியில் இருக்கும் 200 வார்டில், 100 வார்டுகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை 1-ந் தேதி அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா வெளியிட்டார். மீதமுள்ள 100 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காமல் தே.மு.தி.க. திணறுது. அதனால், தென் சென்னையிலுள்ள கட்சிப் பிரமுகர்களை வட சென்னைக்கும், வட சென்னையிலுள்ள பிரமுகர்களை மத்திய சென்னைக்கும், மத்திய சென்னையில் உள்ளவர்களைத் தென் சென்னைக் கும் மாற்றி களமிறக்க பிரேமலதா முடிவு செய்தார். கட்சிப் பிரமுகர்களோ, தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் நயா பைசா கூட இல்லாதபோது, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றி, எங்களைப் போட்டியிடச் சொன்னால் எப்படின்னு களமிறங்க மறுக்கறாங்க. இதில் அப்செட்டாகி விட்டாராம் பிரேமலதா.''”

"தேர்தல் நேரத்தில் உளவுத்துறை நடமாட்டம் அதிகமாத் தெரியுதே?''”

"தி.மு.க.வும் அ.தி. மு.க.வும் எப்படியும் வெற்றி பெற்றே ஆகணும்னு எந்த எல்லைக்கும் போகத் தயாரா இருக்குது. இரு கட்சிகளிலும் கவுன்சிலர் சீட்டுகளைக் கைப்பற்ற சூட்கேஸ்கள் அங்கங்கே ரகசியமாக, அதிக அளவில் புழங்குச்சு. இரண்டு கட்சிகளிலுமே வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு அந்தந்த மா.செ.க்களிடம் ஒப்படைக் கப்பட்டிருந்தது. அதேபோல், ’"அவரை விட்றாதீங்க... இவரை விட்றாதீங்க'ன்னும் தங்கள் மா.செ.க்களுக்கு அவை பரிந்துரையும் பண்ணியிருக்கு. மேலிடம் கூறிய அந்த இடங்களைத் தவிர, மற்ற இடங்களுக்கு மா.செ.க்களே வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்காங்க. அப்படி மா.செ.க்கள் தேர்வு செய்த வேட்பாளர்களிடம் பேரமும் நடந்திருக்கு. சூட்கேஸ் வெயிட்டுக்குத் தகுந்தபடிதான் பல இடங்களில் வேட்பாளர் செலக்ஷன் நடந்ததாம். இப்படி சகல விதத்திலும் கரன்சி புழங்குவதாலும், இதுகுறித்த புகார்கள் வட்டமடிப்பதாலும் அவற்றை மோப்பம் பிடிக்க உளவுத்துறையினர் அதிக அளவில் களமிறங்கி இருக்காங்க.''”

"பா.ஜ.க. அண்ணாமலை மீது அக்கட்சிப் பிரமுகர்கள் தேசியத் தலைமையிடம் புகார் வாசிச்சிருக்காங்களே?''

annamalai

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து நாம் வெளியேறியது தவறு. கூட்டணியை சரிவர உருவாக்கத் தவறிவிட்டார் அண்ணாமலைன்னு அகில இந்திய தலைமையிடம் பலரும் புகார் வாசிச்சிருக்காங்க. இப்போது அ.தி.மு.க. கொடுக்கும் சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள். பாராளுமன்றத் தேர்தலில் மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்னு, தலைமை சொன்னதை அண்ணா மலை காதில் போட்டுக் கொள்ளவே இல்லைன்னும், தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக் காங்க. கூட்டணி முறிந்து போனதால் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் தொண்டர்களிடம் இல்லைன்னும், கூட்டணியை முறித்துக் கொண்டது தவறான அணுகுமுறைன்னும் அவர்கள் புகார்களை அடுக்கியிருக்காங்க. இதனால் கட்சித் தலைமை இது குறித்து அண்ணாமலையிடம் விசாரணை நடத்தும்கிற டாக் கமலாலயத் தரப்பிலேயே அடிபடுது.''”

"ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருப்பவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்பினால், தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தான் மனுத் தாக்கல் செய்யணும்னு தேர்தல் ஆணையம் அறிவிச்சிதே?''”

"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவில் தி.மு.க.வினர்தான் வெற்றி பெற்றிருக்காங்க. அவர்களில் பலரும் அந்தப் பதவியோடு திருப்தியடையாம, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குப் போட்டியிட விரும்பினாங்க. இவங்க ஜெயிச்சா, ஊரக உள்ளாட்சியில் இவங்க வகிக்கும் பதவிகளுக்கு மறுபடியும் தேர்தல் நடத்தியாகணும். அதனால், அரசுக்குத்தான் தண்டச் செலவு. இதை அறிந்த தமிழக அரசு, இதனை அனுமதிக்க கூடாதுன்னு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சில அறிவுறுத்தல்களைச் செய்தது. அதன் அடிப்படையிலேயே, பதவியில் இருப்பவர்கள், அதை ராஜினாமா செய்துவிட்டுதான் நிற்கணும்னு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த உத்தரவை மதிக்காமல் ஊரக உள்ளாட்சிப் பதவிகளில் இருந்துகொண்டே நகர்ப்புற உள்ளாட்சியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தால், அந்த மனு நிரகாரிக்கப்படுவதுடன் அவர்களின் உள்ளாட்சிப் பதவியும் ரத்து செய்யப்படும்னு அறிவிக்கப்பட்டது.''”

"காவல்துறையில் சலசலப்பு கேட்குதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், உரிய அதிகாரிகள் நியமிக்கப்படலைன்னு நாம் ஏற்கனவே பேசிக்கிட்டோம். இப்ப சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்காங்க. அது தொடர்பான சலசலப்புதான் அங்கே கேட்குது. குறிப்பா தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக சுப்புலட்சுமி என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை நியமிச்சிருக்காங்க. எடப்பாடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான இவர், அவர் ஆட்சிக் காலத்தில் சேலம் புறநகர் எஸ்.பியாக 5 ஆண்டுகள் செல்வாக்கோடு கொடிகட்டிப் பறந்தவராம். தாம்பரம் பகுதியில் ரியல் எஸ்டேட் பிஸினசில் இருக்கும் அ.தி.மு.க. புள்ளிகளுக்கு இவரது வருகை தெம்பைக் கொடுத்திருக்குதாம். அ.தி.மு.க ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த அதிகாரியை தி.மு.க ஆட்சியில் தலைநகர் ஏரியாவில் நியமிக்கலாமான்னு காவல்துறையிலேயே சலசலப்பு கேட்குது. அதிகாரிகள் இடமாற்றம் வழக்கமானதுதான்னு காவல்துறையில் இன்னொரு தரப்பு சொல்லுது.''”

"நானும் ஒரு முக்கியமா தகவலை பகிர்ந்துக்கறேன். தொழிலாளர் நலத்துறை ஆணையரான அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ்., ஈ.சி.ஆரில், விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடற்கரைக்கு அருகிலேயே பல ஆயிரம் சதுர அடி அளவில் ஒரு பெரிய பங்களாவ கட்டிவருவது பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக்கோம். அவருக்கு சொந்தமா முன்னதாகவே ஒரு பெரிய பங்களா இருக்கிறதாம். இருந்தாலும் கடந்த ஆட்சிக் காலத்தில் சுரங்கத் துறையில் சம்பாதித்ததை எல்லாம் இதில் முதலீடாக்குகிறாராம் அதுல். இந்தத் தகவல் வெளியே வந்த பிறகும், கொஞ்சம்கூடத் தயக்கம் இல்லாமல் கட்டுமானப் பணிகளை நடத்திக்கிட்டு இருக்காராம். கேட்டால், "சென்னை கார்ப்பரேசன் ஆணையர் ககன்தீப்சிங் பேடியே என் நண்பர்தான், என்னை யாரும் கேட்க முடியாது'ன்னு டயலாக் அடிக்கிறாராம்.''”

nkn050222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe