நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், கடந்த 1ஆம் தேதி முதல் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், இந்திய தேசியப் பாடலான "வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக, அது குறித்த சிறப்பு விவாதத்தை மக்களவையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்தது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலுள்ள இரு அவைகளிலும், ஆளுங்கட்சி எம்.பி.க்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என அனைவரும் தொடர்ச்சியாகப் பேசினார்கள். அப்போது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசியதாவது...

Advertisment

"இந்த வந்தே மாதரம் பாடல், பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது. 1881 - 82ஆம் ஆண்டில், பங்கா தர்ஷன் இதழில் ஆனந்த மடம் நாவல் தொடராக வெளிவந்தது. அந்த நாவலில் அப்பாடல் இடம்பெற்றது. பின்னர், 1882ஆம் ஆண்டில் ஆனந்தமடம் நாவல் நூலாக வெளிவந்தது. அந்த பாடல் மிகுந்த புகழ்பெற்று, உள்துறை அமைச்சர் குறிப்பிட்டதைப் போல, எதிர்க்கட்சி தலைவர் சொன்னதைப் போல, 1896-வது ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ரவீந்திரநாத் தாகூர் அவர்களால்  மெட்டமைக்கப்பட்டு பாடப்பட்டது.

Advertisment

அது அத்தோடு நிற்கவில்லை, அந்த 'வந்தே மாதரம்' என்ற இரண்டு சொற்கள் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. விடுதலை வேட்கையை கிளர்ந்தெழச் செய்தது. இது எந்த மொழியிலே எழுதப்பட்டதென்று யாரும் பார்க்கவில்லை. இன்றைக்கு நாம் பாடுகின்ற நாட்டுப்பண் என்று சொல்லுகிற ஜனகணமன பாடலாகட்டும், நாட்டுப் பாடல் என்று சொல்லுகிற வந்தே மாதரமாக இருக்கட்டும், இரண்டும் வங்காள மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. எந்த மொழியாக இருந்தாலும், நம் உணர்ச்சிகள் கொந்தளிக்கிற போது, அந்த வரி எதை முன்வைக்கிறதோ, அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்தார்கள்.

அன்றைக்கு ஏற்பட்ட அந்த உணர்ச்சி என்பது, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியது. எல்லோருக்கும் ஒரே உணர்வு இருந்தது. இந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்று, மகாகவி பாரதி ஒரு அழகான பாடலை எழுதியிருக் கிறார். விடுதலை வேட்கை குறித்து, 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடே, அதன் முந்தையர் ஆயிரம் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே, அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் சிறந்து விளங்கியதும் இந்நாடே, இதை நான் சிந்தை நிறுத்தி வந்தனை கூறி இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? வந்தே மாதரம்! வந்தே மாதரம்! என்று வணங்குவேனோ?' என்று சொல்கிறார். அன் றைக்கு அந்த பாடல் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது.

Advertisment

trichysiva2

அவைத்தலைவர் அவர்களே, உங்களுக்கு வரலாறு நிறையவே தெரியும். இந்த விடுதலை உணர்வு என்பது, வெள்ளையர்களை எதிர்த்துப் போராடுவது என்பது, ஏதோ 20-ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலே வந்ததைப் போல ஒரு தோற்றம், வரலாறு எழுதப்படுகிறது. வரலாறு எழுதப்படுவதை பொறுத்துதான் அது அடுத்தவர்களால் நம்பப்படுகிறது. உலகத்திலேயே மாவீரன் அலெக்சாண்டர், உலகத்திலே மகா பெரிய கொடுங்கோலன் செங்கிஸ்கான், இப்படி எழுதினார்கள். ஆனால், அலெக்சாண்டர் மட்டும் என்ன பூங்கொத்து கொடுத்தா அடுத்த நாடுகளை கைப்பற்றினார்? அவரும் தலைகளைக் கொய்தார். அவரும் போர் தொடுத்தார், பல பேரை கொன்றார். செங்கிஸ்கானும் அதையே செய்தான். ஆனால் எழுதியவர்கள் அவர்களுக்கு ஆதரவாக எழுத ஆரம்பித்தபோது, அலெக்சாண்டரை மாவீரன் என்றும், இவனை கொடுங்கோலன் என்றும் சித்தரித்தார்கள். என்னுடைய கவலை, மற்றவர்களுடைய பங்களிப்பை நாங்கள் கொஞ்சம்கூட மறுக்கவில்லை. உங்களுக்கு தெரியாததல்ல, தமிழ்நாட்டில் திலகரின் பெயரால் திடல் வைத்திருக்கிறோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரால் சாலைகள் வைத்திருக்கிறோம். கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று காந்தியினுடைய மனைவியின் பெயரால் மருத்துவமனை வைத்திருக்கிறோம். 

கமலா நேரு பூங்கா என்று நேருவினுடைய மனைவியின் பெயரால் பூங்கா வைத்திருக்கிறோம்.

நான் கேட்கிறேன், எங்காவது வடபுலத்திலே வ.உ.சிதம்பரனார் சாலை உண்டா? பாரதியார் தெரு உண்டா?  யாருக்காவது வீரபாண்டிய கட்ட பொம்மனை தெரியுமா? தயவுசெய்து சொல்லுங் கள். ஏன் புறக்கணிக்கப்பட்டோம்? கேட்க வேண்டியது யார்?  நாம்தான். ஒரு மாநிலக் கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் எந்த நிலையிலும் இந்த நாட்டுக்காகப் போராடியவர் களை நாங்கள் கைவிட்டதும் இல்லை, அடையாளம் காட்டத் தவறியதும் இல்லை என்பதை நான் பேருவகையோடு சொல்கிறேன். 

trichysiva1

முதன்முதலாக வெள்ளையனை எதிர்த்து குரல் கொடுத்தது, போராடியது நெல்கட்டும் செவல் என்று திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கிற பாளையத்தை ஆண்ட பூலித்தேவன் என்பவன் தான். அவன்தான் முதன்முதலில் "வெள்ளையனே வெளியேறு!' என்ற முழக்கத்தை ஏற்படுத்தினான். அதுதான் 1942-ல் "குவிட் இந்தியா' மூவ்மெண்ட். அதற்கு முன்னோடி பூலித்தேவன். அதற்கு பின்னால் வீரபாண்டிய கட்டபொம்மன். நீங்கள் பின்னால் "வரிகொடா இயக்கம்' என்று சொல் வதை முதன்முதலாக தொடங்கிவைத்தது வீரபாண்டிய கட்டபொம்மன். 1760-ல் பிறந்து, 39 ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்டவன். கொஞ்சம் கூடக் கலங்கவில்லை. அப்பொழுதும்கூட அவன் "என் தாய்நாடே!' என்று சொல்லிவிட்டுத்தான் தூக்கிலே தொங்கினான். வீரபாண்டிய கட்ட பொம்மனை வடபுலம் அறியுமா? குறைந்தபட்சம் கர்நாடகத்தில் வாழ்கிற என் நண்பர் பிரகலாத ஜோஷி அறிவாரா? இங்கே இருக்கிற யாருக்காவது தெரியுமா?

நான் வேதனையோடு கேட்கிறேன். பூலித்தேவனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, சிவகங்கை சீமையை ஆண்ட வேலு நாச்சியாரோ தெரியுமா? வெள்ளையரிடம் இழந்த பகுதியை மீட்டெடுத்த ஒரே வீராங்கனை வேலு நாச்சியார் தான். அவர் போர்த்தந்திரம் மிக்கவர். திப்பு சுல்தான், ஹைதர் அலியின் துணையோடு அவர் எத்தனை முறை வெள்ளையர்களை எதிர் கொண்டிருக்கிறார் என்பது என் தம்பி மாண்புமிகு அமைச்சர் முருகனுக்கு தெரி யும், உங்களுக்கும் தெரியும். மற்றவர்களைப் பார்த்து கேட்கிறேன். இவரைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

அதைவிட மிகச் சிறப்பான ஒன்றை, இன்றைக்கு இந்த அவையில் நான் பதிவு செய்கிறேன். அன் றைக்கு வேலுநாச்சி யார் அவர்களுடைய படைக்கு ஒரு கட்டத்தில் பின்னடைவு ஏற்படுகின்றது. வெள்ளையர்களுடைய ஆயுத வலிமையை எதிர்த்தும், அவர்களு டைய போர்த் தந்திரத்தை எதிர்த்தும் போரிட முடியாத நிலை வருகிறது. அப் பொழுது, எப்படியாவது இவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, அவ ருடைய படைத் தளபதிகளில் ஒருவராக இருந்த குயிலி என்கிற பெண்ணின் வீரமிகு செயலை சொல்லியாக வேண்டும். அவ ருடைய பூர்வீகத்தை ஆராய்ச்சி செய்தவர் கள், அவர் தலித் இனத்தைச் சார்ந்தவர் என்று சொல்கிறார்கள். பல பெண்களோடு நடனக் குழுவைப் போல ஊருக்குள்ளே ஊடுருவிச்சென்று, கோட்டைக்குள்ளே சென்று, தன்னுடைய உடலெல்லாம் நெய்யை ஊற்றி, தீப்பற்ற வைத்துக் கொண்டு, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கில் குதித்து, அந்த ஆயுதக் கிடங்கை அழித்து, வேலு நாச்சியாருக்கு வெற்றியை சாதகமாக்கிய வர், குயிலி என்கிற அந்த பெண். இந்த வீரமிகு தியாகத்தை செய்தபோது அவளுக்கு வயது 20-க்குள்ளாகத் தான்!

எத்தனையோ பேசுகிறோமே, ராணி லட்சுமி பாயை பற்றி பேசுகிறோம். ஆனால் வேலு நாச்சியாரைத் தெரி யாது. குயிலியைப் பற்றி யாருக்குமே தெரியாது. எவ்வளவு பெரிய தியாகம். வெள்ளையர்கள் நடுநடுங்கிப் போனார் கள். ஆக, இப்படி பல வரலாறுகள் நம்மிடையே மறைக்கப் பட்டிருக்கிறது. மருது சகோதரர்கள் தூக்கிலே போடப் பட்டதும், ஒவ்வொருவராக தூக்கிலே தொங்கவிடப்பட்ட தும் கொஞ்சநஞ்சமல்ல. அதேபோலதான் பாரதியார் வறுமையிலே வாடினாலும் அவர் பாடிய பாடல் திக்கெட் டும் ஒலித்தது. வ.உ.சி. குறித்து பிரதமர் பேசுகிறார். அவ ருடைய வார்த்தைகளிலே வருகிறது. பல பெயர்களை சொல் கிறார். அப்படிப்பட்ட அவருக்காக என்ன செய்திருக்கிறீர் கள்? அடுத்தவர்களை குறை சொல்வதற்காக அல்ல, நான் தயவு செய்து கேட்கிறேன், மரபுகளை காப்பாற்ற வேண்டாமா? குடியரசுத் தலைவர், ரஷ்ய நாட்டிலிருந்து வருகிற அதிபருக்கு விருந்து வைக்கிறார். நாடாளுமன்றம் என்பது இரு அவைகளைக் கொண்டது, அதனுடைய ஒட்டுமொத்த அரசாங்கத்தின் தலைவராக குடியரசுத் தலைவர் இருப்பார் என்று அரசியல் சட்டத்தின் 79ஆவது பிரிவு சொல்கிறது. ஆனால் வெளிநாட்டிலிருந்து வருகிற ஒரு தலைவருக்கு தருகிற விருந்தில், எதிர்க்கட்சியை சார்ந்த மாநிலங்களவை தலைவரும் அழைக்கப்படவில்லை, மக்களவைத் தலைவரும் அழைக்கப்படவில்லை. இதை யாரிடம் போய் சொல்வது? சுதந்திரத்தை பெற்றோம், அதை குடியரசாக மாற்றினோம், அந்த குடியரசு என்பதை நிலைநாட்டுவதற்கு மக்களாட்சி என்பதற்காக, இந்த வந்தே மாதரம் பாடலைக்கூட அப்படித்தான் தாகூர் காங்கிரஸ் மாநாட்டிலே பாடினார்.

அரசியல் சட்ட நிர்ணய சபை 1950, ஜனவரி 24-ல் இப்பாடலை ஏற்றுக்கொண்டது. ஜன கண மன பாடலுக்கும், வந்தே மாதரத்துக்கும் சம அந்தஸ்து உண்டு என்று சொல்லி, அவர்கள் அதை நிலைநிறுத்தினார்கள். இப்பொழுது நான் கேட்க வருவது, வ.உ.சிதம்பரனார் என்கிற பெயரை சொல்கிறீர்களே, அவரைப் பற்றி என்ன தெரியும்? வாணிகத்தின் மூலமாக இந்த நாட்டின் உள்ளே ஊடுருவி நுழைந்த அந்த வெள்ளையர்களை, அதே வாணிகத்தால் தான் விரட்ட முடியும் என்று அவர்களுக்கு எதிராக கப்பல் வாங்கினார் வ.உ.சிதம்பரனார்.

கப்பல் மூலமாகத்தான் வந்தார்கள், இங்கு இருக்கிற சரக்குகளை கொண்டு போனார்கள். இவர் பதிலுக்கு ஒரு கப்பலை, சுதேசி கப்பலை வாங்கினார். 'வந்தே மாதரம்' என்று அதை பெயரிட்டு அழைத்தார்.

((திருச்சி சிவா எம்.பி.யின் உரை தொடரும்..)

தொகுப்பு: -தாஸ்