Advertisment

சசிகலாவை ஏன் விசாரிக்கவில்லை? -அதிகாரி திணறல் வாக்குமூலம்!

d

கொடநாடு கொலை -கொள்ளை பற்றி விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்திடம் கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணை பற்றி கடந்த இதழில் வெளியானதன் தொடர்ச்சி.

Advertisment

ff

தடய அறிவியல் நிபுணரான ராஜ்மோகன் போலீஸ் விசாரணையில் "நான் உதகையில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்தேன். 24-04-2017 அதிகாலை 5:00 மணிக்கு தனிப்பிரிவு ஸ்பெஷல் பிரான்ஞ்சில் இருந்து என்னுடைய கைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில், சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் இருந்து குற்ற எண்: 158/2017-ல் அண்டர் செக்சன் 324, 342, 449, 396 ipc-யின்படி தடயங்களை சேகரித்து புலன் விசாரணை செய்ய உதவுமாறு வேண்டியதால் நான் கிளம்பினேன். சம்பவ இடத்தை 7:15 மணிக்கு பார்வையிட் டேன்'' எனச் சொல்லியிருக்கிறார்.

"5:20 மணியில் இருந்து 8:00 மணிக் குள்தான் எப்.ஐ.ஆர். போடப்பட்டதாக வழக்குப் பதிந்ததாக ராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் 5:00 மணிக்கு முன்னராகவே எப்.ஐ.ஆர். போட்டுவிட்டதாகச் சொல்கிறார் ராஜ்மோகன்.

Advertisment

dd

ஓம் பகதூர் வெள்ளை நிற ஒயரால் கைகள் கட்டப்பட்டு இறந்து போயிருந்தான். "வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் நாக்கு வெளியே வரலை' என சொல்லியிருக்கிறாரே? கிருஷ்ணதாபா, "துணியால் கைகள் கட்டியிருந்த தாகத்தானே சொல்லியிருக்கிறார்?' எனக் கேட்டார்.

இன்ஸ்பெக்டர் பாலசுந்தரமோ, "அது பற்றி எனக்குத் தெரியாது' என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்திவிட்டதில் இருந்தே இந்த வழக்கில் ஏக குளறுபடிகள் இருப்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அதுக்குப் பிறகு, "மேனேஜர் நடராஜனிடம் சாவி வாங்கி, பங்களாவைத் திறந்து பார்த்தபோது ஹால் மற்றும் மாடியில் உள்ள இரண்டு அறைகளின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள். தாழ்ப்பாளை கைப்பற்றினீர்களா? பங்களாவில் உடைக்கப்பட்ட இடத்தில் பார்வை மகஜர் என்கிற வரைபடம் வரையப்பட்டதா? கைரேகைகள் எடுக்கப்பட்டதா? மேனேஜர் நடராஜனிடம் புகார் வாங்கினீர்களா?' எனக் கேள்வி எழுப்பினார்

கொடநாடு கொலை -கொள்ளை பற்றி விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்திடம் கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணை பற்றி கடந்த இதழில் வெளியானதன் தொடர்ச்சி.

Advertisment

ff

தடய அறிவியல் நிபுணரான ராஜ்மோகன் போலீஸ் விசாரணையில் "நான் உதகையில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்தேன். 24-04-2017 அதிகாலை 5:00 மணிக்கு தனிப்பிரிவு ஸ்பெஷல் பிரான்ஞ்சில் இருந்து என்னுடைய கைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில், சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் இருந்து குற்ற எண்: 158/2017-ல் அண்டர் செக்சன் 324, 342, 449, 396 ipc-யின்படி தடயங்களை சேகரித்து புலன் விசாரணை செய்ய உதவுமாறு வேண்டியதால் நான் கிளம்பினேன். சம்பவ இடத்தை 7:15 மணிக்கு பார்வையிட் டேன்'' எனச் சொல்லியிருக்கிறார்.

"5:20 மணியில் இருந்து 8:00 மணிக் குள்தான் எப்.ஐ.ஆர். போடப்பட்டதாக வழக்குப் பதிந்ததாக ராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் 5:00 மணிக்கு முன்னராகவே எப்.ஐ.ஆர். போட்டுவிட்டதாகச் சொல்கிறார் ராஜ்மோகன்.

Advertisment

dd

ஓம் பகதூர் வெள்ளை நிற ஒயரால் கைகள் கட்டப்பட்டு இறந்து போயிருந்தான். "வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் நாக்கு வெளியே வரலை' என சொல்லியிருக்கிறாரே? கிருஷ்ணதாபா, "துணியால் கைகள் கட்டியிருந்த தாகத்தானே சொல்லியிருக்கிறார்?' எனக் கேட்டார்.

இன்ஸ்பெக்டர் பாலசுந்தரமோ, "அது பற்றி எனக்குத் தெரியாது' என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்திவிட்டதில் இருந்தே இந்த வழக்கில் ஏக குளறுபடிகள் இருப்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அதுக்குப் பிறகு, "மேனேஜர் நடராஜனிடம் சாவி வாங்கி, பங்களாவைத் திறந்து பார்த்தபோது ஹால் மற்றும் மாடியில் உள்ள இரண்டு அறைகளின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள். தாழ்ப்பாளை கைப்பற்றினீர்களா? பங்களாவில் உடைக்கப்பட்ட இடத்தில் பார்வை மகஜர் என்கிற வரைபடம் வரையப்பட்டதா? கைரேகைகள் எடுக்கப்பட்டதா? மேனேஜர் நடராஜனிடம் புகார் வாங்கினீர்களா?' எனக் கேள்வி எழுப்பினார் விஜயன்.

"இரண்டு அறைகளைப் பற்றி யாரும் புகார் தரவில்லை. அதனால் நான் உடைக்கப்பட்ட தாழ்ப்பாள்களை கைப்பற்றவில்லை. வரைபடம் வரையவில்லை. கைரேகைகள் எடுக்கப்படவில்லை. மேனேஜர் நடராஜனிடம் புகார் வாங்கவில்லை. அவருக்கு பங்களா குறித்த முழுத் தகவல்கள் தெரியவில்லை' என்றார் பாலசுந்தரம்.

"கொடநாடு பங்களாவின் உரிமையாளர் யார் என விசாரித்தீர்களா?' என்றதற்கு, "அது கொடநாடு பிரைவேட் லிமிடெட். அதற்கு பங்குதாரர்கள் இருக்கிறார்கள்' என்று சொன்னார்கள்.

"பங்குதாரர்கள் யார் ? ரெஜிஸ்டர் ஆப் கம்பெனியில் எழுதி விசாரித்ததில் பரிமள வதனா என்கிற லேடியை விசாரித்தீர்களா? அந்த விசாரிப்பு கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தீர்களா? பரிமள வதனாவையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினீர்களா?' என்றபோது, "விசாரித்தேன்... கடிதத்தை தாக்கல் செய்யவில்லை. சாட்சியாக அவரை வழக்கில் சேர்க்கவில்லை. பரிமள வதனாவும் இந்தப் புகாரும் அளிக்கவில்லை' என்றார்.

d

"கொடநாட்டின் முழு அனுபவதாரராக சசிகலா நடராஜன் இருக்கிறாரா?' என கேட்ட போது, "அதுபற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் இங்கே வந்து சென்றதை 4 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டராய் இருந்தபோது பார்த்திருக்கிறேன்' என்றார் பாலசுந்தரம் .

"ஜெயலலிதா வரும்போதெல்லாம் சசிகலா வருவார், பார்த்திருக்கிறேன் என்கிறீர்கள், உரிமையாளர்களில் ஒருவரான சசிகலாவை ஏன் விசாரிக்கவில்லை? அவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர். செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவரை மறைத்துவிட்டீர்களா?' எனக் கேள்வி எழுப்பியபோது குற்ற சம்பவம் நடக்கும்போது, அதன் உரிமையாளரை விசாரிப்பது காவல்துறையின் கடமை என்பது சரி இல்லை. சசிகலா, ஜெயலலிதாவின் தோழி. செல்வாக்கு மிக்க ஒருவரை இந்த வழக்கில் மறைத்துவிட்டதாக சொல்லப்படுவதில் உண்மையுமில்லை' என வழக்கிற்கு சம்பந்தமில்லாத ஒருவரைப் போல பதிலளித்தார் பாலசுந்தரம்.

"இறந்து போன டிரைவர் கனகராஜ் எடப்பாடி பழனிச்சாமியின் தாலுகாவைச் சேர்ந்தவர். ஒரே சமூகத்தைக் சேர்ந்தவர்கள் என்கிறீர்கள். ஆனால் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களா? என்று கேட்டால் தெரியாது என்கிறீர்களே?' என கேட்டதற்கு, "ஒரே ஊரைச் சேர்ந்தவர்களா என்பது எனக்கு தெரியாது' என மீண்டும் சொன்னார்.

dd

"எப்.ஐ.ஆரில் கிருஷ்ண தாபாவிடம் கையெழுத்து வாங்கவில்லை. கையின் பெருவிரலில் வெட்டுக்காயம் இருந்ததால் கையெழுத்து வாங்கவில்லையா?' என கேட்டபோது, "அப்படியில்லை. ஞாபகமறதியால் வாங்கவில்லை' என பதிலளித்த ஒரே ஐ.ஓ பாலசுந்தரமாகத்தான் இருக்க முடியும். "எஸ்.ஐ. ராஜன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?' என்றபோதும் "இல்லை' என்றார். "நீங்கள் உடந்தையாக இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லையா?' என்றபோது... "அப்படிச் சொல் வது சரியல்ல' என்றார்.

"பான்காடு ரைட்டர் ராதா கிருஷ்ணன். சம்பவம் நடந்ததை யார் யாருக்கு தகவல் சொன்னார்? , கொடநாடு மேனேஜர் நடராஜன் மூலம் அ.தி.மு.க.வின் மாநில வர்த்தக அணி தலைமை பொறுப்பாளர் சஜீவனுக்கும், முன்னாள் சி.எம். பி.ஏ பூங்குன்ற னுக்கும் தகவல் சொல்லிய பின்னரே காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டதாக சொல்லப் படுதே' என கேட்டபோது, "இல்லவே இல்லை' என்றார்.

"சம்பவத்திற்குப் பிறகு கூட்டு ஆலோசனைக் குழு மாதிரி கலந்தாய்வு செய்து சஜீவன் சொன்ன ஆலோசனையின் பேரில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?' என்று கேட்கப்பட்டதற்கு, "இல்லவே இல்லை'ன்னு மறுத்தாரு பாலசுந்தரம்.

"ஓம்பகதூரை பார்த்த போது உடல் எந்த நிலையில் இருந்தது? அவருடைய உடல் மரத்தில் கட்டப்பட்டிருந்ததா? இல்லை தரையில் வைக்கப் பட்டிருந்ததா? பொதுமக்கள் இருந்தார்களா? அவர்களிடம் விசாரித்தீர்களா? அவர்கள் சாட்சிகளாக போடப்பட்டி ருக்கிறார்களா?' என்று கேள்வி எழுப்பினார் .

"மரத்தில் தான் ஓம்பகதூர் உடல் கட்டப்பட்டிருந்தது. வாயில் பிளாஸ்திரி ஒட்டப் பட்டிருந்தது. அந்த பிளாஸ்திரி யால் அவர் உயிர் போகவில்லை என்பதால் பிளாஸ்திரியை கைப்பற்றவில்லை. பொதுமக்கள் 25 பேருக்கும் மேலாக இருந் தார்கள். அவர்கள் கேட்டுக்கு வெளியே இருந்ததால் அவர் களை விசாரிக்கவில்லை. எஸ்டேட் தொழிலாளர்களிடம் தான் விசாரித்தோம். அவர்களைத் தான் சாட்சியாகப் போடப் பட்டது' என்றார் பாலசுந்தரம்.

dd

"பொதுவான ஆட்களைத் தானே சாட்சியாகப் போட வேண்டும். உங்களுக்குச் சாதகமான சாட்சிகள் வேணும் என்பதால்தானே எஸ்டேட் தொழிலாளர்களை விசாரித் தீர்கள்?' என்று கேட்டதற்கு, "இல்லை' என்றே மறுத்தார் .

"ஜிதின்ஜாயிடமிருந்து எந்த சான்றுப் பொருட்களையும் கைப்பற்றவில்லையே? இரண்டு செல்போன்களை ஜிதின் ஜாயின் உறவினர்கள் ஒப்படைத்தார்கள்' என சொல்லியிருக்கறீர்கள். அந்த உறவினர்கள் யார்?, அவர்களின் வாக்குமூலம் வாங்கினீர்களா?, அந்த இரண்டு செல்போன்கள் எங்கே?' என கேட்கப்பட்டதற்கு... "சான்றுப் பொருட்கள் கைப்பற்றப் படவில்லை என்பது சரிதான். இரண்டு செல்போன்களை கொடுத்த உறவினர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களி டம் வாக்குமூலம் வாங்கவில்லை' என்றார் பாலசுந்தரம் வியர்த்தபடி.

"ஒரு கொலை நடக்கும் போது வேறு கோணத்திலும் விசாரிப்பார்கள். தொழிலாளர் களுக்குள் பகை.? அரசியல் காரணங்கள்? அப்படி ஏதேனும் கோணத்தில் விசாரித்தீர்களா?' என ஒரு கிடுக்குப்பிடி கேள்வி யைக் கேட்டார் விஜயன்.

இன்ஸ்பெக்டர் பால சுந்தரம், "விசாரித்தேன், தொழிலாளர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. 8 பேர் எஸ்டேட்டிற்குள் வந்தார்கள் என்பதுதான் உண்மை. அரசியல் காரணங்கள் இருக்கிறதா? என்றும் விசாரித்தேன், அப்படி எதுவும் இல்லை' என்றார்.

"யாரிடம் விசாரித்தீர்கள்?' என்கிற கேள்வி எழுப்பப்பட்ட போது, "பொதுவாக விசாரித்தேன்' என்றார் இன்ஸ்பெக்டர் பால சுந்தரம்.

"8 பேர் 11 பேர் ஆனது எப்படி? சவுக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தான் ஓம்பகதூர் என எப்.ஐ.ஆர். சொல் கிறது. நீங்களோ, சாம்பிராணி மரம் எனச் சொல்லுகிறீர்கள்' என்ற கேள்விகளுக்குப் பதிலளிக் காத பாலசுந்தரம்... "சவுக்கு மரமல்ல... சாம்பிராணி மரம் என்பதை பின்பு தான் தெரிந்து கொண்டேன்' எனச் சொன்னார்.

"சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டன. மின்சாரம் துண் டிக்கப்பட்டது என்பதைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் பற்றி?' என்கிற கேள்விகளுக்கு, "ஜெயலலிதா இங்கு வரும்போதே பாதுகாப்புக் காக நான் வந்த சமயங்களிலேயே சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதும் இருந்ததில்லை. மின்சாரம் சீராகத்தான் இருந்தது. தினேஷ் குமார் தற்கொலை செய்துகொண்டார் என்பதே சரி . ஆனால் அவர்தான் சி.சி.டி.வி. கேமராக்களை பராமரித்து வந்தார் என்பது சரியல்ல' என சளைக்காமல் சொன்னார்.

"இப்படியாக விசாரணை அதிகாரியாக இருந்த பாலசுந்தரம் மாறி, மாறி பேசியதுதான் இந்த வழக்கை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்' என்கிறார்கள் உதகை வழக்கறிஞர்கள்.

"கொடநாடு கொலை சம்பவம் நடந்தபோது அதிகாலையி லேயே எஸ்.பி. முரளிரம்பாவும், கலெக்டர் சங்கரும் கொட நாட்டிற்கு வந்தார்கள் என்பதில் உண்மையில்லை. இந்த வழக்கில் உள்ள 10 பேர் மீதும் நான் வழக்கை புனைந்திருக்கிறேன். புலன் விசாரணை செய்யவில்லை என்பதும், உண்மையானக் குற்ற வாளிகளை மறைத்து அப்பாவிகளான எதிரிகளின்மீது பொய்யான குற்றச்சாற்று தாக்கல் செய்துள்ளேன் என்பதும், இந்த வழக்கின் ஆரம்பம் முதல் எங்கள் உயரதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாக அவர்கள் சொன்னதின் பேரில் உண்மையை மறைத்து, எதிரிகளின் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்தேன் என்பதும் சரியல்ல' என குறுக்கு விசாரணையில் மொழிந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம். வழக்கறிஞர் விஜயனிடம் பேசியபோது, "சம்பவம் நடந்தநாளில் கூடலூர் செக்போஸ்டில் 3, 4 கார்களைப் பிடித்திருக்கிறார்கள். அதில் குற்றவாளிகள் வந்த கார்களை தப்பவிட்டு விட்டு சுற்றுலா வந்தவர்களைப் பிடித்து குற்றவாளியாக்கியிருக்கிறார்கள் என்றுதான் எங்கள் தரப்பில் வாதாடிக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார் இயல்பாய்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. சூரிய வெளிச்சம் படரத் தொடங்கியுள்ளது. மலைக்குகைக்குள் உண்மைக் குற்றவாளிகள் ஓடி ஒளிகிறார்கள் இருளைப்போல.

nkn080921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe