இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.
இந்தி மொழியை வேண்டாம் என நாம் நிராகரித்த பிறகும், அம்மொழி நமக்குப் பயன்பட வில்லை என உறுதியாகத் தெரிந்தபின்னரும், விடாமல் வலுக்கட்டாயமாக இந்தியை நம் தலை யில் திணிக்க முனைகிற இந்த காலத்தில் நின்று கொண்டு, 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெரியார், இதே வகையான சூழலையும் அது உரு வாக்கிய கடும் எதிர்ப்புகளையும் எப்படி எதிர் கொண்டிருப்பார் என சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1772ஆம் ஆண்டில் முதல் ஆங்கில கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், மனுதர்ம சாசனங்களின் அடிப்படையில் சிவில், வருவாய் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க வேண்டுமென உத்தர விட்டிருந்தார். அது மட்டு மல்ல. 1773-1775 ஆண்டு களில் வருவாய்த் துறையில் 11 பார்ப்பனர்களை நியமனம் செய்து சமஸ்கிருத சட்ட விதிகளை உருவாக்கினார்.
கி.பி. 1817ல் ஆங்கில வழிக் கல்வி தொ டங்கப்பட்டது. பெரும்பான்மையாக பார்ப்பனர்கள்தான் இதிலும் பலன் பெற்றனர். 1934ஆம் ஆண்டில், திருவனந்தபுர சமஸ்தானத்தில் ஆங்கில வழிக் கல்வி பள்ளிக்கூடம் திறக்கப்பட்டவுடன், சமஸ்கிருதத்தைக் கைவிட்டு கல்வி கற்க வந்தவர்கள் பார்ப்பனர்கள்.
1834 டிசம்பர் 31இல், ‘உயர்சாதியினரை மட்டுமே காலனிய ராணுவத்தின் பணிகளுக்கு அமர்த்தவேண்டும், இதர சாதிகளை பணிகளுக்கு எடுப்பதை தவிர்க்கவேண்டும்’ என்பன போன்ற ராணுவ விதிகளை வங்கத்தின் பிரபுவாக இருந்த வில்லியம் பெனிடிக் உருவாக்கியிருந்தார் (நங்ஸ்ரீற்ண்ர்ய் 6 ர்ச் டஹழ்ற் 2 ர்ச் ற்ட்ங் இங்ய்ஞ்ஹப் ஆழ்ம்ஹ் ஆஸ்ரீற் 31 ர்ச் 1853).
தமிழகத்தில் அரசர்களும் அதிகாரத்தில் இருந்தவர்களும், கோவில் பயன்பாடு மற்றும் ஊர் பயன்பாடு என்கிற பெயர்களில் ‘இனாமாக’ பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடுத்தனர். அந்த நிலங்கள் மீதான வரியை விலக்குவது குறித்து ஆராயவென பிரிட்டிஷ் அரசு ஓர் ஆணையத்தை 1858-இல் அமைத்தது. அச்சமயத்தில் பார்ப்பனர்களின் பயன்பாட்டில் 37 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. 1960ஆம் ஆண்டில் இனாம் நில ஒழிப்பு சட்டம் வரும்வரை இதுவே நிலை. சாமானிய தமிழ் மக்கள் இந்த நிலங்களில் கூலி வேலை பார்த்து பிழைத்துக் கொண்டிருந்தனர்.
வட இந்தியாவில் சிப்பாய்க் கலகம் நடந்த பிறகு 1861ஆம் ஆண்டில் இந்தியர்களையும் நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளலாம் என பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. காவல்துறை, நீதித்துறை போன்ற இடங்களை இந்தியர்கள் அடையும் வாய்ப்பு இருந்தது. ஆனால் எல்லா இந்தியர்களாலும் அந்த இடங்களை அடைய முடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் அதிக அளவில் அந்தப் பணிகளுக்கு சென்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
பிரிட்டிஷ் அரசுடன் இணக்கமாக இருந்து தமக்கான ஆதிக்கத்தை நிறுவி சலுகைகளை பெற்றுக் கொண்டார்கள் பார்ப்பனர்கள். தமது சனாதன கோட்பாட்டையும், சமஸ்கிருதத்தையும் அதிகாரப்பூர்வ நிலைக்கு அவர்கள் கொண்டுசென்றார்கள்.
கொலைக் குற்றங்களில் பார்ப்பனர்கள் ஈடுபட்டால் மரண தண்டனையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. நில வரிகளிலும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவை ஆளுவதற்குரிய சட்டங்கள் சனாதன சட்டங்கள்தாம் என் றும், இந்தியாவுக்கான மொழி சமஸ்கிரு தம்தான் என்றும், சட்டங்களை நடைமுறை செய்யும் நிர்வாகப் பிரதிநிதிகளாக பார்ப் பனர்கள்தான் இருக்க முடியும் என்றும் ஆங்கிலேய அரசையும், அதிகாரிகளையும் பார்ப்பனர்கள் நம்பவைத்திருந்தனர்.
இச்சமயத்தில், மெட்ராஸ் மாகாணம் எனும் தமிழகப் பகுதியில் இயங்கிய ஆங்கிலேய ஆய்வாளர்கள் வேறொரு அனுபவம் பெற்றிருந்தனர். சமஸ்கிருதத்தை ஏற்காத, அம்மொழியிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்து இயங்குகிற மொழியாக தமிழும், அதன் தொடர்ச்சி யாக கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய கிளை மொழிகளும் இருப் பதைக் கண்டிருந்தனர். சனாதனத்தை ஏற்காத தென்னாட்டவர்களும் இருக்கிறார் கள் என்பதும் அவர்களுக்கான சட்டங் களாக சமஸ்கிருத்தையோ, சனாதனத்தை யோ, மனுதர்மத்தையோ வைக்க இயலா தென்பதும் தெரிய வந்தது. இவ்வகையில் சமஸ்கிருதம், சனாதனம், பார்ப்பனியம் ஆகியவற்றிற்கு மாறாக இருப்பவர்களை திராவிடர்கள் என்றும், அவர்களின் மொழிகளை திராவிட மொழிகள் என்றும் 1800-களின் ஆரம்ப காலத்திலேயே குறிப்பிடத் தொடங்கி விட்டனர். அதாவது பெரியார் பிறப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடம் என்கிற வார்த்தை அடையாளச் சொல்லாக அறிமுகமாகி விட்டது.
மறுபக்கத்தில், 1858-ல் நடந்த சிப்பாய்க் கலகத்தை முன்னின்று நடத்திய வர்கள் பார்ப்பனர்கள் என்பதாலும், தங்களது மதச் சடங்குகளை முன்வைத்து கலகத்தை தொடங்கினர் என்பதாலும், பிற சமூகத்தினரை ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வர கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டிஷ் அரசும் முயற்சிகளை எடுத்தது. இதற்கான சில சட்டத் திருத்தங்கள் வெளியிடப்படுகின்றன. ஒரே குடும்பத்திலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்டோரை பணிநியமனம் செய்வதற்கு தடை கொண்டு வரப்பட்டது. தமக்கு சாதகமானோரை பணியில் அமர்த்தும் முறை தடை செய்யப்பட்டது.
1776-ல் கொண்டு வரப்பட்ட சனாதன வர்ண முறையை அடிப்படையாக் கொண்ட மனுதர்ம சட்டத்தை மாற்றி, 1861-ல் புதிய கிரிமினல் சட்டங்களை பிரிட்டிஷ் அரசு அறிமுகப்படுத்தியது. 1870-ல் உள்ளூர் மொழிகளில் கல்வி கற்பிப்பதற்கு பள்ளிக்கூடங்களை கொண்டு வந்தது. விளைவாக பார்ப்பனரல்லாத, உயர்சாதிகள் அல்லாதோரை கல்வி கற்று அரசு அதிகாரத்திற்குள் கொண்டுவருவதற்கான முயற்சியை பிரிட்டிஷ் அரசு முன்னெடுத்தது.
மேலும், நில வரிக்கான சலுகையை பார்ப்பனர் கள் அனுபவித்து வந்த நிலையை மாற்றும் வகையில் பஞ்சாப், தக்காணம், வங்காளம், மெட்ராஸ் மாகாணங் களில் நிலவருவாய் மீட்புச் சட்டத்தை 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. இவ்வாறு பார்ப்பனர்களுக்கான முன்னுரிமை கள், சலுகைகள், சனாதனத்திற்கான முக்கியத்துவம், மனு தர்ம சட்டங்கள் ஆகியவற்றை பிரிட்டிஷ் அரசு புறம்தள்ளத் தொடங்கியதும் பார்ப்பனர்கள் ஆங்கில அரசின் எதிரிகளாக மாறினர்.
1858ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசி, இந்து மதத்தின் சாதியக் கட்டுப்பாடுகளையும், சாதிய அடுக்குமுறை களையும் பாதுகாப்பதாக கொடுத்த வாக்குறுதி யினை மீறிவிட்டதாக பார்ப்பனர்கள் முடிவு செய்கிறார்கள். தங்களின் ஆதிக்கத்தை மீட்டெடுக் கவும், ஆங்கில அரசை பணிய வைத்து தமக்கான சலுகைகளைப் பெறவும் ஓர் அமைப்பை நிறுவுகிறார்கள். அதுதான் காங்கிரஸ் கட்சி. 1885-ல் காங்கிரஸ் உருவாகிறது.
காங்கிரஸ் கட்சி மூலமாக இந்திய மக்களின் பிரதிநிதிகளாக பார்ப்பனர்கள் தம்மை நிறுவிக்கொண்டார்கள். பெருந்திரளான மக்களை ஆங்கில அரசிற்கு எதிராகத் திரட்டி, பார்ப்பனர்கள் தமது நலன்களை பெற்றுவிட முயன்றார்கள். தமது சாதி சடங்குகளை கைவிடாமலும், அதேசமயம் வெகுசன மக்களின் பிரதிநிதிகளாகவும் தம்மை முன்னிறுத்தினர். இக்காலங்களில் காங்கிரஸின் தலைமையில் இருந்த பார்ப்பனர்களின் இயல்பு, அதிர்ச்சி தரும் வகையில் சாதியம் கொண்டி ருந்தது.
1890-களில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து கப்பலில் சென்ற பார்ப்பனர்கள், தமக்கான உணவை ஒரு பார்ப்பனர் செய்து தரவேண்டுமென கப்பலின் நிர்வாகத்திடம் பேசி பெற்றுக்கொண்டனர். பார்ப்பனர்களுக்கான உணவை மங்கள நேரம் என்றவொரு குறிப்பிட்ட நேரத்திலேயே சமைக்க வைத்தனர். பிற சாதி நபர்களின் பார்வையில் இந்த உணவு பட்டுவிட்டால் தீட்டு ஆகிவிடும். எனவே அவரவர் அறையிலேயே உணவு பரிமாறப்பட ஏற்பாடு செய்துகொண்டனர்.
ரகுநாதராவ் எனும் பார்ப்பனர், அந்த ஐந்து நாள் பயணத்தில் உணவை எடுத்துக்கொள்ளவே இல்லை. ஐந்து நாட்களுக்கு தேவையான காபி டிக்காஷனை மட்டும் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தார். கப்பலில் இருந்த பார்ப்பனர் சமைத்த உணவைக்கூட அவர் தீட்டாகக் கருதினார்.
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகளில், தனது அரசியல் நண்பர்களான அசலாம்பிகை அம்மையார், வெங்காந்தூர் கணபதி சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி ஆகியோர் தனக்கு எதிரே ஒருபோதும் உணவு அருந்தியதில்லை என்று குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அழைப்பின் பேரில் ஒரு பார்ப் பனர் வீட்டிற்கு திரு.வி.க. சென்றிருக்கிறார். அழைத்திருந்த பார்ப்பனரும் திரு.வி.க.வும் ஒன்றாகச் சாப்பிடவில்லை. சமையலறையில் தனியே அந்த பார்ப்பனர் உணவு உண்டு, வெற்றிலை பாக்கு எடுத்துக்கொண்ட பின்னரே திரு.வி.க.விற்கு உணவு பரிமாறப்பட்டது. அந்தப் பார்ப்பனர் திரு.வி.க.விற்கு கொடுத்த ஒரே மரியாதை என்னவெனில், திரு.வி.க. சாப்பிட்ட இடத்தில் சாணித் தண்ணீரை தெளித்து தீட்டை சுத்தப்படுத்தும்படி திரு.வி.க.விடம் அவர் கேட்கவில்லை. இத்தகைய பார்ப்பன தேசபக்தர் களே காங்கிரஸில் தலைவர்களாக இருந்தனர்.
காங்கிரஸ் கூட்டங்களில் ஆங்கில அரசை கடுமையாகக் கண்டித்து பேசிய பார்ப்பனர்கள், மறுபுறம் ஆங்கில அரசின் முக்கியப் பதவிகளில் தமது உறவினர்களை அமர்த்திவிடும் வேலைகளையும் செய்தனர். முன் சீப்கள், நீதிபதிகள் என பல பதவி களை பார்ப்பனர் கள் ஆக்கிரமித் துக்கொள்வார் கள்.
1917ஆம் ஆண்டில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட் டிக்கு சென்னையி லிருந்து சென்ற 15 பிரதிநிதிகளில் 13 பேர் பார்ப்பனர்கள். கோவில் நுழைவுப் போராட்டம் போன்ற சமூக சீர்திருத்தங்களைத் தடுக்கும் வகையில் 1926ஆம் ஆண்டில் ‘பிராமண மகாசபையை தமிழக காங்கிரஸ் கட்சியின் பார்ப்பனர்கள் உருவாக்கி னார்கள். இதை செய்தவர் எம்.கே.ஆச்சாரியார். இதில் பங்கெடுத்தவர் காங்கிரஸின் சுயராஜ்ஜிய பிரிவின் தலைவரான சி.வி.வெங்கட்ரமண அய்யங்கார். இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்துவந்தவர் எஸ்.சத்தியமூர்த்தி அய்யர். தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை தேசத் துரோக வழக்கில் பதிவு செய்து தூக்கி லேற்றுவேன் என்றவர்தான் இந்த சத்தியமூர்த்தி அய்யர். குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாகவும், தேவதாசிமுறைக்கு ஆதரவாகவும் வாதாடியவரும் இவரே. திருவண்ணாமலை கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட கண்ணப்பருக்கு எதிரான வழக்கில் வாதாடியவரும் இதே சத்தியமூர்த்தி அய்யரே.
இன்று பார்க்கும் நமது சூழல் தாமாக ஏற்பட்டதல்ல. இதை உருவாக்க கடுமையான போராட்டங்களை நமது முன்னோர் கள் நடத்தவேண்டி யிருந்தது.
புதுக்கோட் டை சமஸ்தானத் தின் அன்றைய அரசர் மார்த் தாண்ட பைரவ தொண்டைமான் ஆஸ்திரேலிய பெண்மணியை திரு மணம் செய்திருந் தார். மகனுக்கு சிட்னி தொண்டை மான் என்று பெயர் சூட்டினார். மன்னர் மறைந்த பிறகு, சிட்னிக்கு முடி சூடும் முயற்சி நடக்கிறது. புதுக்கோட்டை அரசர், இந்து சனாதன முறைப்படியாக திருமணம் செய்யாமல் பெற்றெடுத்த மகனான சிட்னியை வாரிசாக ஏற்க இயலாதென பிரச்சாரத்தை முன்னெடுத்தார் சத்தியமூர்த்தி அய்யர்.
சிட்னியை தரக்குறைவாக பிறந்த மகன் என புதுக்கோட்டை முழுவதும் பிரச்சாரம் செய்தது மட்டுமல்லாமல், காஞ்சி சங்கராச்சாரியை வரவழைத்து, இந்து அல்லாத பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை மன்னர் வாரிசாக ஏற்க இயலாதென பேசவும் அவர் வைத்தார். இந்த பிரச் சாரத்தின் விளைவாக 1928ம் ஆண்டில் கலவரம் வெடிக்கிறது. இதனால் ஆங்கில அரசு, சிட்னி தொண்டைமானுக்கு முடிசூட்டாமல் வேறொரு வரை அரசராக்குகிறது.
மேலும், இந்துமத சீர்திருத்தங்களாக முன்னெடுக்கப்பட்ட குழந்தைத் திருமணம் தடுப்பு, விதவை மறுமணம், கோவில் நுழைவு ஆகிய சீர்திருத்தங்களுக்கு எதிராக தொடர்ந்து மாநாடுகளை நடத்தினார் சத்தியமூர்த்தி அய்யர். இந்த மாநாடுகளில் பார்ப்பனர்களுக்கு தனி உணவுப் பந்திகள்.
சத்தியமூர்த்தி அய்யரின் இந்துமத-சனாதன சாதிய பிரச்சாரத்தினால், புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவோடு 1948 மார்ச் மாதத்தில் இணையும் வரை பட்டியலின மக்களுக்கு கோவில் நுழைவு அனுமதிக்கப்படாமல் இருந்தது. (நூல்: திவான் கலிபுல்லா - கே.எம்.சரீப்).
இந்த சத்தியமூர்த்தி அய்யர்தான் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராக இன்றளவும் நினைவுகூரப்படுகிறார். இவரது நினைவாகவே காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் உள்ளது.
இரண்டு தேசத்துரோக தண்டனை அனுபவித்தவர் வ.உ.சி. பெரியாருக்கும் வெகு முன்பாகவே காங்கிரஸ் கட்சியில் இயங்கியவர் அவர். அத்தகையவரை முற்று முழுதாக காங்கிரஸ் கட்சிக்குள் நிராகரித்து ஒதுக்கி வைத்தனர் பார்ப்பனர்கள்.
இத்தகைய பின்னணியில்தான், பெரியார் காங்கிரஸில் இணைந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையே அவர் காங்கிரஸில் இணைய காரணமாக இருந்தது.
காங்கிரஸ் கட்சிக்குள் அனைத்து சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்திட வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்தார் பெரியார். அவர் முன்னெடுத்த, பார்ப்பனரல்லாத அனைத்து சாதியினருக்கும் கட்சிக்குள் வாய்ப்பு வழங்கவேண்டுமெனும் தீர்மானத்தை 1919, 1920, 1921, 1922, 1923, 1924 ஆகிய ஆண்டுகளில் நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் நிறைவேற்ற இயலாமல் போகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியின் கதர் விற்பனை நிலையங்களிலும் பார்ப்பனரல்லாதோருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட வேண்டுமென கேட்டார் பெரியார். அவரது எல்லா முயற்சிகளையும் பார்ப்பனர்கள் தடுத்தனர்.
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அகற்றாமல், பார்ப்பனர் அல்லாத மக்கள் அரசியல் மற்றும் சமூக அந்தஸ்தைப் பெறமுடியாதெனக் கருதி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார் பெரியார்.
அன்றைய காலகட்டத்தில் வெகுமக்களிடம் உரையாற்றிய தலைவர்கள் வெகுசிலரே. அதிலும் பெரும்பாலான மக்கள் படிப்பறி வற்றவர்களாகவே இருந்திருப்பார்கள் எனும் சூழலில், அம்மக்களுக்கேற்ற வகையில் வெகுமக்கள் மொழியில் பேசியவர்தான் தந்தை பெரியார்.
1926ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட் டில் பல முன்னெடுப்புகளை தீர்மானங் களாக்கினார் பெரியார். பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை, சமூக வாழ் வில் எல்லோரையும் சமமாக பாவிக்க வேண்டும், தீண்டாமை ஒழிப்பு, இந்து மத வழிபாட்டில் அனைவருக்கும் சமவுரிமை என முற்போக்கான கோரிக்கைகளை மாநாட்டின் முதன் மைத் தீர்மானமாக முன்மொழிந்தார் பெரியார். பின்னர் 1929-ல் நடந்த செங்கல்பட்டு மாநாட்டில், அனைவரும் கிணறு, குளங்கள், கோவில்கள், தண்ணீர்ப் பந்தல்களை வேறுபாடின்றி பயன்படுத்த தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், தீண்டத்தகாதவர் எனப்படுவோரின் குழந்தை களுக்கு கல்வி, புத்தகம், உணவு, உடை ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார். அரசாங்க வேலை வாய்ப்புகளில் தீண்டத்தகாதோருக்கு முன்னுரிமை அடிப்படை யில் வேலை கொடுத்திட வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றினார்.
குறிப்பாக, பெண்கள் குறித்து இந்த மாநாடு பல்வேறு புரட்சிகரமான தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆண்களுக்கு நிகராக சொத்துரிமை பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், வாரிசுரிமை, பெண்கள் தாம் விரும்பும் தொழிலை மேற்கொள்ள சமஉரிமை மற்றும் வாய்ப்பு, பள்ளிக்கூட ஆசிரியர் பணிகளில் பெண் கள் நியமனம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் வேலையை பெண்களுக்கே கொடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்களை செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றினார் பெரியார்.
100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் இயற்றிய தீர்மானங்களே பிற்காலத்தில் சட்டங்களாகவும், உரிமைகளாகவும் மாறின என்றால் மிகையில்லை.
தந்தை பெரியார் கொண்டு வந்த தீர்மானங் கள் குறிப்பிட்ட உரிமைகள் இல்லாமல்தான் அந்தக் காலத்து பார்ப்பனர் அல்லாதோரும், பெண்களும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸில் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை ஒழித்து அரசியலில் அனைவருக்குமான உரிமையையும், அதிகாரத்தில் அனைவருக்குமான பங்கையும் நிலைநாட்ட பெரியாரே ஆணிவேர்.
பெண்களுக்கான உரிமை கள் சட்டங்களாவதை தடுத்த பார்ப்பனர்களின் சூழ்ச்சியை முறியடித்து, பெண்கள் முன் னேற்றத்திற்கான வழிகளை கண்டடைந்ததாலேயே பெண் கள் மாநாட்டில் அவருக்கு தந்தை பெரியார் எனும் பட்டத் தை பெண்கள் சூட்டினர். திருமணம், கோவில், அரசியல், கல்வி, அதிகாரம், பொதுவெளி ஆகியவற்றில் பார்ப்பனர் அல்லாத தமிழர்களுக் கான உரிமைகளை வென்றெடுத்தவர் பெரியார்.
இதுமட்டுமல்லாமல் இந்தியா பல தேசங்களின் நாடு என்று 1930-ல் அறிவித்தவர் தந்தை பெரியார். 1938இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய அவர் தனது இறுதி உரையிலும் சுதந்திரத் தமிழ்நாடுதான் தீர்வு என வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழர்களுக்கென தனி நாடு அமைந்தால் மட்டுமே சுயமரியாதையுடன் வாழமுடியுமென தன் இறுதி பொதுக்கூட்டத்தில்கூட பதிவுசெய்தார் பெரியார்.
அதனால்தான் தந்தை பெரியார் தமிழ்த் தேசிய தலைவர் ஆகிறார்.