மிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், பொது இடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் 200 ரூபாய் அபராதமென்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் 500 ரூபாய் அபராதமென்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இது ஒரு இக்கட்டான தருணம்’ எனச் சொல்லும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "கடந்த 40 நாட்களில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகமாகிவிட்டது'’என்கிறார்.

corona

“தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தீவிரமாகப் பரவியதற்கு தேர்தல் ஆணையமே முழுமுதல் காரணம். அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களையும் கட்டுப்பாடு இல்லாமல் பிரச்சாரம் செய்ய அனுமதித்து, கொரோனாவைப் பரவச்செய்துவிட்டு, தற்போது கட்டுப் பாடு விதித்திருப்பது எந்த ஊர் நியாயம்?’’ என்று கேட்கிறார், சமூக ஆர்வலரான குமார்.

Advertisment

மேலும் அவர், “பத்து மாதங்களுக்கு முன்பே கொரோனா தொற்றுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பலியானார். அரசியல்வாதிகள் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? அதனால், கனிமொழி எம்.பி. வரைக்கும் கொரோனா தொற்று பரவியபடியே இருக்கிறது. தற்போது எந்தெந்த திருவிழாவுக்கு தடை விதிக்கலாம் என்று அறிவிப்பு வரு கிறது. "தேர்தலை திருவிழா போல் நடத்திய தற்கு ஏன் தடை விதிக்கவில்லை?'’என்று அழுத்தமாகக் கேட்கிறார்.

பட்டாசு சங்கத் தலைவர் விநாயகமூர்த்தியும் கூட, ""வடநாட்டுல இருக்கிற என் நண்பன், எந்த வேட்பாளரும் எங்க ஸ்டேட்ல மீட்டிங் போடல. வீட்டுக்கு வீடு நோட்டீஸ் வீசிட்டு போய்க்கிட்டே இருக்காங்க. சின்னம்கூட பெரிசா வரையல. வேட்பாளரோடு வர்றது ஒருத்தர் ரெண்டு பேருதாங்கிறான். தமிழ்நாட்டுல இந்த நடைமுறை ஏன் இல்லாம போச்சு?'' என்கிறார் ஆதங்கத்துடன்.

"தமிழகத்தில் என்ன நடந்தது?'’என்று குமார், விநாயகமூர்த்தி ஆகிய இருவரும் கொட்டித் தீர்த்த குமுறல் இதோ-

Advertisment

corona

“தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரும் போது, கட்சித் தொண்டர்கள் கூடுவதெல்லாம் குறிப்பிட்ட அளவில்தான். மற்றபடி, தலைக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து, அழைத்துவரப்படும் கூட்டமே அதிகம். தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று ‘மாஸ்’ காட்டுவதற்காகவே இந்த ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்த அளவுக்கு கூட்டத்தைக் கூட்டி, பெரி தாக என்ன பேசிவிட்டார்கள்? தங்க ளுக்குப் பிடிக்காத அரசியல் தலைவரை திட்டினார்கள். வழக்குகள்கூட பதி வாகின. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆட்சியைக் கைப்பற்றவும், ஆளும்கட்சியும் எதிர்க் கட்சியும் நடத்திய தேர்தல் பிரச்சார யுத்தத்தை, ஆன்லைனில் பண்ணியிருக்கலாமே? மாணவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்வதே ஆன்லைனுக்கு மாறிவிட்ட நிலையில், பிரச்சார பாணியையும் மாற்றியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்களைத் திரட்டினால் கொரோனா பரவாதாம். டாஸ்மாக் கடையிலும் பரவாதாம். ஆனால்.. கோவில் விழா நடத்தினால் பரவுமாம். புதிய ஊரடங்கு கட்டுப்பாட்டில் டாஸ்மாக் செயல்பாட்டுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்ன கொடுமை இது? தொட்டதற்கெல்லாம் வள்ளுவரையும், குறளையும் மேற்கோள் காட்டுகிறார்கள். குறள் நெறிப்படி நடக்கிறார்களா?

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு

மிக்க பசியும், நீங்காத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாமல், இனிது நடப்பதே, ஒரு நாட்டின் சிறப்பாகும் எனத் தெளிவுபடுத்து கிறது இந்தக் குறள்.

கொரோனா தொற்று உலகத்தையே ஆட்டிப்படைக்கும் இந்த நேரத்தில், தேர்தல் நடந்தபோது நாட்டு மக்கள் மீது எத்தனை அக்கறை கொண்டவர்களாக ஆட்சியாளர்களும், அரசியல் வாதிகளும் இருந்திருக்க வேண்டும்? ஆட்சியைக் குறிவைத்தே அரசியல் பண்ணும் இவர்களுக்கு, மக்கள் குறித்த சிந்தனையோ, கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையோ துளிகூட இல்லை. அப்படித்தானே நடந்துகொண்டார்கள்?

தற்போது, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு, விழுந்து விழுந்து அபராதம் விதிப்பவர்கள், தேர்தல் பிரச்சாரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மக்கள் குவிக்கப்பட்டபோது எங்கே போனார்கள்? அதற்குமுன், கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையை, தேர்தலுக்காக மாற்றியவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது? கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு?’’ என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள்.

ஓட்டுக்கு பணம், பரிசு டோக்கன் என ஜனநாயகப் படுகொலையை ஆரவாரமாக நிகழ்த்திய அரசியல் வாதிகளால், கொரோனா கொலைகளும் சத்தமில்லாமல் நடந்திருக்கின்றன.