Advertisment

பாசிச எதிர்ப்பில் ஆம் ஆத்மி பணிவது ஏன்..? தி.மு.க. துணிவது ஏன்? - முனைவர் ஜெ. ஹாஜாகனி

ss

டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச் சர் ராஜேந்திரபால் கௌதம், தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகி யிருப்பதன் காரணம் தேசத்தை அதிர வைக்கிறது.

Advertisment

என்ன குற்றம் செய்துவிட்டார் அவர்?

கொலை, கொள்ளை, மானபங்கம், கலவரம் நடத்துதல் என ஏதேனும் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டாரா? அல்லது பா.ஜ.க. தலைவர்கள் சாதனை படைக்கும் சம்பவங்கள்(?) போன்ற எதிலாவது அவர் சம்பந்தப்பட்டுள்ளாரா?

Advertisment

ff

ஒன்றுமில்லை.

அக்.5, 2022 அன்று டெல்லி அம்பேத்கர் பவனில் (2007-ல் த.மு.மு.க. சமூக நீதி மாநாடு நடத்திய இடம்) நடைபெற்ற, அசோக மன்னர் புத்தம் தழுவிய நினைவு நாள் நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்வில் நூற்றுக்கணக் கானோர் புத்த மதத்தில் இணைந்துள்ளனர். தங்களின் மத மாற்ற முடிவுக்குக் காரணமான சனாதன வன்கொடுமைகள் குறித்துப் பேசியுள்ளனர்.

பாதகமே உருவான பா.ஜ.க. இதைப் பெரும் பிரச்சினை ஆக்கிவிட்டது.

"ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம் ராமனையும், கிருஷ்ணனையும் துதிக்கிறது. அயோத்தி யாத்திரைக்கு மானியம் தருவோம் என தேர்தல் அறிக்கையில் உரைக்கிறது. அக்கட்சியின் அமைச்சரோ இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மதம் மாற

டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச் சர் ராஜேந்திரபால் கௌதம், தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகி யிருப்பதன் காரணம் தேசத்தை அதிர வைக்கிறது.

Advertisment

என்ன குற்றம் செய்துவிட்டார் அவர்?

கொலை, கொள்ளை, மானபங்கம், கலவரம் நடத்துதல் என ஏதேனும் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டாரா? அல்லது பா.ஜ.க. தலைவர்கள் சாதனை படைக்கும் சம்பவங்கள்(?) போன்ற எதிலாவது அவர் சம்பந்தப்பட்டுள்ளாரா?

Advertisment

ff

ஒன்றுமில்லை.

அக்.5, 2022 அன்று டெல்லி அம்பேத்கர் பவனில் (2007-ல் த.மு.மு.க. சமூக நீதி மாநாடு நடத்திய இடம்) நடைபெற்ற, அசோக மன்னர் புத்தம் தழுவிய நினைவு நாள் நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்வில் நூற்றுக்கணக் கானோர் புத்த மதத்தில் இணைந்துள்ளனர். தங்களின் மத மாற்ற முடிவுக்குக் காரணமான சனாதன வன்கொடுமைகள் குறித்துப் பேசியுள்ளனர்.

பாதகமே உருவான பா.ஜ.க. இதைப் பெரும் பிரச்சினை ஆக்கிவிட்டது.

"ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம் ராமனையும், கிருஷ்ணனையும் துதிக்கிறது. அயோத்தி யாத்திரைக்கு மானியம் தருவோம் என தேர்தல் அறிக்கையில் உரைக்கிறது. அக்கட்சியின் அமைச்சரோ இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மதம் மாறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்''’என்று பரப்புரைகளைக் கட்டவிழ்த்து விட்டது.

குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங் களில் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இப்பரப்புரை பெரிய பின்னடைவாகிவிடும் என்று அக்கட்சி கருதுகிறது. வடகிழக்கு டெல்லியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக சமூக நலத்துறை மற்றும் பட்டியலின மக்கள் நலத்துறை ஆகியவற்றின் அமைச்சராகப் பணியாற்றிவந்த ராஜேந்திரபால் கௌதம் பின்னால் நிற்கத் துணிவிழந்த ஆம் ஆத்மி, அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு விட்டது.

டெல்லி சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர்சிங் பதூரி, "பதவி விலகியது மட்டும் போதாது, அவர் மீது சட்ட நடவடிக்கை(?) எடுக்கவேண்டும், கட்சியை விட்டே நீக்கவேண்டும்' என்று கொக்கரித்து வருகிறார்.

இந்த கொக்கரிப்புக்குக் குலைநடுங்கிப் போயுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

பல்லாயிரக்கணக்கான தலித் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் அரசியல் சாசனத்தின் சிற்பியான பாபா சாஹேப் அம்பேத்கர். அவர் மதம் மாறியபோது செய்த 22 பிரகடனங்களை இப்போது அம்பேத்கரை அபகரித்துக்கொள்ள முயலும் சங்கிக் கும்பல் படிக்கட்டும்.

dd

அம்பேத்கரைப் பகைத்தால் தலித் மக்களின் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்பதால், ‘"இந்துவாக சாகமாட்டேன்'’ என சபதம் செய்து மதம் மாறிய அவரைக் கொண்டாடுவது போல் நடிக்கிறது சங்கிகளின் பா.ஜ.க.

ஆனால் அவரது வழியைத் தேர்வு செய்த, மக்கள் நடத்திய விழாவில் பங்கேற்ற அமைச்சரைக் குறி வைத்து காலி செய்கின்றது.

ஆம் ஆத்மி தலைமை ஏன் தனது அமைச்சருக்கு ஆதரவாக நிற்கவில்லை?

"மதமாற்ற நிகழ்ச்சிக்குச் சென்றுவந்த தனது அமைச்சரை ஆதரித்தால், குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் பாதிக்கப்படலாம்' என ஆம் ஆத்மி அஞ்சுகிறது.

கெஜ்ரிவால், ஊழல் எதிர்ப்பு என்று கிளம்பிய பா.ஜ.க.வின் "ஆ'வன்னா அணியான அன்னா ஹசாரேவிடமிருந்து பிரிந்து வந்தவர் தான் கெஜ்ரிவால். ஊழலை எதிர்த்துப் போராடிய அன்னா ஹசாரே சாதிக் கொடுமைகளையும் தீண்டாமையையும் எதிர்த்துப் போராடாதது இங்கு சிந்திக்கத்தக்கது. இவர்களிடம் சமூகநீதி அடிப்படையிலான கருத்தியலை ஆழமாக எதிர்பார்க்க இயலாது.

டெல்லி தேர்தலின்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற ‘ஷாகின்பாக் கிற்குச் செல்லாமல் ஆம் ஆத்மி தவிர்த்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் பா.ஜ.க.வின் ஃபாசிசத்தைக் கருத்தியல் ரீதியாக எதிர்ப்பவர்களாக இருக்கவேண்டும்.

ஒரு பேரவலம் என்ன வென்றால், இந்தியா முழுவதுமே அப்படி ஒரு நிலை இல்லாததுதான் பா.ஜ.க.வின் தொடர் வெற்றிகளுக்குக் காரணம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திகூட பா.ஜ.க.வால் தமிழகத்தை வெல்ல முடியாது என்று சவால்விட்டாரே தவிர, காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை அவரால் சுட்டிக்காட்ட முடியவில்லை. ஏனெனில், காங்கிரசில் பல தலை வர்களும் கூட, ராகுல்காந்தி போல பா.ஜ.க.வை கருத்தியல் ரீதியாக எதிர்க்கத் தயாரில்லை.

இந்நேரத்தில் தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணாவின் ஒளியில், தனது அரசியலை முன்னெடுக்கும் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.

dd

1971-ல் ராமன் படத்தை செருப்பால் அடித்த தி.மு.க.வுக்கா உங்கள் வாக்கு? என எதிர்க்கட்சிகள் ஆரிய நிழலில் அமர்ந்து அதிதீவிரப் பரப்புரை மேற்கொண்டன. ஆனால் தி.மு.க. 183 தொகுதிகளில் வென்று சங்கித்தனங்களை சங்கு அறுக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சாதித்துக் காட்டியது. இன்று வரை வேறெந்த கட்சியும் இவ்வளவு அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்த தில்லை. தன் கொள்கைக்கு ஒவ்வாதது வெகு மக்கள் பண்டிகையாகினும் அதற்கு வாழ்த்து சொல்லாமல் உறுதியோடு நின்ற முத்தமிழறிஞர் கலைஞரைத் தமிழ்நாட்டு மக்கள் ஐந்து முறை முதலமைச்சராக்கி அழகு பார்த்தனர்.

அண்மையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, ஒரு நிகழ்ச்சியில், மனுஸ்மிருதியில் என்ன உள்ளது என்பதை மேற்கோள்காட்டிப் பேசினார். எழுதிய மனுவை விட்டுவிட்டு, எடுத்துச்சொன்ன ஆ.ராசாவை நீக்க வேண்டும் என்று மனு தர்மவாதிகள் மனு போட்டனர். மட்டிலா வெறியோடு மதவெறி ஆட்டம் ஆடிப் பார்த்தனர்.

அதை அமைதியாக எதிர்கொண்ட தமிழக முதல்வர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அண்மையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் ஆ.ராசாவை மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கி, கதறிய சங்கிகளை மேலும் பதறவைத்துள்ளார்.

ஆம் ஆத்மியால் ஏன் இவ்வாறு செயல் பட முடியவில்லை என சிந்திக்கவேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சியை இவர்களால் இது வரை ஏன் வடமாநிலங்களில் தடுக்க முடியவில்லை.

அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளின் கருத்தியல் இல்லாத களப்பணிதான் .

ஃபாசிச பா.ஜ.க.வுக்கு இது பலம் சேர்த்துள்ளது.

சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், ஆகிய கருத்தியல்களை திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் தமிழ்நாடு உள்வாங்கி உள்ளது.

வடஇந்தியாவில் காணப்படும் சூழல், சமூக நீதி அடிப்படையிலான ஒரு மகத்தான கருத்தியல் புரட்சியின் தேவையை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

nkn191022
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe