Advertisment

அமெரிக்கத் தேர்தல் இழபறி ஏன்? யானையை வென்ற கழுதை! அமெரிக்க தேர்தல் இழுபறி ஏன்?

us-election

120 ஆண்டுகால வரலாற்றில் இல்லாதபடி இம்முறை 66.9 சதவிகித ஓட்டுக்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவாயின. இவ்வளவுதானா, இங்கே இடைத்தேர்தலிலேயே 80%க்கு மேலே காட்டுவோம்ல என முண்டா தட்டலாம். நம்ம ஊரைப்போல இன்னார் புள்ளைதான் இந்த தொகுதி கேன்டிடேட் என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி விடமுடியாது.

Advertisment

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிக்கான வேட் பாளராகப் போட்டியிடுவதற்கே, முதலில் மாகாண வாரியாக கட்சியிலுள்ள உறுப்பினர்களின் ஆதரவை ஜெயித்துக்காட்டவேண்டும். பிறகுதான் தேர்தலில் போட்டியிட்டு, பொதுமக்களின் வாக்குகளை வெல்வதெல்லாம்.

Advertisment

us-election

ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், தன் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் உள்ளிட்ட ஆறு பேரை பின்னுக்குத் தள்ளி அதிபர் வேட்பாளராகத் தேர்வானார். ட்ரம்ப், கடந்த தேர்தலிலே இந்தத் தடை களைத் தாண்டி, ஜனாதிபதியானதால் அதே செல்வாக்கில், குடியரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கினார்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி- குடியரசு கட்சி இரண்டும் தான் பிரதானம். மற்றதெல்லாம் துக்கடா. இரண்டின் வேட்பாளர்களும் அனல் பறக்க நேரலை விவாதத்தில் பங்கேற்பது வழக்கம். கொரோனாவால் அது ஒரு ரவுண்டுடன் முடிந்துவிட்டது. ஆனாலும், வாக்கு சேகரிப்பும் தேர்தலுக்கான நிதி சேகரிப்பும் இரு தரப்பிலும் அமர்க்களமாகத் தொடர்ந்தன.

நவம்பர் 3 வாக்களிப்பு நாள் என்றாலும் கொரோனா அலை காரண மாக முன்கூட்டியே தபால் மூலம் வாக்குகளை செலுத்தும் வசதி விரிவான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல மாகாணங்களில் நேரில் வந்து வாக்களித்தவர்களைப் போலவே தபால் வழி வாக்களித்தவர்களும் அதிகம். தபால் வாக்குகளை வாக்குப் பதிவு நாளுக்கு முன் அனுப்பலாம். அதன் பிற

120 ஆண்டுகால வரலாற்றில் இல்லாதபடி இம்முறை 66.9 சதவிகித ஓட்டுக்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவாயின. இவ்வளவுதானா, இங்கே இடைத்தேர்தலிலேயே 80%க்கு மேலே காட்டுவோம்ல என முண்டா தட்டலாம். நம்ம ஊரைப்போல இன்னார் புள்ளைதான் இந்த தொகுதி கேன்டிடேட் என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி விடமுடியாது.

Advertisment

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிக்கான வேட் பாளராகப் போட்டியிடுவதற்கே, முதலில் மாகாண வாரியாக கட்சியிலுள்ள உறுப்பினர்களின் ஆதரவை ஜெயித்துக்காட்டவேண்டும். பிறகுதான் தேர்தலில் போட்டியிட்டு, பொதுமக்களின் வாக்குகளை வெல்வதெல்லாம்.

Advertisment

us-election

ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், தன் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் உள்ளிட்ட ஆறு பேரை பின்னுக்குத் தள்ளி அதிபர் வேட்பாளராகத் தேர்வானார். ட்ரம்ப், கடந்த தேர்தலிலே இந்தத் தடை களைத் தாண்டி, ஜனாதிபதியானதால் அதே செல்வாக்கில், குடியரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கினார்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி- குடியரசு கட்சி இரண்டும் தான் பிரதானம். மற்றதெல்லாம் துக்கடா. இரண்டின் வேட்பாளர்களும் அனல் பறக்க நேரலை விவாதத்தில் பங்கேற்பது வழக்கம். கொரோனாவால் அது ஒரு ரவுண்டுடன் முடிந்துவிட்டது. ஆனாலும், வாக்கு சேகரிப்பும் தேர்தலுக்கான நிதி சேகரிப்பும் இரு தரப்பிலும் அமர்க்களமாகத் தொடர்ந்தன.

நவம்பர் 3 வாக்களிப்பு நாள் என்றாலும் கொரோனா அலை காரண மாக முன்கூட்டியே தபால் மூலம் வாக்குகளை செலுத்தும் வசதி விரிவான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல மாகாணங்களில் நேரில் வந்து வாக்களித்தவர்களைப் போலவே தபால் வழி வாக்களித்தவர்களும் அதிகம். தபால் வாக்குகளை வாக்குப் பதிவு நாளுக்கு முன் அனுப்பலாம். அதன் பிறகு அனுப்ப முடியாது.

வாக்குப்பதிவு முடிந்த வேகத்தில் விறுவிறுவென தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதும் அது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் வழக்கம். இம்முறை பரபரப்பு இருந்தது. ஆனால், முடிவுகள் அத்தனை சுலபமாக கிடைத்துவிடவில்லை.

ட்ரம்புக்கும் பைடனுக்கும் மாறி மாறி ஓட்டுகள் கிடைத்தன. அமெரிக்கத் தேர்தலைப் பொறுத்தவரை ஏறத்தாழ 50 மாகாணங்களின் தேர்தல் சபை பிரதிநிதிகள்தான் ஜனாதிபதி-துணை ஜனாதிபதியை முடிவு செய்வார்கள். மக்கள் அளிக்கும் ஓட்டுக்கள்படி ஒட்டுமொத்தமாக ஒரு வேட்பாளர் முன்னிலையில் இருந்தாலும், குறிப்பிட்ட மாகாணத்தில் இருவரில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த மாநிலத்தின் மொத்த தேர்தல் சபை பிரநிதிகளும் கிடைப்பார்கள். இதில் 50 தேர்தல் சபை பிரதிநிதிகள் கொண்ட மாகாணங்களும் உண்டு. 6 பிரதிநிதிகள் கொண்ட மாகாணங்களும் உண்டு. தேர்தல் சபையினரின் 270 வாக்குகள் யாருக்குக் கிடைக்கிறதோ…அவர்தான் அமெரிக்க அதிபர்.

uselection

நவம்பர் 3 நிலவரப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் 237 வாக்குகளையும் குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த ஜார்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால் பரபரப்பு அதிகமானது.

வாக்கு எண்ணிக்கை முடியும் முன்னரே டிரம்ப், அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றதாக சொன்னதுடன், வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் கூறி சர்ச்சைக்கு வித்திட்டார்.

தனது ட்விட்டர் பக்கத்தில்,’"நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம்' என்று பதிவுசெய்ய, ட்விட்டர் நிர்வாகமோ, "இது சர்ச்சைக்குரிய பதிவு' என அவரது பதிவுக்குக் கீழேயே சூட்டோடு சூடாக விளக்கம் வெளிட்டது. மீடியாக்கள் மீதும் செம கடுப்பு காட்டினார் டிரம்ப்.

அதேசமயம் ஜோ பைடனோ, ""நாம் இந்தத் தேர்தலை வெற்றிù காள்ளும் பாதையில் இருக்கிறோம்'' என நம்பிக்கையாகப் பேசிவிட்டுச் சென்றார்.

ட்ரம்ப் கிளப்பிய சர்ச்சைகளில் முக்கியமானவை, விஸ்கான்சின் மாகாண வாக்குகளை திரும்ப எண்ணவேண்டும். மிக்சிகன் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்க வில்லை. அங்கே வாக்கு எண்ணிக் கையை நிறுத்தவேண்டும் உள்ளிட்ட வையாகும். கொரோனா காரணமாக தபால் வாக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை தேர்தல் தேதியான நவம்பர் 3-க்குப் பின்னும் அனுப்ப லாமென பென்சில்வேனியா விதி விலக்கு அளித்திருந்தது. அது தவறு. ஜார்ஜியாவில் இப்படி தபாலில் வந்த ஓட்டுக்களில், அதற்கென அனுமதிக்கப்பட்ட கால வரம்பையும் தாண்டி வந்த 53 ஓட்டுக்களையும் வாக்கு எண்ணிக்கையில் சேர்த்து விட்டார்கள். அது தவறு. இந்த விவகாரம் குறித்து ட்ரம்ப் கட்சி யினர் நான்கு மாகாணங்களிலும் வழக்கு தாக்கல் செய்துவிட்டார்கள். பல மாகாணங்களில் போராட்டத் திலும் இறங்கினார்கள்.

ஜார்ஜியா மாகாண நீதிபதி யோ, தாமதமாக வந்த வாக்குகள் வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப் பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே யென கேள்வியெழுப்பியுள்ளார். மிக்சிகன் நீதிமன்றமும் ட்ரம்பின் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. பென்சில்வேனியாவில் மட்டும் தனது கட்சிப் பிரதிநிதிகள் முன் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்தியா போல தேர்தல் ஆணையம் வைத்ததே சட்டம் என்றில்லாமல், ஜனாதிபதியாக இருந்தாலும் மாகாண நீதிமன்றத் தை உடனடியாக மீறிவிடமுடியாது.

மிச்சமிருக்கும் மாகாணங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறத் தொடங்கிய போது, இதிலும் ஜோ பைடனே முன்னிலை பெறத் தொடங்கினார். 237-ல் இருந்த அவரது கிராப் வெகுவேகமாக மேலேறத் தொடங்கியது. வெற்றிக்கு நெருக்கமான 264 எண்ணிக்கையை பைடன் நெருங்கிய நேரத் தில், ட்ரம்பின் வாக்கு எண்ணிக்கை 213-லிருந்து 214- ஆக மட்டுமே உயர்ந்தது.

ஃபைடனின் 270 வெற்றி இலக்குக்கு 6 தேர்தல் சபை பிரதிநிதிகளே போதுமென்ற நிலையில், கிட்டத்தட்ட பைடனின் வெற்றி உறுதியாகவிட்டதாகவே கணிப்புகள் வெளி யாயின. அதை உறுதிப் படுத்தும் வகையில், பென்சில்வேனி யாவின் 20 தேர்தல் சபை பிரதிநிதிகள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகக் கிடைக்க, ஜோ பைடனின் வெற்றி உறுதியானது.

தேர்தலுக்கு முன்பாகவே தானே வெற்றிபெறுவேன், தோற்றாலும் விடமாட்டேன் எனக் கூறிய ட்ரம்ப் அதுபோலவே, மாகாண நீதிமன்றங்களையும், உச்சநீதிமன்றங்களையும் பிடித்துக்கொண்டு சட்டப் போராட்டத்துக்கு தயாராகிவருகிறார். ஆனால், அது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியவில்லை என அவரது வழக்கறிஞர்களே தெரிவிக்கிறார்கள்

வாக்கு எண்ணிக்கை தாமதம், குளறுபடி களால் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பல்வேறு மாகாணங்களில் போராட்டங்களில் இறங்கியதும், சில இடங்களில் கடை உடைப்பு போன்ற வன்முறைகளில் இறங்கியுள்ளதும் இதற்குமுன்பு அமெரிக்கா எதிர்பாராத ஒன்றாகும்.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் துணை ஜனாபதிபதி ஆகி யிருப்பதுடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் பலரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். நியூயார்க் மாகாண செனட் சபை தேர்தலில் கேஷா ராம், கென்டகியில் நிமா குல்கர்னி, வாஷிங்டன் மாகாணத்தின் வந்தனா சிலேட்டர், மிக்சிகன் மாகாணத்தில் பத்மா குப்பா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இதுதவிர ஓஹியோவில் நீரஜ் அந்தானி, வடகரோலினாவின் ஜெய்சவுத்ரி, அரிசோனாவின் அமிஷ் ஷா, பென்சிலே வேனியாவின் நிகில் சாவல், மிக்சிகனின் ரஞ்சீவ் பூரி என பட்டியல் நீள்கிறது.

அமெரிக்காவில் வாக்காளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களில் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதையும்கூட பதிவு செய்வது உண்டு. தபால் வாக்குகளை அளித்தவர்களில் பலர் தங்களை ஜனநாயக கட்சி ஆதரவாளர்களாகப் பதிவு செய்திருந்ததுதான், நேரடி வாக்குகளில் பின்னடைவு ஏற்பட்ட இடங்களிலும் பைடனுக்கு நம்பிக்கையைத் தந்தது. அவரது நம்பிக்கை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தியது. ஜனாதிபதி தேர்தலுக்கான நடைமுறைகள் சட்டப்பூர்வமாக நிறைவுபெற்று, தேர்தல் சபை பிரதிநிதிகளால் அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலாவும் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொள்வார்கள்..

குடியரசு கட்சிக்கு யானை சின்னம். ஜனநாயக கட்சியின் சின்னம் கழுதை. அமெரிக்காவில் இம்முறை யானையை அடக்கியிருக்கிறது கழுதை.

-க.சுப்பிரமணியன்

_________

கறுப்பின விடுதலை!

us-election

கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி. அவரது தந்தை ஹாரிஸ் கறுப்பினத்தைச் சேர்ந்த ஆப்ரோ-அமெரிக்கர். தாய் சியாமளா இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் மன்னார்குடி பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். கறுப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததே கமலா ஹாரிஸின் அரசியல் செல்வாக்குக்கு காரணம். ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க நினைத்தவர் கமலா. அந்தப் போட்டியில் வென்ற ஜோ பைடன், கமலாவையே துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்தார். வெற்றிக்குப்பின், கமலா பேசியது கறுப்பின விடுதலைக்கான நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலாவுக்கான வாய்ப்பு பளிச்சென இருப்பதாகத் தெரிவிக்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.

nkn111120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe