Advertisment

எடப்பாடி பதவி பறி போனது ஏன்? ஒரு சென்டிமெண்ட் சர்ச்சை

eps

சைவம், வைணவம் என்று அடித்துக்கொள்ளும் பக்தர்களுக்கு "சங்கரன் வேறு -நாராயணன் வேறில்லையென' இறைவன் திருவிளையாடல் நடத்திய பூமி சங்கரன்கோவில். சங்கரன்கோவில் சங்கரநாராயணர், அதிகாரத்தில் இருப்பவர்களோடு நடத்தும் திருவிளை யாடல் குறித்து உள்ளூர்க்காரர்கள் ஒரு சென்டிமெண்ட் கதை சொல்கிறார்கள்.

Advertisment

உச்ச அதிகாரத்தில் இருப் பவர்கள் சங்கரன்கோவிலுக்குள் வந்தால் பதவி பறிபோகும். மாறாக, அதிகாரத்தை இழந்தவர் கள் வந்தால், அவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்களாம்.

eps

199

சைவம், வைணவம் என்று அடித்துக்கொள்ளும் பக்தர்களுக்கு "சங்கரன் வேறு -நாராயணன் வேறில்லையென' இறைவன் திருவிளையாடல் நடத்திய பூமி சங்கரன்கோவில். சங்கரன்கோவில் சங்கரநாராயணர், அதிகாரத்தில் இருப்பவர்களோடு நடத்தும் திருவிளை யாடல் குறித்து உள்ளூர்க்காரர்கள் ஒரு சென்டிமெண்ட் கதை சொல்கிறார்கள்.

Advertisment

உச்ச அதிகாரத்தில் இருப் பவர்கள் சங்கரன்கோவிலுக்குள் வந்தால் பதவி பறிபோகும். மாறாக, அதிகாரத்தை இழந்தவர் கள் வந்தால், அவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்களாம்.

eps

1991-ல் நடந்த பொதுத் தேர்தலின்போது தென்மாவட்டங்களில் பிரச்சாரத்திற்கு ஜெ. வரும்போது, சங்கரன்கோவி லிலும் பிரச்சாரத்தை மேற்கொண் டார். அதற்கு முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, அந்த தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். அடுத்து 1996 தேர்தலின் போது முதல்வரான ஜெ., பிரச் சாரத்திற்காக சங்கரன்கோவில் வந்தார். பதவியில் இல்லாத கலைஞரும் இங்கே பிரச்சாரம் செய்தார். தேர்தல் முடிவில் பதவியில் இல் லாத கலைஞர் முதல்வர் பதவியைப் பெற்றார். ஜெ. முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. ஜெ.வைச் சந்திக்கிற வாய்ப்பைக் கொண்ட அ.தி.மு.க. சார்புடைய பட்டர் ஒருவர் சங்கரன்கோவிலின் சென்டிமெண்ட் பற்றி அவரிடம் தெரிவித்திருக்கிறார். அதை யடுத்தே பின்னர் வந்த பாராளு மன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது சென்டிமெண்ட் காரணமாக சங்கரன்கோவில் நகருக்குள் வருவதைத் தவிர்த்த ஜெ., நகருக்கு வெளியே அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந் திறங்கி, பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அப்படியே கிளம்பிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். அவரது பதவியும் தப்பியது.

Advertisment

ஜெ., மறைவிற்குப் பின்பு முதல்வரான எடப்பாடி பழனிசாமி கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது சங்கரன்கோவிலின் பெரிய ஆலயத்தின் சங்கரலிங்க சுவாமி சன்னதியின் நேர் பார்வை படுகிற பிரதான சாலையில் வாகனத்தி லிருந்தபடி பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில் அர சின் எந்தவித உச்ச பதவி யையும் வகிக்காத ஸ்டாலி னும் சங்கரன்கோவிலில் நடை பயணமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. உள்ளதையும் இழந்து ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல, தி.மு.க. 39 தொகுதிகளில் வென்றது.

eps

நடந்துமுடிந்த 2021 சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனி சாமியும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் சங்கரன்கோவில் நகரில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். சங்கரன்கோவில் சென்டிமெண்ட் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியைக் கொடுத்தது. முதல்வரானார் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமி பதவியை இழக்க நேரிட்டது.

எடப்பாடி தொகுதியில் அபார வெற்றிபெற்று, தமிழக அளவில் கோட்டை விட்ட அ.தி.மு.க.வின் தோல்விக்கு இப்படி பல தொகுதிகளிலும் சென்டிமெண்ட் கதைகள் உலவுகின் றன.

nkn080521
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe