புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் விராலிமலை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 3 தொகுதிகளும் ஆளும் அ.தி.மு.க.விடமும், புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய 3 தொகுதிகளும் எதிர்க்கட்சியான தி.மு.க.விடமும் உள்ளன. இந்த முறை 6 தொகுதிகளையும் மொத்தமாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்று இரு கூட்டணி களுமே முட்டி மோதுகின்றன. அதனால் யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும் என ஆலாய்ப் பறக்கின்றன.
புதுக்கோட்டை
மாவட்டத் தலைநகர் தொகுதி இது. தற்போது தி.மு.க. மா.செ பெரியண்ணன் அரசு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த முறையும் தனக்கே சீட் கிடைக்கும் என்று பெரியண்ணன் அரசு எதிர்பார்த்திருக்கிறார். மாவட் டத்தையே ஆட்டிப்படைக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கே சற்று அடக்கி வாசிப்பது குறித்து உ.பி.க்களுக்கே ஆச்சரியம்தான். அதே நேரத்தில், கடந்த சில வருடங்களாக ஆங்காங்கே மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும் மருத்துவர் அணி மருத் துவர் முத்து ராஜா, 18 வரு டம் பணிக் காலம் உள்ளது. சீட்டுக்காக தனது அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டுக் காத்திருக்கிறார். அதே நேரத்தில் நெசவாளர் அணி எம்.எம்.பாலு, ந.செ. நைனாமுகமது உள்ளிட்டவர்களும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து சீட்டுக்காக அடி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. தரப்பிலோ… கடந்தமுறை முத்தரையர் பிரச்சினையால் சொக்கலிங்கம் தனித்து நின்று அ.தி.மு.க. வெற்றிக்குத் தட

அ.தி.மு.க. தரப்பிலோ… கடந்தமுறை முத்தரையர் பிரச்சினையால் சொக்கலிங்கம் தனித்து நின்று அ.தி.மு.க. வெற்றிக்குத் தடை போட்டிருந்தார். தற்போது சொக்கலிங்கம் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருடனான கருத்து வேறுபாட்டால் தனித்துவிடப்பட்ட கார்த்திக் தொண்டைமானை கடந்த மாதம் மீண்டும் அமைச்சர் அரவணைத்துக்கொண்டதால் அவருக்கே சீட் கிடைக்க வாய்ப்பு என்று ர.ர.க்கள் தரப்பில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாசறை கருப்பையா, ந.செ. பாஸ்கர், உள்ளிட்ட பலரும் அமைச்சரின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்க... மாஜி நகரச் சேர்மன் ராஜசேகர் தனக்கு ஓ.பி.எஸ். மூலம் சீட் கிடைக்கும் என்று காத்திருக்கிறார். மாஜி நெடுஞ்செழியனும் ரேசில் இருக்கிறார்.
விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கியத் துவம் வாய்ந்த தொகுதி விராலிமலை. அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி என்பதால் மாவட்டத் தலைநகருக்கு வேண்டிய அத்தனை அரசு அலுவலகங்களும் அந்தத் தொகுதிக்குள் கொண்டு வந்திருக்கிறார். தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்கி மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார். விராலிமலைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் என்பதை உறுதியாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ர.ர.க்கள். அதேநேரத்தில் அவர் கடைசி நேரத்தில் புதுக்கோட்டை தொகுதிக்கு மாறவும் வாய்ப்புகள் இருப்பதால், அந்த இடத்தில் அவரது சகோதரர் உதயகுமார் வேட்பாளராக்கப்படலாம் என்கிறார் கள். வேறு சிலருக்கும் தொகுதி மீது கண் இருந்தாலும் வாய்ப்புக் கிடைக்குமா என்ற தயக்கம் இருக்கிறது.
தி.மு.க. தரப்பிலோ… அ.தி.மு.க.வினரே சற்று அச்சப்படக்கூடியவராக உள்ள கடந்த முறை வெற்றியைப் பறிகொடுத்த பழனியப்பன்தான் வேட்பாளர். கடந்த வாரம் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கூட அ.தி.மு.க. வைகைசெல்வன், "பழனியப்பனே நின்றாலும்' என்று அழுத்திச் சொல்லி தி.மு.க. வேட்பாளர் அவர்தான் என்பதை சொல்லிச் சென்றுள்ளார். அதேநேரத்தில் தி.மு.க. மா.செ. (பொ) செல்லப்பாண்டியன், சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து வந்த அரசகுமார் ஆகியோரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
திருமயம்
தற்போது தி.மு.க. ரகுபதி (மா.செ. பொ) சட்டமன்ற உறுப் பினராக உள்ளார். இவரே மீண்டும் இந்தத் தொகுதியைக் கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் செய்துகொண்டிருக்கிறார். அதேநேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் மாஜி சுப்புராமுக்காக ப.சிதம்பரம் சீட் வாங்கித் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். தி.மு.க. தலைமையோ வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்கள் குறித்த ஐ-பேக் லிஸ்ட்டை ஆராய்ந்து வருகிறது.
அ.தி.மு.க. தரப்பில் மா.செ.வும் கடந்த தேர்தலில் நின்று தோற்றவருமான வைரமுத்து தனக்குத்தான் மீண்டும் சீட் வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறார். அதே இடத்தில் முத்தரையர் மக்கள் அதிகமாக உள்ளதால் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வக்குமாரும் சீட் கேட்டுக்கொண்டிருக்கிறார். கடைசி நேரத்தில் இவருக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சித் தலைமையிடம் பேசவும் வாய்ப்புகள் உள்ளது.
இந்த தொகுதி தற்போது அ.தி.மு.க. ரெத்தினசபாபதியிடம் உள்ளது. கட்சி பிரச்சினை வந்தபோது சசிகலா அணிக்குப் போய், மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக அ.தி. மு.க.விற்கே வந்தவர். மீண்டும் அவரே சீட்கேட்கும் எண்ணத்தில் இருக்க... அதே நேரத்தில் மாஜி எம்.எல்.ஏ. ராஜநாயகம், ஆதி.மோகன் மற்றும் ஒ.செ.க்கள் பெரியசாமி, வேலாயுதம் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நெவளிநாதன் ஆகியோரும் சீட் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. தரப்பில் மாஜி உதயம் சண்முகம் மீண்டும் எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று சீட் கேட்டுக்கொண்டிருக்க, கட்சிக்கு புதிதாக வந்த பரணி கார்த்திகேயனும் கட்சித் தலைவர் மூலம் தனக்கு சீட் கிடைக்கும் என்று காத்திருக்கிறார். அதேநேரத்தில் அவைத் தலைவர் பொன்துரை, மணமேல்குடி ஒ.செ. சக்திராமசாமி மற்றும் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோரும் காத்திருக்கிறார்கள். இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தனது மகன் ராமச்சந்திரனுக்கு மீண்டும் சீட் வாங்கும் முயற்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. காத்திருக்கிறார்.
ஆலங்குடி
தி.மு.க. மெய்யநாதன் கடந்தமுறையே கடும் போட்டிகளுக்கு மத்தியில் போராடி சீட் வாங்கி வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மீண்டும் தனக்கே வாய்ப்புக் கொடுக்கும் கட்சித் தலைமை என்று தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருப்பவர், கட்சித் தலைவர்களை அழைத்து வந்து பிரச்சாரங்களும் செய்துமுடித்துக் காத்திருக்கிறார். அதேநேரத்தில் கடந்தமுறை வாய்ப்பை இழந்த டாக்டர் சதீஷ் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் ஞான.இளங்கோவன், தங்கமணி ஆகியோரும் சீட்டுக்காக காத்திருக்கிறார்கள். ம.தி.மு.க. தரப்பில் இருந்து மாஜி அமைச்சர் சந்திரசேகருக்காக வைகோ ஆலங்குடித் தொகுதியை கேட்டு வாங்குவார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க தரப்பில் கடந்தமுறை வெற்றிவாய்ப்பை இழந்த ஞான.இளங்கோவன் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருக்கிறார். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சீட் பெற்றுவிட ஒ.செ.கள் தனசேகரன், மாஞ்சன்விடுதி ராஜேந்திரன் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து அ.தி.மு.க.வுக்கு கட்சி தாவிய (காங்கிரஸ் மாவட்டத் தலைவர்) தர்ம தங்கவேல், மாஜி வெங்கடாசலம் மகன் ராஜபாண்டியன், கறம்பக்காடு சண்முகநாதன் ஆகியோரும் காத்திருக்கிறார்கள்.
கந்தர்வகோட்டை (தனி)
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆறுமுகம் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அமைச்சருடன் நட்பில் உள்ளவர் என்பதால் மீண்டும் தனக்கு வாய்ப்புக் கிடைக் கும் என்று காத்திருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் பெருமாநாடு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தனக்கு வாய்ப்பு கிடைக் கும் என்று உறுதியுடன் இருப்பதுடன், அதற் கான முன்னெடுப்புகளைச் செய்துகொண்டிருக் கிறார். இந்த இடத்திற்கு மாவட்ட சேர்மனாக இருக்கும் ஜெயலெட்சுமியின் பெயரை அமைச் சர் விஜயபாஸ்கர் சொல்வார் என்று அவர் களும் காத்திருக்கிறார்கள். மாஜி சுப்பிரமணிய னும் காத்திருக்கிறார். இங்கு பா.ஜ.க வில் தனக்குத்தான் சீட் என்ற புரட்சிக் கவிதாசன் தொகுதிக்குள் பணிகளை தொடங்கியிருக்கிறார்.
தி.மு.க. தரப்பில், கடந்தமுறை சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்தமுறை நிச்சயம் சீட் கிடைக்கும் என்று கீரை தமிழ்ராஜா, கவிதைப்பித்தன் ஆகியோர் காத்திருக்க... "இந்த முறை கூட்டணியில் தங்களுக்குத்தான் சீட் கிடைக்கும், தி.மு.க. மாவட்டத் தலைமையும் எங்களுக்கே ஒதுக்கும்' என்று சி.பி.எம். சின்னத்துரை தரப்பும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளது.