Advertisment

எந்தக் கட்சியில் யாருக்கு சீட்? இராமநாதபுரம் மாவட்ட ரேஸ்!

rr

ட்டுமொத்த இராமநாதபுரம் மாவட்டத்தையே தண்ணியில்லாக் காடு என்ற நிலையை மாற்றிக் காட்டியது முதல்வராக கலைஞர் இருந்தபோது, 682 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம். அதன்பின், குடிநீர்க் கொள்ளையர்களாலும் 20 ஆண்டு களுக்கும் மேலாக பல கண்மாய்கள் தூர்வாரப்படாமல், சீமைக்கருவேலமும் முட்புதர்களும் மண்டி, செயற்கையான வறட்சியை ஏற்படுத்துகின்றன.

Advertisment

"புரெவி’ புயல்' புண்ணியத்திலாவது கனமழையால் பிறவிப்பயன் அடையலாம் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி(தனி), திருவாடானை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.

ramnad

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை மாற்றப்படாத மா.செ.வாக முனியசாமி இருக்கிறார். தி.மு.க.விலோ கடந்த பொதுத்தேர்தலில் முதுகுளத்தூரில் மட்டும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஜெயித்தது. மற்ற மூன்று தொகுதிகளில் தோற்றதால் மா.செ. சுப.த.திவாகரனை (திருவாடானையில் கருணாசிடம் இவரும் தோற்றார்) மாற்றிவிட்டு, காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை மா.செ.வாக்கியது தி.மு.க. தலைமை. நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சில குழப்பக் குத்துகள் நடந்தாலும் 17 மாவட்டக் கவுன்சிலர்களில் 11-ஐ கைப்பற்றி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி வாகை சூடினார் முத்துராமலிங்கம். இதே போல் 11 ஒன்றியங்களில் 7-ஐ கைப்பற்றியது தி.மு.க.

Advertisment

அ.தி.மு.க, தி.மு.க. இரண்டிலுமே உள்கட்சி, கோஷ்டிக் குத்துகள் இருந்தாலும் "தேர்தல்னு வந்துட்டா நாங்க ராசிக்காரய்ங்க' என்ற ரேஞ்சுக்கு கூடிக்குலாவுவார்கள்.

இராமநாதபுரம்

அகமுடையார்கள் சம

அகமுடையார்கள் சமூக வாக்குகள்தான் (35%) இத்தொகுதியில் மெஜா ரிட்டியாக உள்ளது. அதற்கடுத்து இஸ்லாம் சமூகம் (25%), பட்டியலினம் (21%), யாதவர்கள் (14%) என இந்த வரிசையில் உள்ளன. ஆளும் கட்சியைப் பொறுத்த வரை, "நான்தான் இங்கே வேட்பாளர்' என தீபாவளிக்கு முன்பே தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார் இப்போ தைய எம்.எல்.ஏ.வான மணிகண்டன். அப்போது வேண்டாதவராக இருந்த மாஜி மா.செ. தர்மரை இப்போது வசப்படுத்திவிட்டார் மணிகண்டன். அ.ம.மு.க.விற்குப் போய்விட்டு, அ.தி.மு.க.விற்கு ரிட்டர்ன் ஆன மணிகண்டனின் அண்ணன் மனைவி கவிதா, பட்டணம்காத்தான் ஊராட்சித் தலைவர் சித்ராவின் கணவர் மருது, தாமரைக்குளம் சேது பாலசிங்கம், ஆரிஃப்ராஜா ஆகியோரும் ரேஸில் உள்ளனர்.

தி.மு.க.விலோ பவானி ராஜேந்திரன் மனக்கணக்குப் போட்டாலும் பணக்கணக்கில் கெட்டியானவர். எம்.பி. யாக இருந்த அனுபவமும் உள்ள இவரிடம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு முட்டி மோது கிறார். அதிமுகவின் பணபலம், படைபலம் இவற்றிற்கு டஃப் கொடுக்கும் தகுதியுடைய ரிடையர்டு டி.ஆர்.ஓ. குணசேகரனும் களத்தில் குதிக்க ரெடியாக உள்ளார். இவரின் மாமனார் இராமசாமி சேர்வை மிசாவில் கைதானவர். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஹமீது சுல்தான், காங்கிரசிலிருந்து வந்த ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோரும் தயாராகிவருகிறார்கள்.

அ.ம.மு.க.வில் மண்டபம் ஜி.முனியசாமிதான் ஒரே சாய்ஸ். அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வில் மாவட்டத் தலைவர் முரளிதரன் முயற்சிக்கிறார். நாம் தமிழர் கட்சியிலோ களஞ்சியம் சிவக்குமாரை வேட்பாளராக அறிவித்துவிட்டார் சீமான்.

திருவாடானை

முக்குலத்தோர், பட்டியலினம், யாதவர்கள், இஸ்லாமியர்கள் என்ற வரிசையில் வாக்குகள் உள்ள இத்தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு குறிப்பாக நடிகர் கருணாசுக்கு கொடுக்கக்கூடாது என கொடி பிடிக்கிறார்கள் ர.ர.க்கள். இதற்காகவே தீபாவளி கழித்து போடிக்குச் சென்று ஓ.பி.எஸ்.சை சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கிறது ஒ.செ.மதிவாணன் தலைமையிலான டீம். அதனால் மாஜி மா.செ.ஆணிமுத்து, மாஜி எம்.பி. அன்வர்ராஜா ஆகியோர் ஓ.பி.எஸ்.சிடம் சரண்டராகியிருக்கிறார்கள்.

ramnad

பா.ஜ.க.விலோ தொகுதி நமக்குத்தான்' என்ற கணக்குடன் மா.து.த. குட்லக் ராஜேந்திரன் மகன் ராகேஷ், ஸ்தபதி நரசிங்கம், தே.மு.தி.க.வில் முஜிபுர் ரஹ்மான் போன்றோர் முட்டி மோதுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் ஒருவேளை காங்கிரசுக்கு என்றால் கே.ஆர்.ராமசாமிதான். ஆனால், தி.மு.க.வில் சுப.த.திவாகரன். ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் குறி வைக்கின்றனர். 24% யாதவ ஓட்டுகள் இருப்பதால், தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து ஒரு டீமை இறக்கி சர்வே எடுத்துள்ளார் கண்ணப்பன்.

கண்ணப்பன் இல்லையென்றால், மாஜி சபா தமிழ்க்குடிமகனின் உறவினரும் திருவாடானை தொகுதி ஐ.டி.விங் பொறுப்பாளருமான கண்ணன், ஆர்.எஸ்.மங்கலம் ஒ.செ. நல்லசேதுபதி, சிவகங்கை ஜோன்ஸ் ரூசோ, தேவிபட்டினம் ஜலீல் ஆகியோர் ஜரூர் காட்டி வருகிறார்கள்.

அ.ம.மு.க.வில் எம்.பி. தேர்தலில் கதிகலக்கிய வ.து.ந. ஆனந்த்தைத் தவிர வேறு யாரும் முயற்சிக்கவேயில்லை. இங்கே ஜவஹர் என்பவரை வேட்பாளராக அறிவித்துவிட்டார் சீமான்.

பரமக்குடி (தனி)

இது தனித்தொகுதி என்றாலும் இஸ்லாமியர், பட்டியலினம், யாதவர், சௌராஷ்டிரா சமூக ஓட்டுக்களே மெஜாரிட்டியாக உள்ளது. அதிலும் பரமக்குடி டவுனில் உள்ள 70 பூத்துகளில் 55 பூத்துகளில் சௌராஷ்டிரா சமூக வாக்குகள் ஸ்ட்ராங்காக உள்ளது. நைனார்கோவில், போகலூர், கமுதக்குடி, சத்திரக்குடி, பார்த்திபனூர் ஏரியாக் களில் யாதவர் சமூக ஓட்டுக்கள் தான் மெஜாரிட்டி.

ஆளும் கட்சியில் சிட்டிங் எம்.எல்.ஏ.சதன் பிரபாகருக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஆனாலும் மாஜி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜனால் சதன் பிரபாகருக்கு லேசான சங்கடம்தான். பஸ் கண்டக்டராக இருந்து எம்.எல்.ஏ.வான மறைந்த பால்சாமியின் மகன் இந்திரஜித், "எனக்கும் கருணை காட்டுங்கள்'’என்கிறார்.

தி.மு.க.வில் நகர இளைஞரணிச் செயலாள ரும் இடைத்தேர்தலில் தோற்றவருமான சண்.சம்பத் குமார் ரேஸுக்கு ரெடி என்றாலும் காசுக்கு கஷ்டப்படுபவர். பெட்ரோல் பங்க், செங்கல் சூளை என செல்வாக்காக இருக்கும் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேம்பர் முருகேசன் ரேஸில் நம்பிக்கையுடன் இருக்கிறார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, சூரியன் பாலா போன்றோரும் சுறுசுறுப்பு காட்டி வருகிறார்கள்.

சகல சௌபாக்கியங்களுடனும் சொந்த பந்தங்களின் துணையுடனும் ரேஸுக்கு வருகிறார் பத்திரப் பதிவுத்துறையில் மாவட்டப் பதிவாளராக இருக்கும் டிரெஸ்ட் பாலு. இடைத்தேர்தலின் போதே சீட் கிடைத்தால் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருந்தவர் இந்த பாலு.

ss

அ.ம.மு.க.வைப் பொறுத்தவரை மாஜி எம்.எல்.ஏ. டாக்டர் முத்தையாதான் கெத்து காட்டுகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் மாநில எஸ்.சி. அணியின் செயலாளர் பொன்.பாலகணபதி கனவு பலிக்கலாம்.

முதுகுளத்தூர்

திருமங்கலத்திலிருந்து ஜம்பாகி இத் தொகுதிக்கு வரும் யோசனையில் பேரிடர் மீட்புப் பணிகளைப் பார்வையிட அடிக்கடி வருகிறார் அமைச் சர் உதயகுமார். அவரை இராமநாதபுரத்திற்கு டைவர்ட் பண்ணி, தனது மனைவி கீர்த்திகாவுக்கு சீட்டைக் கைப்பற்றிவிட துடிக்கிறார் மா.செ. முனிய சாமி. "ஓ.பி.எஸ். இருக்க பயமேன்' என ஜெபித்தபடி சென்னைக்கும் முதுகுளத்தூருக்கும் பறந்து கொண்டிருக்கிறார் மாஜி மா.செ. தர்மர். "நாமளும் சீட் கேட்போம்' என்ற ரீதியில் இருக்கிறார் கடலாடி ஒ.செ. என்.கே.முனியசாமி பாண்டியன்.

தி.மு.க. மா.செ. என்ற முறையில் சீட் நிச்சயம் என்றாலும் பழைய சம்பவம் ஒன்று கனன்றுகொண்டிருப்பதால், இராமநாதபுரமா, திருவாடானையா என்ற யோசனையில் உள்ளார் காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம். இருந்தாலும் தலைமையின் முடிவை ஏற்பார்.

1996 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டி யிட்டு, த.மா.கா.வின் சோ.பாலகிருஷ்ணனிடம் 2,500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறி கொடுத்து விட்டு, கிட்டத்தட்ட 25 வருடங்களாக எம்.எல்.ஏ. சீட்டுக்காக முட்டிமோதும் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி வி.போஸிடம் இப்போது நம்பிக்கை அதிகரித் துள்ளது. மாஜி முருகவேலும் சாயல்குடி ராமரும் களத்தில் உள்ளார்கள்.

"இந்தமுறை நிற்பதற்கு விருப்பமில்லை, நின்றாலும் தோற்க விரும்பவில்லை' என்னும் மனநிலைக்கு காங்கிரஸ் மலேசியா பாண்டியன் வந்துவிட்டதால், எம்.பி. நவாஸ்கனி துணையுடன் ரேஸுக்கு வருகிறார் மாவட்ட ஊராட்சி துணைசேர்மன் சாயல்குடி வேலுச்சாமி.

"எங்களுக்கும் தெம்பு இருக்கு' என்கிறார் தே.மு.தி.க.வின் மா.செசிங்கை ஜின்னா.

"50 தொகுதிகள் பா.ஜ.க.வுக்குப் போனால் நம்ம பொழப்பு என்னாகுறது' என்ற படபடப்பு அ.தி.மு.க.விலும், தொகுதிக்கு இரண்டு பேரை ஐபேக் டீம் செலக்ட் பண்ணிவிட்ட தடதடப்பு தி.மு.க.விலும் தென்படுகிறது.

-நாகேந்திரன்

படங்கள்: விவேக்

nkn091220
இதையும் படியுங்கள்
Subscribe