மிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்தாலும், அதன் சில தொகுதிகள் கர்நாடக எல்லையை ஒட்டி இருப்பதால் கன்னடம் பேசும் மக்கள் ஆங் காங்கே வசிக்கிறார்கள்.

இந்த மாவட்டத்தின் அதிமுக்கிய தொழில் நகரமாக இருப்பது ஓசூர். தமிழகத்தில் மிகப்பெரிய தொழிற்பேட்டை வளாகமான சிப்காட் இருப்பது ஓசூரில்தான். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களிலிலிருந்து குண்டூசி தயாரிக்கும் சின்ன கம்பெனிகள் வரை ஓசூரில் நிறைந்திருக்கின்றன. இந்த நகரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூசுவாடியிலிருந்துதான் கர்நாடக எல்லை ஆரம்பமாகிறது. இம்மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை (தனி), தளி, ஓசூர், வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் கிழக்கு மா.செ. அசோக்குமாரின் எல்லைக்குள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி தொகுதிகளும் மேற்கு மா.செ.வும் மாஜி அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டியின் எல்லைக்குள் ஓசூர், தளி, பர்கூர் தொகுதிகளும் வருகின்றன.

kri

kk

Advertisment

எதிர்க்கட்சியான தி.மு.க.வில் கிழக்கு மா.செ. செங்குட்டுவனின் எல்லைக்குள் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை தொகுதி களும் மேற்கு மா.செ. ஒய்.பிரகாஷின் எல்லைக்குள் தளி, ஓசூர், வேப்பனப்பள்ளி தொகுதிகளும் வருகின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் வலுவான கட்சியான பா.ம.க.வில் கிழக்கு மா.செ.சிவானந்தத்திற்கு ஊத்தங் கரை, பர்கூர், மேற்கு மா.செ. கோவிந்தராஜுக்கு ஓசூர், தளி, மத்திய மா.செ. மாணிக் கத்திற்கு கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிகளை அரசியல் எல்லை யாக்கியிருக்கிறது பா.ம.க. தலைமை. எந்தெந்த கட்சியில் யார், யாருக்கு சீட் கிடைக்கும், யாரெல்லாம் சீட்டுக்கு முட்டி மோதுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஊத்தங்கரை (தனி)

Advertisment

அ.தி.மு.க. : கட்சியின் து.பொ.செ.வாக இருக்கும் கே.பி. முனுசாமியின் தீவிர ஆதர வாளராக இருக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம்தான் ஒரே சாய்ஸாக இருக்கிறார். இந்த முறையும் சீட்டைக் கேட்ச் பண்ணிவிட வேண்டும் என்ற முடிவுடன் 75% மக்கள் நலத் திட்டங்களை முடித்துவிட்டார் மனோரஞ்சிதம்.

தி.மு.க. : கடந்த தேர்தலில் தோல்வியடைந்த டாக்டர் மாலதி நாராயணசாமி, இந்தமுறை எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என கோதாவில் குதித் துள்ளார். ஆனால் மா.செ.வுக்கும் இவருக்குமிடையே ஏழாம் பொருத் தம் குறுக்கே வந்து பயமுறுத்து கிறது. அதனால் மலை வாழ் மக்களின் கல்வி, சுகாதாரத்திற்காக தனது அறக்கட்டளை மூலம் சேவையாற்றி வரும் டாக்டர் கந்தசாமிக்கு சீட் கனவு பலிக்க லாம். ஒருவேளை கூட்டணிக் கட்சியான வி.சி.க.வுக்குச் சென் றால், இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த மா.செ. கனியமுத னுக்கு சீட் கிடைக்கலாம் என்பது வி.சி.க்களின் கணக்காக உள்ளது.

இத்தொகுதியில் பட்டியலினத்திற்கு அடுத்தபடியாக வெள்ளாள கவுண்டர்கள், வன்னிய கவுண்டர்கள் நிறைந்துள்ளனர்.

பர்கூர்

அதிமுக : சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராஜேந்திரன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் உள்ளார். மா.செ. பாலகிருஷ்ண ரெட்டியும் தனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார் என நம்புகிறார் ராஜேந்திரன். கூட்டணிக் கட்சியான பா.ம.க.வின் கிழக்கு மா.செ. சிவானந்தமும் ரெடியாக இருக்கிறார்.

திமுக : ‘"யானை காதில் புகுந்த கட்டெறும்பு'’என கலைஞ ரால் பாராட்டப்பட்ட சுகவனம், 1996-ல் ஜெ.வை மண்ணைக் கவ்வ வைத்தார். ஆனால் அதன்பின் கட்டெறும்பு சித்தெறும்பு ஆன கதையாக, 96 வெற்றிக்குப் பின் இப்போதுவரை தி.மு.க.வால் இத்தொகுதியில் ஜெயிக்க முடியவில்லை. அதனால் இம்முறை வலுவான வேட்பாளராக களம்காண தயார் நிலையில் இருக்கிறார் கட்சியின் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் மதியழகன். இத்தொகுதிக்குள் வரும் குட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த மதியழகன், 35 வருடங்களாக ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவராக இருந்தவர். கடந்த எம்.பி. ddதேர்தலின்போது தி.மு.க.வில் இணைந்து கிருஷ்ணகிரியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, மாவட்ட உ.பி.க்களை ஆச்சர்யப்பட வைத்தார். செல்வச்செழிப்பான குடும்பம், தொழில்ரீதியான பழக்கம், பெரும்பான்மையாக இருக்கும் வெள்ளாள கவுண்டர் சமூகம் இவற்றால் பர்கூர், கிருஷ்ணகிரி இரண்டு தொகுதிகளிலும் சீட் கேட்கும் ஐடியாவில் உள்ளார் மதியழகன்.

கிருஷ்ணகிரி

அ.தி.மு.க. : தனது மகன் சதீஷை எம்.எல்.ஏ.வாக்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளார் கட்சியின் வி.வி.ஐ.பி.யான கே.பி.முனுசாமி. அதனால்தான் "தர்ம யுத்த ஹீரோவிடமிருந்து சற்றே விலகி, விவசாய ஹீரோவான எடப் பாடியின் நிழலில் ஒதுங்கினார்' என்கிறார்கள் ர.ர.க்கள். ஆனால் "எங்க மா.செ. அசோக்குமாரோ எப்போதுமே எடப் பாடியின் நிழலில்தான். என்னதான் கே.பி.எம்.மின் விசுவாசி என்றாலும் சீட்டுக்குப் போட்டின்னு வரும்போது தனது கெத்தைக் காண்பிப்பார் அசோக்குமார்' என்கிறது இன்னொரு ர.ர.க்கள் கோஷ்டி. எதுக்கு இந்த அக்கப்போர், பேசாம பா.ம.க.வுக்கு சீட்டை அலாட் பண்ண எடப்பாடி முடிவுவெடுத்துவிட்டால் மா.செ.மாணிக்கம் களத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை பாட்டாளி சொந்தங்களிடம் உள்ளது. வெள்ளாள கவுண்டர் களுக்கு அடுத்தபடியாக வன்னிய கவுண்டர்கள் இத்தொகுதியில் உள்ளனர்.

தி.மு.க. : மா.செ.வும் சிட்டிங் எம்.எல்.ஏ.வு மான செங்குட்டுவன் மீண்டும் இதே தொகுதியை கைப்பற் றும் நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் கட்டப் பஞ்சாயத்து வீடியோ ஒன்று சமீபத்தில் ரிலீசாகி சலசலப்பை ஏற் படுத்தியதால், செங் குட்டுவனை வேப்ப னப்பள்ளிக்கு மாற்ற லாமா என கட்சித் தலை மை யோசித்து வருகிறது.

எம்.பி. தேர்தலின் போதே கிருஷ்ணகிரிக்காக கடுமையாகப் போராடிய தமிழக காங்கிரசின் மாஜி தலைவரான ஈ.வி. கே.எஸ். இளங்கோ வன், காரியம் கை கூடாமல் தேனியில் போட்டியிட்டு சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறி கொடுத்தார். அதனால் மே மாதம் சட்டமன்றத்தில் நுழையும் ஆவலுடனும் தி.மு.க. மேலிடத்தில் இருக்கும் செல் வாக்குடனும் தொகுதியை வாங்கிடும் முனைப்பில் உள் ளார் இளங்கோவன். ஆளும் அ.தி.மு.க.வில் வலு வான ஆட்கள் இல்லாததால், எப் படியும் தொகுதி தங்களுக்குத்தான் வந்து சேரும் என்ற நம்பிக்கை பாட்டாளி சொந்தங்களிடம் இருப்பதால், பா.ம.க.வின் மேற்கு மா.செ. கோவிந்தராஜ் தயார்நிலையில் உள்ளார்.

தி.மு.க. : குவாரிகளால் வளம் கொழிக்கும் தடாலடிப் பார்ட்டியும் மா.செ.வுமான ஒய்.பிர காஷுக்கே வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் ராமச்சந்திரனும் ரேஸில் இறங்க ஆயத்தமாகிவிட்டார். கூட்டணியில் சீட் கிடைக்கவில்லையென்றால் சுயேட்சையாக வும் களம் இறங்கவும் தயார் நிலையில் உள்ளார் ராமச்சந்திரன். கன்னடம் பேசும் கவுடாக்களுக்கு அடுத்தபடியாக வன்னிய கவுண்டர்கள் இத்தொகுதியில் உள்ளனர்.

ஓசூர்

அ.தி.மு.க.: இடைத்தேர்தலில் தனது மனைவி ஜோதி தோற்ற மனக்காயத்திலிருந்து இன்னும் விடுபடாத மா.செ.வும் மாஜியுமான பாலகிருஷ்ண ரெட்டி, இந்த முறைவிடுவதாக இல்லை. அதனால்தான் இப்போதே ர.ர.க்களை கரன்சியால் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

"கொஞ்சம் தள்ளிப்போனா நாங்க ஆளும் ஸ்டேட் வருது. அதனால எங்களுக்கு கிடைக்கும் 50 தொகுதிகளில் ஓசூர் நிச்சயம்' என தாமரைப் பார்ட்டிகள் இப்போதே கன்ஃபார்ம் பண்ணி விட்டார்கள். அதனால் பா.ஜ.க.வின் நாகராஜனுக்கு அதிக நம்பிக்கை பிறந்திருக்கிறது.

தி.மு.க. : சிட்டிங் எம்.எல்.ஏ.வான சத்யாவுக்கு தொகுதி மக்களிடத்திலும் சரி, உ.பி.க்கள் மத்தியிலும் சரி... நல்ல பெயர் நீடிப்பதால், மீண்டும் எம்.எல்.ஏ.ஆகும் நம்பிக்கையுடன் ரேஸுக்கு வருகிறார். அதே சமயம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, சமீபத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட மாதேஸும் தயாராகத்தான் இருக்கிறார்.

வேப்பனப்பள்ளி

வன்னிய கவுண்டர்கள், வெள்ளாள கவுண் டர்கள், குரும்பர்கள் என்ற வரிசையில் வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. இத்தொகுதியைப் பொறுத்த வரை ஆளும் கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி குழப்ப ரேகைகள் அதிகமாகவே ஓடிக்கொண்டி ருக்கின்றன. அ.தி.மு.க. மா.செ. அசோக்குமாருக்கு எடப்பாடி டிக் அடித்தால் தனது மகன் சதீஷை இங்கே இறக்க ரெடியாக உள்ளார் கே.பி.முனுசாமி.

தி.மு.கவை.ப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ. முருகன் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தாலும் மா.செ.செங்குட்டுவனுக்கு தொகுதி அலாட் செய்யப்படுவதைப் பொறுத்து இவருக்கு தொகுதி மாறும் நிலை உள்ளது.

-அருண்பாண்டியன்