Advertisment

கோட்டையை யார் ஆண்டாலும் மலைக்கோட்டை எனது பிடியில்தான்! -மாஜி உளவுத்துறை அதிகாரி!

ss

ய்வுபெற்றாலும், எனது அதிகாரம் என்றும் ஓய்வதில்லை என்பது போல, சங்கப் புலவர்களில் 4 எழுத்துக் கொண்ட ஒரு புலவரின் பெயரையுடைய ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி, இன்றும் திருச்சி மாநகரத்தை கண்ட்ரோல் செய்துவருவது கொஞ்சம் கவனிக்கவேண்டிய விஷயம்.

Advertisment

ff

திருச்சி மாவட்டத்தில் இவர் பணியிலிருந்தபோது தொடர்பில் இருந்த கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட எல்லா குற்றச் சம்பவங் களிலும் தொடர்புடைய நபர்களின் தொடர்பு இன்றும் நீடித்து வருவதாகவும், அந்த அதிகாரியால் தான் தற்போது திருச்சி மாவட்டம் முழுவதும் குட்

ய்வுபெற்றாலும், எனது அதிகாரம் என்றும் ஓய்வதில்லை என்பது போல, சங்கப் புலவர்களில் 4 எழுத்துக் கொண்ட ஒரு புலவரின் பெயரையுடைய ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி, இன்றும் திருச்சி மாநகரத்தை கண்ட்ரோல் செய்துவருவது கொஞ்சம் கவனிக்கவேண்டிய விஷயம்.

Advertisment

ff

திருச்சி மாவட்டத்தில் இவர் பணியிலிருந்தபோது தொடர்பில் இருந்த கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட எல்லா குற்றச் சம்பவங் களிலும் தொடர்புடைய நபர்களின் தொடர்பு இன்றும் நீடித்து வருவதாகவும், அந்த அதிகாரியால் தான் தற்போது திருச்சி மாவட்டம் முழுவதும் குட்கா, கஞ்சா, வெளிமாநில லாட்டரிகள் மிகவும் சகஜமாக புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாநகரக் காவல் நிலையங்களில் தனக்கு வேண்டியவர்களைக் கொண்டுவருவதற்கான அதிகாரத்துடன் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன் ஆகி யோரை கையில் வைத்துக்கொண்டு, தன்னுடைய நெருங்கிய உறவினரான ராமன் தேடிய சீதையின் பெயரைக் கொண்டவரை முதலில் கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகக் கொண்டு வந்தார். பின்னர் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறவைத்து, திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறியிலேயே பணியமர்த்தப்பட்டார். இந் நிலையில், ஆட்சி மாற்றமாகி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், அவரை தஞ்சைக்கு பணியிட மாற்றம் செய்தது தமிழக அரசு. அங்கு பணியில் சேர்ந்தவரை, திருச்சி அமைச்சரை கையில் வைத்துக்கொண்டு தஞ்சையிலிருந்து லால்குடிக்கு பணிமாற்றம் செய்யவைத்துள்ளார். ஓரிரு மாதங் கள் மட்டும் பணியிலிருந்தவரை, தன்னுடைய பலத்தைப் பயன்படுத்தி சி.சி.பி.க்கு கொண்டு வந்துள்ளார். மீண்டும், சி.சி.பி.யிலிருந்து திருச்சி உளவுத்துறைக்கு அதிகாரியாக மாற்றிவிட்டால் நாம் நினைப்பது தான் நடக்குமென்ற மாஸ்டர் ப்ளானில் இருக்கிறாராம். இந்நிலையில், இவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் முத்துக்கே அரசனான அதிகாரி, புலவர் குறித்து எந்தச் செய்தி வந்தாலும், செல்போன் பதிவுகளை எடுத்து, யார் புகாரளித்து இருப்பார்கள் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து போட்டுக்கொடுத்து விடுவார்.

Advertisment

இவர் அதிகாரத்திலிருந்த போதிருந்த பல காவலர்கள் இன்றும் அவருக்கு விசுவாசமாக செயல்பட்டு வருகின்றனர். குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தால், காவல்துறை அதிகாரிகளுக்குச் செல்வதற்குமுன் புலவரின் காதுக்குச் சென்று, உடனடியாக அவற்றை மறைக்கவும், பதுக்கவும் செய்வதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன், தன்னுடைய தொடர் முயற்சியால் மாநகரத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது முதல்வ ருக்கு அவப்பெயரை ஏற்படுத்துமென்றும், காவல் துறைக்குள் புதிய பிரச்சனைகளை கிளப்புமென்றும் விவரம் அறிந்தவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

nkn301122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe