வில்லங்கமான, விவகாரமான சங்கதியைப் பொதுவெளியில் பகிரும்போது, ஊர்ப் பெயரையோ, சம்பந்தப்பட்டவர் பெயரையோ, அவருடைய அடையாளத்தையோ பளிச்சென்று வெளிப்படுத்தமுடியாது. தமிழகத்தின் உச்சப் பதவியில் அமர்ந்தவர் என்பதால், அவரை ‘பெரியவர்’ எனக் குறிப்பிடுவதே சரியாக இருக்கும். அதேநேரத்தில், ஒரு ‘க்ளூ’ தந்தாக வேண்டுமென்றால், அந்தப் பெரியவரின் முற்பெயரில் வாசனைத் திரவியம் கமகமக்கும்.
ஒருவருடைய அந்தரங்கம் நமக்கெதற்கு? என்றெல்லாம் இதனைக் கடந்துபோய்விட முடியாது. ஏனென்றால், ஒரு மனிதரின் தனிப் பட்ட வாழ்க்கை சரியில்லையென்றால், அவ ருடைய பொதுவாழ்க்கையும் அதேரீதியில் தான் இருக்கும். நிஜமுகத்தை மறைத்திருக்கும் அவருடைய முகமூடியை விலக்குவது நாட்டுக்கு நல்லது என்பதாலேயே, இத்தனை பீடிகையுடன் இக்கட்டுரையைத் தொடங்கு கிறோம். இங்கே குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்துமே மாற்றப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/act_0.jpg)
பிறரைக் கைநீட்டி குற்றம் சாட்டுவதில் பெரியவருக்கு நிகராக ஒருவர் இருக்கமுடியாது. அத னால், அவருடைய பெயரும் தற்போது தாறுமாறாக அடிபடுகிறது. 2019-ல் தென்மாவட்டத் தோட்ட மொன்றில் சதீஷ் என்பவர் மின்சாரம் தாக்கி மர்மமாக இறந்தார். அவ ருடைய மனைவி மகேஸ்வரிக் கும் பெரியவருக்குமான தொடர்புக்கும், சதீஷ் மரணத்துக்கும் முடிச்சுப் போடுகின்றனர். இந்த விவகாரமானது, சமூக வலைத்தளங்களில் தற்போது அலசப்படு கிறது. அதற்கான கார ணத்தைப் பார்ப்போம்!
தென்மாவட்டத்தி லுள்ள ‘காராச்சேவு’ ஊரைப் பூர்விகமாகக் கொண்ட மகேஸ்வரி, பெரியவரின் மாவட் டத்தைச் சேர்ந்த சதீஷைத் திருமணம் செய்துகொண்டு, அன்னை அருள்புரி யும் வரலாற்றுப் பெருமையுள்ள ஊரில் வசித்து வந்தார். தங்களது இரு குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதற்குக்கூட இயலாத நிலையில், சொந்த ஊரான பெரியவரின் ஊரில் குடியேறினார். பெரியவருடன் நெருக்கம் ஏற் படுத்திக்கொண்டால், அவருடைய நிழலில் தானும் வளர்ந்து, குடும்பத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்ளலாம் என்பது சதீஷின் கணக்காக இருந்தது. மகேஸ்வரியை பெரியவர் வீட்டுக்கு அனுப்பிவைத்து, அந்தக் குடும்பத்துக்கு ஒத்தாசையாக நடந்துகொண்டால், தனக்கான முக்கியத்துவத்தைப் பெரியவர் தருவார் என்பதே சதீஷின் எதிர்பார்ப்பாக இருந்தது.
மகேஸ்வரி சர்வலட்சணமும் பொருந்தியவர் என்பதால், பெரியவர் வீட்டுக்கு முக்கிய பிரமுகர் கள் வரும்போது, உணவு பரிமாறும் சேவை செய்ய அனுமதிக்கப்பட்டார். அப்படியே, பெரியவரின் தேவைகளையும் மகேஸ்வரி கவனிக்க, தனது செல்வாக்கு கூடிவிட்டதாக சதீஷ் சந்தோஷப்பட, வெளியிலோ வேறுவிதமாகப் பேசினார்கள். அதை அவமானமாகக் கருதிய சதீஷ், இனி பெரியவர் வீட்டுக்குப் போகக்கூடாது எனத் தடை போட் டார். அடுத்த ஒரு வாரத்திற்குள், தோட்டத்தில் மின்சாரம் தாக்கி சதீஷ் இறந்தார். மூன்று நாட்கள் கழித்து, அழுகிய நிலையில் சதீஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, பெரியவரின் செல்வாக்கால் போலீஸ் விசாரணை எதுவும் நடக்காமல், இறுதிக் காரியங்கள் நடந்தன.
அடுத்து துக்கம் விசாரிக்க மகேஸ்வரியின் வீட்டுக்குப்போன பெரியவர், ‘"பிள்ளைகளின் படிப்புச் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன். எப்பவும்போல சேவை செய்ய வீட்டுக்கு வந்து விடு''’என்று தனது உறவினர்கள் முன்னிலையி லேயே பெருந்தன்மையுடன் அழைப்பு விடுத்தார். கணவரை இழந்த ஓரிரு மாதங்களிலேயே, ஆடம்பரத் தோற்றத்துடன் மகேஸ்வரி காணப்பட, அவருடைய உறவுகளும் அந்த ஊரும் வேறுமாதிரி பேச ஆரம்பித்தது. அதனால், பெரியவர் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஊரைக் காலி செய்துவிட்டு, போதைக்குப் பெயர்போன பக்கத்து மாநில ஊருக்குச் சென்று பிள்ளைகளைப் படிக்கவைத்தார்.
அங்கிருந்து மகேஸ்வரியை தலைநகருக்கு அவ்வப்போது வரவழைத்த பெரியவர் தாராளமாக உதவியதோடு, தானும் அந்த பக்கத்து மாநில ஊருக்கு போவதும் வருவதுமாக இருந்தார். அதற்கு வசதியாக, அந்த ஊரில் மகேஸ்வரிக்கு ஒரு சொகுசு பங்களா கட்டிக்கொடுத்தார். ஆனாலும், அந்த பங்களாவின் மொட்டைமாடியில் குடிசை வீடு போன்ற செட்டப்பில், கயிற்றுக் கட்டிலில் தூங்குவதையே பெரியவர் வழக்கமாகக் கொண்டி ருந்தார். முழுக்க முழுக்கத் தனக்கானவராக மகேஸ்வரி ஆனதும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி கண்ட இரு ஊர்களில், மகேஸ்வரி பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் கார்மென்ட்ஸ் நிறுவனங்களை பெரியவர் அமைத்துக்கொடுத்தார். மகேஸ்வரியின் பிள்ளைகள் இருவரையும் வெளிநாடுகளில் படிக்கவைத்தார். தனக்கு இந்த அளவுக்கு மகேஸ்வரி செட்டாகிவிட, பொதுவாழ்க்கையில் தான் சம்பாதித்த பல்லாயிரம் கோடிகளை, வெளிநாடுகளில் முதலீடு செய்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/act1.jpg)
பொதுவாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட, மகேஸ்வரியின் பெயரில் முதலீடு செய்தவற்றைத் திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது பெரியவர் தரப்பு. அப்போது பிடிகொடுக்காமல் நழுவியிருக்கிறார் மகேஸ்வரி. இந்த நிலையில், மகேஸ்வரியை அங்கிருந்து இடம்பெயரச் செய்து, தனது சொந்த ஊரில், அதுவும் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீடு பிடித்துத் தங்கவைத்தார்.
இதனால் ஆத்திரமான பெரியவர் குடும்பத்தி னர், மகேஸ்வரிக்கு நெருக்கடி தந்தனர். மகேஸ்வரி யோ, ‘"பெரியவரின் விருப்பப்படி இருந்தேனே! உங்க சொத்துல நான் பங்கு கேட்கமாட்டேன். என் பெயரில் முதலீடு செய்தது என் பெயரிலேயே இருக்கட்டுமே..''’ என்று பெரியவர் தரப்பிடம் கெஞ்சினார். வேறு வழியில்லாமல், சில ஆயிரம் கோடி முதலீடுகளை மகேஸ்வரிக்கு கொடுத்து விட்டு, முக்கால்வாசி முதலீடுகளை பெரியவர் குடும்ப உறுப்பினர்கள், தங்களது பெயரில் மாற்றம் செய்தனர். ஆனாலும் பெரியவர் கரிசனத்தோடு மகேஸ்வரியிடம், ‘"அளவுக்கதிகமான பணம் உன்கிட்ட இருக்கு. இது தெரிஞ்சா என் பசங்க இருக்கிறதப் பிடுங்கிட்டு உன்னை நடுத்தெருவுல விட்ருவாங்க. தமிழகத்தில் மக்கள் மத்தியில் இப்ப செல்வாக்கா இருக்கிற எதிர்முகாமில் சேர்ந்துவிடு..''’எனப் பேசியதோடு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் ஆயத்தமானார்.
இந்தநேரத்தில், பெரியவரின் பொது வாழ்க்கையில் பெரிய அளவில் உரசல் ஏற்பட, மகேஸ்வரி விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. இதுதான் தருணமென்று, தனக்குத் தெரிந்த நபர் மூலம், தனக்கும் பெரியவருக்கும் இடையிலான உள்விவகாரத்தை, பொதுவாழ்க்கையில் பெரியவரின் நேரடி எதிரி தரப்பிடம் மகேஸ்வரி கொண்டு போனார். பெரியவரை ஒரேயடியாக வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருந்த அந்த எதிர்த்தரப்பு, இதை வைத்தே பெரியவரை அசிங்கப்படுத்திவிடலாம் எனக் காய் நகர்த்தியது. "தூக்கிட்டு வாங்க அந்தத் தங்கத்தை..' எனத் தென்மாவட்ட பிரமுகர் ஒருவருக்கு எதிர்த்தரப்பு உத்தரவு பிறப்பிக்க, அவரோ அலட்சியம் காட்டியிருக்கிறார். அதனால், வேறொரு பிரமுகர் மூலம் மகேஸ்வரி சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் முதலீட்டு ஆவணங்களைக் கொண்டு வந்து, அவருக்குத் தஞ்சமளித்திருக்கிறது.
பெரியவர் தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் தொடர்ந்து உஷ்ணம் வெளிப்பட, பெரியவர் மகன் களில் ஒருவர், தந்தையின் எதிரி சம்பந்தப்பட்ட மலை பங்களா மர்மங்கள் பற்றிய வழக்கு குறித்து ‘வாய்ஸ்’ கொடுத்தார். பதிலுக்கு எதிர்த்தரப்பு "மகேஸ்வரி சம்பந்தப்பட்ட முதலீடுகள் குறித்து விவாதிக்கலாமா? சதீஷ் மர்ம மரணம் குறித்துப் பேசலாமா?' என வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப, இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத பெரியவர் குடும்பத்தினர் அமைதி காக்கத் தொடங்கினர்.
ஏற்கனவே பெரியவர் மகன் கலைக்குடும்பம் ஒன்றுடன் விளையாடி, ஒருவர் வாழ்க்கையைச் சிதைத்தது, கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்தச் சூழ்நிலையில், பெரியவரும் அதே போன்ற விவகாரத்தில் அடிபடுவது, அவப்பெயரை உண்டாக்கிவிடும். பெரியவர் ஆதரவாளர்கள் மத்தியிலேயே அவருக்கு மரியாதை இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியில் இருதரப்பிலும் ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் வலைத்தளத்தில் காரசாரமாக விமர்சித்துத் தள்ள, பெரியவரும் அவரது நேரடி எதிரியும் ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்க ணுமே..’ என உள்ளுக்குள் அல்லாடுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/act-t.jpg)