Advertisment

ராஜபாளையம் யாருக்கு? - தொகுதி நிலவரம்!

rajapalayam

ராஜபாளையம் தொகுதியில் “நானே ராஜா” என்ற மனநிலை ஒரு தனி நபரின் குணாதிசயம் அல்ல; இங்குள்ள சமூக -பொருளாதார கட்டமைப்பு உருவாக்கிய மனநிலை. தொழில், நிலம், வருமானம் என தன்னிறைவை அடைந்தவர்கள் நகர்ப் பகுதியில் கணிசமாக இருப்பதால், மேலிருந்து வரும் அதிகாரத்தை தலைகுனிந்து ஏற்கும் பழக்கம் இங்கு இல்லை. ஆணவத்துடன் அரசியல் செய்ய முயல்வோர் இத்தொகுதியில் நீண்ட நாள் நிற்க முடியாது. 

Advertisment

அப்படியென்றால், இரண்டா வது முறையாகவும் தேர்ந்தெடுக் கப்பட்ட சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை ராஜபாளை        யம் தொகுதி உண்மையிலேயே ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, "கொண் டாடவில்லை; அதே நேரத்தில் வெறுத்தும் தள்ளவில்லை'’என்ற கலவையான பதிலே கிடைக்கிறது. எம்.எல்.ஏ. செய்த சாதனை என்னவென்று கேட்டால், ரயில்வே மேம்பாலம், அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடம், சேத்தூரில் ரூ.6 கோடியில் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட சமுதாயக்கூடம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், சிட்கோ தொழில் பூங்கா, புதிய பேருந்து நிலை யத்திற்கான இணைப்புச் சாலை என வ

ராஜபாளையம் தொகுதியில் “நானே ராஜா” என்ற மனநிலை ஒரு தனி நபரின் குணாதிசயம் அல்ல; இங்குள்ள சமூக -பொருளாதார கட்டமைப்பு உருவாக்கிய மனநிலை. தொழில், நிலம், வருமானம் என தன்னிறைவை அடைந்தவர்கள் நகர்ப் பகுதியில் கணிசமாக இருப்பதால், மேலிருந்து வரும் அதிகாரத்தை தலைகுனிந்து ஏற்கும் பழக்கம் இங்கு இல்லை. ஆணவத்துடன் அரசியல் செய்ய முயல்வோர் இத்தொகுதியில் நீண்ட நாள் நிற்க முடியாது. 

Advertisment

அப்படியென்றால், இரண்டா வது முறையாகவும் தேர்ந்தெடுக் கப்பட்ட சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை ராஜபாளை        யம் தொகுதி உண்மையிலேயே ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, "கொண் டாடவில்லை; அதே நேரத்தில் வெறுத்தும் தள்ளவில்லை'’என்ற கலவையான பதிலே கிடைக்கிறது. எம்.எல்.ஏ. செய்த சாதனை என்னவென்று கேட்டால், ரயில்வே மேம்பாலம், அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடம், சேத்தூரில் ரூ.6 கோடியில் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட சமுதாயக்கூடம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், சிட்கோ தொழில் பூங்கா, புதிய பேருந்து நிலை யத்திற்கான இணைப்புச் சாலை என வளர்ச்சிப் பணிகளின் பட்டியலை  முன்வைக்கின்றனர்.

Advertisment

அதேநேரத்தில், மணல் விவகாரம், ரேசன் அரிசி மில்லுக்குச் செல் லும் கதைகள், புதிய மில் மட்டுமல்லாமல், பிரம்மாண்ட வீடும் முளைத்திருப்பது, பினாமிகளின் வளர்ச்சி என கிசு கிசுக்கப்படும் விஷயங்களும் உண்டு. இதுகுறித்து கேட்டால், "எம்.எல்.ஏ. குடும்பம் பரம்பரை பரம்பரையா கார்மெண்ட் தொழில் செய்து வருது.  இப்ப புது மில் கட்டுறதும், புது வீடு கட்டுறதும் அரசியல்ல சம்பாதிச்ச பணத்துல இல்ல. தொழில்ல அவரோட சொந்த உழைப்புல சம்பாதிச்ச பணத்துல தான். ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ ஒரு ரூபாய் சம்பளம் தான் வாங்கினாங்க. தங்கபாண்டியன் அதைவிட மேல. எம்.எல்.ஏ. சம்பளம் மொத்தத்தையும் மக்களுக்காக செலவழிச்சுடுறாரு. அவர் மூலமா எத்தனை பேருக்கு நல்லது நடந்திருக்குன்னு ஊருக்கே தெரியும். 

இதுக்கு முன்னால  இவர மாதிரி சேவை மனசோட இருந்த எம்.எல்.ஏ. ஒருத்தர காட்டுங்க''’என்று  அவருடைய விசுவாசிகள் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்.    

“வரும் தேர்தலில் தி.மு.க.வில் தங்கபாண்டியனுக்கு சீட் கிடைக்குமா?’தி.மு.க.வுக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்பு இருக்கு. உண்மைய சொல்லணும்னா, இந்த மாவட்டத்துல முக்கிய பிரமுகருக்கு, நகர்மன்றத் தலைவர் பவித்ரா ஷ்யாமை வேட்பாளரா நிறுத்தணும்கிற பிளான் இருக்கு. ஏன்னா..  தங்கபாண்டியன் பின்னாள்ல மாவட்ட செயலாளராவோ, மந்திரியாவோ வளர்ந்துடக் கூடாதுல்ல. 

ஆனா, தேர்தல்ல நிற்கணும்னா கோடி கோடியா பணம் வேணும்; அந்த வசதி தங்கபாண்டி யனுக்குத்தான் இருக்கிறது''’என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில். 

தி.மு.க.வில் அடுத்த சாய்ஸாக பார்க்கப்படும் பவித்ரா ஷ்யாம் எப்படி?  இந்த தொகுதியில் நாடார், தேவேந்திரகுல வேளாளர், முக்குலத்தோர் வாக்கு வங்கிகள் முன்னணி      யில் இருக்க, பவித்ரா ஷ்யாமின் ராஜூஸ் சமுதாயத்துக்கு நான்காவது இடம்தான்.  வாக்குகள் அடிப்படையில் பா.ஜ.க. ஆதரவு மனநிலையிலேயே ராஜூஸ் சமுதாயம் இருந்தாலும், அச்சமுதாயத்தினரால் ஒரு ஹீரோயின் போல பார்க்கப்படுகிறார் பவித்ரா ஷ்யாம்.  

ரயில்வேயுடன் ஏற் பட்ட ஈகோ பிரச்சனையைத் தொடர்ந்து, ராஜபாளையம் நகராட்சி எடுத்த ஒரு தீர்மானம் காரணமாக ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் முடக்கப்பட்டதில், நகர்மன்றத் தலைவி என்ற முறையில் பவித்ராவோட பெயர் பலமாக அடிபடுகிறது.  மக்கள் நலன் சார்ந்த திட்டத்தில்  கெட்ட பெயர் ஏற்பட்ட இந்த விவகாரத்தில், பவித்ரா தன்னிச்சையாக இயங்காமல், அந்த முக்கிய பிரமுகரின் கைப்பாவையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. 

அ.தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப் படுவார் என்று பேசப்படும் கிருஷ்ணராஜ், அரசியல் வட்டாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் நிழலாகப் பார்க்கப்படுகிறார். கடந்த தேர்தலில் கைநழுவிய ராஜபாளையம் தொகுதியை இந்தமுறை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்பதில் ராஜேந்திரபாலாஜி உறுதியாக இருக்கிறார். அதற்கு கிருஷ்ண ராஜ்தான் சரிப்படுவார் என்பது அவருடைய அரசியல் கணக்கு. 

ஆனால், இங்கேதான் அரசியல் சுவாரஸ்யம் தொடங்குகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கத் துடித்த நடிகை கவுதமிக்கு அந்த வாய்ப்பைத் தடுத்து, தானே களமிறங்கியவர் ராஜேந்திரபாலாஜிதான். அதே கவுதமி, இப்போது அ.தி.மு.க. சார்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கனவுடன், எடப்பாடி பழனிச்சாமியின் ஆசி பரிபூரண மாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், தொகுதியில் கணிசமாக உள்ள தெலுங்கு பேசும் வாக்காளர்களின் ஆதரவு தனக்கே கிடைக்கும் என  அரசியல் களத்தைச் சுற்றிவருகிறார். 

"ராஜபாளையம் என் மனசுல நீங்கா  இடம் பிடிச்சிருக்கு' என்று வெளிப்படை யாகப் பேட்டி கொடுத்துவருவது திட்டமிட்ட அரசியல் சைகைதான். வழக் கறிஞர் முருகேசனும் சீட் எதிர்பார்ப்பில் இருக்கிறார். 

இதற்கிடையில், ‘ராஜபாளை யம் பா.ஜ.க.வுக்கே; வேட்பாளர் நீங்கதான், நயினார் நாகேந்திரனே சொல்லிவிட்டார்’என்று பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோபால்சாமி சொல்லிவருவது அ.தி.மு.க. வட்டாரத்தில் சிரிப்பையும், சந்தேகத்தையும் ஒருசேர கிளப்புகிறது. 

அ.தி.மு.க.வில் இருந்துகொண்டே கடந்த தேர்தலில் ராஜேந்திரபாலாஜியை  வீழ்த்த உள்குத்து வேலை பார்த்தவர் இதே கோபால்சாமிதான். இதை கட்சி மறந்துவிடவில்லை. அப்படிப்பட்டவர், இப்போது மா.செ.வான ராஜேந்திரபாலாஜியை மீறி பா.ஜ.க. வேட்பாளராக எப்படி களமிறங்க முடியும்? 

ராஜபாளையம் தொகுதியில் இந்தமுறை, போட்டியை விட குழப்பங்களே அதிகம் பேசப்படுகின்றன.  

nkn310126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe